Q-13
“தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப் 2:3)
F555 [P1]
உபத்திரவ காலத்தில் இந்த ஒரே ஒரு வாக்குத்தத்தை உறுதியாக பற்றிக்கொள்ளவேண்டும். இது பொதுவானதாக காணப்படுகிறது. சாந்தமும், அமைதலும், நீதியையும் விரும்பும் அனைவருக்கும் இது பொருந்தும். உடன்படிக்கை செய்தவர்களின் பிள்ளைகளும் இந்த வகுப்பில் உள்ளனர். இவர்கள் தேவனுடைய வார்த்தையின்படி சகல கட்டளைகளையும் மிக சரியாக கற்பிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப் 2:3) என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது.
R1963 [col. 2P 2-5]
புயல் வரும்போது, அனைவரும் பாதுகாப்பைத் தேடுவார்கள். (வெளி 6:15-17) அநேகர் பட்டணங்களுக்கு ஓடிப்போவார்கள். இந்த உலகத்தின் மேல் வரக்கூடிய சகல காரியத்தையும் மேற்கொண்டவர்கள் (லூக் 21:36) உண்மையில் மலைக்கு (தேவனுடைய இராஜ்யம்) ஓடிப்போவார்கள். அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இவர்களை தவிர ஒருவரும் இந்தப் பாதுகாப்பைப் பெற முடியாது. “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே, அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான், இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி.” (சங் 24:3-6)
ஆனால் தங்களை தான் மறைத்துக் கொள்வதற்கு மனுஷர் எடுக்கும் முயற்சி விருதாவாக இருக்கும். தங்களுடைய பிள்ளைகளை உபத்திரவத்தின் போது மறைத்துக் கொள்வதற்கு பரிசுத்தவான்கள் எந்த முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். சகல பாவங்களைப் போக்கவும், ஒவ்வொரு பொய்யான அமைப்புகளை அழிக்கவும், பொதுவாக முழு மனுக்குலத்திற்கு நன்மையான பாடங்களை கற்பிக்கவும் அவர்களின் இருதயங்களை நொறுக்கவும், இந்த உபத்திரவக் காலம் வருகிறது. நம்முடைய பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும் இந்தப்பாடங்கள் தேவைப்பட்டால் அதிலிருந்து அவர்கள் தப்புவிப்பதற்கு நாம் முயற்சிக்கக்கூடாது. இந்த உபத்திரவம் அவர்களுக்கு தேவையில்லை என்றால், தங்களுடைய பிள்ளைகளையும், நண்பர்களையும் பாதுகாக்க தேவன் மகிமை அடைந்த சபையை அனுமதிப்பார். மாம்சத்தில் இருக்கும் சபையின் பாதுகாப்பைக் காட்டிலும் மகிமை அடைந்த சபை அதிக வல்லமையாக செயல்படும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான சகல கட்டளைகளையும் எடுத்துக்காட்டுகளின் மூலம் போதித்து, நீதியின் உபதேசங்களை விசுவாசத்தோடு கற்பிக்கவேண்டும்.” கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று அவர்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டும். இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றியும், யுகங்களைப் பற்றிய தெய்வீக ஏற்பாட்டையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். இதனிமித்தம் தேவனுடைய ஞானத்தையும், அன்பையும், நீதியையும் மிக தெளிவாக புரிந்துக்கொள்வார்கள். மேலும் மற்றவர்கள் முன்னிலையில் இப்படிப்பட்ட அன்பிலும் நீதியிலும் நடந்துக்கொள்வார்கள். சாந்தம், அமைதல், பொறுமை போன்ற குணங்களைப் பற்றி அவர்களுக்கு போதிக்கவேண்டும். இறுமாப்பின் பின்விளைவுகளை அறிவிக்கவேண்டும். கொஞ்சத்தில் சந்தோஷமாக இருப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். போதும் என்ற மனதோடுக்கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் என்று அவர்களுக்கு கற்பிக்கவேண்டும்.
“தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப் 2:3) என்ற வார்த்தைகளை நாம் அவர்களின் நினைவுக்கு கொண்டுவரவேண்டும். உலகத்தின் பொருட்கள் அநித்தியமானவைகள். ஐசுவரியமுள்ளவர்களும் சரி, தரித்தரர்களும் சரி, அனைவரும் துன்மார்க்கமாக நடக்கிறார்கள். (மல் 4:1. யாக் 5:1-6)
உபத்திரவக் காலத்தில் உலக வரலாற்றில் முதல் முறையாக சாந்தம், பொறுமை, அன்பு, கனிவு, இன்னும் மற்ற குணங்களை காண்பது அரிதாக இருக்கும். (உபத்திரவக் காலத்திற்கு முன்னும் பாபிலோனின் வீழ்ச்சிக்கு முன்பாக, திரள் கூட்டத்தார் மேல் வித்தியாசமான உபத்திவரம் வரும். பாபிலோனின் வல்லமை மிகவும் அதிகரித்ததினால் இவர்கள் மிகவும் உபத்திரவப்படுவார்கள். சரீரத்திலும், சிந்தையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊழியம் செய்வது மிகுந்த பாக்கியமாக இருப்பதினால், இப்படிப்பட்ட உபத்திரவ நாட்களில் இப்படிப்பட்ட ஊழியங்களை மனப்பூர்வமாக செய்வதற்கு நாம் பிள்ளைகளை பயிற்றுவிக்க வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நல்ல குணங்களில் உறுதியாக இருந்து தேவனோடு விசுவாசத்தில் ஐக்கியப்பட்டு, தங்களுடைய மேன்மையான குணங்களை பிரதிபலிப்பதற்கு நாம் பயிற்சி கொடுக்கவேண்டும்)
R2021 [col.1 P1,2]
“தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப் 2:3) இதுவே பாதுகாப்பான ஒரே வழி. இந்தக் காலத்தில் தங்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு தெரிந்துக்கொள்ளப்படுதலை உறுதிப்படுத்திக் கொள்பவர்கள் உலகத்தின் மேல் வரும் உபத்திரவங்களுக்குத் தப்பித்துக் கொள்வார்கள். தப்பித்துக் கொள்ளாதவர்களுக்கு இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இவ்வாறு செய்வதினால் ஏதோ ஒரு சூழ்நிலையில் காக்கப்படுவார்கள். ஆகவே நமக்காகவும், நம்முடைய பிள்ளைகளுக்காகவும், ஒரு பாதுகாப்பான இடத்தை (அப்படி ஒன்றும் இல்லை) தேடுவதைக் காட்டிலும், இன்று நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள நியாயமான கற்பனைகளுக்கு முழு இருதயத்தோடு கீழ்ப்படிந்து நித்திய பாதுகாப்பைப் பெறுவோம்.