CD-LOVE-Q-41
“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத்தேயு 22:39)
R2445[col.1 P2]: –
ஆனால் சிலர் இந்த சுதந்திரத்தை நேர்மறையான அறிவொளிகளுக்காக கட்டுப்படுத்துவதை புறக்கணிப்பாார்கள், மேலும் முழுமையான அறிவு பொதுவாக சிறியதாக இருப்பதாகக் கூறலாம். நாம் இதற்கு தெய்வீக பிரமாணத்தின்படி பதில் கூறுகிறோம் – “உன்னிடத்தில் நீ அன்புகூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக”. உங்கள் அயலான் மூளையையும் நாவையும் உங்களுக்கு விரோதமாக தீய சூழ்ச்சிகளிலும், அவதூறுகளிலும் பயன்படுத்த தாங்கள் விரும்பாததுபோல, நீங்களும் அவரிடம் அவ்வாறு செய்யக்கூடாது கர்த்தரின் பிரமாணமானது உங்கள் அயலார் மீது உங்களுக்குத் தெரிந்த விஷயத்தை (தனிப்பட்ட அறிவை) விட நீங்கள் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று கேட்கவில்லை, அது உங்கள் சந்தேகங்களையும் தீய ஊகங்களையும் கேட்கவில்லை. மாறாக, புதிய உடன்படிக்கையின் கீழுள்ள அனைவரும் அயலானுக்கு எதிராக ஒரு தனித்த சந்தேகத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று கர்த்தர் கட்டளையிடுகிறார். சூழ்ந்து இருக்கும் சூழ்நிலைகளினால் அறிவுக்கு அப்பாற்பட்ட சந்தேகமானது சிந்தையில் திணிக்கப்படும் போது, புதிய சிந்தையானது, அதின் இயற்கையான இரக்கத்தோடும், அவ்வாறாக இருக்க வாய்ப்பில்லை, தவறான தகவல் அல்லது தவறான புரிதல் ஆக இருக்க கூடும் என்னும் சந்தேகத்தின் வாய்ப்பை குற்றம் செய்தவருக்கு தர வேண்டும்.
பொன் என்பது நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறபடி தெய்வீகத்துக்கு அடையாளமாக இருக்கிறது. ஆகவே பொன்னான கற்பனை என்பது திவ்விய கற்பனையாகும். இது உண்மையில் அன்பின் கற்பனை என்பதைவிட நீதியின் கற்பனை என்பதே சரியானதாகும். இப்பொழுது ஜென்ம சுபாவமுள்ள மனுஷன் இந்த நீதியின் பிரமாணத்திற்கு அருகில் வந்து, அதை உணர்ந்து கொள்ள, அவனுக்கு அறியப்பட்டிருக்கும் உன்னதமான முறை எதுவென்றால், “உன் அயலான் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நீ நினைப்பாயோ, அதை உன் அயலானுக்கு நீ செய்யாதிருப்பாயாக” அதிகபட்சமாக இது எதிர்மறையான நன்மையானதாக இருக்கிறது. ஆனால் பொன்னான கற்பனையானது. தற்போதைய நிலையில் புது சிருஷ்டியயைத் தவிர வேறு எவரும் உணர முடியாததாக அல்லது புரிந்து கொள்ள முடியாததாக, உள்ளது. அதாவது “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”. இது நேர்மறையான நன்மை, ஆனால் இது நீதியானது. புது சிருஷ்டியின் அங்கங்கள் சில வேளைகளில் இந்த நீதியின் பிரமாணமான பொன்னான கற்பனையின் ஒவ்வொரு அம்சத்தோடும் இணங்கிப் போக தவறுவார்களெனில், அவர்கள் புது வழியில் குழந்தைகளாக இல்லாவிட்டால், அது அவர்களுக்கு விசனமும் பெரிய ஏமாற்றத்திற்குரியதாகும். இந்தக் கற்பனை எவ்விதத்தினாலாவது மீறப்படும்போது வேதனையையும் மன வருத்தத்தையும் கொண்டு வருமானால், அந்த மீறுதல் மனப்பூர்வமானதல்ல, இருதயத்திலிருந்து வந்ததல்ல, புது சிருஷ்டியின் அடிப்படைக் கருத்து மீறப்படவில்லை என்பதற்கு திட்டவட்டமான அடையாளமாகும். அது கூடிய வரை ஆவியின் விருப்பத்திற்கு அல்லது நோக்கத்திற்கு மாறாக மாம்ச பலவீனத்தால் அல்லது தடுமாற்றத்தால் ஏற்பட்டதாகும். இருந்தபோதிலும் புதிய மனமானது எந்த அளவுக்கு தேவனை நோக்கி ஜீவனுள்ளதாகவும், அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வைராக்கியம் உள்ளதாகவும் காணப்படுகிறதோ, அதே அளவுக்கு அது வாசம் செய்கிற “மண்பாண்டத்தைப் பாதுகாப்பதில் துரிதமாகவும், ஜாக்கிரதையாகவும் சுறுசுறுப்போடும் இருக்கும். மாம்ச பெலவீனங்களுக்கு எதிராக நல்ல போராட்டத்தைப் போராடும்படியாக அது தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளும். வார்த்தையினாலோ, செயலினாலோ ஒரு தவறு செய்யப்பட்டிருந்தால், நல்ல நோக்கத்துடன் மறுபடியும் பழைய நிலைக்கு வருவதற்கு வாய்ப்பு, முடிந்தால், துரிதமாகக் கொடுக்கப்படும். இப்படியாக “மண்பாண்டம்” அதை எதிர்க்கப்படுவதையும், வெட்கப்படுத்தப்பட்டதையும் கண்டு, புதிய மனதிற்கு எதிர்ப்புக்காட்டுவதில் குறைவாகச் செயல்படலாம். புது சிருஷ்டியின் இந்த திவ்விய பிரமாணம் தேவனோடு உள்ள அவனது உறவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும், உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூறுவாயாக” என்பதின் அர்த்தத்தை அவன் புரிந்து கொள்கிறான். இங்கே அவன் தேவனோடு முற்றிலுமாக ஒத்துப்போவதினால், சுயத்திற்கு இடம் காணப்படுவதில்லை. இது சகோதரரோடு உள்ள உறவைப் பாதிக்கிறது, எப்படியெனில் தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் (விசுவாசக் கண்களினால் தவிர) காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான். (1 யோவான் 4:20, 21) அவர்களோடு தான் பழகும் விதத்தில் அவன் ஜாக்கிரதையாக கவனிக்கக் கற்றுக் கொள்ளும்போது, அதாவது அவர்கள் தனக்கென்று செயல்படவும், தன்னோடு நடந்துகொள்ளவும் தான் விரும்புகிற மாதிரி, தானும் அவர்களுக்கென்று செயல்படவும், அவர்களோடு நடந்துகொள்ளும் விதத்தைக் கற்றுக் கொள்ளும்பொழுது, அது வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதலை உண்டு பண்ணுவதைக் காண்கிறான். மேலும் அவனும், மற்றவர்களும் வாழ்வதற்கும், சிந்திப்பதற்கும், நடப்பதற்கும், பேசுவதற்கும் ஏற்கனவே பழக்கப்பட்டுள்ளபடியால், இது ஒரு கற்பனை அல்லது பிரமாணத்தின் கீழ் இல்லை. தன்னோடு சகோதரர்கள் அன்பாக நடக்க வேண்டும் என்றும், சாந்தமாக பேச வேண்டும் என்றும் விருப்பப்படுவது போன்று, அவனும் அவர்களோடு அன்பாக நடக்க வேண்டும், சாந்தமாகப் பேச வேண்டும் என்பதைக் அறிந்துகொள்கிறான். தன்னுடைய குறைகளில், பலகீனங்களில் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், இந்த மனித குறைபாடுகள் மேல் இரக்கம் என்ற திரையை விரிக்க வேண்டும் என்று அவன் விரும்புவது போன்று, அவர்களுக்கும் அது போன்றே செய்ய வேண்டும் என்பதையும் காண்கிறான். அவர்களோடு அவன் பாசமுள்ளவனாக இருப்பதற்காக, சகோதரர்கள் தன்னைக்குறித்து பொல்லாப்பு எதுவும், அது உண்மையாக இருந்தால் கூட, பேசக்கூடாது என்று தான் விரும்புகிறான் மற்றும் “ஒருவனையும் தூஷியாதே,” யாவருக்கும். விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்” என்பதையும் அவன் காண்கிறான், தன்னால் நியாயமாகச் செய்யக் கூடியதற்கு மேல் அதிகமாகச் செய்யவேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று அவன் விரும்புவது போன்று, மற்றவர்களுக்கும் தங்களால் நியாயமாக செய்யக்கூடியதற்கு மேல் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கக்கூடாது என்பதையும் அறிந்துக் கொள்கிறார். உலகம் மற்றும் அதன் காரியங்களைப் பொருத்தமட்டிலும் கூட இதே கருத்து செயல்பட வேண்டும். இப்படியாக வாழ்க்கையின் முழு வழியும் படிப்படியாக மாற்றப்படுகிறது. மேலும் அப்போஸ்தலர் கூறுகிறபடி “நாம் தேவனுடைய மகிமையைக்காண்கிற” அளவுக்கு ஏற்றபடி இந்த மாறுதல் வருகின்றது. அதற்கேற்றபடி, பரிபூரண நீதியின் பொன்னா பிரமாணம், ஏராளமாக அன்போடு இணைந்து, ஆளுகை செய்யக்கூடிய தெய்வீக குணாதிசயத்தின் மேன்மையான மாதிரியை புரிந்துக்கொண்டு செயல்படுத்த கற்றுக்கொள்ளும், அளவின்படி வருகின்றது என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (2 கொரிந்தியர் 3:18) பரிசுத்த ஆவியினால் பிறந்த நம்முடைய புதிய சிந்தைகள், புதிய சித்தங்கள் வளர்ச்சியுறும்போது அந்த வளர்ச்சி இருதயத்தின் தன்மையை “மகிமையிலிருந்து மகிமைக்கு “படிப்படியாக மாற்றுகிறது. இப்படியாக நாம் நம்முடைய இருதயங்களிலும் சிந்தைகளிலும், நோக்கங்களிலும் (இயன்ற வரை வெளித் தோற்றத்திலும்) மாற்றப்பட்டு நாம் திவ்விய வாக்குத்தத்தின்படி, பெலகீனத்திலும், அழிவிலும், விதைக்கப்பட்டதானது வல்லமையிலும் மகிமையிலும் உயிரோடு எழுப்பப்படும்போது ஒரு புது சிருஷ்டியாக, தேவனுடைய கிறிஸ்துவாக மாபெரும், இறுதி உயிர்த்தெழுதலின் மாற்றத்திற்குத் தகுதியுள்ளவர்களாகிறோம். பலவிதமான நல்லதும். உதவியானதுமான புத்திமதிகளும், கண்டிப்புகளும், யோசனைகளும் அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்டுள்ளன, அவைகள் பல்வேறு சகோதரர்களால் மறுபடியும் சொல்லப்பட்டு ஊர்ஜீதம் செய்யப்பட்டுள்ளன. அவைகள் கடிந்து கொள்ளுதல், சீர்த்திருத்தல் முதலானவைகளுக்குப் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கின்றன. எதற்குக் கீழாக புது சிருஷ்டி வைக்கப்பட்டுள்ளதோ, அந்த முழு கற்பனையும் பொன்னான கற்பனையாக, அன்பின் பிரமாணமாக இருக்கிறது. இது சரியானபடி அறியப்பட்டால், இப்பொழுது புது சிருஷ்டியினால் செய்யப்படும் அநேக காரியங்கள், இனிமேல் செய்யப்படமாட்டாது. மேலும் இப்போது அவர்களால் அசட்டை பண்ணப்பட்ட அநேக காரியங்கள் வைராக்கியத்துடனும், கவனத்துடனும் இனி செய்யப்படும்.
R2329 [col. 1P3-5]: –
புதிய உடன்படிக்கையின் ஐக்கியத்தில், ஆண்டவரோடு தொடர்புகொண்டிருக்கிறோம் என்று எண்ணும் பலர் வெளிப்படையாக தவறு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவையும், பாவங்களுக்காக அவருடைய பலியையும், விசுவாசித்து, இவருடைய ஆசீர்வாதங்களையும், மரணத்தின் சாபத்திலிருந்து விடுதலைப் பெறுவதை விரும்புவார்கள். ஆனால், அவர்கள் தங்களுடைய சார்பில், அதற்கு தொடர்புடைய கடமைகளை அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தவும். அவருடைய உடன்படிக்கையின் பிரமாணம் மற்றும் அந்த பிரமாணத்தை முத்தரிக்கும் இரத்தத்தினால் முத்திரிக்கப்படவும். ஆண்டவருக்கு முன் அவர்கள் நிற்கவில்லை. அவர்கள் புதிய உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்களையே வஞ்சித்துக் கொள்கிறார்கள். அந்த ஏற்பாட்டின் கீழ் பயன் பெறக்கூடிய தேவையான அடுத்தபடிகளை அவர்கள் எடுக்கவில்லை. அன்பின் “இராஜ்ரீக பிரமாணத்தை” அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள், அதை புதிய உடன் படிக்கையின் பொன்னான பிரமாணம் என்று அறிந்திருக்கிறார்கள். ஆயினும், அவர்கள் ஒருபோதும், அர்ப்பணிப்பினால், அந்த பிரமாணத்தின் கீழ் தங்களை உட்படுத்திக்கொள்வதே இல்லை. அவர்கள் அந்த பிரமாணத்திற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், அதுவே அவர்களை கட்டுப்படுத்தும் பிரமாணம் என்றும், இறுதியாக அந்த பிரமாணத்தை கொண்டு அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்றும் அவர்கள் உணராதிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களை தாங்களே வஞ்சிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தெளிவாகவும், முற்றிலுமாக சுட்டிக்காட்டுவது இரக்கத்தின் ஒரு வேலையாகும். அதை ஏற்றுக்கொள்ளாமல், புதிய உடன்படிக்கையின் இராஜரீக பிரமாணத்தின் கீழ்வராதவர்கள், அந்த உடன்படிக்கையிலிருந்து வரும் ஆசீர்வதங்களில் பங்கு பெறமுடியாது. ஆண்டவரிடமும், புதிய உடன்படிக்கையினிடமும், விசுவாசமும். உண்மையுமாக இருப்பது போல பாசாங்கு செய்பவர்கள், தாங்கள் ஒரு உடன்படிக்கைக்கு உட்பட்டவர்கள் என்று தங்களை அங்கீகரித்துக் கொள்ள வேண்டிய நேரமாக உள்ளது. இவர்கள் ஆண்டவரோடு, கிறிஸ்து இயேசுவினால் உண்டான ஒரு நெருக்கமான உடன்படிக்கையை ஏற்படுத்தியிருப்பவர்கள், அந்த உடன்படிக்கையின் பிரமாணத்தால் பிணைக்கப்பட்டும் இருக்கிறார்கள். இதை அவர்கள் அறிவாற்றலோடு செய்தார்களானால், ஒவ்வொரு செயலையும், வார்த்தையையும், வாழ்க்கையின் எண்ணத்தையும், இந்த உடன்படிக்கையின் பொன்னான பிரமாணத்தோடு அளவிட்டு பார்ப்பதற்கு இது சரியான நேரமாக உள்ளது. இதை நம்முடைய ஆண்டவராம் இயேசு, “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்ற விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (லூக்கா 6:31) என்று வெளிப்படுத்துகிறார். நம்முடைய கர்த்தரும், அப்போஸ்தலரும், அவர்களுடைய போதனையிலும், எழுத்துக்களிலும், புதிய உடன்படிக்கையின் இந்த இராஜரீக பிரமாணத்தை கற்பித்தார்கள். இந்த வரிசையில், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, சீஷர்களை நோக்கி, “நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவரையும் நியாயந்தீர்க்காதீர்கள். (கடுமையாக, இரக்கமற்ற, மிக குறுகிய) “ஏனெனில், எந்த அளவுக்கு மற்றவர்களை இரக்கமற்று, நீதி குறைவாக நியாயம் தீர்க்கிறோமோ, அதே அளவின்படி தீர்க்கப்படுவீர்கள். அப்போஸ்தலனாகிய யாக்கோபு இதே கருத்தை மறுபடியும் கூறுகிறார் – “இரக்கம் இல்லாதவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத் தீர்ப்பு.” அதாவது, புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமான ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்பட்டிருந்தால், நம்முடைய பாவங்களை மன்னிக்க கிறிஸ்துவின் மூலமாக தேவனுடைய இரக்கத்தை பெற்றுக் கொண்டது மட்டுமல்ல, இந்த தெய்வீக இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள ஒரு நிபந்தனையும் கூட முன் வைக்கப்படுகிறது. அதாவது நம்முடைய சக – மனிதர்களிடமும், நாம் பெற்ற அதே அன்பு மற்றும் இரக்கத்தின் பிரமாணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகையால், நாம் பொன்னான பிரமாணத்தை பின்பற்றுவதில் தோல்வி அடைந்தால், கிருபையின் உடன்படிக்கைக்கு நிராகரிக்கப்பட்டவர்கள் என்று நம்மை குறித்து நாமே தீர்மானிக்கலாம். மேலும் தெய்வீக தயவை அசட்டை பண்ணுகிறவர்களாகவும், இந்த புதிய உடன்படிக்கையின் வழியாக நமக்கு கிடைக்கூடிய மகத்தான பலியை இலகுவாக எண்ணி மிதிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
R2330 [col. 1 P1 through col. 2 P1]: –
மேலும், மிருகத்திற்கும், வீட்டு வட்டாரத்திற்கும், குடும்பத்திற்கும் பொருந்தும் இந்த அனைத்தும், தேவனுடைய குடும்பமான சபைக்கு அதே அளவில் அல்லது இன்னும் அதி வலுவுடன் பொருந்தும். எனவே, தீய சொற்கள், கசப்பு, கோபம், மூர்க்கம், வைராக்கியம், பகை, வெறுப்பு, பொறாமை,, பழைய சுபாவத்தின் எல்லா பகுதிகளும், உலகம் மற்றும் பிசாசின் இயல்பு, அனைத்தையும் புறம்பாக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் பரிந்துரைக்கிறார். இவைகள் அனைத்தும் கிறிஸ்துவின் புதிய ஆவியினால் அக்கற்றப்படவேண்டும். இது புதிய உடன் படிக்கையின் பிரமாணமாகிய அன்போடே – சாந்தம், பொறுமை, நீடிய பொறுமை, சகோதர அன்புள்ள தயவினால் – இசைந்திருக்கவேண்டும். “இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.” 2 பேதுரு 1:8-11.
இந்த புதிய உடன்படிக்கையின் பிரமாணமாகிய அன்பு – இரக்கம், கனிவு, மென்மை, நற்குணம் – ஆகியவற்றோடு தன்னுடைய இருதயம் இசைந்திராவிட்டால் அவர் தேவனுடைய புத்திரனாகவும், கிறிஸ்துவின் உடன் பங்காளியாகவும், ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு எவ்விதமான அத்தாட்சியும் இல்லை. இந்த அன்பின் ஆவியை அவர் பெறாவிட்டால், அவர் ஆண்டவரின் அடிச்சுவடுகளில், தொலைவில் செல்வதற்கு முடியாது. ஏனெனில் கிறிஸ்துவின் பலி, வீண் பெருமைக்காகவோ, வெளிப்புறமான கண் காட்சியாகவோ, மனிதரின் நன்மதிப்புக்காவோ ஏறெடுக்கப்படாமல், தேவன் மேலும், மனுஷர் மேலும் உள்ள அன்பினால் ஏவப்பட்டு செலுத்தப்பட்டது. அதுபோல நம்முடைய இருதயங்களிலும், நம்முடைய சகோதரர்களை அன்புகூராமல், எல்லா மனிதர்களிடமும். இன்னும் முரட்டுதனமான சிருஷ்டிப்புகளிடமும் கருணையான அன்பும் இரக்கமும் இராவிட்டால், தற்போதைய நிலைமையின் கீழ், தேவைப்படும் பலிகளை ஏறெடுப்பதற்கு நம்மை வழிநடத்தும் ஆவியை நாம் பெறமாட்டோம். பலியின் வழியை, அத்தகைய பெருமையின் வல்லமை, அல்லது வீன் மகிமை தடைசெய்தால், சுயநலம் பின்தொடர்ந்து முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும். மரணபரியந்தம் விசுவாச முள்ளவராக, ஆண்டவரின் அடிச்சவட்டில் நடக்கும் போது, அவரை இப்படியாக பின்பற்றவதற்கு முன், அவர் ஆண்டவரின் அன்பின் ஆவியைப் பெற்றுக்கொள்வார். அப்போஸ்தலர் அறிவிக்கிறபடி, “நான் தேவனிடத்தில் அன்பு கூறுகிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் பொய்யன். காண்கிற சகோதரனை அன்புகூராதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்? எனவே, நாம் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதற்கும், நம்முடைய எஜமானுடனே சஞ்சரித்து வருகிறோம் என்பதற்கும். நாம் சகோதரர் மேல் வைத்திருக்கும் அன்பே, அத்தாட்சி என்று வேதவாக்கியங்கள் முன் வைக்கிறது. மற்றும் சகோதரர்களுக்கான அன்பு, வெறுமனே பிரிவினையினாலோ, குழுமனப் பான்மையினாலோ அல்லது நாம் விரும்பும் இயற்கை குணங்களை உடைய சகோதரர்கள் மேல் வைக்கும் அன்பை இது பொருள்படுத்தாது. இது புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட அனைவர் மற்றும் அன்பின் பொன்னான பிரமாணத்தின்படி நடக்க முயல்கிற அனைவர் மேலுள்ள அன்பை இது பொருள்படுத்துகிறது. நம்முடைய சிந்தனைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் பொருந்தாதபடிக்கு, சிலர் இயற்கையான வளர்ச்சி மற்றும் மனநிலையை தனித்தன்மையாக கொண்டிருந்தார்களானால், நாம் அவர்களை நேசித்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, மகிழ்ச்சியோடு அவர்களுக்கு ஊழியம் செய்வோம். ஏனென்றால், அவர்கள் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரால் அங்கீகரிப்பை பெற்று, புதிய உடன்படிக்கையின் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டு, இராஜரீகமான சுயாதீன பிரமாணத்தையும் ஜீவனையும் தங்களுடைய நிலைபாடாக ஏற்படுத்திக்கொண்டனர். ஆகவே நாம் அவர்களை இனி மாம்சத்தின் தனித்தன்மைகளாகிய முடிச்சுகள், திருப்பங்களின்படி அறியாமல், புதிய சுபாவத்தில் உள்ள “புது சிருஷ்டிகளாக” அறிந்திருக்கிறோம். அதாவது, நம் ஒவ்வொருவருக்கும் அன்பின் பிரமாணத்திற்கு எதிரான, நம்முடைய சொந்த இயல்பான வஞ்சகங்கள், சாதுரியங்களை கண்டறிந்து, இந்த மாம்சத்தின் அபூரணங்களை கூடுமான அளவுக்கு துரிதமாக புறம்பாக்க நாம் முயலவேண்டும். மற்றும் அவைகள் கூடுமான அளவுக்கு மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து, கிறிஸ்துவின் சரீரத்தின் பல்வேறு அங்கத்தினர்கள் என்றுமே குறைபாடுகளை குறிப்பிடமாட்டார்கள். அல்லது மற்றவர்களை பழிப்பதற்கும் கேலிக்குரிய காரியங்களுக்கும் அவர்கள் இணங்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் முடிந்த அளவுக்கு தங்களுடைய சொந்த குறைபாடுகளை மூடி மறைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் போல மற்றவர்களின் குறைபாடுகளை மறைப்பார்கள். மற்றும் தங்களிடம் பரிவுணர்வோடிருப்பதுபோல, மற்றவர்களை சூழும் பிரச்சனைகளில், அவர்களிடம் பரிவுணர்வோடிருந்து, ஆண்டவரும் அவரிடம் பரிவுணர்வோடு நடந்துக்கொள்ள விரும்புவார்கள்.. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் (கிறிஸ்துவின் சிந்தை, அன்பு) அவருடையவனல்ல” (ரோமர் 8:9)
இந்த புதிய உடன்படிக்கையின் நன்மையிலும் சலுகைகளிலும் பங்கெடுக்க. உலகம் அழைக்கப்படுவதற்கு முன்கூட்டியே திருச்சபையின் தற்போதைய அழைப்பின் பொருள், முன்னதாகவே, தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பூரணமானவர்களை அல்ல. தேவனுடைய நேச குமாரனுடைய சாயலை பெற்றவர்களையும் அல்ல, ஆனால் “குமாரனுடைய சாயலை ஒத்திருப்பதற்கும், விரும்பி, முயற்சிக்கக்கூடியவர்கள் இந்த தெரிந்தெடுப்பில் அழைக்கப்படுகிறார்கள். தேவன் அன்பாகவே இருப்பதினால், அன்பே அந்த சாயல். எனவே கிறிஸ்துவின் சிறப்பியல்பு அன்பு, இதுவே பிதாவாகிய தேவனுடைய சாயலின் பிரதிபலிப்பு. இந்த ஒரு அச்சில் நாம் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் தேவன் இந்த அச்சுக்குள் நம்மை பதிக்கமாட்டார். இந்த நற்பண்புகளைப் பெறுவதற்கு அவர் நம்மை கட்டாயப்படுத்தமாட்டார். மாறாக, “மிகப் பெரிதும், விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களினால்” ஏற்படும் தாக்கங்களினால் மட்டுமே நாம் தெய்வீக சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகி, தெய்வீக குணமாகிய அன்பை நம்மேல் பதிக்கும்படிக்கு அவர் முயற்சிக்கிறார். இதனால் நாம் இந்த உலகத்தின் சுயநலம் என்ற கேட்டுக்கு தப்பி அல்லது நமக்குள் ஆழமாக நற்குணங்களை உருவாக்குவதற்கு தேவன் அனுமதிக்கும் எல்லாவிதமான அழுத்தங்களிலும், நம்மை நாம் தேவனுடைய அன்பில் காத்துக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம் யூதா 21.