CD-KNOWLEDGE-Q-26
தானி 12:4 “தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்”
A337(P1): –
எல்லா காரியங்களையும் புதிதாக ஒழுங்குப்படுத்துவதற்காக, தேவன் குறித்த காலம் இதுவே என்று நிரூபிக்க அவசியமில்லாத வகையில் (தானி 12:4,1)ல் முன்னதாக அறிவித்து அதன் விளைவுகளையும் முன்னதாக தீர்மானித்தது போல மெதுவாக மனுக்குலத்தில் காணப்படும் அறிவான விஞ்ஞான கண்டுபிடிப்புகளாகிய வெளிச்சத்தை வீசி, அறியாமை என்னும் முக்காட்டை பொறுமையாக விலக்கி கொண்டிருக்கிறார். அறிவு முன்னதாக வந்திருந்தால், உபத்திரவங்களும் முன்னதாக வந்திருக்கும். அனைத்தும் அழிந்தபின் புதிதான ஒரு உலகம் அல்லது அமைப்பு உண்டாயிருக்கும். ஆனால் அதில் நீதியும், வாசமாய் இராமல், இந்நாளில் காணப்படும் பாவங்களும், அநீதிகளும் அதிகமாக காணப்பட்டிருக்கும். வேலை ஆட்களைக் குறைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் மனிதனுக்கு அதிகமாக ஓய்வு எடுக்கும் நேரத்தை கொடுத்திருக்கும், விழுந்துபோன நிலையில் இருக்கும் மனுஷன் தன்னுடைய மன நிலையையும், தனி மனித ஒழுக்கத்தையும், உடல் ரீதியான முன்னேற்றத்திற்காக அந்தக் காலங்களை செலவிடாமல், வரலாறுகள் நிரூபிப்பதை போல, அதிக தீமையானவைகளுக்கும் பாவமான செயல்களுக்குமே மனுக்குலம் தீவிரித்திருக்கும்.
D414(P1): –
பொதுவாக இந்த உலகம் முழுவதிலும், விசேஷமாக கிறிஸ்துவ மண்டலத்திலும் அறிவு பெருகி கொண்டிருப்பதை கவனிக்கத் தவறுகிறார்கள். மனுஷன் இதை மறந்துவிட்டாலும் தேவனுடைய வார்த்தைகளின் மூலம் கிடைக்கும் உண்மையான ஞானத்தின் ஊற்றை தேடுகிற ஞானமானவர்களின் கவனத்தை இது ஈர்க்கிறது. “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியில் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேலாகிய நீயோவென்றால், முடிவு காலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைப்பொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு, அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்” என்றும் (தானி 12:1-4) அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தீர்மானிக்கப்பட்டவைகள் மிக அபாரமான அளவில் நிறைவேறுவதை காண்கிறார்கள். அதே நேரத்தில் முன்னறிவிக்கப்பட்ட மகா உபத்திரவத்தின் காலமும் துவங்குவதை காண்கிறார்கள். இவைகள் நடந்துகொண்டிருக்கும் வரலாறை தலைக்கீழாக மாற்ற துவங்கும் சூழ் நிலைகளை உருவாக்குகிறது, ஏனெனில் இதை தொடர்ந்து பேசும் போது “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்;…. அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.” அப்போது நடந்துகொண்டிருக்கும் சாத்தானின் ஆட்சியில் சகல விதமான சுயநலமும் அந்த உபத்திரவ காலத்தோடு முடிவுக்கு வந்த பின், கிறிஸ்து மகிமையில், வல்லமை பொருந்தினவராக இந்த மனுக்குலத்தை ஆசீர்வதிக்கும்படியாக தம்முடைய இராஜ்யத்தை பகிரங்கமாக ஸ்தாபிப்பார்.
R2973 (col.2 P1-3): –
சபை தன்னுடைய பயணத்தை துவங்கி வெகு காலம் சென்று விட்டது என்று தானியேல், ஏசாயா, எரேமியா மற்றும் அனைத்து பரிசுத்தமான தீர்க்கதரிசிகள் மூலமாக நம்முடைய ஆண்டவர் கொடுத்த அறிகுறிகளை கவனமாக ஏற்றுக்கொண்டவர்கள் நிச்சயமாக உணர்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த அறிகுறிகளை புரிந்துகொண்ட நாம் இந்தப்பயணத்தின் முடிவை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். மேலும் தேவன் இந்த உலகத்திற்கு தரக்கூடிய மிக பெரிய ஆசீர்வாதத்திற்கும், நீண்ட காலமாக கிறிஸ்தவர்கள் ஜெபித்து கொண்டிருக்கும் ஜெபங்கள் நிறைவேறும் காலத்திற்கும் நாம் வெகு அருகில் இருப்பதை அறிந்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, “முடிவு காலம்” என்று தீர்க்கதரிசியாகிய தானியேலின் மூலம் ஆண்டவர் கொடுத்த கால அளவு கிட்டத்தட்ட 100 வருடங்களாக இருக்க வேண்டும் என்று ஜாமக்காரர்கள் கணித்திருக்கிறார்கள். “தானியேலாகிய நீயோவென்றால், முடிவு காலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைப்பொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு, அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்” தானி 12:4 ல் எழுதியிருக்கிறபடி இந்த “முடிவு காலத்தில்” பூமி முழுவதிலும் அங்கும் இங்கும் ஓடி, பயணங்கள் அதிகரிக்கும் என்றும், பொதுவாக அறிவு பெருகிப்போகும் என்றும் வேதத்தை கூர்ந்து கவனிப்பவர்கள் அறிந்திருக்கிறாரக்ள்.
தீர்க்கதரிசனங்களை ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும், கவனமாக கூர்ந்து கவனிப்பதே தேவன் வாக்களித்த மகிமையான காரியங்களாகும். இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை கவனிக்கக்கூடிய அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். அனைத்து மனுஷரும் நடக்கக்கூடிய காரியங்களைக் காண்கிறார்கள். ஆனால் அனைவரும் ஒரே மாதிரியாக புரிந்து கொள்ளுவதில்லை. விசுவாசமுள்ள ஜாமக்காரர்கள் இவைகளை உண்மைகளாக மட்டும் ஏற்றுக்கொள்ளாமல், “முடிவு காலத்தை” பற்றிய கால தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களின் நிரூபணங்களாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளினாலும், தீர்க்கதரிசனமான அளவுகளைப் பயன்படுத்தி – “முடிவு காலம்” என்பது கி.பி.1799ம் ஆண்டு முதல் துவங்கியது என்றும் மேலும், இந்தக் காலத்தை “அவருடைய (யேகோவாவின்) ஆயத்த நாள்” என்றும் அழைக்கப்படுகிறதை ஜாமக்காரர்களுக்கு நிரூபிக்கப்படுகிறது. பிதாவாகிய தேவன் அவருடைய நேச குமாரனுடைய இராஜ்யத்திற்கான ஆயத்தங்களை செய்துகொண்டிருக்கிறார்.
தேவன் அறியாமை என்னும் திரையை விலக்கி வெளிச்சத்தை வீச செய்வதையும் காண்கிறார்கள். மேலும் இப்படியாக இறுதியில் இந்த உலகம் மிகுதியாக ஆசீர்வதிக்கப்படும். இயற்கையான முறையில் இராஜ்யம் ஸ்தாபிப்பதற்கான ஆயத்தவேலைகளுக்கு தேவன் பயன்படுத்துகிறது, நீதியின் சூரியன் எழும்பி, தன்னுடைய குணமாக்கும் கதிர்களை வீசி, ஆயிர வருட ஆட்சி துரிதமாக துவங்கி, சகல விதமான இரக்கங்களும், வாய்ப்புகளும், ஆசீர்வாதங்களும், பொழியப்படும். “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்” – அப் 3:21
உண்மையுடனும் முழு ஆர்வத்துடனும், உறுதியோடு கவனிப்பவர்கள் தேவன் முன்னதாக சகல நன்மையான காரியங்களையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார்கள் (1 கொரி 2:9-13, 1 பேது 1:4). மேலும், தானியேலின் தீர்க்கதரிசனம் குறிப்பிடுவது போல, போக்குவரத்தின் அதிகரிப்பு, அறிவின் பெருக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயத்தில் அந்த அறிவின் பெருக்கம் உலகத்தில் அதிகமான அதிருப்தியை ஏற்படுத்தி அதன் விளைவாக “ஒருவரும் இதுவரையில் கண்டிராத மகா உபத்திரவ காலத்திற்கு” வழிவகுக்கும் என்றும் ஜாமக்காரர்கள் கணித்துள்ளார்கள். பொதுவாக உலகத்தின் மனுக்குலத்தின் மத்தியில் இவைகள் நிறைவேறிக்கொண்டிருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறார்கள். தேவனுடைய ஆசீர்வாதங்களையும் கிருபைகளையும் பெற்றிருந்தாலும், துக்கங்களும் பிரச்சனைகளும் காணப்படுகிறது. ஆயிர வருட பகிரங்கமான ஆட்சிக்கு ஆயத்தமாக தேவன் கொடுத்துக்கொண்டிருக்கும் தெய்வீக நன்மைகளுக்காக அவருக்கு முழுமனதோடு நன்றி செலுத்தி, கனத்தையும், அன்பையும் அவருக்கு அர்ப்பணிப்பதை விட்டு விட்டு, புதிதாக மாற்றப்படாத இருதயத்தில் உள்ள பேராசைகளும், மிகுதியான சுயநலமும், கோபமும், பகையும் மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகள் இப்போது அதிகமாக காணப்படுகிறது. ஆம், மிகுந்த உபத்திரவத்தின் உச்ச கட்டத்தை மனுக்குலம் எட்டி பிடித்துக்கொண்டிருப்பதை, இந்த நிகழ் காலத்தில் உள்ள மனித அமைப்புகள் அனைத்திலும் காணப்படுகிறது. இப்படியாக, இந்த உலகம் குழப்பத்தையும் அழிவை நோக்கி செல்லும் என்று வசனங்கள் தெளிவாக அறிவிக்கக்கூடிய காரியங்கள் தெளிவாக காணப்படுகிறது. ஜாமக்காரர்கள், இவைகளின் மேல் மிகுந்த கவனம் வைத்திருந்தாலும், அவர்களுடைய கண்கள் தேவனையும், அவருடைய தெய்வீக நன்மைகளைவிட்டு விலகுவதில்லை. தேவனே இவைகளுக்கு காரணம் என்று மனுக்குலம் புரிந்துக்கொள்ளும் நாள் வரைக்கும் மிகவும் சாதகமான சூழ்நிலைகளில், சுய நலமாக செயல்படும் பட்சத்தில் இயற்கையாகவே சமுதாய பிரச்சனைகளும் மற்ற அமைப்புகளின் வீழ்ச்சிகளும் ஏற்படும். மேலும் “மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்” (சங் 76:10)