Q-9
F319 [P1]
நம்முடைய நாங்காவது முன்மொழி: அறிவின் வளர்ச்சி பக்தியிலிருந்து திசைத்திருப்புவதற்கு பொறுப்பாகும். அது அவ்வாறு எப்படி இருக்க முடியும் என்று விசித்திரமாக தோன்றலாம். நம்முடைய திறன்கள் மிகச் சிறியதாகவும், மத விஷயங்களுக்காக நாம் குறைவான நேரத்தை ஒதுக்குவதை நாம் காண்கிறோம். ஒரு காரியத்தில் கவனத்துடன் ஆற்றல் செலுத்தப்பட்டால், மற்ற காரியங்களின் மேல் குறைவான கவனத்திற்கு வழிவகுக்கும், கிறிஸ்தவர் இருதயம் இல்லாத முழுமையான தலையாகவோ, அல்லது தலையில்லாமல் முழுமையான இருதயமாகவோ இருக்கக்கூடாது. “ஒரு நல்ல மனதின் ஆவி”, ஒரு பரிபூரண குணத்தை நிறைவாக்க, அனைத்து ஆவியின் கனிகள் மற்றும் கிருபைகளை சரியாக வளர்க்கும். எல்லா விஷயங்களிலும் நம் நாளின் போக்கு எதிர் திசையில் உள்ளது. ஒரு வேலையாள் ஒரு பகுதியான வேலையைச் செய்கிறார். மற்றொரு வேலைக்காரன் அவருக்குரிய பகுதியான வேலையைச் செய்கிறார். ஆனால் இப்போது மிகக் குறைவான வேலையாட்கள் மட்டுமே, முந்தைய காலத்தைப் போல ஒரு வேலையை முழுமையாக புரிந்துகொள்கிறார்கள். புது சிருஷ்டிகள் இந்தப் போக்கை எதிர்க்க வேண்டும், அதற்கேற்ப “அவரது பாதங்களுக்கு நேரான பாதைகளை உருவாக்க வேண்டும்.” ஆவிக்குரிய ஒரு கனியை வளர்க்கும்போது, தேவன் கொடுத்த மற்ற வழிக்காட்டி அல்லது சலுகைகளில் முறையான பயிற்சி இல்லாததால் ஆபத்தில் விழலாம்.
F503 [P1]
மனைவி புது சிருஷ்டியின் உறுப்பினராகவும் கணவருக்கு உலகின் ஆவியில் இருந்தாலும், அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கலாம். பிரச்சினையும் இதேபோல் ஒப்பீட்டளவில் எளிதான தீர்வை காணும் உன்னதமான குணம் படைத்த கணவர், உலகத்தாராக இருந்தாலும், தனது மனைவியின் மனசாட்சியை அங்கீகரித்து, அவளுடைய மனம் மற்றும் தார்மீக மற்றும் ஆவிக்குரிய வாய்ப்புகளை வழங்குவதே அவருடைய விருப்பமாக இருக்கும் ஆவிக்குரிய தோழமைக்கான விருப்பத்தைத் தவிர, மனைவியாக அவன் விரும்பும் அனைத்தையும் அவளுக்குக் கொடுப்பதே அவருடைய கடமையாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு உன்னத எண்ணம் கொண்ட மனிதருக்கு, அவருடைய மனைவியின் விசுவாசம் தேவனுக்கும் மற்றும் அவன் கனவனுக்கும், அவளுடைய வாழ்க்கையின் அனைத்து கடமைகளிலும் உண்மையாக இருந்தால், இறுதியில் கணவரை தேவனிடம் அர்ப்பணிக்கக்கூடிய ஆசீர்வாதத்தை பெறலாம். தற்காலிகமான அல்லது மத விஷயங்களில் கூட ஒரு மனைவிக்கு நன்மையான ஆசைகள் மற்றும் லட்சியங்கள் இருக்கலாம். அவன் கணவன் ஒரு உன்னதமானவராக இருந்தாலும், அதை புரிந்துகொள்ள முடியாத ஒரு சராசரி மனிதனாக இருக்கலாம். அவ்வாறான நிலையில், எல்லா விஷயங்களிலும் மிதமானவளாக இருக்கும்படி, தேவன் அவருடைய ஜனங்களுக்கு கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்றுகொண்டு, அவள் தனி கணவனின் பொதுவான தாராளகுணத்தை கருத்தில் கொண்டு, மனசாட்சி அல்லது மத கொள்கையின் எந்த விஷயத்திலும் சமரசம் செய்யாமல், தேவனால் அங்கீகரிக்கப்பட்ட தன் மனைவியின் கடமைகளில் அவள் தன் கணவனுக்கு அவளது தோழமையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்பதை அவன் நினையில் கொள்ள வேண்டும். இது ஒருவேளை சில சபை கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தடுக்கலாம். ஆனால் அவள் தன் கணவனைப் பிரியப்படுத்தும் ஆசையில் அவன் மனசாட்சியை மீறாமல், அவளுடைய பரலோக மணவாளனாகிய ஆண்டவருக்கு அவளது பொறுப்புகளுக்கும் கீழ்ப்படிதலுக்கும் இடையூறு ஏறிபடாதவாறு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நாம் ஒன்றுகூடுவதை நாம் மறந்துவிடக் கூடாது என்ற அவரது உத்தரவை அவள் நினைவில் கொள்ளவேண்டும். அவள் மிதமான அல்லது நிதானத்தோடு தன் கணவனை கவனத்தில் கொண்டு….. அதனால் அவள் நேரத்தை பிரித்து, ஓரளவுக்கு நியாயமான பங்கை அவருக்காக ஒதுக்கவேண்டும் என் பதையே நாம் அனைவரும் இங்கு வலியுறுத்துகிறோம்.