Q-18
“எபி 10:36 “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.”
C212 (P1)
வெகு சீக்கிரத்தில் தங்களுடைய விசுவாசத்தை நிரூபித்தவர்கள் உடனடியாக தங்களுடைய பரிசைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது பொருள் அல்ல. ஒருவேளை நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு எதிரிடையாக இருந்தாலும், சிலர் அந்தகார இரவின் உபத்திரவங்களில் அகப்பட்டவர்களுக்கு இப்படிச் சம்பவிக்கலாம். “இங்கு பரிசுத்தவான்களின் பொறுமை, தேவனுடைய கற்பனைகளையும், இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளும்.” இந்தத் தீமையான நாட்களில் மிகப் பெரிய தவறுகளும் தைரியமாக ஜனங்கள் மத்தியில் சுற்றிக்கொண்டிருக்கும்போது, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொண்டவர்களாகத் தைரியத்தோடும், எல்லா தெளிவோடும் சத்தியத்திற்காக நின்று ஊக்கமளிக்கக் கூடிய அறிவுரைகளைத் தரித்தவர்களாக, நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆவியின் பட்டயத்தை எப்போதும் கையில் பிடித்தவர்களாக சகல பரிசுத்தவான்களுக்காகச் சொல்லும் ஜெபங்களோடு நாம் நிற்கவேண்டும். வாக்குத்தத்தங்களைப் பெறும்படியாக தேவனுடைய சித்தத்தை செய்து முடித்தாலும் அவைகளைப் பெற்றுக் கொள்ள நீடிய பொறுமையோடு காத்திருக்க வேண்டும். வெளி 14:12, எபே 6:13, எபி 10:36
R2791 (col. 1 P2,3)
நம்முடைய பாடம் நீடிய பொறுமையைக் குறித்திருப்பதினால், நம்முடைய ஆண்டவரின் போதனை அல்லது வார்த்தைகளைக் குறித்துப் பார்க்கலாம். அவர் இரண்டு முறை இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். லூக்கா 8:15ல் விதைக்கிறவனுடைய உவமையில் – “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்தில் ஏற்றுக் கொள்வதற்கு, கனிகொடுக்கக்கூடிய வகுப்பாராக நிரூபிக்கப்படுவதற்கு மிகுந்த பொறுமையோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஏனெனில் பாறையில் விழுந்த விதைகளை – முதலில், மிகுந்த சந்தோஷத்துடன் வசனத்தை ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் வெயிலின் உஷ்ணம் அதிகரித்தபோதோ, அவைகள் தீய்ந்து போய்விட்டது. இவர்கள் தேவனுடைய வசனத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்குள் பொறுமையில்லாததினால், உபத்திரவங்கள் வரும்போது அவர்கள் அதில் நிலை நிற்க முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் என்றுமே இராஜ்யத்தின் வகுப்பாராவதற்கு வாய்ப்பில்லை.
நீடிய பொறுமையே இறுதி பரீட்சை என்று நம்முடைய ஆண்டவர் இந்த உவமையின் மூலமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார். விதைகளைப் பெற்றுக் கொள்ளும் நல்ல நிலம், முளை கிளம்பி அன்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் விசுவாசத்தினாலும் நல்ல பலன்களைத் தருகிறது. அதற்குப் பின் இருக்கும் நீடிய பொறுமை அந்தக் கனிகளை மேலும் வளர்ச்சியடையச்செய்து, களஞ்சியத்தில் சேர்க்க தகுதி பெறுகிறது. நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளில் நீடிய பொறுமை என்ற குணத்திற்கு எவ்வளவு வெளிச்சம் வீசப்படுகிறது பாருங்கள். இந்த நீடிய பொறுமை இல்லாத சூழ்நிலையில் “உம்முடைய சித்தத்தைச் செய்ய அடியேன் வருகிறேன்” என்று சொன்ன ஆண்டவரின் சாயலை அணிய முடியாது. இராஜரீகமான ஆசாரிய வகுப்பாருக்கு நம்முடைய ஆண்டவர் தங்களுடைய சரீரங்களை ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கு மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றும் நாம் சத்தியத்திற்காக நம்முடைய சகோதரர்களுக்கு நம்முடைய ஜீவனைக் கொடுக்கும் மன நிலையைக் கொண்டவர்களாக இருக்கிறோம். மேலும், இந்தப் பலிகளை இயேசுவின் ஈடுபலியின் மூலம் ஏற்றுக்கொள்ளும் தேவன் – முழு மனதோடும், சந்தோஷத்துடனும் செலுத்தப்படும் பலிகளில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.
R2792 (col. 1 P2)
பொறுமை மற்றும் சந்தோஷத்துடன் சகிப்புத் தன்மையின் முக்கியத்துவங்களை நாம் பார்ப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தைகள் இருக்கும் மற்ற இடங்களையும் நாம் கவனிப்போம். பவுல் – “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறார். இந்த இடத்திலும் தேவனுடைய சித்தம் செய்வதை சோதனையாக வைக்காமல், அதை செய்து முடித்தப்பின் நம்முடைய இருதயத்திலும், விருப்பத்திலும் நாம் நீடிய பொறுமையோடிருந்து, தேவனுடைய நீதியை எந்தச் சூழ்நிலையிலும், சந்தர்ப்பங்களிலும், நம்முடைய இருதயத்தின் கோட்பாடாக ஸ்தாபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அப்போது நம்முடைய மனநிலை இராஜ்யத்திற்கு ஏற்றதான நிலையில் வரும். “உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” (யாக்கோபு 1:3) என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். அதாவது நீங்கள் விசுவாசத்தில் சோதிக்கப்பட்டால், உங்களுக்கு தேவையான பொறுமை தானாக வந்துவிடும். என்று சொல்லுகிறார். ஒருவேளை நமக்கு பொறுமை இல்லை என்றால், நாம் இன்னும் விசுவாசத்தின் பரீட்சைகளுக்கு நில்லாதவர்களாக இருப்பதால், இராஜ்யத்திற்கும் உகந்தவர்கள் அல்ல என்று பொருள்படும்.