CD-FAITH-Q-28
“உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக, அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், கர்த்தர் அவனை எழுப்புவார், அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”
F637[P2] – F638[1]
புது சிருஷ்டிகள் தங்களுடைய உடல் நல குறைவுகளிலிருந்து நலம் பெற, தெய்வீக வல்லமையை சார்ந்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த வேதப்பகுதி மற்றும் மாற்கு 16:17,18 ம் வசனங்களே ஆதாரமாக இருக்கிறது. மாற்கு சுவிசேஷத்தில் உள்ள இந்த வசனங்கள் கிரேக்கப் பிரதிகளில் காணப்படுவதில்லை என்றும், இவ்வசனங்கள் ஐந்தாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டவைகள் என்றும் நாம் எளிதில் விட்டு விடலாம்.
யாக்கோபின் வார்த்தைகளைப் பொறுத்தவரையில் – இந்த வியாதிகள் அனைத்தும் பாவத்தினால் வருகிறதாக பதினாறாம் வசனத்திலிருந்து நமக்கு குறிப்புகள் காணப்படுகிறது – இது எளிதாகத் தோன்றினாலும், சபையின் மூப்பர்களை வரவழைக்கும் அளவிற்கு மிக கொடூரமாகவே இருக்கிறது. இவைகள் அனைத்தையும் பார்க்கும்பொழுது, வியாதிப்பட்டவர், அதாவது அந்தக் குறிப்பிட்ட பாவி தேவனுடைய ஐக்கியத்தை துண்டிக்கும் அளவிற்கு பாவம் வளர்ந்திருப்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாவங்களுக்காக மனம் வருந்தி, மன்னிப்புக்காக ஜெபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது – “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், கர்த்தர் அவனை எழுப்புவார், அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” – (வசனம் – 15) என்று வாசிக்கிறோம்.