CD-FAITH-Q-1
எபி 11:1 “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.”
1 யோவ 5:4 “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.”
E112 (P1)
சுய சித்தத்தை வெறுத்து, இடுக்கமான பாதையில் செல்பவர்கள், தங்களுடைய முழு விருப்பத்தையும், சித்தத்தையும் பரலோகப்பிதாவின் முழு சித்தத்திற்கு ஒப்புவித்து, பூரண மனித இயல்பான விருப்பங்களையும், எதிர்நோக்குகளையும் நசுக்கி, முழுமையாக தேவனுடைய சித்தம் தங்களை ஆண்டுக்கொள்ளும்படி, அவருடைய பணிக்காக இந்தப் பூமிக்குரிய அனைத்து ஆசைகளையும் அடக்கி, தங்களையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கு இவர்கள் மேற்கொள்ளும் போராட்டமே – தலைமையான போராட்டமாகும். இப்படிப்பட்ட சோதனைகளில் நம்முடைய தலைமை குரு வெற்றி பெற்றார். இதைபோலவே, அவருடைய சகோதரர்களும் இந்தப் போராட்டங்களில் ஜெயிக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். “தன்னுடைய ஆவியை அடக்குகிறவன் (தேவனுடைய சித்தத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து) மதில் சூழ்ந்த பட்டணம் போலிருக்கிறான்” அதே நேரத்தில், தவறான விசுவாசத்தின் அடிப்படையில், உருவாகும் சிந்தனைகள் (ஆலயத்தின் உச்சியிலிருந்து குதிப்பது) மதியீனமான காரியங்களைத் தோற்றுவிக்கும். ஆகவே, சோதித்தறிந்து சரியான விசுவாசத்தோடு செயல்படுகிறவன் பாக்கியவான். தேவன் மேல் வைக்கும் விசுவாசம் குருட்டாட்டமான எதையும் எளிதில் நம்பக்கூடிய அல்லது கட்டுக்கடங்காத அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டிராமல், தேவன் கொடுத்த அற்புதமான வாக்குத்தத்தங்கள் மேல் வைக்கும் உறுதியான நம்பிக்கையாகும். இப்படிப்பட்ட நம்பிக்கை இந்த உலகத்தின் பல்வேறு முயற்சிகளையும், மாம்சத்தையும், சாத்தானையும், எதிர்த்து ஜெயிக்கவும் அவன் கவனத்தை திசை திருப்பவும் அதிகமாக நம்மை ஸ்திரப்படுத்தவும் உதவிசெய்கிறது. மேலும் விசுவாசத்தின் சரியான பாதையில் நடத்தி, தெய்வீக வார்த்தைகளுக்கு தேவனுடைய விருப்பத்தின்படி கீழ்ப்படிய நமக்கு உதவி செய்கிறது.
F689 (முதல் வரி) – நம்முடைய சிந்தையில் தேவனையும் அவருடைய வாக்குறுதிகளையும் செயல் முறைப்படுத்தி, அதை பயிற்சி செய்வதே விசுவாசமாகும்.