CD-FAITH-Q-27
கலாத்தியர் 6:10 – “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்”
R2740 [col.1p1 – col.2p2]
கேள்வி : ஆண்டவர் நம்மை நன்மை செய்யக் கட்டளையிட்டிருக்கிறார், “விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கு”. யார் இந்த விசுவாசக் குடும்பம்? இவர்கள் உடன்படிக்கைப்பண்ணின பரிசுத்தவான்களா? அல்லது நீதிமானாக்கப்பட்ட வகுப்பினரா அல்லது பரிசுத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களா? அல்லது முழுமையாகப் பரிசுத்தமடைந்தவர்களா?
பதில் – வசனங்கள் கூறுகிறபடி, தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்க்கையில், “கிறிஸ்துவின் சபை” என்பது இயேசு கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களையே குறிக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதாவது, விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்பட்டு, அதற்கு மேல், தங்களைச் சுத்திகரிக்கும் முயற்சியில் உடன்படிக்கைச் செய்பவர்கள்.
ஆனால் “விசுவாசக் குடும்பத்தினர்” மேலும் அதிக எண்ணிக்கை உள்ளவர்கள் – தங்களுடைய பாவங்களிலிருந்தும், அதன் பலன்களிலிருந்தும் விடுபட, இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் – இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்கள், கடும் முயற்சிகள் எடுத்து, அவருடைய நீதியின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த விரும்புவோர்கள் சகல பரிசுத்தவான்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும், அரவணைப்பையும் வெளிப்படுத்த வேண்டும். இவர்கள் மேல் மட்டும் அல்ல நீதியின் கோட்பாடுகளின் கீழ் இருக்கும் விசுவாசிகள் அனைவர் மேலும் இந்த அன்பை வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுது நாம் இந்த உலகத்திற்கு மரித்து, கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டிகளாக, அவரோடு புதிய ஜீவியத்தில் நடந்து, வருங்காலத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இராஜ்யத்தில் அவருடைய பங்காளிகளாக இருப்போம்.