CD-PRAYER-Q-23
உரையாற்றப்படும் வகுப்பிற்கு அப்போஸ்தலர் வழங்கக்கூடிய எந்த ஆலோசனையும் இதைவிட மிக முக்கியமானதாக இருக்க முடியாது. “ஆஹா, சோதிக்கப்படும்போதும், விரக்தியடையும் போதும், திகைக்கும் போதும் உதவிக்காக தப்பிச் செல்ல முடியுமா? அல்லது பாவ சேனையினால் தோல்வியுற்றபின் உபத்திரவப்படும் பரிசுத்தவான்களுக்கு கிருபாசனம் இல்லை என்று சொல்கிறது சாத்தியமாப் பாருங்கள்!
ஜெபமும், தேவனோடு ஐக்கியமும். நம்முடைய ஆவிக்குரிய நலனுக்கு இன்றியமையாத அவசியமாகும். மேலும், உன்னதமானவருடனும். நம்முடைய மீட்பருடனுமான ஐக்கியத்தில் சீலாக்கியத்தை பாராட்டுதல், அல்லது அத்தகைய பாராட்டு இல்லாத காரியமானது. தேவனுடைய விஷயங்களில் நாம் குளிர்ச்சியாக இருப்பதை தெளிவாக குறிக்கிறது. ஜனங்கள் தங்கள் சொந்த திட்டங்கள் அல்லது மனித அமைப்புகள் மற்றும் கோட்பாடுகளின் திட்டங்களுக்கு ஆர்வமுடன் ஊழியம் செய்து. ஜெபத்திற்கு ஆர்வம் இல்லாதவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் தேவனையும் அவருடைய சத்தியத்தையும், அனலான இருதயத்தில், ஆர்வத்தோடு சேவிப்பவர்கள். தெய்வீக பணியில் தங்களுடைய சொந்த இயலாமைகளையும், அபூரணங்களையும் உணர்ந்துக்கொண்டவர்களாக, ஆண்டவருக்கு செய்யும் சேவைகளில் தொடர்ந்து ஆண்டவருடைய வழிநடத்தலை தேடுவதையே அவர்கள் விரும்புவார்கள். ஆகையால் தனி ஜெபம் அல்லது பொது ஜெபம் அல்லது வீட்டு ஜெபம், ஆகியவற்றில் அலட்சியம் வளர்ந்துவருவதை நாம் எப்போதாவது உணர்ந்தால், இந்த இரண்டு விஷயங்களில் ஒன்றின் மிகவும் ஆபத்தான அறிகுறி என்று நாம் உறுதியாக நம்பலாம். (1) ஒன்று நம்முடைய அன்பு தனிந்துகொண்டிருக்கவேண்டும் அல்லது (2) தேவன் மேல் ஆர்வம்கொள்ளாமல், நம்முடைய அன்பு இடம் மாற்றப்பட்டும், தவறாக வழிநடத்தப்பட்டும், ஏதோ பூமிக்குரிய திட்டம் அல்லது லட்சியத்தின் மீது வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் நாம் எதை கண்டுபிடித்தாலும் சரி, அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஜெபத்தைப் பாராட்டுவது, அன்பில் வளர்ச்சி அடைவது, ஆவியின் மேல் ஆர்வம் அதிகரிப்பது, வளர்ச்சியின் காரியத்திற்கு சிறந்த எரிபொருளாகும். மேலே பரிந்துரைக்கப்பட்டபடி, இவைகள் எற்கனவே தெய்வீக இரக்கங்கள் என்று கருதப்படுகிறது.
R1866 [col. 1:2]: –
கர்த்தருடைய அன்பான சக சீஷர்களோடு நம்முடைய ஐக்கியம் ஜெபத்தில் உறுதியாக இருப்பது, எப்போதும் ஜெபிப்பது நமக்கு எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நம் இருதயங்களையும் மனதையும் தேவனிடம் உயர்த்துவதற்கும், பிதாவும், நம்முடைய அன்பான கர்த்தராகிய இயேசுவும் தொடர்ந்து நம்முடன் நிலைத்திருப்பதை தினமும், ஒவ்வொரு மணிநேரமும் உணரக்கூடிய பாக்கியத்தையும் பெற்றுள்ளோம். பின்னர், அவரது பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ், அன்றாட கடமைகள் செயல்கள் நடத்தப்படும்போது, அல்லது தேவனோடு தனிமையில் அவருடைய கிருபாசனத்தண்டையில் நம்முடைய இருதயங்களின் பாரங்களை இறக்கி வைக்கக்கூடிய மிக நெருக்கமான உறவில் நுழையக்கூடிய சிலாக்கியம் எவ்வளவு விலையேறப்பெற்றது என்றும் அதன் தேவையை நம்முடைய ஆத்துமா எந்த நேரத்திலும் உணருவது எப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட சிறப்புரிமையாக உள்ளது.