CD-EVILSPEAK-Q-7
சங் 19:12-14 “தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். என் கன்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.”
R2448 (col.1 p6)
உண்மையான கிறிஸ்தவனின் இருதயத்தின் நோக்கங்களில் இருக்கும் முழுமையான அர்ப்பணிக்கப்பட்ட சிந்தையை தீர்க்கதரிசனமான ஜெபம் அடையாளப்படுத்தும்.
“அவருடைய நீதியை விசுவாசித்ததினால் கடந்த காலத்தில் தேவனுடைய நீடிய பொறுமையினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதை உணர்ந்துபார்க்கையில், கிறிஸ்து இயேவுக்குள் இருந்த தேவனுடைய கிருபையினால் நம்முடைய பாவங்களை அவர் சுமந்ததை நாம் சரியான முறையில் உணர்ந்தால் நிச்சயமாக நாம் குற்றங்கள் புரிவதை தவிர்க்க முயற்சிப்போம். இரகசியமான இந்தக் குற்றங்கள் இரண்டு வகைப்படும். நமக்குள் இரகசியமாக செய்யப்படும் குற்றங்களாக இருக்கும். – சறுக்குதல்கள், அறியாமையில் அல்லது எந்த நோக்கமும் இல்லாமல் செய்யப்படும் குற்றங்கள். ஆனால், தேவனோடு நல்ல ஐக்கியப்பட ஒருவருடைய உண்மையான இருதயமும் அதன் விருப்பமும் நிச்சயமாக அறியாமையில் செய்யும் பாவங்களுக்காகவும் வருந்தி இப்படிப்பட்ட குற்றங்களை மேற்க்கொண்டு ஜெயிக்கவும், திவ்விய கிருபைக்காகவும், வேண்டி ஜெபிப்பார். இவைகளுக்கு அப்பாற்பட்ட மற்ற இரகசியமான குற்றங்களும் உண்டு. இவைகள் நமக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரிந்ததாக இருக்கிறது. நம்முடைய பாவங்களின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்துவதற்கு முன் நம்முடைய சிந்தையில் இருக்கும் அபூரணங்களையும் அல்லது குற்றங்களையும் அகற்ற வேண்டும்.