யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-PRAYER-Q-42

யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?

How do we explain James 5:14-16?

“உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக் கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையீட்டு. ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும பெலனுள்ளதாயிருக்கிறது.”

நீங்கள் குணமடையும்படி உங்கள் தவறுகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஜெபியுங்கள். நீதிமானின் ஊக்கமான ஜெபங்களுக்கு பலனளிக்கப்படும்.

R2008 [col. 1:7] through R2009 [col. 2:1] (#42கேள்வி காண்க)

“உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்.” என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (யாக்கோபு 5:13)

இந்த ஆலோசனை தேவனுடைய ஜனங்களின் மனம் மற்றும் உடல் ரீதியான, குறிப்பாக முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு போன்ற அனைத்து சோதனைகளுக்கும். துன்பங்களுக்கும் பொருந்தும். இது போன்று துன்பப்படுபவர்கள் எந்தவிதமான கஷ்டங்களையும் தேவனிடம் நேரடியாக எடுத்துச் செல்லக்கூடும். மேலும் உதவியாக அவருடைய தயவும். இரக்கமும் கிருபையும் பெற்று கொள்ளும் உறுதியையும் பெற்றிருக்கலாம். பின்வரும் வசனங்களில் (14.15) உள்ளதைப் போல. இவர்களின் பாவங்களுக்காக மூப்பர்கள் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு முன்றாம் வகுப்பினருடைய துன்பங்களி குறிப்பிடப்படுகின்றது. பாவங் ககுக்காக தேவனிடமிருந்து வரும் கண்டித்தலின் விளைவாக நோய்கள் ஏற்படுகின்றன ஆனால் நாம் மகிழ்ச்சியடைவதற்கு முன்பு விவரிக்கப்பட்ட வகுப்பின் வியாதிகளல்ல. “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண் ணெய் படிசி. அவனுக்காக ஜெபம பண்ணக்கடவர்கள்” என்று யாக்கோபு கூறுகிறார். “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவஞ் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு. ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.” நாம் புரிந்து கொண்டபடி தகுந்த தண்டனையிலிருந்து விடுவிப்பதை காட்டிலும். பாவத்தின் தண்டனையாக கொடுக்கப்பட்ட வியாதியிலிருந்து விடுவிப்பதற்கு பாவங்களுக்கான மன்னிப்பை வேண்டக்கூடியதே ஜெபமாகும். ஆனால் வியாதி. பாவத்திற்கான ஒரு தீர்ப்பாகவோ அல்லது ஒழுங்காகவோ இருந்தால். பாவத்தை அறிக்கையிட்டு, உண்மையில் மனந்திரும்பும் போது தேவன் தண்டனையை நீக்கிவிட்டு மன்றாடின மகனை துன்பத்திலிருந்து ஓரளவு அல்லது முழுமையாக குணப்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கவேண்டும். மத்தேயு9:2-6, யோவான் 5:14. 1யோவான் 5:16 ஒப்பிட்டு பார்க்கவும். ஆனால் இந்த காரியம் பல்வேறு சிறிய வலிகள் மற்றும் எரிச்சல்களைக் குறிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இது பொதுவாக மற்றவர்களிடம் தேவையான பொறுமை மற்றும் அனுதாபத்தை வளர்ப்பதன் நல்ல நோக்கத்திற்காகவே உள்ளது. வியாதிப்பட்டவர்கள் மேல் எண்ணை பூசி, ஜெபிப்பதற்கு முதலில் சபையின் முப்பர்களை அழைக்கும் போதே நமக்கு இது தெரியும், ஏனெனில், சிறிய பிரச்சனைகளுக்கு நாம் இப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைகள் எடுப்பது முற்றிலும் தகாததாக இருக்கும். மேலும் 14ம் வசனத்தில் வியாதி என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையின் பொருள். “உதவியற்ற அல்லது பலவீனமான” என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம்முடைய தற்போதைய நிலைப்பாட்டில் இந்த சுவிசேஷ யுகத்தில் ஆரோக்கியத்திற்காக வேண்டுமென்றே ஜெபம் செய்வது முறையற்றதாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். மேலும் யுகத்தின் ஆரம்ப காலம், குணப்படுத்தும் வரத்தின் மூலமே. நிகழ்த்தப்பட்டது என்று நாம் கண்டுள்ளோம். அதன் பொருளை அதாவது வேலையை நிறைவேற்றியபின் அப்போஸ்தலர்களின் மரணத்தோடு அந்த வரம் நின்றுவிட்டது. பரிசுத்தவான்களின் தரப்பில், வியாதிகள் தொடர்புடைய ஜெபங்கள், பாவ மன்னிப்புக்காக வழங்கப்பட்டவை இதன் விளைவாக சொஸ்தமடைந்தார்கள். ஆனால் ஆயிர வருட ஆட்சி விடிந்து கொண்டிருக்கும்போதே, சுவிசேஷ யுகம் முடிந்து கொண்டே இருக்கிறது. ஆகவே நாம் பார்க்கிறபடி, குணப்படுத்துதல் மற்றும் பொதுவான மறுசீரமைப்பு ஆகியவை வெளிப்படும் என்று நாம் எதிர்ப்பார்க்க வேண்டும். வெளிச்சத்தில் பரிசோதிக்கப்படும் வேதாகம போதனைகள் மற்றும் ஆயிர வருட விடியலில் நம்முடைய தற்போதைய இடத்தைப் பற்றி நாம் விசாரிக்க வழிவகுக்கும்.

இப்போது நாம் யாருக்காக ஜெபிக்கலாம்

தங்கள் எஜமானனை விட பெரியவர்கள் அல்லாத பரிசுத்தவான்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்திற்காக இப்போது ஜெபிக்க முடியாது என்று நாம் பதில் அளிக்கிறோம். அவர்கள் அர்ப்பணித்த மறுசீரமைப்பு சலுகைகளை, திரும்ப கேட்க முடியாது. அல்லது சோர்வுகள், வியாதிகள், கலைப்புகள் அல்லது அடிகள் அற்புதமாக அகற்றப்பட வேண்டும் என்றால். அவர்களின் பலிகள் ரத்து செய்யும்படி அவர்கள் கேட்டு கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆனால் அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனைகளாக அவர்களுடைய துன்பங்களை அவர்கள் உணரும்போது. தங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு. மன்னிப்புக்காக தேவனிடம் ஜெபிப்பதற்கு இன்னும் சுதந்திரமாக உணர முடியும். இதன் விளைவாக அவர்கள் குணமடையக்கூடும்.

கிறிஸ்துவுக்குள்ளும் அவருடைய வார்த்தைகளுக்குள்ளும் நிலைத்திருக்கும் பரிசுத்தவான்கள். தங்களை விட மற்றவர்களுக்காக ஜெபிக்கலாம். குறிப்பாக நாம் இப்போது மறுசீரமைப்பின் காலம் தொடக்கத்தில் இருக்கிறோம் என்ற உண்மையைப் பார்க்கும்போது. அதாவது சுய உயர்வு தங்களுடைய நோக்கம் அல்ல என்று அவர்கள் உறுதியாக நம்புகிற சந்தர்ப்பங்களில், நோயுற்றவர்களை விடுவிப்பதற்கான அவர்களின் விருப்பம் சுயநலமற்றது என்றும் விடுவிக்கப்பட்ட ஆரோக்கியம் நல்ல கிரியைகளுக்கும். தேவனுடைய மகிமைக்கும் அர்ப்பணிக்கப்படுவதற்கே என்று நம்புவதற்கு காரணமாக இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களிலும் கூட இராஜரீகமான ஆசாரியத்துவதிற்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறு மந்தை பாதிக்கப்படுதலில் இருந்து விடுவிக்கப்பட விண்ணப்பங்களை ஏறெடுப்பது பொருத்தமாகாது. ஆயினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட. நம்முடைய விசுவாசம் அவசியம் உறுதியாக இருக்கவேண்டும். ஏனென்றால் சரியான நோக்கங்களுடன் கேட்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும். மேலும் தேவன் மகிழ்ச்சியாக மறுசீரமைப்பின் ஆசீர்வாதங்களைத் தொடங்கும் சமயத்திலும், நம்முடைய ஆண்டவரைப் போல. நாமும் “தேவனே என்னுடைய சித்தத்தின் படி அல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது” என்று ஜெபிக்கவேண்டும்.

இருப்பினும், பொதுவான குணப்படுத்துதல் மற்றும் முழுமையான மறுசீரமைப்பின் வேலைகளை எதிர்பார்க்கும் நேரம் இன்னும் வரவில்லை. முழு ஆசாரியத்துவமும் பலி செலுத்தி முடித்துவிட்டபின். தங்களுடைய தலையாகிய பிரதான ஆசாரியராகிய இயேசுவோடு இணைந்து, ஆலயம் மற்றும் ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமாக இருக்கும் பரலோக பரிபூரணத்திற்கும் மகிமைக்குள்ளும் பிரவேசிக்கும் வரையில் இவைகள் நடைப் பெறாது.

நான் சிறுகவும், நீர் பெருகவும் வேண்டும்

மேலோட்டமாக பார்க்கையில், யுகத்தின் ஆரம்பத்தில் பரிசுத்தவான்கள் வரங்களை பயன்படுத்தியது போல, ஆயிர வருட ஆட்சியிலும் சுகம் பெறுதல் பரிசுத்தவான்களின் ஜெபங்களுக்கான பதில்கள் வெளிப்படுதல் போன்றவைகள் எதிர்ப்பார்க்கப்படலாம். ஆனால் அவ்வாறு இல்லை. ஏனெனில், அவ்வாறு நடந்தால் பரிசுத்தவான்களை மிகப் பெரிய முக்கியத்துவத்திற்குக் கொண்டுவரும் என்று நாம் நம்புகிறோம். அதேசமயம், முதல் வருகையின் போது யோவான் ஸ்நானகன் போலவே, நாம் இங்கு குறைய வேண்டும். அதே நேரத்தில் சபையாக வெற்றி அடைந்தோர் திரைக்கு அம்பால் பெருகவேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மகிமை அடைந்த சபையுடனான நமது தற்போதைய உறவு- மகிமையின் ஆட்சியின் நெருங்கிய தன்மையை சுட்டிக்காட்டுகிறது. மேலும் முதல் வருகையின் போது யோவான் ஸ்நானகன் பணிக்கு நெருக்காக நம்முடைய பணி உள்ளது. “பரலோக இராஜ்யம் சமீமாய் இருக்கிறது. நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவில் இருக்கிறார்.” என்று யோவான் அறிவித்தார். “அவர் பெருகவும். நான் சிறுகவும் வேண்டும்”. நம்முடைய செய்தியும் இதுவே. பூமியில் உள்ள சபை குறையும் போது. பரலோகத்தில் மகிமை அடைந்த சபை. வரக்கூடிய உபத்திரவ காலத்தில் அதனுடைய வல்லமையிலும் தாக்கத்திலும் பெருகும். அதே நேரத்தில் ஏரோது யோவானை சிறையில் அடைத்தது போலவே யோவான் வகுப்பினர் கட்டுப்பாடுகளுக்குள் உட்படுத்தப்படுவார்கள் என்பதில் சந்தேம் இல்லை.

இவ்வாறு நாம் எதிர்ப்பார்க்க வேண்டியவற்றுக்கு இணங்க. குணப்படுத்தும் பல்வேறு முறைகள் சில வெற்றிகளைச் சந்திக்கின்ற. உண்மையில் நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நண்பர்கள் எந்தவொரு சிகிச்சையும் முயற்சிக்கப்படாமல், அல்லது சிந்திக்கப்படாமல் குணப்படுத்துதல்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு சிறுமி நோய்வாய்ப்பட்டிருந்தாள். அவள் மரிப்பதை எதிர்பார்த்திருந்த அவளுடைய நண்பர்கள் அவளுடைய படுக்கையை சுற்றி கூடினார்கள். ஆனால் அவள் உடனே குணமடைந்து, எழுந்து எப்போதும் போல எழுந்தாள். அவள் தரக்கூடிய ஒரே விளக்கம் என்னவென்றால். அவளுக்கு ஒரு கனவு வந்ததாகவும். அதில் ஒரு மனுஷன் தன் தலையில் கை வைத்தவுடன் மின்சாரம் அவளது முதுகு தண்டுவடத்தை கடந்த செல்வது போன்ற ஒரு அதிர்ச்சியை அவள் உணர்ந்தாள் என்பதே. இந்த இளம் பெண் ஒரு கிறிஸ்தவர் என்று கூட சொல்லவில்லை.

பல்வேறு வழிகளில் ஆண்டவர் படிப்படியாக உலகை மறுசீரமைப்பிற்குத் தயார் செய்வார். இதனால் புதிய விஷயங்கள் வரும்போது தேவன் மேல் விசுவாசம் வைக்க இடமளிக்கும். பெருமையுள்ளவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இயற்கையான காரணங்களை விளக்கம் அளிப்பாார்கள். மற்றவர்கள் இதன் மூலம் மறுசீரமைப்பின் ஆரம்பம் காரியங்களை அங்கீகரிப்பதற்கு வழிவகுக்கும். ஜெயிக்கக்கூடியவர்கள், தவறுகளை எதிர்த்து உண்மையைத் தூண்டக்கூடிய மாபெரும் வேலையை செய்யவேண்டியதால். அவர்கள் நோயுற்றவர்களுக்காக ஜெபிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தால். அது ஆன்மீக வியாதிப்பட்டிருக்கும் குருடர்களையும். முடவர்களையும் குணமாக்கும் அவர்களின் உண்மையான மற்றும் முக்கியமான பணியிலிருந்து அவர்களை விலக்கிவிடும். பரிசுத்தவான்களை காட்டிலும் மற்றவர்களிடமிருந்தும் அவர்கள் வழியாகவும் இந்த மறுசீரமைப்பின் வெளிப்பாடுகளை நாம் எதிர்பார்க்க வேண்டிய சிறந்த காரணங்களை நாம் காண்கிறோம்.

அர்ப்பணித்தவர்கள் மருந்துகளை பயன்படுத்த வேண்டுமா?

இந்த கேள்வி இயல்பாகவே ஆலோசிக்கிறது. நாம் மருந்துகளை பயன்படுத்த கட்டளையிடப்படவும் இல்லை. தடை விதிக்கப்படவும் இல்லை. நம்முடைய அர்ப்பணிப்பில் கிறிஸ்துவின் மூலமாக எல்லா விசுவாசிகளும். வழங்கப்பட்ட ஆவிக்குரிய நன்மைகளுக்கு பதிலாக மாம்சத்திற்குரிய நன்மைகளை கைவிட்டோம். எனவே அனைத்து மறுசீரமைப்பின் ஆசீர்வாதங்களும். சலுகைகளும் கேட்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. தேவன் தமது சொந்த ஞானத்தில், சில சமயங்களில் அவருடைய “புது சிருஷ்டிகளுக்கு” விசேஷித்த இரக்கம் மற்றும் தேவைப்படும் போது பூமிக்குரிய சில நன்மைகளை அவர்கள் கேட்காமலே வழங்குகிறார். (மத்தேயு 26:53,54 அப்போஸ்தலர் 12:6-11; 14:19,20; பிலிப்பியர் 2:27 காண்க)
ஆயினும், (கிறிஸ்துவின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு வேலையைத் தவிர்த்து) தண்டிக்கப்பட்ட மனுஷர். உணவு மற்றும் மருந்துகளினால் தங்கள் வியாதிகளுக்கு நிவாரணத்தையம் வாழ்வாதாரத்திற்காக இயற்கையான வழிகளை தங்களால் முடிந்தவரை, அவர்களின் கண்டனம் செய்யப்பட்ட சரீரத்திற்கு மரிக்கும் வரை பயன்படுத்தக்கூடிய சிலாக்கியத்தை பெற்றிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பரிசுத்தவான்கள் பெற்ற இந்த அனைத்து சலுகைகளையும் கிறிஸ்துவின் மூலம் பரலோக நன்மைகளுக்காக பரிமாறிக்கொண்ட பிறகும் இந்த பூமிக்குரிய நன்மைகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

அப்படியானால் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட தங்களுடைய உடன்படிக்கை, அவிசுவாசிகளை விட பரிசுத்தவான்கள் தங்கள் நிவாரணத்திற்காக இயற்கையான வழிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. நம்முடைய தீர்ப்பு சமயோஜித சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வாறு செய்ய நமக்கு சுதந்திரம் அளிக்கிறது. நம்முடைய கர்த்தர் மருந்துகளைப் பயன்படுத்தினார் என்று நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் பரிபூரணர் என்பதையும் அவர் மற்றவர்களிடமிருந்தே வேதனைகளையும் வலிகளையும் எடுத்து கொண்டார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும். தெய்வீக வல்லமையைக் கேட்காமல், இயற்கையான வழிகளைப் பயன் படுத்துவதற்கான கொள்கையை அவர் நிச்சயமாக விளக்கினார். அற்புதமான புத்துணர்வுக்காக ஜெபிப்பதற்கு பதிலாக சோர்வடையும் போது ஓய்வெடுத்தார். பசியும் தாகமும் இருக்கும்போது. பலத்திற்காகவும், உற்சாகத்திற்காகவும் ஜெபிக்காமல், புசித்து குடித்தார். ஆகவே, அப்போஸ்தலர்களிடமும் அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்களின் வரலாற்றின் மிகச் சிறிய துணிக்கைகளில் இருந்தும். நமக்கு தெரிந்தவரை வேதத்தில் எங்கும் இப்படிப்பட்ட காரியங்கள் வழங்கப்படவில்லை. பவுல் தனது சோர்வுகள், வேதனைகள் மற்றும் பசி தாகங்கள், குளிர் மற்றும் நிர்வாணம் ஆகியவற்றைப் பற்றி நமக்கு கூறுகிறார். (2கொரிந்தியர் 11:27,30) மேலும், அவர் தனது விசுவாசத்தின் அடையாளங்களினால் தேவனை மகிமைப்படுத்தினார் என்று கூறுகிறார். ஆனால் அவைகளை தெய்வீக வல்லமையினால் நீக்குவதற்காக ஜெபிப்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. அல்லது அத்தகைய ஜெபத்திற்கு தேவனுடைய இரக்கத்தின் அடையாளமான ஒரு பதிலை அவர் பதிவு செய்யவும் இல்லை. இதற்கு மாறாக, உடல் ரீதியான மறுசீரமைப்பிற்காக (அவரது பார்வையை மீட்டெடுப்பதற்காக) ஜெபம் செய்ததை அவர் குறிப்பிடுகிறார். ஆனால் இயற்கையான மனிதர்களின்பூமிக்குரிய இரக்கங்களை அல்ல. அதற்கு மேலான ஆவிக்குரிய கிருபை போதுமானது என்றும், இந்த பலவினம் அவருக்கு சிறந்தது என்று கூறி. தேவன் அவர் கோரிக்கையை மறுத்துவிட்டார் என்று அவர் கூறுகிறார்.-2கொரிந்தியர் 12:9.

சில நேரங்களில் பவுலுக்கு தேவைப்படும் நேரங்களில் என்ன செய்தார்? உணவளிக்கவும் ஆடை அணியவும் அவர் ஜெபித்தாரா இல்லை. அவர் தம்முடைய ஊழியராக இருக்கும் வரை. நன்மையான. அவசியமான எதுவும் அவருக்கு குறையாது என்று தேவன் வாக்களித்ததை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் தனது பைகளில் பணத்தை உருவாக்கும்படியோ அல்லது அன்பான இருதயம் உள்ள ஒருவரை அனுப்பவோ தேவனிடம் கேட்கவில்லை. அவர் படிக்கும்போதோ அல்லது ஜெபிக்கும்போதோ, அவர் சாப்பிடுவற்காக கூடை நிறைய உணவுகளை கேட்கும் அளவுக்கு அவர் வேலை செய்வதற்கு சோம்பேறியாகவும் இருக்கவில்லை! அது பவுலின் தன்மை அல்ல. இல்லையென்றால் அவர் தேவனுடைய சத்தியத்தை சுமப்பதற்கு “தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாக” இருந்திருக்க முடியாது. பவுல் பசியாக இருந்தபோது. அவர் வெளியே சென்று பிச்சை எடுக்கவில்லை அல்லது தேவையானவற்றிற்காக வீட்டுக்குள்ளேயே ஜெபிக்காமல், அவர் கைகளினால் வேலை செய்தார் – கூடாரம் தயாரித்தல். வாய்ப்புகள் வழங்கப்பட்டபடி பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் கற்பித்தல். அவர் ஊழியம் செய்த விசுவாசிகள் அவருக்கு கொடுக்கும் ஆதரவு மற்றும் சத்தியத்தை பரப்புதலுக்கான சிலாக்கியத்தையும் கவனக்குறைவாக இழக்கிறார்கள் என்பதையும் மேலும் இம்மைக்குரிய உழைப்புக்கு அர்ப்பணித்த அந்த மணிநேரங்களில் அவர் வழங்கியிருக்கக்கூடிய மதிப்புமிக்க அறிவுறுத்தலையும் இழந்து போகிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தும். அந்த விசுவாசிகளிடம் கூட அவர் உதவி கேட்க விரும்பவில்லை.

வயிற்று பிரச்சனைக்கும், அடிக்கடி வரும் பலவீனங்களுக்கும், கொஞ்சம் திராட்சை ரசத்தை (மதுபானமாக அல்ல. ஒரு மருந்தாக எடுத்து கொள்ளும்படிக்கு பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த அறிவுறுத்தலை நாம் நினைவில் கொள்கிறோம். பவுலின் சொந்த நடவடிக்கையும், நம்முடைய ஆண்டவருக்கும் இது சரியான இணக்கத்துடன் காணப்படுகிறது. ஆகவே நிச்சயமாக நம்முடைய பிதாவின் சித்தத்தைப் பொருத்தவரையில் இதுவே பாதுகாப்பான வழிகாட்டியாகும்.

F637 [2] through F638 [1] – விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.

புது சிருஷ்டியின் தெய்வீக நோக்கமானது. நோய்களை குணப்படுத்துவதற்கு தெய்வீக வல்லமையையே சார்ந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை நாம் இந்த பத்தியிலும், மாற்கு 16: 17,18 யிலும் காணகிறோம்.

மாற்கில் உள்ள பத்தியை நாம் எளிதில் அப்புறப்படுத்தலாம்: இது பழமையான கிரேக்க பிரதிகளில் காணப்படுவதில்லை. எனவே இதை இடையில் சேர்த்திருக்கலாம் என்று கருதலாம். அதாவது ஐந்தாம் நூற்றாண்டில் ஏதோ ஒரு வருடத்தில் சேர்த்திருக்கலாம். யாக்கோபின் கூற்றைப்பொறுத்தவரை: பதினாறாவது வசனத்தில், குறிப்பிடப்படும் நோய் பாவங்களுக்கான தண்டனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது – இது ஒரு சிறிய நோய் அல்ல. மாறாக தீவிரமான ஒன்றாகும். சபையின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்றாக அழைக்கும் அளவுக்கு தீவிரமானதாக இருக்கிறது. நோய்வாய்ப்பட்ட பாவிக்கு தேவனோடிருக்கும் ஐக்கியம் துண்டிக்கப்பட்டதை உணரும் அளவக்கு பாவம் வாசற்படியில் நெருங்கியிருப்பதை, குறிப்பிடுவதாக தோன்றுகிறது. அத்தகைய குழ்நிலைகளில் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, மன்னிப்பை வேண்டி ஜெபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 15ம் வசனம் வாசிக்கிறபடி: “பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” மாற்கு 16:15.