CD-LOVE-Q-3
R2203[col.1 P3 through col.2 P2]: –
அப்படியானால், அன்பு என்றால் என்ன ? இந்த அற்புதமான குணமில்லாமல், எதுவும் தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படாது. அன்பை வரையறுக்க அப்போஸ்தலர் இங்கு முயலவில்லை. ஆனால் அதனுடைய சில வெளிப்பாடுகளை விவரித்து மனநிறைவடைகிறார். உண்மையில், ஒளி மற்றும் ஜீவனை போல அன்பை வரையறுப்பதும் மிக கடினம். அதைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த முயற்சிகள். அதன் விளைவுகளின் வரிசையில் உள்ளன. அன்பு குறைவதற்கான விளைவு – தீமையாகும். அன்பு இருக்கும் இடங்களில், அதன் அளவைப் பொறுத்தே விளைவுகள் காணப்படுகிறது.
ஒரு கல்லூரி பேராசிரியர், அன்பைக் குறித்து விவரிக்கையில் – விஞ்ஞான அறிஞர் ஒருவர், ஒளி கதிரை ஒரு கண்ணாடி முப்பட்டகத்தில் (prism) பாய்ச்சும்போது, நீங்கள், முக்கோணத்தின் மறுபுறம் அதன் கூறு வண்ணங்களில் பிரிந்து வருவதை காணலாம் – சிவப்பு, நீளம், மஞ்சள், வைலட்டு, ஆரஞ்சு மற்றும் வானவில்லின் நிறங்களை காணலாம். எனவே பவுல் இந்த அன்பை அவரது ஊக்கமான அறிவாகிய அற்புதமான முப்பட்டை வழியாக, பாய்ச்சும்போது, அதன் கூறுகள் பிரிந்து மறுபக்கத்தில் வெளியே வரும். இதை அன்பின் நிறமாலை, அன்பின் பகுப்பாய்வு என்று ஒருவர் இதை அழைக்கலாம். இதன் கூறுகள் என்ன என்பதை நீங்கள் கவனித்தீர்களா? இவைகளுக்கு பொதுவான பெயர்கள் உள்ளதை கவனித்தீர்களா? ஒவ்வொரு நாளும், கேள்விப்படக்கூடிய அம்சங்கள் இவைகளே, வாழ்க்கையில் எல்லா இடங்களிலும், எல்லா மனுஷராலும் கடைபிடிக்க முடிந்த காரியங்கள் இவைகளே. மேலும் சிறிய விஷயங்கள் மற்றும் சாதாரண நல்லொழுக்கங்களின் தொகுப்பு எவ்வாறு ஒரு சிறந்த பண்பாக உருவாகிறது?
“அன்பின் வண்ணப் பட்டியிலில் (prism) ஒன்பது பொருட்கள் உள்ளது – பொறுமை – அன்பு நீடிய சாந்தமுள்ளது தயவு – அன்பு தயவுள்ளது பெருந்தன்மை – அன்புக்கு பொறாமை இல்லை மனத்தாழ்மை – அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாய் இராது நற்பண்புடையது – அயோக்கிமானதைச் செய்யாது தன்னலமற்றது – தற்பொழிவை நாடாது நல்ல குணமுடையது – எளிதில் சினமடையாது கபடற்றது – தீங்கு நினையாது நேர்மையானது – அநியாத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.