CD-PRAYER-Q-20
R2252 [col. 2 last of top and 1]: –
பொது ஜெபங்களை ஏறெடுக்கும் சிலர், சர் வல்லவரைவிட அதிகதிகமான ஞானம் உள்ளவர்களாக ஜெபிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். ஏனென்றால், வீட்டிலும், வெளியிலும், இந்த உலகம் முழுவதிலும், எப்படி, எப்போது, எங்கே என்ன செய்யவேண்டும் என்பதை சர்வவல்லமையுள்ளவரிடம் சொல்ல அவர் மேற்கொள்கிறார். – அவர் ஜெபம் செய்த கூட்டத்தில் எத்தனை பேர் மாற்றப்பட வேண்டும் என்பதையும், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு புறஜாதியினரும் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
இவை அனைத்தும் கொடுரமான தவறாகும். முதலில் தன்னுடைய சொந்த அறியாமை மற்றும் ஞானமின்மை பற்றியும், தேவனுடைய எல்லையற்ற உயர்ந்த அறிவு, ஞானம் வல்லமை மற்றும் அன்பு ஆகியவ்றறைப்பற்றியும் கற்றுக்கொள்ளாத எந்த மனுஜனும் தேவனிடத்தில் அணுகுவதற்கு ஏற்ற இருதய நிலையைப் பெறாதிருக்கிறான். பரலோக வழிக்குரிய அறிவிலும் அனுபவத்திலும் முன்னேறிய கிறிஸ்தவர் இதற்கு மாறாக அல்லது எதிராக இருக்கிறார். இவர் தன்னுடைய சொந்த அறியாமையிலும், குறைபாடுகளிலும் நிறைந்திருப்பதை உணர்ந்தவராக, தேவனே உம்முடைய சித்தத்தை எங்களுக்கு கற்பியும். கிறிஸ்தவ மண்டலத்திற்கும் புறஜாதிகளுக்கும் உள்ள இரட்சிப்பின் திட்டத்தையும் உம்முடைய வழிகளையும் எங்களுக்கு காண்பியும் மேலும் உம்முடைய மகத்தான. அற்புதமான, ஞானமான, நல்ல நோக்கங்களை நிறைவேற்றுவதில் நான் உம்முடன் ஒரு சக ஊழியனாக எவ்வாறு பணியாற்றவேண்டும் என்று தேவனிடத்தில் ஜெபிப்பார். உண்மையில், கிறிஸ்தவரின் அனுபவம் வளரும்போது, பிரதானமாக ஏற்கனவே அவர் பெற்ற இரக்கங்கள் மற்றும் கிருபைகளுக்காகவும், தேவனுடைய விருப்பம் மற்றும் தற்காலிகமானதும், ஆவிக்குரியதற்கான அவருடைய வார்த்தையின் கருணைமிக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திறனின் மேல் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவும், மற்றும் தெய்வீக சித்தம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றே தேவனிடத்தில் ஜெபங்களை ஏறெடுப்பதற்கான இருதய நிலையை மேலும் மேலும் பெற்றிருப்பார்.
R3354 [col. 1:2]: –
கேட்டல், தேடல், தட்டுதல் ஆகியவற்றை நாம் தனியாக செய்யவேண்டும். நாம் தேவனிடத்தில் இராஜ்யத்தில் ஒரு பங்கை கேட்கலாம், அதற்காக நாம் உழைக்கலாம், நம்முடைய உழைப்பை ஆசீர்வதிக்கும் படியாக ஜெபிக்கலாம், ஆனால் நாம் தெய்வீக ஏற்பாட்டை இயக்கவோ, இராஜ்யத்தோடு தொடர்புடைய காரியங்களில், மற்றவர்களுக்கு சிறப்பு உதவிகளை கேட்க முயற்சிக்கக்கூடாது. ஏனென்றால், ஒருவர் நமக்கு சொந்தக்காரரும். மாம்சத்தின்படி மிக நெருக்கமானவர்களாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களை மணவாட்டியின் அங்கத்தின் ஒருவராக கட்டாயமாக தேர்வு செய்யவேண்டும் என்று நாம் தேவனிடம் முடிவை சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. இதற்கு மாறாக, இப்படிப்பட்டவர்களும் நாம் தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்து, தேவனுடைய இரக்கத்தையும், நன்மையையும், இராஜ்யத்தைக் குறித்தும், அதனுடைய ஆசீர்வாதங்களைப் பற்றி கூறி, தேவனிடத்தில் தங்களை அர்ப்பணிப்பதற்கு அவரை ஊக்குவிக்க வேண்டும். மேலும் அர்ப்பணிப்புக்கு தொடர்பான காரியங்களில், தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட கிருபைகளுக்குள் பிரவேசிக்கும்படியாக, அவைகளை சுயமாகவே கேட்கவும், தேடவும், பெற்றுக்கொள்வதற்கும் அவர்களை துரிதப்படுத்த வேண்டும்.