CD-KNOWLEDGE-Q-21
யோவா 15:7 “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்”.
F679 through F680: –
“ஜீவமார்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்திலும் நித்திய பேரின்பமும் உண்டு” (சங் 16:11) என்று தீர்க்கதரிசி அறிவிக்கிறார். ஒரு மனுஷன் ஜெபிக்கும்போது தேவனுடைய பிரசன்னத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதற்கும், தெய்வீக ஆசீர்வாதங்களை பெறுவதற்கும் ஆயத்தப்படுகிறான். மேலும், தேவனுடைய ஜனங்கள் தைரியமாக அவருடைய கிருபாசனத்திற்குச் செல்ல இந்த ஜெபம் வழிநடத்துகிறது. இந்த வாய்ப்பு அவருடைய திட்டங்களையோ, தெய்வீக சித்தங்களையோ மாற்றுவதற்காக கொடுக்கபடவில்லை. ஆகவே சரியான வழிமுறையில் ஜெபிப்பதற்கு தேவன் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். அதில் நம்முடைய சொந்த விருப்பம் அல்லது தெய்வீக சித்தத்திற்கு விரோதமாக ஏறெடுக்கப்படும் எந்தக் காரியமும் தேவனால் கேட்கப்படுவதில்லை. ஆகையால், நம்முடைய விண்ணப்பங்கள் அனைத்தும் தேவனுடைய சித்தத்திற்கு இசைவாகவே இருக்கவேண்டும். “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாத விதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” (யாக் 4:3) என்று யாக்கோபு கூறுகிறார்.
இதே காரியத்தை நம்முடைய ஆண்டவர் “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னதை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப்பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னதைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவாது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத் 6:25-34) என்று கூறுகிறார். மீண்டும் “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7) என்கிறார். இங்கு சொல்லப்படும் விதிமுறைகள் அனைத்தும் முக்கியமானது –
1. ஜெபிக்கக்கூடியவர்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும். கிறிஸ்துவின் ஈடுபலியின் மேல் விசுவாசம் வைத்து, அதை ஏற்றுக்கொண்டு அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர்களுடைய சித்தங்களையும், ஊழியங்களையும் தேவனுக்கென்று அர்ப்பணித்து, புது சிருஷ்டிகளாக கிறிஸ்துவுக்குள்ளாக தொடர்ந்து ஜீவித்து இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெபிக்கக்கூடிய சிலாக்கியத்தைப் பெற்று கொள்ளலாம்.
2. அடுத்து தேவனுடைய வார்த்தைகளுக்குள் அவர்கள் நிலைத்திருக்க வேண்டும். சத்திய வார்த்தைகளிலும், அதன் கிருபையிலும் பங்கெடுத்து, தேவன் கொடுப்பதற்கு வாஞ்சிக்கும் காரியங்களை அதாவது அவருடைய விருப்பத்திற்கு இசைவாக இருக்கும் விண்ணப்பங்களை ஏறெடுப்பதற்கு ஏற்ற ஞானத்தை பெற்றிருந்தால் மட்டுமே ஜெபங்கள் தேவனால் அங்கீகரிக்கப்படும். இதற்கு இசைவாக இல்லாவிட்டால் புது சிருஷ்டிகளின் ஜெபங்களும் கேட்கப்படாமல் போய்விடும்.
ஆகவே இந்த இரண்டு விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே – தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு சென்று நாம் ஜெபிக்க முடியும். குறித்த காலத்தில் அப்படிப்பட்ட ஜெபங்களை தேவன் கேட்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் மட்டுமே முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியும்.
வசனங்கள் விவரிப்பதுபோல, தேவனுடைய சமூகத்திற்கு செல்லவும், அவரோடு தொடர்பு கொள்வதற்கும் எடுக்கப்படும் முயற்சியே – ஜெபம். இவர்களைத் தவிர இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே யார் சேர முடியும்? (எபி 4:16) பொதுவாக இந்த உலகத்திற்கு இப்படிப்பட்ட சிலாக்கியம் கொடுக்கப்படவில்லை. உண்மையில் வெவ்வேறு புரிந்துகொள்ளுதலோடு மில்லியன் கணக்கான ஜனங்கள் தங்களுடைய ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். ஆனாலும் தேவன் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபி 11:6) உண்மையான தேவனை அடையாளம் கண்டுகொண்டு, அவரை கனப்படுத்தி அவருடைய விருப்பங்களை அறிந்து அதன்படி நடக்கவேண்டும். இப்படிப்பட்ட காரியங்களை கொர்நேலியு தம்முடைய வாழ்க்கையில் கடைபிடித்தார். ஆகவே புறஜாதிகளுக்கு அழைப்பு கொடுப்பதற்கான நிலை தேவனுடைய தெய்வீக திட்டத்தில் வளர்ச்சி அடையும்போது, கொர்நேலியுவின் சகல நற்கிரியைகளுக்கும் பலன் கிடைத்தது. ஆனாலும் அதுவரைக்கும் தேவனோடு தொடர்பு கொள்வதற்கான சரியான வழி அங்கு வாய்க்கவில்லை. ஆகவே தேவன் ஏற்ற நேரத்தில் பேதுருவை அவரிடம் அனுப்பி தேவனுடைய புத்திரராகும்படியான வழிமுறைகளையும், சரியான முறையில் தேவனோடு தொடர்புகொள்ளவும் கற்றுக்கொடுத்தார்.
F688(P1)
பரிசுத்த ஆவியாகிய பரத்திலிருந்து வந்த ஞானமே, அப்போஸ்தலனாகிய பவுலை, புதிய பட்டணத்திற்கு வழி நடத்தியது. “ஓய்வு நாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம் பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரிகளுக்கு உபதேசித்தோம்” (அப் 16:13). மேலும், மகிழ்ச்சி பெருகும்படியாக, ஒருவருக்காக ஒருவர் ஊக்ககமாக ஜெபிக்கையில், தேவனுடைய அன்பும், ஞானத்தையும் அவர்கள் முழுமையாக பெறுகிறார்கள். ஆயினும் தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதற்கும், ஒவ்வொருவரும் மகா பரிசுத்தமான விசுவாசத்தில் வளர்ச்சி அடையவும், அநேக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேவனால் ஆசீர்வதிக்கப்படாத எந்த வேத ஆராய்ச்சிகூட்டங்களும் சரியாக துவங்குவதுமில்லை. அதேபோல தேவனுடைய ஆசிர்வாதங்களுக்காகவும், இருதயத்திற்கு ஏற்ற ஆகாரத்திற்காகவும், நன்றி செலுத்தப்படாத எந்தக்கூட்டமும் சரியாக முடிவுபெறுவதும் இல்லை – அவருடைய கிருபையான வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் உண்மையான நோக்கத்துடன் அவருடைய சித்தத்தைச் செய்யவேண்டும்.
R3217 (col.2 P2,3): –
நாம் பார்க்கக்கூடியதை மிக பெரிய அளவில் உள்ள மாதிரியை நம் அருகில் உள்ள சிறிய அளவில் இப்போது காணலாம். நம்முடைய அறியாமையில் உள்ள காலங்களில் நம்மில் எத்தனையோ பேர், வெவ்வேறு விதமான கட்டுகளுக்கும், கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ள பிரிவுகளுக்கும் ஜெபித்திருப்போம். இறுதியில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக நாம் ஜெபித்திருக்கிறோமா? அல்லது நம்முடைய சுய மகிமைக்காகவும், நன்மைக்காகவும் மாத்திரம் ஜெபிக்கிறோமா? நாம் சரியான முறையில் சரியான நோக்கத்துடன் ஜெபிக்க கற்றுக்கொள்ளுவோம். அதற்கேற்ற நற்கிரியைகள் செய்யும்படியாக “கேட்கிறதற்கு தீவிரமாகவும் பேசுவதற்கு தாமதமாகவும்” இருந்து தேவனுடைய வார்த்தைகளில் அவர் முன்னதாக நமக்கு கொடுத்திருக்கும் விதிமுறைகளையும், கட்டளைகளையும், பாடங்களையும் கற்றுக்கொள்ள கடவோம். நம்முடைய விருப்பங்களை அவரிடம் தெரிவிக்க சற்று தாமதிப்போம். உண்மையில், கிறிஸ்தவ குணலட்சணங்களில் வளர்ச்சி அடைய பரலோகத்தின் பிதாவின் வழியையும், அவருடைய சித்தத்தையும் தேடுவோம்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் இதே கோட்பாடுகளை நாம் பொருத்தவேண்டும். அநேக பெற்றோர்கள், தங்களுடைய இருதய பாரத்தோடு, மரணபடுக்கையில் இருக்கும் தங்களுடைய குழந்தைகளுக்காக ஜெபித்த ஜெபங்கள் பதில் அளிக்கப்படவில்லை என்று கதறுவதை நாம் கேட்டிருக்கிறோம். சில நேரங்களில் இப்படிப்பட்ட ஜெபங்களும் தேவனால் கேட்கப்படுகிறதா? இதை குறித்து நாம் என்ன சொல்லுவோம்? எல்லா காரியங்களும் ஒன்றை போலிராது. ஆனால் தேவனுடைய வார்த்தைகள் சரியான முறையில் செயலாற்றப்பட்டு, இருதயத்தில் சரியான வளர்ச்சி அடைந்து, அவர்களுடைய எல்லா ஜெபங்களும் கேட்கப்படும் அளவுக்கு அவர்களின் ஜெபத்தின் தரம் தேவனுக்கு இசைவாக உயரவேண்டும். அப்போது தேவனுடைய வார்த்தைகள் அவர்களுக்குள் முழுமையாக நிலைத்திருக்கிறது என்று உணரலாம். இவர்கள் தேவனுடைய விருப்பத்திற்கு மாறாக எதையும் கேட்காமல், தெய்வீக சித்தத்தையும் வழி நடத்துதலையும் விசுவாசித்து – “ஆண்டவரே எங்களுடைய சித்தத்தின்படி அல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபிப்பார்கள்.