விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-20

விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?

What is the “rest” of faith?

எபி 4:1-11

F392 – F394

புது சிருஷ்டிகளின் உறுப்பினர்கள் எப்பொழுது அல்லது எவ்வாறு விசுவாசத்தின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள் என்று குறிப்பிடுவது அவசியமில்லை. ஆனால், எல்லா அதிருப்திகளும், பயமும் விரட்டப்பட்டு, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் அவர்களுடைய இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக் கொண்டது எப்படி அல்லது எப்பொழுது என்று நாம் அறிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய பாவங்களை மூட, ஆண்டவராம் இயேசுவை நம்முடைய பிரதான ஆசாரியராக, தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்று நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்பொழுது, இது துவங்குகிறது. மேலும் புது சிருஷ்டியின் தலையாகவும், ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களுக்குச் சுதந்தரவாளியாகவும், நாம் அவரை அடையாளம் கண்டிருக்கிறோம். அதுவும் அல்லாமல், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட இராஜ்யத்தில், அவருடைய உடன் சுதந்திரவாளிகளாக நம்மையும் தேவன் அழைத்திருக்கிறார். நாம் நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுத்து, இடுக்கமான வாசல் வழியாக மகிழ்ச்சியோடு அவர் நமக்கு வாக்களித்த வழிநடத்துதலோடு, அந்த இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் பொழுது, நாம் பரிபூரணமான இளைபாறுதல், அல்லது ஓய்வுக்குள் பிரவேசிக்கிறோம். அங்கு, நம்முடைய சொந்த வேலைகளிலிருந்து ஓய்ந்திருப்போம். நாம் நீதிமானாக்கப்படவேண்டும் என்ற நம்முடைய எல்லா முயற்சிகளிலும், நாம் தேவனுடைய கிருபைகளைப் பெறுவதற்கு அபூரணமானவர்களும், தகுதியற்றவர்களும் என்று நாம் அறிக்கையிடுகிறோம். மேலும், நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்வதற்கும் அபாத்திரராக இருக்கிறோம். ஆனால், கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பின் மூலமும் “தேவைப்படும் ஒவ்வொரு பொழுதும் உதவிகளைச் செய்வேன்” என்ற அவருடைய வாக்குறுதியின் நிமித்தமாகவும் நாம் அந்தத் தெய்வீகக் கிருபையைப் பெற்று இயேசுவின் சீஷர்களாக – அவருடைய அடிச்சுவடுகளில் மரண பரியந்தம் நடக்க வாய்ப்பு பெற்றிருக்கிறோம்.

தேவன் அவருடைய கிரியைகளிலிருந்து ஓய்ந்திருப்பதுப்போல, நாமும் ஓய்ந்திருக்கிறோம் என்று அப்போஸ்தலர் பிரகடனப்படுத்துகிறார். மனிதனை தன்னுடைய சாயலாக சிருஷ்டித்து, தன்னுடைய சிருஷ்டிப்பின் வேலைகளை முடித்தபின் அவர் ஓய்ந்திருக்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். அவர் தம்முடைய பூரணமான சிருஷ்டிப்பை பாழ்ப்படுத்துவதற்கு – பாவத்தையும், மரணத்தையும் அனுமதித்திருக்கிறார். அவர் இந்நேரம் வரைக்கும் அதை தடுக்கவோ, இதை செய்யக்கூடிய மிகப் பெரிய வஞ்சகனாகிய சாத்தானைத் தடுக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ அவர் முயலவில்லை. தேவன் ஓய்ந்திருக்கிறார் – எல்லா வேலைகளையும் மேசியாவின் பொறுப்பில் கொடுத்துவிட்டு, அவர் அதை முடிப்பதற்குக் காத்திருக்கிறார். கிறிஸ்து தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர் என்றும், தேவனுடைய வேலைகளுக்கு (புது சிருஷ்டிகளாகிய நமக்கு மட்டும் அல்லாமல், அவருடைய தெய்வீக கிருபையை ஏற்றுக்கொள்ளும் – முழு உலகத்தின் மனுக்குலத்தையும் சீர் பொருந்தச் செய்வார்) முழுமையாக அவர் ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்றும், நாம் தெளிவாக விசுவாசிப்பதன் மூலம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறோம்.

புது சிருஷ்டிகளாகிய நம்முடைய ஓய்வு துவங்கிவிட்டது என்று நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். ஆனால், முழுமையாக புது சிருஷ்டிகளின் இந்த இளைப்பாறுதலின் துவக்கத்தை நாம் சற்று பின்நோக்கிப் பார்த்தால் இன்று நமக்கு இலாபகரமாக இருக்கும். ஆண்டவர் மாம்சத்திலிருந்தப்பொழுது, அப்போஸ்தலர்கள் ஓரளவுக்கு அந்த இளைப்பாறுதலில் மகிழ்ந்தார்கள் என்று நாம் அறிவோம். ஆனால் அது முழுமையான ஓய்வு அல்ல. அவருடைய அன்பின் ஆழம், உயரம், அகலம் நீளம் இன்னதென்றும் அவர்கள் முழுமையாக அறியாத போதிலும், தங்களுடைய மணவாளன் தங்களோடிருந்ததினால் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். ஆண்டவர் மரித்துப்போன பொழுது, அவர்களின் இளைப்பாறுதலும், சந்தோஷமும், சமாதானமும் முடிவுக்கு வந்தது. “அவரே இஸ்ரயேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்…” என்று அவர்கள் எதிர்பார்த்ததினால், அவர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்தார்கள். அவர் மரணத்திலிருந்து எழுந்து, உயிர்த்தெழுதலை நிரூபித்தபின் அவர்களின் பயமும், சந்தேகங்களும் தளர்ந்து நம்பிக்கைக்கு வழி வகுத்தது. ஆனாலும், அவர்களின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் முழுமையாக அவர்கள் திரும்பப் பெறவில்லை. அவர்கள் மிகுந்த குழப்பத்திலிருந்தார்கள். எப்படியிருந்தாலும், பரிசுத்த ஆவியைப் பெறும்வரை எருசலேமில் காத்திருக்கும்படி கட்டளைப் பெற்றிருந்தார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள் – எவ்வளவு நாட்கள்? அவர்கள் மொத்தத்தில் நாற்பத்தொன்பது நாட்கள் காத்திருந்தார்கள். அதை தொடர்ந்து ஐம்பதாவது நாள் வந்தது. அது யூபிலியின் ஓய்வு நாளாயிருந்தது. இயேசுவை ஏற்றுக்கொண்ட அனைவரும், தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கான ஒரு கிருபையின் வாக்குத்தத்தத்தைப் பூரணமாக தேவன் அன்று நிறைவேற்றினார். அவர்கள் பெந்ததெகொஸ்தே நாளின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு அவருடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள். இயேசு பாவிகளுக்காக மரித்து, அவர்களுடைய கண்களுக்கு மறைவாக அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவருடைய பலி அனைவருடைய பாவங்களுக்குப் பதிலாக யேகோவா தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர் செய்த கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்தார். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் அவருக்குள்ளும், அவர் மூலமாயும் நிறைவேற்றப்படும் என்பதை இந்த இளைப்பாறுதல் உறுதியளித்தது. இந்த இளைப்பாறுதல், பாவமன்னிப்பைப் பெறவும், தேவனோடு ஐக்கியப்படுவதற்கும் உறுதியளிக்கிறது. மேலும், இவர்களின் ஒப்பந்தத்தில் இவர்கள் உண்மையானவர்களாக நிலைத்திருந்து, கிறிஸ்துவின் வழிகளில் காத்து நடந்து, தெய்வீக சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தங்களுடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும், உறுதிப்படுத்திக்கொண்டால் அவர்களின் இருதயம் பூரணமாக சுத்திகரிக்கப்படும். அப்பொழுது, கிறிஸ்துவுக்குள் வாக்களிக்கப்பட்ட விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களும், ஆசீர்வாதங்களும் சுதந்தரித்து, மகிமையான ஒரு பங்கை அடைவார்கள் என்றும் இது உறுதியளிக்கிறது.

பரிசுத்த ஆவியைப்பெற்ற புது சிருஷ்டிகள் அனைவரும், நிழலான இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்திருக்கிறார்கள். இவர்கள் ஏழாம் நாள் ஓய்ந்திருப்பதை விட்டுவிட்டு, நிரந்தரமாக தங்களுடைய இருதயத்திலும், சிந்தையிலும், தேவனுடைய குமாரனுக்குள் விசுவாசத்தில் இளைப்பாறுகிறார்கள். விசுவாசத்திற்குள் இளைப்பாறுதல் ஒரு முடிவல்ல. மேலும், இது ஒரு மேன்மையான இளைப்பாறுதல் அல்ல. அவர்களுடைய ஓட்டத்தை சந்தோஷத்தோடு ஓடி முடித்த தேவனுடைய ஜனங்களுக்கான நிஜமான இளைப்பாறுதல் முடிவுக்கு வரும். இதற்கிடையில் விசுவாசத்தின் இளைப்பாறுதல் தொடரவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில், இனி இருக்கும் இளைப்பாறுதலுக்கான நம்பிக்கை இதுவே. இதை தக்கவைப்பதற்கு நம்முடைய சிந்தையிலும், வார்த்தைகளிலும், கிரியைகளிலும், தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தால் மட்டும் போதாது அவருடைய கிருபையின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்பொழுது நாம் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க – அவருக்குள்ளும், அவருடைய வல்லமைக்குள்ளும் உறுதியாக நிலைத்திருப்போம். நாம் ஜெயிக்கக்கூடியவர்களாக ஊக்குவிக்க அவர் சித்தம் கொண்டிருக்கிறார் என்றும் நிஜமான யூபிலியில் நடக்கவிருக்கும் மகத்தான வேலைகளில் ஒரு பங்கைப்பெற நம்முடைய இளைப்பாறுதலும், நம்பிக்கையுமாக இருக்கவேண்டும்.

R1841 – “கானானுக்குள் பயணித்தல்”

இஸ்ரயேலின் நிழலான குணங்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். முதலாம் பகுதி ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளில், முழு இஸ்ரயேல் பாளையம் இந்த உலகத்தையும், அதில் ஆசாரியத்துவம் ஆரோனையும் அவருடைய குமாரரையும், அதில் செலுத்தப்பட்ட பலிகள், நம்முடைய ஆண்டவராம் இயேசுவையும், அவருடைய சபையையும் அடையாளப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இரண்டாவது பகுதியில் தெரிந்துக் கொள்ளப்பட்ட முழு இஸ்ரயேல் ஜனங்கள், சுவிசேஷ யுகத்தில் தேர்வு செய்யப்பட்ட தேவ ஜனங்களையும், அவர்களுடைய பிரயாணத்தில் – தெய்வீக வழிநடத்துதல், பாவத்தின் கட்டுகளிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட கானானுக்குள் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் நிமித்தம் நீதிமானாக்கப்பட்ட நிலையில் பயணிப்பதை அடையாளப்படுத்துகிறது. யோர்தான் என்னும் மரணத்தைக் கடந்து, இன்னும் மகிமையான இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்து, நித்தியமாக பாவமும், மரணமும் இல்லாத பரலோகக் கானானுக்குள் சென்றடைவார்கள்.

இரண்டாவது பகுதிக்கான விளக்கத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எபிரேயர்களுக்கு எழுதின நிரூபத்தில் குறிப்பிடுகிறார். (3:8-19, 4:1-2) இங்கு, எகிப்திலிருந்து கானானுக்குள் பயணித்த மாம்ச இஸ்ரயேலருக்கு நடந்த காரியங்களை மாதிரியாகக் கொண்டு, பரலோக கானானை அடையமுடியாத சபை மக்களை எச்சரிக்கிறார். அங்கு புறப்பட்ட அனைத்து ஜனங்களின் கீழ்ப்படியாமையினால், கானானுக்குள் பிரவேசிக்க தகுதி இழந்தவர்களாக வனாந்திரத்தில் மரித்துபோனார்கள் என்ற உண்மையை அவர் சுட்டிக்காட்டினார். இவர்களின் அவிசுவாசத்தினாலே, தேவனுடைய வழிகளை விட்டுவிட்டார்கள். தேவனுடைய தெய்வீக வழிநடத்துதலுக்கு எதிராக இவர்கள் முறுமுறுத்ததினாலே இவர்களின் பிரேதம் வனாந்தரத்தில் விழுந்தது. கடைசியாக – “சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.” (எபி 4:3) என்று அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை எச்சரிக்கிறார்.

பரலோகக் கானான், மாம்சத்தின் திரைக்கு அப்பால் இருக்கும் மகிமையான ஆவிக்குரிய நிலையாகிய தேவனுடைய ஜனங்களுக்கான இறுதியான இளைப்பாறுதலைக் குறித்துப் பேசும்பொழுது, நித்தியமான இளைப்பாறுதல் கிடைப்பதற்கு முன் இந்த மாம்சத்தில் தேவனுடைய ஜனங்கள் பெறும் இளைப்பாறுதலைப்பற்றியும் பேசுகிறார். இதுவே – விசுவாசத்தின் இளைப்பாறுதல் – “விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்…” (எபி 4:3)

இந்த நிழலான காரியத்தில், நமக்குக் கொடுக்கப்படும் ஆசீர்வாதங்களைப்பற்றியும், வாய்ப்புகளைப்பற்றியும், ஆவிக்குரிய தேவனுடைய இஸ்ரயேலர்களின் மேன்மையான ஆவிக்குரிய பொறுப்புகளையும் மிகத் தெளிவாக ஆராயலாம். ஏனெனில், கானானுக்குள் பிரவேசிக்கும் நம்பிக்கையுள்ளவர்கள் இன்று நிச்சயமாக விசுவாசத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். (4:3) நம்முடைய பயணத்தைப் பொறுத்தவரையில், தேவனுடைய ஜனங்களுக்கான இளைப்பாறுதல் (4:1), துல்லியமாக அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லியபடி வனாந்தர பிரயாணத்தையும், அதில் தேவனுடைய தெய்வீக வழிநடத்துதலையும் குறிக்கிறது. சற்று யோசித்துப் பாருங்கள், 400 வருடங்கள் அடிமைகளாக இருந்த, ஆயிரக்கணக்கான புருஷர்களும், ஸ்திரீகளும், பிள்ளைகளும் சில நாட்களுக்குள்ளே இந்தப் பிரயாணத்தை மேற்கொள்ள ஆயத்தப்பட்டார்கள். ஆனால் இவர்கள் மிகக் குறைவான சௌகரியங்களோடு, வனாந்தரத்தில், அறியாத பாதையில், முற்பிதாக்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை நோக்கி தொடர்ந்தார்கள். அவர்களை அநேக தேசங்கள் பகைத்தது. வழியில் அநேக வசதியின்மைகளையும், அபாயங்களையும் சந்திக்கவேண்டியதாக இருந்தது. இவ்வளவு காரியங்கள் இருந்தும் அவர்கள் பயப்படவேண்டிய அவசியமில்லாதிருந்தது, ஏனெனில் பரலோகத்தின் தேவன் அவர்களுக்கு முன் சென்று அவர்களை வழிநடத்துவதாக வாக்களித்திருந்தார்.

அதைப்போல் சபைக்கும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான சபை – உலகத்தை விட்டு பிரிந்து, தெய்வீக பாதுகாப்பும், வழிநடத்துதலின் கீழ் – வனாந்தரப்பிரயாணம் செய்த இஸ்ரயேல் ஜனங்களைப் போலிருக்கிறார்கள். (வெளி 12:6,14, லூக் 15:4, ஓசி 2:14, ஏசா 51:3, உன் 8:5) இதில் அநேகவிதமான ஆவிக்குரிய வளர்ச்சிகள் காணப்படுகிறது. அதில் கிறிஸ்துவுக்கு குழந்தைகளும், அந்த நிலையிலிருந்து வளர்ச்சியடைக்கூடியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் தேவன் இந்தத் தீமை நிறைந்த உலகமாகிய வனாந்தரத்தில் நடத்தி வருகிறார். அவரே நமக்குக் கேடகமும், நம்முடைய வழிகாட்டியும், மகிமையும், பாதுகாப்புமாயிருக்கிறார். நாம் அவரிடத்தில் விசுவாசத்தோடு, அவர் காட்டும் வழியில் நடக்கவேண்டும். நம்முடைய அப்பமும், தண்ணீரும் நமக்கு நிச்சயம் கொடுக்கப்படும். அவர் நம் மத்தியில் இருக்கிறார் என்ற மகிழ்ச்சி நமக்குப்போதும். அப்பொழுது நமக்கு வாக்களித்த சுதந்தரத்தை தேவன் நமக்கு கையளிப்பார். அவிசுவாசத்தினால் மாம்ச இஸ்ரயேலர்கள் வனாந்தரத்தில் விழுந்ததுப்போல நாமும் விழாதபடிக்கு அவருடைய வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.

இந்த நிழலைப்பற்றி மீண்டும் குறிப்பிடுகையில், அன்று தேவன் தம்முடைய ஜனங்களை வழிநடத்திய விதத்தில் நம்மையும் வழிநடத்துகிறார் என்று நம்முடைய சொந்த அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது தெரிகிறது. அவர் நமக்கு அநேக அனுபவங்களின் மூலமாக வழிநடத்தும் பொழுது, நாம் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டு, அதன் மூலமாக கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய குணங்கள் வளர்ச்சியடைகிறது. இதற்கு விசுவாசத்தோடு தன்னை ஒப்புக்கொடுப்பவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக் கொள்வார்கள், மற்றவர்கள் அபாத்திரராக போய்விடுவார்கள். நாமும் அபாத்திரராக போய்விடாதப்படி நாம் பெறும் அனுபவங்கள் எப்படியிருந்தாலும் சரி, அவைகளை தாழ்மையோடும், பொறுமையோடும், ஏற்றுக்கொண்டு, ஒழுக்கத்தையும், தேவனுடைய பிரமாணங்களையும் கற்றுக்கொண்டு, ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதிபடுத்திக்கொள்வோம் – (கொலோ 1:12)

R2534 (col- 2P1)

மாம்ச இஸ்ரயேலுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட சீனாய் மலையின் நியாயப்பிரமாணத்தின் கீழ் ஆவிக்குரிய இஸ்ரயேல் ஜனங்கள் இல்லாவிட்டாலும், அதில் சொல்லப்பட்ட ஓய்வு நாள் அவருடைய ஓய்வு நாள் அல்ல. அவருடைய ஓய்வு நாள் யூத ஓய்வு நாளைவிட பெரியதும், முழுமையானதும், பூரணமானதுமாக இருக்கிறது. ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் விசுவாசத்தில் ஓய்ந்திருக்கிறார்கள் – கிறிஸ்துவுக்குள் ஓய்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆண்டவரின் நுகத்தை கழுத்தில் வைத்தவுடன், அவருடைய வாக்குத்தத்தங்களையும், அவர்களின் ஆத்துமாக்களின் இளைப்பாறுதலையும் உணரலாம். (மத் 11:29) இதை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெயர் 4:3ம் வசனத்தில் குறிப்பிடுகிறார். “விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்.” நாம் அவரை முழுமையாக நம்புவதுபோல நாம் அவருக்குள் முழுமையாக இளைப்பாறுகிறோம். முழுமையாக விசுவாசிப்பவன், முழுமையாக இளைப்பாறுகிறான். குறைவாக விசுவாசிப்பவன், குறைவாக இளைப்பாறுகிறான். ஆவிக்குரிய இஸ்ரயேலர்களின் இறுதி இலக்கு – இன்று நாம் பெறும் அனுபவங்களின் மூலமும், முழுமையான இளைப்பாறுதலுக்காகக் காத்திருந்து, பூரணமாக அதை பெறுவதாகும். பூரணமான நிலையுள்ள இளைப்பாறுதல், தேவனுடைய ஜனங்களுக்கு இனி வருவதாக இருக்கிறது. “ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது…. ஆகையால், அந்த திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்து போகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.”-எபி 4:9-11