CD-KNOWLEDGE-Q-9
யோவா 17:3 – ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.
R2137 (col.1 P4,5 col.2 P1)
இதன் அஸ்திபாரத்தில் கட்டுபவர்கள், தங்களுடைய கிருபையும் சமாதானத்தையும் பெருக்குவதற்கான நம்பிக்கையையும் அதிகரிப்பார்கள். எவ்வாறு? “நம்முடைய பிதாவாகிய தேவனையும், நம்முடைய ஆண்டவராம் இயேசுவை அறியக்கூடிய அறிவின் வழியாக” என்று அப்போஸ்தலர் பதில் அளிக்கிறார். துவக்கத்தில் இதன் பொருள் சற்று எளிதாக தோன்றலாம் அல்லது தேவன் ஒருவர் உண்டென்றும், அவரால் அனுப்பப்பட்ட இயேசுவாகிய இரட்சகர் நமக்கு உண்டென்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆனால், வளர்ச்சி அடையக்கூடிய கிறிஸ்தவனுக்கு இந்தக் காரியமானது மிக ஆழமானதாக இருக்கிறது. பிதாவோடும், அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவோடும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டு, “கிறிஸ்துவின் சிந்தை” பெற்று, தெளிவாகவும், முழு நிறைவாகவும், பிதாவின் மனதை அறிந்து கொள்வதாகும். தேவனுடைய வார்தைகளினால், இந்த அறிவில் நாம் வளர வேண்டும். தெய்வீக சுபாவங்களை வளர்க்கக் கூடிய கோட்பாடுகளை வசனங்கள் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும். அதாவது தெய்வீக நீதி, ஞானம், அன்பு, வல்லமை எவ்வாறு செயலாற்றுகிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். இவைகள் அனைத்தும் முன்னேற்றத்திற்கான தொடர் பாடங்களாக இருக்கிறது. கிறிஸ்துவ அனுபவத்தின் முதல் நாளில் நாம் சில பாடங்களைக் கற்றிருக்கலாம். அந்த வருடத்தின் முடிவில் தெய்வீக சிந்தையைப் பற்றிய அறிவில் போதுமான வளர்ச்சியை காட்ட வேண்டும். மேலும் இரண்டாம் வருடத்தின் முடிவில் இன்னும் அதிகதிகமாக வளர்ச்சியை அடைய வேண்டும். இப்படியாக நம்முடைய வாழ்கையின் முடிவு வரைக்கும் வளர வேண்டும்.
தெய்வீக திட்டத்தைப் பற்றிய அறிவு நமக்குள் அதிகரிக்கும் போது நம்முடைய ஆவியின் கனிகளும் அதிகரிக்க வேண்டும். ஒரு வேளை இதற்கு இசைவாகவும், படிப்படியான வளர்ச்சி அடைய தங்களை உட்படுத்திக் கொள்ளாதவர்கள், இப்படிப்பட்ட அறிவை அறிந்து கொள்வதற்கான உற்சாகத்தை, வெகு விரைவில் இழந்து விடுவார்கள். ஆனால் ஆர்வம் உள்ளவர்கள் அதிகதிகமான அறிவிலும், ஞானத்திலும் விருத்தி அடைவார்கள். இப்படிப்பட்டவர்கள் கிருபையில் வளர்ச்சி அடையும் போது, அதிகதிகமாக சமாதானம் பெருகும். ஒருவரிடம் சமாதானம் இருந்தால் சகல வளர்ச்சிக்குரிய காரியங்களும் விருத்தி அடையும். நாம் முதன் முதலில் நம்முடைய ஆண்டவரை காணும் போது சமாதானம் பெற்றோம், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதை உணர்ந்தோம்.
ஆனால் தெய்வீக திட்டத்தை பற்றிய அறிவில் வளர்ச்சி அடைபவர்கள் தாங்கள் பெற்ற சமாதானத்தை நித்தியமாக சுதந்தரித்துக் கொள்வார்கள். இந்த வழியில் சற்று வேகமாக செல்லும் சிலர் “எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் தங்கள் இருதயங்களில் பெற்றுக் கொள்ளும்படியாக” அப்போஸ்தலர்களைப் போல செயல்படுவார்கள்.
தேவனுடைய அறிவு, அவருடைய தெய்வீக பலத்தால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அப்போஸ்தலர் தொடர்ந்து உறுதியளிக்கிறார். “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,” (1 பேது 1:3) எப்படிப்பட்ட உறுதி ! “எல்லா வழிகளிலும், நம்முடைய கிறிஸ்தவ வளர்ச்சிக்கு தேவைப்படும் அறிவின் முக்கியத்துவம் கீழ்க்காணும் நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை நமக்கு ஓயாமல் நினைப்பூட்டுகிறது. “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவா 17:3) அப்போஸ்தலர் விவரிப்பதுப் போல, “தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை” அறிந்து கொள்ளுதலுக்கு, தேவனோடு நெருங்கிய தொடர்புக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நாம் தெய்வீக குணலட்சணங்களின் பூரணத்துவத்தையும், மகிமையையும் உணர்ந்தால் மட்டுமே நம்முடைய அபூரணத்தையும், குறைவுள்ள நிலையை அளவிட முடியும். ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் வழியாக நாம் தேவனோடு கொண்டிருக்கும் நெருங்கிய உறவினால் பெறப்படும் அறிவும், ஐக்கியமும் நம்முடைய இருதயங்களைச் சுத்திகரிக்கும். இப்படியாக தேவனுடைய அறிவில் வளர்ச்சி அடைந்து “..சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்களாகுவோம்…” (எபே 3:14-19) இந்தத் தெய்வீக குணங்களை உடையவர்கள் “கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” ( 2 கொரி 3:18)
R2138(col.1 P3): –
நம்முடைய சிருஷ்டிகரை அறிந்துக் கொண்ட அறிவின்படி நாம் பார்க்கும்போது விசேஷமாக நம்முடைய ஆண்டவரும் இரட்சகராம் இயேசுவின் மூலம் – “தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி.” (பிலி 3:14) நிச்சயமாக தொடருவோம் அல்லவா? அவருடைய மகிமையான குணங்களை அறிய விரும்புவோருக்கு தன்னைப்பற்றி முழுமையாக வெளிப்படுத்த அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். ஏனெனில் இதினிமித்தம் நாம் அவருடைய ஆவியில் அதிகமான பங்கைப்பெற்று, நாளுக்கு நாள் அவரைப் போலாகி, அவர் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தகுதி பெற்று, தேவன் தான் அன்பு செலுத்தும் பிள்ளைகளுக்காக வைத்திருக்கும் நித்தியமான ஆசீர்வாதங்களை முழுமையாக உணர்ந்து, அதைப்பற்றி இன்று நமக்களித்திருக்கும் மேன்மையானதும், விலையேறப் பெற்றதுமான வாக்குத்தத்தங்களைப் பெற்றிருக்கிறோம். பிதாவாகிய தேவன் தெரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே விசேஷித்த கட்டளைகளைக் கொண்டுயிருக்க வேண்டும் என்பதை இயேசு நன்கு அறிந்திருக்கிறார். ஆயத்தப்படாதவர்களுக்கும், அவரை புரிந்து கொள்ளக்கூடிய சரியான மனநிலை இல்லாதவர்களுக்கும், இயேசுவின் சாட்சியைப் பெற்றுக்கொள்ள தயங்குபவர்களுக்கும் இவைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தம்முடைய விசுவாசமுள்ள சீஷர்களுக்கும், சபை வகுப்பார் அனைவருக்கும் தாம் எதையும் கூறாமல், பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்ட அனைத்தையும் அறிவிக்கிறார். பிதா யாருக்கு தன்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே குமாரன் பிதாவானவரை முழுமையாக வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார். சராசரியான வாசகர்கள் இதை முதலில் வாசிக்கும்போது மேலோட்டமாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அநேக வருடங்களாக கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சி அடைந்து தேவனுடைய கிருபையிலும், அறிவிலும் பெருகிக் கொண்டிருப்பவர்கள், இந்தக் கருத்தை ஆழமாக புரிந்துக்கொள்வார்கள். துவக்கத்தில் இயேசுவைப் பற்றியும், அவருடைய தந்தையாம் பிதாவைப்பற்றியும் குறைவாக அறிந்தபோது, அவர்கள் பெற்ற கிறிஸ்துவ அனுபவம் அதற்கு ஏற்றபடி அனுமதிக்கப்பட்டது என்று உணருவார்கள். ஆனால், பிதாவையும், குமாரனையும் மிக அதிகமாக அறியக்கூடிய அறிவு பெற்றவுடன் வித்தியாசமான அனுபவங்களை அடைவார்கள். ஒருவர் தன்னுடைய நெருங்கிய நண்பருடைய இருதயத்தையும், சிந்தையையும், நோக்கத்தையும் அறிந்திருப்பது போல அவர்களின் சிந்தையும் தேவனைப்பற்றியும், குமாரனைப்பற்றியும் முழுமையாக உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பளிக்கிறது. இப்படிப்பட்ட ஒர் நெருங்கிய உறவைப் பெறுவது நாம் பெற்ற சிறப்புரிமையாகும். ஆனால் இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதை விரும்பித் தேடி, உண்மையாக அவர்களோடு ஐக்கியப்படுவதற்கும், இசைந்து செயல்படுவதற்கும் வாஞ்சிப்பவர்கள் மட்டுமே வாய்ப்பைப் பெறுகிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் பங்காளிகளாக விரும்பும் ஆண்டவரின் உண்மையான சீஷர்கள் இப்படிப்பட்ட கிருபையில் வளர்ச்சி அடைய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் இந்தக் கிருபையின்றி நாம் வளர்ச்சி அடைய முடியாது. நாம் பெற்றிருக்கும் வளர்ச்சியின் அளவுக்கு பிதாவையும் குமாரனையும் அறிந்துகொண்டால் நாம் அவர்களை முழு இருதயத்தோடு நேசித்து, அவர்களுடைய பார்வையில் நன்மையான காரியங்களை அதிகதிகமாக செய்ய முயற்சிப்போம்.