CD-PRAYER-Q-3
R2004 [col. 1:5]: –
நம்முடைய தேவைகளை தேவனுக்கு அறிவிக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக அவருடைய ஜனங்கள் அவரை ஜெபத்தில் அணுகவேண்டுவதில்லை. ஏனெனில், நம்மை விட நம்முடைய தேவைகள் என்னவென்று அவர் நன்கு அறிந்திருக்கிறார். ஆகையால், நம்முடைய ஆவிக்குரிய நன்மைகளுக்காக, அதாவது கிறிஸ்துவின் மூலமாகவும் புதிய உடன்படிக்கையின் மூலமாகவும் தெய்வீக குடும்பத்திற்கு வந்த அனைவரிடமும் எப்போது அவருடைய அன்பையும் அக்கறையையும் மற்றும் கிருபையை உணர்ந்துகொள்ள நாம் அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதற்காக அவரிடம் ஜெபிக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, பொதுவாக இந்த பூமியின் மேல் மழையை பெய்யசெய்து, சூரியனை அனுப்பினாலும் தேவன் தம்முடைய ஜனங்களின் விசுவாசத்திற்கும். ஜெபத்திற்கும் பதில் அளிக்கும்படியாகவே, சிறிதும். பெரிதுமான பலநன்மைகளை அவர் கையில் வைத்திருக்கிறார்.
R2252 [Col. 2:2]: –
“உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” ஆகையால், கிறிஸ்தவ ஜெபமானது. தேவனுக்கு தகவல் கொடுக்கும் நோக்கம் அல்ல அல்லது அவர் கவனிக்காமல் அல்லது மறந்துவிடக்கூடிய காரியங்களை அவருக்கு நினைவூட்டுவதற்காக அல்ல மாறாக. ஜெபம் ஒருவருக்கு நன்மையளிப்பதால், அவர் ஜெபிக்கவேண்டும் என்றும் அது மிக அவசியம் என்றும் சொல்லப்படுகிறது. நம்முடைய தேவைகளில் தேவனுடைய உதவியை உணருவதற்கும் அவர் மேல் நாம் சார்ந்திருப்பதிற்கும் அவரிடத்தில் அதற்காக ஜெபிக்கும் வரையில், அப்படிப்பட்ட பல ஆசீர்வாதங்களை தன்னிடமாக அவர் வைத்திருக்கிறார். எனவே, தேவன் நமக்கு தடை செய்யும் காரியங்களை, அவர் கொடுப்பதற்காக நம்முடைய ஜெபங்கள், தூண்டுதலாக இருக்கக் கூடாது. ஆனால் அவர் நமக்கு கொடுக்கவிரும்பும் வாக்களிக்கப்பட்ட காரியங்ளை அவர் பாதுகாத்து வைத்திருக்கிறார். அவைகளை தன்னிடம் வைத்திருப்பதை விட கொடுக்க விரும்புகிறார். மேலும் தெய்வீக ஒழுங்கு எவ்வளவு ஞானமாக உள்ளது. “கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற இந்த தெய்வீக ஒழுங்கின் கீழ், தேவனுடைய ஜனங்கள் எத்தனை பேருக்கு இது மிகுந்த நன்மையை உணர்த்தியுள்ளது. மேலும் இவ்வாறு கேட்டு பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு கூடுதலாக. நம்முடைய மிக சிறந்த சலுகைள் மற்றும் ஆசீர்வாதங்களில் ஒன்றில் நாம் களிக்கூறும்படியாக. தேவனோடு நெருக்கமான ஐக்கியத்திற்கு நம்மை ஜெபத்தின் அவசியம் கொண்டு சேர்க்கிறது.
F679 [P1]: –
“உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில்நித்திய பேரின்பமும் உண்டு” (சங்கீதம் 16:11) என்று தீர்க்கதரிசி அறிவிக்கிறார். ஏனெனில் ஜெபம். தெய்வீக ஆசீர்வாதத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சிக்குள் வழியை ஆயத்தப்படுத்தி, ஆத்துமாவை தேவனுடைய பிரசன்னத்திற்கு கொண்டு செல்கிறது. தெய்வீக சித்தம் அல்லது திட்டங்களை மாற்றும் நோக்கத்துடன். தேவனுடைய ஜனங்கள் கிருபாசனத்தண்டைக்கு அணுகுவதற்கான வழி திறக்கப்படவில்லை. இத்தகையான சிந்தனை எந்த நியாயமான காரியத்திற்கும் பொருந்தாது. எனவே, தெய்வீக சித்தத்திற்கு எதிராக, நம்முடைய சித்தங்களை விண்ணப்பிக்கக்கூடிய ஜெபங்கள் சரியானது அல்ல என்றும், அவருடைய சித்தத்திற்கு முழுமையான அர்ப்பணிக்கப்பட்டவைகள் மட்டுமே சரியானது என்றும் கர்த்தர் கட்டளையிடுகிறார். “நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள், சிற்றின்பநாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.” (யாக்கோபு 4:3 திருவிவிலியம்) என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார்.