CD-KNOWLEDGE-Q-18
1 கொரி 13:2 “நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை”
R3150 (col.1 P5,6): –
அன்பின் கிரியைகளை விவரிப்பதற்குமுன் அதன் முக்கியத்துவத்தையும், மேலான வரங்களை அதிகமாக பெற்றிருந்தாலும், அன்பு நம்மில் இராவிட்டால், கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளாக இருப்பதற்கான ஆதாரத்தை இழந்தவர்களாக இருப்போம் என்பதையும் அப்போஸ்தலர் முன்னறிவிக்கிறார். அன்பு இராவிட்டால் தேவனுடைய வார்த்தைகளுக்கு எந்த சம்பந்தமும், தொடர்பு இல்லாதவர்களாக சத்தமிடுகிற வெண்கலம்போலவும் ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்போம். நாம் சுவிசேஷத்தை சரளமாக பேசினாலும், கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக இருப்பதற்கான ஆதாரத்தை நாம் பெறுவதில்லை என்று அப்போஸ்தலர் உறுதியளிக்கிறார். அன்பின் ஆவியை பெறாமல், தேவனுடைய அன்பான குமாரனின் சுவிசேஷத்தைப்பற்றி வல்லமையோடும், அதிகாரத்தோடும் பேசுவதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அருமையான கட்டுரைகளை உரைக்கும் அநேக மேடைப்பேச்சாளர்களை நாம் கண்டிருக்கிறோம். சத்தியத்திற்கேற்ற அன்பினால் அவர்கள் பேசாவிட்டால், அவர்களின் பேச்சுக்கள் விருதாவாகவும், உணர்வற்றதாகவும் காணப்படுகிறது.
வரங்களில், தீர்க்கதரிசன வரமே சிறந்தது என்று அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார். அதில் சகல இரகசியங்களை அறியக்கூடிய அறிவைப்பற்றியும் கூறுகிறார். மேலும் ஒரு கிறிஸ்தவனுக்கு மிக அவசியமாக தேவைப்படும் விசுவாசத்தைப்பற்றியும் பேசுகிறார். இவைகளை முழுமையான அளவில் பெற்றிருந்தாலும், அன்பிராவிட்டால் எந்தப்பயனுமில்லை. புதுசிருஷ்டியாக வளர்ச்சி அடைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில், புதுசிருஷ்டி ஜெநிப்பிக்கப்படுவதற்கு அன்பே மிக அவசியமானது. எவ்வளவு அற்புதமான பரிட்சையாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்த முயற்சிப்போம். தேவன் எதிர்ப்பார்க்கும் காரியங்களில் நாம் எப்படியாக இருந்தாலும் சரி, நாம் பெற்ற அறிவைக்காட்டிலும் நாம் அவர் மேல் வைக்கும் அன்பினாலும் சகோதரர் மேல் வைத்திருக்கும் அன்பினாலும் பொதுவாக அனைவரின் மேல் வைக்கும் அன்பினாலும், நம்முடைய எதிராளிகளின் மேல் வைக்கும் அன்பினாலும் அளக்கப்படுகிறோம். தேவனுடைய அன்பினால் ஜெநிப்பிக்கப்படாமல், தேவனுடைய, அழமான காரியங்களைக் குறித்து இரகசியங்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனெனில் தேவனுடைய ஆவியின்றி தேவனுக்குரியவகளை ஒருவன் அறிய முடியாது. தகுதியை இழந்தால் அந்த அறிவைப்பெறுவதற்கான ஆவியை முதலில் இழந்து விடுவார். ஆகவே நாம் அன்பிற்கு முதலிடம் கொடுத்து தேவன் நம்மை அங்கீகரிப்பதற்கும், நாம் அவரை நெருங்குவதற்கும் அன்பின் பரிட்சைகளையே பிரதானமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2 பேது 1:8 “இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால் உங்களை, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.”
E238 (P2) through E239 (P2):-
மேலும் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தால் இப்போது நடக்கும் காரியங்களைக்குறித்தும் “இனிவரும் காரியங்களை” குறித்தும் அறியாதவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தேவனுடைய வாத்தைகளின் வழியாக பரிசுத்த ஆவி நமக்கு சாட்சி அளிக்கிறது. ஏனெனில் நாம் அவருடைய வார்த்தைகளினால் போதிக்கப்பட்டு பிரகாசிக்கப்படுகிறோம். நாம் “கிருபையில் வளர்ச்சி” அடைந்துக்கொண்டு பூரணமான வளர்ச்சி அடைவதற்கு பலமான ஆகாரத்தை உண்பதற்கு வாஞ்சையோடு இருக்கிறோம் (1 பேது 2:2, எபி 5:13,14). ஆவியின் கனிகளில் வளர்ச்சி அடையும் பட்சத்தில் நாம் தேவனோடும், ஆண்டவராம் இயேசுவோடும் நெருங்க முடிவதால், அவர்கள் தங்களுடைய திட்டங்களைக்குறித்தும் குணங்களைக் குறித்தும் தெளிவாக நமக்கு அறிவிக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட வளர்ச்சியை பற்றி குறிப்பிடும் போது “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்கியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன் செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச்செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமும் அளிக்கப்படும்” 2பேது 1:5-11 என்று பேதுரு கூறுகிறார். (யோவான் 16:12,15 வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்)
கிறிஸ்துவுக்குள்ளாக நாம் புது சிருஷ்டிகளாக வளர்ச்சி அடைகிறோமா? என்ற சாட்சியைப் பெற்றிருக்கிறோமா? என்று ஒவ்வொருவரும் தனக்குள்ளாக கேட்டு கொள்ளவேண்டும். மேலும் வேதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஆவியில் கனிகள் நமக்குள் வளர்ச்சி அடைகிறதா? என்று நம்மை நாமே கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் அன்பில் வளர்ச்சி அடைவதும் மற்ற அனைத்து ஆவியின் கனிகளில் வளர்ச்சி அடைவதும், அபாரமான அறிவின் வளர்ச்சியை சார்ந்ததே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் பெறக்கூடிய ஒவ்வொரு படியாக அறிவும், அதற்கு ஏற்ற பொறுப்புகளையும், கீழ்ப்படிதலையும் வருவிக்கும். மேலும் ஒவ்வொரு கீழ்ப்படிதலின் படியும், அறிவின் அடுத்தபடிக்கு நம்மை வழிநடத்தும், நாம் அன்பிலும் மற்ற ஆவியின் கனிகளில் வளர்ச்சி அடையக்கூடிய காரியங்கள் நம்முடைய அறிவின் வளர்ச்சியின் அடிப்படையையே சார்ந்துள்ளது என்று நாம் மறந்து விடக்கூடாது. அதே போல் நம்முடைய அறிவின் வளர்ச்சியும், நம்முடைய ஆவியின் கனியின் வளர்ச்சியையே சார்ந்துள்ளது. நாம் அடியெடுத்து வைக்கும் அறிவின் ஒவ்வொரு படிகளும், அதற்கு ஏற்ற கீழ்ப்படிதலும், பொறுப்புகளையும் நமக்குள் வருவிக்கும். ஒவ்வொரு கீழ்ப்படிதலின் படியும், மேலும் அறிவை பெறக்கூடிய அடுத்த படிக்கு நம்மை வழிநடத்தும். இப்படியாக, கிறிஸ்துவின் பள்ளியில் தேவனால் கற்பிக்கப்படுபவர்கள், ஆவியின் சாட்சியை முழுமையாக உணர்ந்து கொள்வார்கள். மேலும், அறிவும், கிருபையும் உள்ள ஆவியின் வளர்ச்சிக்கு நாம் இப்படிப்பட்ட சாட்சிப் பெற்றால், மகிழ்ந்து களிகூறலாம். மேலும், அறிவிலும், கிருபையிலும் பூரணமாக வளரச்சி அடைவதற்கு தெய்வீக வழி நடத்துதல் முழுமையாக கிடைக்கும் வரையில் அதே பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
R2649 (col.2 P1,2): –
அறிவு மிகவும் விலையுயர்ந்தது. ஆனால் தற்செயலாக நமக்குள் வரும் இந்த அறிவு பொறுமையை ஏற்படுத்தி, நம்மை வீணாக்கி தேவனுடைய ஆவியாகிய அன்பு, சாந்தம், பணிவு, பரிவு போன்ற குணங்களுக்கு முரண்பாடாக நம்மை வழி நடத்திவிடுகிறது. நாம் பெற்ற அறிவு ஒலி கொடுக்கும் மணிகளை போலிருக்கிறது. ஆனால் தேவனுடைய பார்வையில் எந்த விதமான பிரயோஜனமும் இல்லை. நாம் பெற்ற அறிவு நியாயமான தேவைக்கு பயன்படுத்தும்போது “தேவனுடைய அன்பை” முழுமையாக உணர முடியும், மேலும் அவருடைய குணலட்சணங்களை பெற்றுக்கொள்வதற்காக அவர் தந்த ஞானத்தைப் பற்றியும் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. இப்படியாக நம்மால் முடிந்த வரைக்கும் நம்முடைய பரலோக தந்தையை போலவும் நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் சாயலை தரித்துக்கொண்டு, நேச குமாரனின் தற்சொரூபங்களாக மாற முயற்ச்சிக்க வேண்டும். “விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவின் அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்றும் உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்” எபே 3:17-19 என்று அப்போஸ்தலர் கூறுகிறார்.
சந்தேகத்திற்கு இடமின்றி, படித்து புரிந்துகொண்டு அதை கைக் கொண்டு, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தக்கூடிய அடிப்படையான கோட்பாடு அன்பு மட்டுமே. இந்த மறுபதிப்புகளை வாசிக்கும் அநேகர் “தேவனுடைய அன்பின்” பங்காளிகளாக மாறிவிட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். மேலும் இதையே தேடக்கூடியவர்கள், அதில் பூரணப்பட்டு, வேரூன்றி ஸ்திரப்படுவார்கள். இதன் வழியாக மட்டுமே, கிருபையிலும் அறிவிலும் நித்தியமான வளர்ச்சியை அடையமுடியும் என்பதை அப்போஸ்தலர் உறுதிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் பள்ளியில் நுழைந்துவிட்டு, பூரணப்படுதலை நோக்கி வளர்ச்சி அடைவதற்கு மறுத்தால் அது வரைக்கும், அவர்கள் பெற்ற தேவனுடைய திட்டத்தைப் பற்றிய அறிவு வெகு சீக்கிரத்திலோ, தாமதமாகவோ அவர்களை விட்டு நழுவிவிடும். ஆனால் சரியாக பாதையில் முன்னேறிச் செல்வோர், தெய்வீக திட்டத்தின் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்குமுன் திறக்கப்படும். அவர்கள் அறிவில் அடையக்கூடிய வளர்ச்சியின் அளவில் அவர்களுக்குள் இருக்கும் அன்பும் வளரும்.
R3215 (col.1 P6 through col.2 P1): –
எப்படிப்பட்ட கிருபையில் வளர்ச்சி அடையவேண்டும்? தேவனுடைய சிந்தையோடு இசைவாக அவருடைய ஐக்கியத்திலும் அவருடைய கிருபையில் வளர்ச்சி அடைவதாகும். முதலாவது இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தினால் கிடைத்த இரட்சிப்பின் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை நன்கு புரிந்துகொண்டவர்களாகவும், அதை பற்றிய அறிவை பெற்றுக்கொண்டு, இரட்சகராம் இயேசுவின் மூலமாக பிதா கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை நம்பி, சார்ந்து, நம்முடைய அனுதின ஜெபத்திலும், இயேசுவுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து, தேவனுடைய சித்தத்தை நோக்கி அவரோடு நெருங்கிய தொடர்பு கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஸ்திரமான மனநிலையும், சிந்தையும் நமக்கு இருந்தால் நம்முடைய தேவனுக்கு ஏற்றபடியும், அவர் விரும்பியபடியும் அதிகமாக ஆவிக்குரிய கனியின் வளர்ச்சி மிக சீராக நம்முடைய வாழ்க்கையில் காணப்படும். “இயேசு அவனுக்குப் பிரதியுத்திரமாக; ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைகொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்” (யோவ 14.23) என்று நம்முடைய ஆண்டவர் ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறும்படியாக தெய்வீக அங்கீகரிப்பும், இரக்கமும் நாளுக்கு நாள் நம்முடைய வாழ்க்கையில் அதிகரித்திக்கொண்டே இருக்கும். “இயேசு அவனுக்குப் பிரதியுத்திரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால். அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்.” (யோவ 14:23)
மொத்தத்தில், விசுவாசத்தினால் தேவனோடு நடந்து, நாளுக்கு நாள் கீழ்ப்படிதலிலும், அன்பிலும் வளரக்கூடியவர்களைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு, அவ்வழியில் தாங்களும் நடக்க முழுமையான ஆசீர்வாதங்களைப் பெறுவதே கிருபையில் வளர்ச்சி அடைவதாகும்.