CD-PRAYER-Q-11
மத்தேயு 15:7-9 “மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக்கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்”. யோவான் 4:23,24 “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறர்வர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிற வர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்றார்.”
R2070 [Col. 1:2, 3]: –
முன்னர் உண்மை வணக்கத்தார் இருந்ததே இல்லை என்று ஆண்டவர் சொல்லவில்லை. இதற்கு எதிரிடையாக, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் “ஆவியோடு தேவனை தொழுதுக்கொள்ளாதிருந்தும்” (இயேசு மகிமைப்படாததினால் இன்னும் பரிசுத்த ஆவி கொடுக்கப்படவில்லை யோவான் 7:39) அவர்களது ஜெபங்கள் தேவனுக்கு முன் அங்கீகரிக்கப்பட்டு, அவரால் பதில் அளிக்கப்பட்டதென்று வசனங்கள் கற்ப்பிக்கிறது. அவர்களுக்குள் ஆவியின் வழி நடத்துதலினால் மட்டுமே சத்தியம் வெளிப்படுத்தப்படும் என்பதை நாம் பார்க்கும்போது, அவர்கள் சத்தியத்திலும் தேவனை தொழுதுக் கொள்ளவில்லை. யோவான் 14:16,17.
உண்மையில், இப்போது நாம் தேவனுடைய புத்திரர்களாகும்படிக்கு, பரிசுத்த ஆவியினால் “முத்திரிக்கப்பட்டு” அல்லது புத்திர சுவிகார ஆவி கொடுக்கப்பட்டு. அதன் விளைவாக தெளிவான சத்தியத்தின் அறிவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் விளைவாக இன்னும் அதிகமான ஆவிக்குரிய மற்றும் அறிவார்ந்த தொழுகை செய்தவற்கு சாத்தியம் இருந்தாலும், பழைய ஏற்பாட்டு சில நீதிமான்களை காட்டிலும் எந்த விதத்திலும் நாம் சிறந்தவர்கள் அல்ல என்பதைக் குறிக்கிறது. எல்லா வழிகளிலும் பயனற்றவர்களான புறஜாதியினரின் மத்தியில் இருந்த சிலரை விட இஸ்ரயேலர் தேவனுடைய இரக்கத்திற்கு பாத்திரவான்களாக நிரூபிப்பதற்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. (ரோம் 3:2.) வரக்கூடியகிருபைகளுக்கான நிழல்களை அனுப்புவதற்கான ஏற்ற காலம் வந்தபோது, அதை தொடர்ந்து வரும் சுவிசேஷ யுகத்தின் ஆசீர்வாதங்களுக்கு நிழலிடும்படியாக. இஸ்ரயேல் தேசத்தை தன்னுடைய முகவராக அல்லது காரியதரிசியாக தேவன் தேர்வு செய்தார். ஆனால் பிரமாணத்தை கேட்பவர்களாக அல்ல. அதை செய்பவர்களாக இருந்தால் மட்டுமே அதனால் நீதிமான்களாக முடியும். எனவே, வழிபடுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக பெற்றவர்கள் அல்ல. ஒருவர் தம்முடைய மிக பெரிய சிலாக்கியங்களை பயன்படுத்தி, அவர் பெற்ற ஆவிக்கும். சத்தியத்திற்கும் ஏற்றபடி தேவனை ஆராதிப்பதே சிறந்த ஆசீர்வாதமாகும்.
R2070 [col. 2 P1]: –
அக்கிரமங்களுக்காக கொடுக்கப்பட்ட நிஜமான பாவநிவாரண பலி, உண்மையான ஒப்புரவாக்குதலை ஏற்படுதியதால், அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசிகளை தேவனுடைய புத்திரர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது சாத்தியமாக்கிற்று. (யோவான் 1:12) மேலும் அதற்கு ஏற்றபடி, ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதற்கு குமாரர்கள் உயர்வான பரிசுத்த ஆவியின் நிலையை பெற சாத்தியமாயிற்று. இது ஏற்ற காலத்தில், ஆயிரவருட ஆட்சியில், புது உடன்படிக்கையின் கீழ் அனைவரும் தேவனோடு ஒப்புராவாகும்படிக்கு இந்த ஆவி மாம்சமான அனைவர் மேலும் ஊற்றப்படும். (யோயேல் 2:28) இந்த கவிசேஷ யுகத்தின் போது. இந்த ஜெநிப்பிக்கும் ஆவி, குமாரர் வகுப்புக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இவர்கள் இப்போது தேர்வு செய்யப்படும். கிறிஸ்துவினுடைய உடன் சகோதரர்களும், திவ்விய சுபாவத்திற்கு பங்காளிகளாகவும், பரிசுத்த ஆவியினால் பிறப்பிக்கப்படும் புது சிருஷ்டிகளாக இருப்பார்கள். சீஷர்கள் நம்முடைய ஆண்டவருடைய பரிசுத்த ஆவியோடு (அளவில்லாமல் பெற்றிருந்த) தொடர்பு கொண்டபோது, அதனுடைய தாக்கத்தை அவர்கள் எதிர்க்காததினால், (யூதாஸை தவிர) அவர்கள் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஆயினும், அவர்கள் பெற்ற அனைத்து ஆவிக்குரிய நன்மைகளை காட்டிலும், ஆண்டவரின் பலியினாலும், அதை தம்முடைய தந்தையிடம் ஒப்புவிப்பதினாலும். இன்னும் அதிகமான ஒரு ஆசீர்வாதம் வரும் என்று நம்முடைய ஆண்டவர் உறுதியளித்தார். மேலும் தம்முடைய நாமத்தினாலே பிதா அவர்களுக்கு தேற்றவாளனாகிய பரிசுத்த ஆவியை அனுப்புவார் என்றும் அது அவர்களுக்குள் நிலைத்திருப்பதற்கு அதனோடு அதிகமான தொடர்பு வைத்திருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார். இவர்களின் வழியாக இந்த வல்லமை மற்றவர்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும். (அப்போஸ்தலர் 24:25) தேவ புத்திரர்களுக்கான அடையாளமாக இருப்பதினால் வேறொருவரும் இந்த வல்லமையை உள்வாங்கவோ. அல்லது அதைப் பற்றி அறிந்துகொள்ளவோ முடியாது. குமாரர்களை தவிர வேறு ஒருவரும் இந்த பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது. – யோவான் 14:16,17.
R2071 [Col. 2:3,4): –
“இப்படிப்பட்டவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்” என்று உண்மையில் நம்முடைய ஆண்டவர் அறிவிக்கிறார். பொதுவான மனுக்குலத்திலிருந்து உண்மையாக தேவனை தொழுகக்கூடியவர்களை தேடும் நோக்கத்தை சரியாக புரிந்துக்கொள்வதே, இந்த சுவிசேஷத்தின் முழுமையான பணி என்பதை நாம் காண்கிறோம். சுவிசேஷத்தின் பூமிக்குரிய ஊழியர்கள், முதலாவது பக்தியோடு தொழுகக்கூடியவர்களாக தோன்றியவர்களை கண்டார்கள். மேலும் அவர்கள் கொண்டுவந்த செய்தி கேட்கக்கூடியவர்களுக்கு ஒரு பரிட்சையாக அமைந்தது. உண்மையான பக்தியுள்ளவர்களையும், பக்தியுள்ளவர்கள் போல தோற்றம் அளித்தவர்களையும் அது பிரித்தது. அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியம், அவரை குற்றம் சாட்டினவர்களால் இவ்வாறு சுருக்கமாக சொல்லப்பட்டது: “இவன் வேதப் பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள்” – அப்போஸ்தலர் 18:13.
ஆவியோடும். உண்மையோடும் தேவனை தொழுதுக்கொள்வது, வெறுமனே – ஜெபம், துதித்தல், விண்ணப்பங்கள் மற்றும் நன்றி கூறுதல் அல்ல. இவைகள் அனைத்தை காட்டிலும் ஆழமாக சென்று இருதயத்தின் நேசத்தைப் பற்றி கொள்வதினால், இது “ஆராதிக்கும் செயலை” அல்ல, மாறாக வாழ்க்கையே ஆராதனை என்று குறிக்கும். ஆவியினால் ஜெநிப்பித்தல் மற்றும் தெய்வீக திட்டத்தின் அறிவை அறிவதன் மூலம், ஒரு தனிநபர் தேவனோடு ஒன்றிணைந்து, தேவனுடைய திட்டத்தின் எல்லா அம்சங்களிலும், அவருடைய பிரமாணங்களோடு இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையாகும். நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளில் சொல்லுவோம் என்றால், “பிதாவின் சித்தம் செய்வதே என்னுடைய போஜனமாக இருக்கிறது.” இதுவே ஆவியோடும், உண்மையோடும் தேவனை தொழுதுக்கொள்ளும் ஆராதனையாகும். தேவனை அனுகக்கூடிய தனிப்பட்ட ஜெபத்திலும், குடும்ப ஜெபத்திலும், விசுவாச வீட்டாரோடு ஒருமித்து ஜெபிக்கையிலும், ஒழுக்கத்துடன் பயபக்தி வெளிப்படுத்தும்படியாக முழங்காலில் நம்மை நிற்கும்படி செய்யும். மேலும், வாழ்க்கையின் அனைத்து செயல்கள் மற்றும் வார்த்தைகளிலும் அதன் வெளிப்பாட்டை காணலாம். இப்படியாக பிடிப்பட்ட இருதயம், தன்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு தாலந்துகளையும், தேவனுடைய மற்றும் கிறிஸ்துவுனுடைய சித்தத்திற்கு முழுமையாக கீழ்படுத்த முயலும், இப்படிப்பட்ட முழுமையான அர்ப்பணிப்பே தேவன் தேடும் தொழுகையாகும். மேலும், இப்படியாக தேவனால் ஆக்கிரமிக்கப்பட்ட இருதயங்களும். அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்கிறவர்களும் அவருடைய சித்தத்தை தங்களுடைய இருதயத்திலும், வார்த்தையிலும், கிரியைகளிலும் நிறைவேற்ற பெறும் முயற்சி எடுப்போர். நிச்சயமாக தேவனால் தேடப்படும், மெய்யான தொழுகையை ஏறெடுக்கும் “சிறு மந்தையாகவும்”. “விசுவாசமுள்ள இராஜரீக ஆசாரியர்களுமாக” இருக்கிறார்கள்.
E468 [top]: –
தன்னை தொழுதுகொள்ளுகிறவர்கள் வேறுவிதமாகவோ அல்லது கட்டாயமாகவோ அவரை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று அவர் விரும்பாமல், “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள” வேண்டும் என்று அவர் விரும்புகிறார் – இவைகளை அடையாளப்படுத்தும். அவரையும். அவருடைய நீதியின் கொள்கைகளையும் புரிந்துப் பாராட்டி, நேசித்து மனப் பூர்வமாக தொழுதுகொள்ள வேண்டும். யோவான் 4:23