CD-PRAYER-Q-30
R3128 [col. 2:3, 4]: –
தங்களையும், தங்கள் சொந்த ஞானத்தையும், சொந்த பலத்தையும், சொந்த திறமையையும் சார்ந்திருப்பவர்களுக்கு கவலைகளும், சுமைகளும் தவிர்க்க முடியாதவைகள். ஆனால் கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்கள், அன்பானவர்களாக, தெய்வீக குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக, தேவனுடைய பிள்ளைகள், அவரில் விசுவாசத்தோடு நிலைத்திருந்தால், சகலமும் உச்சிதமான நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்று மேலும் மேலும் தேவனுடைய வார்த்தையில் உறுதியளிக்கப்படுகிறது. அவர்கள் ஏன் சுமை சுமக்க வேண்டும்? அவர்களி ஏன் கவலைப்படவேண்டும்? அவர்களின் நலன்களைக் காத்துக் கொள்பவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை. கிறிஸ்தவர்கள் தங்களை கவலையுடனும், பயத்துடனும், சுமைகளுடனும் காணும் போது, அவர்கள் விசுவாசத்தில் குறைவுள்ளவர்கள் என்பதற்கான ஆதாரமாக உள்ளது. நிகழ்தகவு என்னவென்றால் ஒருவேளை அவர்கள் தேவன் மீது சரியான விசுவாசம் கொண்டிருக்கும் அளவுக்கு வளரவில்லை, அல்லது அவர்களது “புமிக்குரிய காரியங்கள்” மற்றும் ஜீவனத்திற்குரிய பராமரிப்புகள், அவர்களுக்கும் கர்த்தருக்கும் இடையில் வருவதற்கு அவர்கள் அனுமதித்திருக்கவேண்டும். இதனால் அவருடைய அன்பிலும், பராமரிப்பிலும் நிலைத்திருப்பதற்கான நம்பிக்கையை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். அத்தகைய நிலையில் உள்ள அனைவருமே உடனடியாக பரலோக கிருபாசனத்தண்டைக்குச் சென்று இரக்கத்தைப் பெற்று, தெய்வீக வாக்குத்தத்தங்களினால் போஷிக்கப்படவேண்டும். இவ்வாறாக, அவர்கள் கர்த்தருக்குள் உறுதியாக வளர்ச்சி அடைந்து, அவருக்குள் நம்பிக்கை கொண்டால், வெளிப்புற நிலைமைகள் எப்படியாக இருந்தாலும், அவர்கள் விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் இருதயத்தில் சமாதானத்தோடும் இருப்பார்கள்.
இதுவே அப்போஸ்தலரின் அறிவுரையாகவும் இருக்கிறது — பதட்டமான நிலையில் தெடர்வதற்குப் பதிலாக, நம்முடைய குறைவான ஞானத்தை ஒப்புக்கொண்டவர்களாக, அவருடைய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட எல்லா முன்னேற்பாடுகளையும் கோரி, நம்முடைய எல்லா விவகாரங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் வைக்கவேண்டும். அதற்குபின் அவருடைய ஞானத்தையும், அன்பின் ஏற்பாடுகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு. ஒவ்வொரு வேண்டுகோளையும் நன்றி செலுத்தும் ஆவியோடு ஏறெடுக்கவேண்டும். நன்றி செலுத்தும் இந்த ஆவி, நாம் இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும் எதிர்காலத்திற்காக அவருடைய பராமரிப்பை நாம் நம்பி பாராட்டுவதன் அங்கீகரிப்பை குறிக்கிறது. நாம் பெற்றிருப்பதற்காக நன்றி செலுத்துவது மற்றும் இதுவரை தேவனுடைய வழிநடத்துதல்களை முழுமையாகப் புரிந்துகொள்வது. எதிர்காலத்திற்கான எந்தவொரு கவலையையும் தடுக்கும். ஏனென்றால், நாம் பாவிகளாக இருந்தபோதே, அவர் நம்மை ஆதரித்து மீட்டுக்கொண்டவர். கிறிஸ்து இயேசுவின் மூலமாக நாம் அவருடையவர்களாக இருக்கும் இந்நாட்களில் நமக்கு எவ்வளவு கிருபை அளித்து உதவுவார்.
R3306 [col. 1:7]: –
அப்போஸ்தலரால் குறிப்பிடப்பட்ட ஜெபம், வேண்டுதல் ஆகியவற்றின் அவசியத்தை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். தேவனோடு நெருங்கிய ஐக்கியத்தில் வாசம் செய்பவர்கள் ஏற்கனவே அனுபவித்த அருட்கொடைகளையம் ஆசீர்வாதங்களையும் நன்கு உணர்ந்திருப்பதால், அவர்கள் இன்னும் அதிகமான ஆசீர்வதங்களை கேட்பதற்கான உணர்வைப் பெறுவதில்லை என்பதை நாம் கவனிக்கிறோம். மாறாக முன்னதாகவே பெற்ற நன்மைகளுக்கு உணர்வோடு நன்றி செலுத்துபவர்கள், அவர்கள் இனி கேட்பதற்கும் அல்லது அவர்கள் நினைத்ததை விட அதிகமாகவும் தேவனிடம் இருந்து பெறுவதற்கு அதிக பாத்திரவான்களாக இருக்கிறார்கள். மேலும் நாம் முன்னதாகப் பெற்ற நன்மைகள், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட வரக்கூடிய ஆசிர்வாதங்களுக்கு, ஒரு முன்னோடியாக fore taste உள்ளது.
R2866 [col. 1:3]: –
தெய்வீக முன்னேற்பாட்டின் சிறப்பு, வெளிப்பாடுகளை குறிக்கும் ஒரு முறையை யாக்கோபு பெற்றிருந்தார். அதாவது அடையாளமாக அவர் தேவனுடைய முகத்தை பார்த்து. அவருடைய வெளிச்சத்தை கண்டு, அவருடைய ஆசீர்வாதங்களை பெற்றுகொண்ட பாக்கியத்தை நினைவுக்கூரும்படியாக, தேவதூதரோடு போராடின அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயரிட்டார். இதேபோல், தேவனுடைய சகல விதமான இரக்கங்களையும், முன்னேற்பாடுகளையம் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நாம் பெற்றுகொள்வதற்கு சில விசேஷித்த முறைகளை குறிப்பாக கையாளவேண்டும். பலர் தேவனுடைய தயவையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுகொண்டபோது, அவைகளை தங்களுடைய இருதயங்களில் சரியான பதிவுகளாக முத்திரிக்க தவறியதால், அவைகளை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் எளியவர்களாக உணர்கிறார்கள். தெய்வீக இரக்கங்களை பெறும் நேரம், சிறப்பான குறிப்புகளாக அவைகளை நினைவில் கொள்வதற்கு, ஞாபகத்தில் பதிவுச் செய்தல் அல்லது ஏதேனும் விதத்தில் அந்த ஞாபகங்களை புதுப்பித்து கொள்ளாவிட்டால், நாம் பெற்ற தெய்விக இரக்கங்கள் மண்பாண்டங்களாகிய நம்மிடமிருந்து கசிந்து, விரைவாக தொலைந்துவிடும். நாம் அனைவரும் அதிகமான பெத்தேல்களையும், அதிகமான பெனியேல்களையும் கொண்டிருப்போம் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் சில வகையான நினைவுச்சின்னங்களை அமைப்பதற்கான வேலைகளை செய்து, மேலும் ஆண்டவரிடம் நாம் பெற்ற கிருபைகளுக்கு ஈடாக சில சிறப்பான உடன்படிக்கை அல்லது பொருத்தனைகளை செய்திருக்கிறோமா? இந்த சிந்தனைக்கு ஏற்ப பொதுவாக கிறிஸ்தவர்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் பல ஆசீர்வாதங்களையும் இரக்கங்களையும் பெற்றுள்ளார்கள். சில ஆண்டுகளாக அலெஹேனி சபையில் ஒவ்வொரு புதன்கிழமை மாலை, விடுகளில் ஜெபக்கூட்டங்களை நடத்தியது இதில் ஜெபங்கள் துதிகள் மற்றும் சாட்சிகள் கொடுக்கப்பட்டது. மேலும் கொடுக்கப்பட்ட சாட்சிகள் “ஆண்டுகளுக்கு முன்பு” நடந்தவைகளாக இராமல், அந்த வாரத்தின் புதிய அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஒவ்வொருவரும் அனுதினமும் தெய்வீக அன்பு மற்றும் கண்காணிப்புக்கான புத்தம் புதிய ஆதாரங்களை நாடுகையில், ஒவ்வொருவராலும் அத்தகைய கவனம் மற்றும் குறியீடு இல்லாமலேயே தாங்கள் அறிந்திருந்ததைக்காட்டிலும் மனமகிழ்ச்சியடைவும் நன்றி செலுத்தவும் உக்கங்கிடைக்கவும் அதிக காரணம் இருப்பதைக் காணமுடியும், நம்முடைய விசுவாசத்தையும் மனமகிழ்ச்சியையும் அன்பையும் நாம் அதிகரிக்கும்பட்சத்தில் அனுதினமும் வாராவாரமும் ஆண்டு தோறும் நம்முடைய எபினேசரான தேவனானவரிடம் வளருவோமாக.