விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-30

விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

What will be the relation between faith and knowledge in the Millennial Age?

R2677[col.1 P5,6]
இந்த சுவிசேஷ யுகத்தில் “விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்” என்று சபை பெற்றுள்ள தகுதியைப்போல் (பழைய ஏற்பாட்டின் நீதிமான்களும் இப்படியாக நீதிமானாக்கப்பட்டிருந்தார்கள்.) ஆயிரவருட ஆட்சியில் காணப்படுவதில்லை, அது அக்காலத்தில் தேவைப்படுகிறதுமில்லை. ஏனெனில் நாம் வாழக்கூடிய இக்காலத்தைக் காட்டிலும், அக்காலத்தின் சூழ்நிலைகள் முற்றிலுமாக வேறுப்பட்டிருக்கும். நாம் இப்பொழுது “தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”, – இப்பொழுதும் விசுவாசத்தினால் மட்டுமே தேவனுடைய திட்டங்களையும், அவர் தரும் வெகுமதிகளையும் அறிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் ஆயிர வருட ஆட்சியில், விசுவாசத்தின் யுகம் முடிந்தவுடன், அனைவருக்கும் இந்த அறிவை மிகத் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய காலம் துவங்கும். தவறுகள் இன்றி சகலவிதமான ஆதாரங்களோடு சத்தியம் வெளிப்படுத்தப்படும். “அங்கு பேதையராயிருந்தாலும் திசைக்கெட்டுப் போவதில்லை, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” இத்தகைய அறிவை இந்த உலகம் பெற்றபின் ஒருவரும் தன் அயலானுக்குத் தேவனைப்பற்றி அறிவிக்கவேண்டிய அவசியமில்லை.
நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை செயல்முறைப்படுத்துவதில் வித்தியாசங்கள் உண்டு. இன்று நாம் அநேககாரியங்களை வேத வசனங்களின் மூலம் விசுவாசிக்கிறோம். அதே காரியங்களை ஆயிர வருட ஆட்சியில் முழு மனுக்குலமும் நம்பும். ஆனால் நாம் இன்று விசுவாசிப்பதுப்போல் அல்ல, அவர்கள் அதற்கான ஆதாரங்களைக் காண்பார்கள். அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லாமல், காணக்கூடிய காரியங்களை நம்பவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். எடுத்துகாட்டாக –“நம்முடைய கடந்த காலப்பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, இன்று நாம் தேவனுடையப் பார்வையில் நீதிமான்களாகப் பாவிக்கப்படுகிறோம்.” ஆகவே நம்முடைய சரீரங்களிலும், சிந்தையிலும் இருக்கக்கூடிய பெலவீனங்களை நாம் தொடர்ந்து பரிசோதித்தால் நமக்குள் பாவங்கள் இருப்பதை நாம் அறிந்துகொள்ளுகிறோம். நம்முடைய பாவங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. சபை ஜனங்களின் இந்த மாம்ச சரீரம் முழுமையாக அழிவைக் காணும் வரை இந்தத் தற்காலிகமான மூடல் தேவைப்படுகிறது. கிறிஸ்துவுக்குள் இவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்து, பூரணமான சரீரங்களைப் பெற்று மகிமையடையும்பொழுது, முற்றிலுமாக பாவத்திலிருந்து விடுதலைப் பெறுவார்கள். ஆனால் இன்று நம் அனைவரின் பாவங்களும் மூடப்பட்டிருக்கிறது என்று விசுவாசிக்கவேண்டும். இதை நாம் விசுவாசிக்கும் பட்சத்தில், தேவன் நமக்களித்திருக்கும், உன்னதமான அழைப்பை ஏற்றுக்கொண்டவர்களாக, மகிமையையும், அழியாமையையும் பெற்றுக்கொள்ள நம்முடைய உலகப் பிரகாரமான ஆசைகளையும், இச்சைகளையும் வெறுக்கிறோம். இவ்வனைத்துக் காரியங்களையும் நாம் விசுவாசக் கண்களினால் மட்டுமே காண முடியும். இந்த ஓட்டத்தை ஓடும் அனைவரும் விசுவாசத்தைத் துவக்கினவரும், முடித்தவருமாகிய இயேசுவை மட்டும் கவனித்தால் போதாது, அந்த நீதியுள்ள நியாயதிபதி விசுவாசமுள்ளவர்களுக்கு வைத்திருக்கும் நீதியின் கீரிடத்தையும் கவனிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இப்படியாக, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமே, விசுவாசத்தின் மிகச் சிறந்த காலமாக இருக்கிறது. அவருடைய வாக்குத்தங்களின் மேல் உள்ள விசுவாசத்திற்கு நாம் நிச்சயமாகப் பலன் பெறுவோம்.
F106 [ P3 – F107]
உண்மையில், நாம் பெற்றிருக்கும் தற்காலிகமான நீதிமானாக்கப்படுதலை, நிரந்தரமாக மாற்றுவதற்கு விசுவாசம் மிக அவசியமாக இருக்கிறது. ஏனெனில், விசுவாசிக்காமல் தேவனைத் தரிசிப்பது கூடாதக் காரியம் என்று வாசிக்கிறோம். மேலும், திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களும், கொடைகளும் விசுவாசத்தின் அடிப்படையில்தான் கொடுக்கப்படும். புது சிருஷ்டிகளாக, இயேசு கிறிஸ்துவின் உடன் பங்காளிகளாக அழைக்கப்படுபவர்களிடம் எதிர்பார்க்கப்படும் விசுவாசம் வேறு, இனி வரவிருக்கும் ஆயிர வருட ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் விசுவாசம் வேறு. தேவனுடைய இராஜ்யத்தில் சாத்தான் முற்றிலுமாகக் கட்டப்படும், கர்த்தரை அறிகிற அறிவு பூமியெங்கும் நிரம்பியிருக்கும். அப்பொழுது, தெய்வீக வாக்குறுதிகளின் நிறைவேற்றம் அனைவராலும் நேரில் காணப்படும். அவைகளைக் காணக்கூடிய அனைவரும் விசுவாசிப்பார்கள். இதே காரியங்களை நாம் காணாமல் விசுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த யுகம் முடிவிற்குள் நாம் அனைவரும் இந்த விசுவாசத்தில் பூரணப்பட அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் விசுவாசத்தோடு, நடப்பிக்கும் விடாமுயற்சியோடு கிரியைகளின் அடிப்படையில் நாம் பூரணராக்கப்படுவோம். இப்படியாக, நாம் உண்மையான நீதிமானின் நிலையை அடையலாம். “அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” என்று எழுதியிருக்கிறபடி ஆயிர வருட ஆட்சியில் அவரவர் கிரியைகளின் படி நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள். நாமோ, விசுவாசத்தின் அடிப்படையில் இன்று நியாயத்தீர்க்கப்படுகிறோம். அவர்கள் கிரியை செய்தால் மட்டும் போதும், நாமோ நம்மால் முடிந்த வரைக்கும் விசுவாசத்தைக் கிரியைகளினால் பூரணப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
R2220- “கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?” (கேள்வி எண் 7 காண்க)
மதங்களின் உலகப் பாராளுமன்றத்தின் தலைவராகிய ஜான் 11 பாரோவுஸ், சிக்காகோவில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சென்றார். அவருடைய அனுபவங்களைப் பற்றி அவர் எழுதுகையில், “இறுதியாக, அனைவரும் மீட்பு பெறுவார்களா?” என்று இந்துக்கள் அவரிடம் கேட்ட ஒரு கேள்வியை குறிப்பிடுகிறார். “இப்படிப்பட்ட ஒரு கருத்தை ஊக்குவிக்க என் எஜமானன் என்னை அனுமதிப்பதில்லை. ஆனாலும், இது வரைக்கும் கிறிஸ்துவைப் பற்றி அறியாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன் என்றும் சாக்ரெட்டீஸை போல சிலருடைய சிந்தை இயற்கையாகவே கிறிஸ்தவர்களைப் போலிருக்கும். ஒருவேளை நாம் பரலோகத்தில் சாக்ரெட்டீஸை சந்திக்கவில்லை என்றால், நான் ஒருவேளை தவறானப் பாதையில் சென்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவேன் என்று பதில் அளித்தார். 
இன்றைய தினங்களில் மிக வேகமாக வளர்ச்சியடையக்கூடிய கிறிஸ்துவர்களின் கண்ணோட்டத்தை ஓர் எடுத்துக்காட்டாக டாக்டர் பாரோவ் காண்கிறார். இந்த ஜனங்கள் அனைவருமே நம்முடைய ஆண்டவரால் போதிக்கப்பட்ட சுவிசேஷத்தையும், அவருடைய தூண்டுதலைப் பெற்ற அப்போஸ்தலர்களையும், நிராகரித்ததினால், புதிய ஏற்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சுவிசேஷத்தின் நன்மைகளைப் புறக்கணிக்கிறார்கள்.
1. ஆதாம் பாவம் செய்து தேவ சாயலை இழந்தார். ஆனால் கிறிஸ்து இயேசு மனிதனின் பாவத்திற்காக மரித்து, தன்னுடைய ஜீவனை ஈடுபலியாகக் கொடுத்து ஆதாமையும், அவர் இழந்த அனைத்தையும் மீட்டார் என்பதே புதிய ஏற்பாட்டின் சுவிசேஷத்தின் மையக்கருத்தாகும். ஆனால் இப்பொழுது போதித்து வரப்படும் புதிய தவறான சுவிசேஷம் இந்தக் கருத்தை மறுக்கிறது. ஆதாம் குரங்கின் சாயலாக இருந்தான் என்றும் கடந்த ஆறாயிர வருடங்களாக அவன் வீழ்ச்சி அடையவில்லை மாறாக அவன் மனிதனாக வளர்ச்சி அடைகிறான் என்று கூறுகிறது. இந்த அடிப்படைக் கருத்திலிருந்து பார்க்கும்பொழுது, இயேசுவின் ஈடுபலிக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் நாம் பார்க்கையில், கடந்த ஆறாயிர வருடங்களாக மனிதன் பாவத்தில் வளருவதற்குப் பதிலாக, முன்னேற்றமான பாதையில் செல்லுவதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே பாவத்தைக் கருத்தில் கொள்ளாவிட்டால், பாவத்திற்கான பலியும், மறுக்கப்பட வேண்டும். இவ்வாறாக பரிணாமக் கொள்கையை நம்பும் அனைவரும் இயேசுவின் ஈடுபலியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.
     
2. ஈடுபலியை விசுவாசித்து, முழு மனதோடு ஏற்றுக்கொள்பவர்களுக்கு, தேவன் மன்னிப்பளித்து, தன்னோடு ஒப்புரவாக்கிக்கொண்டு, அதற்கான சகல ஆசீர்வாதங்களையும் தருவார் என்பதே புதிய ஏற்பாட்டின் சாராம்சம். ஆனால் புதிய தவறான சுவிசேஷம் இந்த ஈடுபலியை மறுத்து, தேவன் கொடுக்கும் மன்னிப்பையும், உறவையும் நிராகரித்து, தேவனுடைய உறவு இன்னும் துண்டிக்கப்படவில்லை என்றும், பாவத்திலே நாம் பிறந்ததையும் மறுதலிக்கிறார்கள். ஆதாம் திராட்சைக் காய்களைப் புசித்தார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று – எசே 18:2 என்பதை மறுக்கிறார்கள்.
     
3. புதிய ஏற்பாட்டின் முழுமையான ஆசீர்வாதங்களைப் பகிர்ந்துக் கொள்வதற்குத் தேவை – விசுவாசமே. கிறிஸ்துவின் மரணத்தின் வழியாக தேவனோடு ஒப்புரவாகும் சிலாக்கியத்தை அவருடைய கிருபையினால் நமக்கு அளித்தார். பாவிகளாக இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த நாம் பெற்ற விசுவாசத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் அப்போஸ்தலர் கூறுவது போல – “நாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறோம்”. மேலும் இதன் வழியாக தான் நாம் அனைத்துத் தெய்வீக நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். (ரோமர் 5:1,2) இது பொதுவான விசுவாசம் அல்ல, அல்லது நாம் மகிழ்ச்சியாக இருப்பதின் மேல் வைக்கும் விசுவாசம் அல்ல, மாறாக இது தேவன் பேரிலும், இயேசுவின் பேரிலும், நாம் வைக்க வேண்டிய விசுவாசமாக இருக்கிறது. மேலும், இது ஊடுருவி இயேசுவின் மரணத்தின் மேலும், நம்முடைய பாவங்களுக்காக இரட்சகரானார் என்பதையும், பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை ஜெயித்து, அவருடைய இரண்டாம் வருகையில் தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகிறார் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
புதிய தவறான சுவிசேஷம் கிறிஸ்துவோடு ஐக்கியத்தில் விசுவாசத்தோடு வாழ வேண்டும் என்பதைக் கூறுகிறார்கள். வேறு எதுவும் தேவை இல்லை என்பதே அவர்களுடைய கருத்து. நிச்சயமாக இவர்கள் “மெய்யான வழியையும், சத்தியத்தையும், ஜீவனையும் தொலைத்து விட்ட அபாயத்திலிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இவர்கள் வசனங்களில் குறிப்பிடுவதுப்போல் சரியான பாதையில் இவர்கள் நடக்கவில்லை.” என்பது தெளிவாகிறது.
ஆனாலும், இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டப்பின் நேர்மையான சிந்தையுடையவர்கள் மற்றும் உண்மையுள்ளவர்கள் அனைவரின் புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டு, உண்மையான விசுவாசத்தை அறிந்தவர்களாக ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதில் நாம் மகிழ்ச்சியடையலாம். பிரேதக் குழியில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும் என்று சொன்னது போல, நிச்சயமாக அவர்கள் பிரேதக் குழியிலிருந்து வெளிவரும் சாக்ரேட்டீஸை காண்பார்கள். (2கொரி 4:4, வெளி 20:2,3) அப்பொழுது காட்டப்படும் இரக்கம், பூமிக்குரிய பரதீஸ் திரும்பக் கொடுக்கப்படக்கூடிய காலமாக இருக்கும். அது பரலோக அழைப்பு அல்ல. இது சுவிசேஷ யுகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் இருந்தால் பந்தயப் பொருளைப் பெறலாம். (2பேதுரு 1:10) ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்போம் – (கலா 3:22,23, 1கொரி 1:21,23,24, 1தெச 4:14, யோவ 20:31, யோவ 17:20, அப்போஸ்தலர் 13:37-39, அப் 8:12, 1பேது 1:18-23, அப் 20:27, 1கொரி 15:11, வெளி 10:8-14)
F688 – F692 – “ஆவிக்குரிய கனியாகிய விசுவாசம், புது சிருஷ்டியின் நிகழ்கால சொத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.” (கேள்வி எண் 12 காண்க)
நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறுவதற்கு முன் விசுவாசம் நம்முடையதாக இருக்க வேண்டும். விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவதற்கு முன்னதாகவே நாம் பாவமன்னிப்பைப் பெற்று தேவனோடு சமாதானமாகிவிட்டோம். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன் நாம் பெற்ற விசுவாசம் இதை செயல்படுத்த முடியாது. ஆகவே, ஆவியின் வரத்தின் – ஆவியின் கனியாகிய – விசுவாசத்தைப் பெற வேண்டும். தேவன் பேரிலும், அவருடைய வாக்குறுதிகளின் மேலும் நம்முடைய சிந்தையைச் செலுத்துவதே விசுவாசமாகும். தேவன் மேல் உள்ள நம்பிக்கையை அறியாமையினாலோ, அல்லது விழுந்துபோன நிலையினாலோ நடைமுறைப்படுத்தாதவர்கள், சுவிசேஷ யுகத்தின் விசேஷித்த ஆசீர்வாதங்களைப்பெற முடியாது. வருங்கால ஆட்சியில் பொதுவாக அனைவரும் ஆசீர்வதிக்கப்படும்பொழுது இவர்களும் அதில் பங்குபெறுவார்கள். இந்த சுவிசேஷ யுகத்தின் அழைப்பை தரிசித்து நடப்பவர்களுக்கு அல்ல, விசுவாசித்து நடப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியாக விசுவாசத்தினால் நடக்க முடியாதவர்கள், தேவனோடும் நடக்க முடியாது. ஏனெனில், “விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாதக் காரியம். இப்படியாக விசுவாசியாதவர்கள், விசுவாசத்தில் துவங்கினாலும், இவர்கள் அதில் முழுமையாக வளர வேண்டும். வளர்ந்தால் மட்டுமே எதிர்த்து நின்று ஜெயிக்க முடியும் – “இந்த உலகத்தை ஜெயிக்கும் ஜெயம் – நம்முடைய விசுவாசமே.”( 1யோவான் 5:4)
     
எதையும் எளிதில் நம்பக்கூடிய மனப்பக்குவத்திற்கும், விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மில்லியன் கணக்கான ஜனங்கள் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கிறார்கள். மேலும் ஆதாரம் இல்லாத ஆயிரக்கணக்கானக் காரியங்களை எளிதில் நம்புகிறார்கள். நம்பக்கூடாதக் காரியங்களை நம்பி, நம்ப வேண்டியக் காரியங்களை நம்பாதிருக்கிறார்கள். இதில் பில்லியன் கணக்கான ஜனங்கள் கிறிஸ்தவர்கள். இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும், தவிர்க்கப்பட்டு, சீர்த்திருத்தி கண்டிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையான விசுவாசம் ஊக்குவிக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து, பலப்படவேண்டும். இது பாரம்பரியக் கொள்கைகள், மற்றும் தத்துவங்கள் அல்லது கற்பனைகளின் அடிப்படையில் அல்ல தேவனுடைய தெய்வீக வாக்குறுதிகளின் அடிப்படையில் தேவன் பேரில் உள்ள விசுவாசமே உண்மையான விசுவாசம்.
     
தேவனுடைய பெயரின் அர்த்தத்திற்கு ஏற்றவாறு அவர் தம்மில் தாம் ஜீவனுடையவரும், சர்வவல்லமையுள்ளவரும், சர்வஞானம் படைத்தவரும், மிகுந்த அன்புள்ளவருமாக இருக்கிறார் என்று நாம் விசுவாசித்து, அவரை உண்மையாகத் தேடுபவர்களுக்கு அவர் பலனளிப்பார் என்பதை நாம் விசுவாசிக்கும் பட்சத்தில், அவரை உண்மையாகத் தேடி, அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வதைப்பற்றி நாம் தெரிந்துக் கொண்டால், அவர் பேரில் நாம் முழு நம்பிக்கைக் கொள்ளலாம். மேலும், அதற்கேற்றவாறு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். தெய்வீக இரக்கங்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட, விசுவாசத்தின் துவக்கம் நம்மை கிறிஸ்துவைப் போல புதிதும், ஜீவனுள்ள நிலையில் தேவனோடு ஒப்புரவான ஒரு வாழ்க்கையில் வளரச் செய்கிறது. இப்படிப்பட்ட விசுவாசம் நம்மில் வளரும்பொழுது, கீழ்படிதலும், அதிகரித்து, புது சிருஷ்டிகளின் உறுப்பினர்களாக வேண்டிய ஆசீர்வாதங்கள் நம்மை வந்துசேரும். விசுவாசத்தின் வளர்ச்சி, தேவனுடைய புத்திரர்களாகவும், இயேசுவின் உடன் சுதந்திரர்களாகவும் தேவன் நமக்களித்த வாக்குறுதிகளை அதிகமதிகமாகப் பற்றிக்கொள்ளச் செய்கிறது. இதன் விளைவாக நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்று ஜெநிப்பிக்கப்பட்டவர்களாக, அபிஷேகிக்கப்பட்டு, தேவப் புத்திரர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவோம்.
மேலும், பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள குத்துவிளக்கின் வெளிச்சம், விசுவாசத்தினால் மட்டுமே காணக்கூடிய காரியங்களைக் காணச்செய்து, குத்துவிளக்கு, சமூகத்து அப்பங்கள், தூபப்பீடம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருக்கும் ஆசரிப்புப் பெட்டியை பொறுத்த வரையில் மகா பிரதான ஆசாரியரின் விசேஷித்த ஊழியங்களைப் பற்றிய தெளிவானக் காரியங்களையும், அதிகமான பலனை அடைய நம்மை ஊக்குவிக்கும். தெய்வீக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பதுப் போல, இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில், கீழ்ப்படிதலான விசுவாசம், தெய்வீகக் கிருபைகளின் வெவ்வேறு வழிகளிலும், உறுதியாக வளர்ச்சியடைந்து, தெளிந்த புத்தியைக் கொடுத்து, புதிய சிந்தையின் துவக்க நிலையை அடைகிறது. இந்நிலையை நாம் அடையும் வரைக்கும், அந்நிலையில் நாம் பெறக்கூடிய நன்மைகளைப் பற்றி அறிவதில்லை. (1கொரி 2:9)
பரிசுத்த ஆவியின் எடுத்துக்காட்டுகளில், வாக்குத்தத்தங்களின் வார்த்தையின் மூலம் நாம் பார்க்கும்போது, மிகுதியான விலையேறப்பெற்ற பரலோகக் காரியங்கள், முதலாம் உயிர்த்தெழுதலின் மகிமையோடு பெறுவதை நாம் காணலாம். தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது, நீதி வாசம் செய்யும், அப்பொழுது, பூமியில் உள்ள முழு குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவனுடைய மகிமையோடும், அவருடைய தெய்வீக அன்பின் பிரமாணத்தோடும் இசைந்து வாழ மனதில்லாத அனைத்து தனிநபர்களும் அழிக்கப்படுவார்கள். புது சிருஷ்டிகள் தங்களுடைய விசுவாசக்கண்களின் மூலம் அனைத்தையும் காண்பார்கள். இயற்கையான மனிதனுக்குத் தெளிவாகவும், உறுதியாகவும் தெரியாதக் காரியங்கள் அனைத்தையும், இந்த விசுவாசக்கண்களின் மூலமாகக் காணலாம் என்று அப்போஸ்தலர் உறுதியளிக்கிறார். (1கொரி 2:9,10)
     
ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசத்தின் கிரியைகள் முழுமையாகக் காணப்படாமல் இருந்தாலும், புது சிருஷ்டியின் இன்றைய நிலைக்கான பொக்கிஷத்தின் ஒரு பங்காகும். மேலும் ஒவ்வொரு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அதனோடு இணைந்திருப்பதினால் “வரவிருக்கும் மகிமையின்” முன்னறிவிப்பை இது மட்டுமே தரக்கூடியதாக இருக்கிறது. “உண்மையில், இந்த விசுவாசத்தின் அடிப்படையில்தான் நம்முடைய நம்பிக்கையும், சந்தோஷங்களும் கட்டப்பட்டிருக்கிறது” என்று அப்போஸ்தலர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். (எபிரெயர் 11:1) இதனால், இதுவரைக்கும் காண முடியாதக் காரியங்களை நம்முடைய மனது காண்கிறது. – “காணக்கூடியவைகள் அநித்தியமானவைகள், காணக்கூடாதது நித்தியமானவைகள்” என்று இதை குறித்து அப்போஸ்தலர் தெளிவாகக் கூறுகிறார்.
     
இன்று நாம் பெற்றிருக்கும் சொத்துக்களைத் தக்கவைத்துக் கொள்ள விசுவாசம் எவ்வளவு அவசியமாக இருக்கிறது. மேலும் இனி வரும் ஆசீர்வாதங்களையும் இது தெளிவாகக் காட்டுகிறது என்று யாக்கோபும் கூறுகிறார் – “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது, அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன், சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பனாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” (யாக் 1:5-8)
     
உறுதியான விசுவாசமில்லாமல், எதையும் மேற்கொள்வது கூடாதக் காரியம் என்று அவர் தெளிவாகக் காட்டுகிறார். ஆகவே வேதத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் விசுவாசத்தில் நாம் வளர்ச்சியடைய நம்மைத் தூண்டுகிறது. இந்த விசுவாசம் வளர நாம் “ஆண்டவரே எங்கள் விசுவாசம் விருத்தியடைய கிருபை செய்தருளும்” என்று அப்போஸ்தலர்களைப் போல ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும். மேலும் நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படுவதற்காக தேவன் வைத்திருக்கும் விதிமுறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய ஜெபங்கள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில், நேர்மையான உள்ளத்தோடு தேவனைத் தேடி, அவருடைய வார்த்தைகளை அறிந்துகொண்டு, அவைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய ஊழியத்தில் மகிழ்ந்து, ஆவியின் கிருபைகளைப் பெற்று விசுவாசத்தில் பூரண வளர்ச்சி அடையலாம். “ஆகையால் சகோதரரே, உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள், இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
R1859 [col.1] :- (கேள்வி எண் 14 காண்க)
கிறிஸ்துவ வாழ்க்கையைக் குறித்து இதே காரியத்தை அப்போஸ்தலனாகிய பவுலும் வலியுறுத்துகிறார். மிகவும் அபாயமான ஒரு யுத்தமாக அவர் இதை அடையாளப்படுத்தி, கிறிஸ்துவின் உண்மையான படைவீரர்கள் அனைவரையும் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்ள துரிதப்படுத்துகிறார். ஏனெனில், சாத்தானின் பலவிதமான தந்திரமான எதிர்ப்புகளைக் குறித்து அவர் பேசும்போது – “மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, துரைதனங்களோடும், அதிகாரங்களோடும், அந்தகார லோகாதிபதிகளோடும்…. எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாக இருக்கும்படிக்கு…. சத்தியம் என்னும் கச்சையையும், விசுவாசம் என்னும் கேடகத்தையும் நீதி என்னும் மார்க்கவசத்தையும் அணிந்திருங்கள்” (எபே 6:10-18) என்று அறிவுரைக்கூறுகிறார்.
நம்முடைய எதிராளியாகிய சாத்தான் இவ்வுலகத்தின் கோட்பாடுகள், நம்பிக்கை, குறிக்கோள், ஆசை மற்றும் விருப்பங்களில் எவ்வளவு வல்லமையுள்ளவனாகச் செயல்படுகிறானோ, அதற்கு எதிரானப் பாதையில் கிறிஸ்துவ வாழ்க்கை பயணிக்கவேண்டும். இந்த உலகத்தின் காரியங்களில் நம்முடைய பலவீனங்களை அறிந்த சாத்தான் நம்மை எளிதாக ஏமாற்றி பாவ வழிகளுக்கு நம்மை நடத்திவிடுகிறான். இவைகளை நாம் பார்க்கும்பொழுது நிர்ப்பந்தமான சூழ்நிலையில் நாம் அகப்பட்டிருக்கிறோம் என்பதை உணரலாம்.
     
அப்போஸ்தலனாகிய யோவான் குறிப்பிடுவதுப்போல நம்முடைய எதிராளி – மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை – ஆகிய மூன்று காரியங்களில் நம்மை வீழ்த்த முயற்சிக்கிறான். (1யோவ 2:16)
முதலாவதாகச் சொல்லப்படும் காரியம், இந்த முழு உலகமும் தீவிரமானப் பசியோடு அல்லது அதிகமான உணர்ச்சிகளோடு செயல்படுகிறார்கள். இவர்கள் சட்டப்படி செய்வதாக நினைத்துக்கொண்டு, சட்ட விரோதமானக் காரியங்களைச் செய்து, மனித நிலையைத் தரம் குறைத்துக் கொள்கிறார்கள்.
இரண்டாவது – “கண்களின் இச்சை” – மனிதக்கண்கள் காணும் யாவையும் சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கும். இது நன்மையாகத் தோன்றும். அதாவது விழுந்துப்போன நிலையில் இது உகந்ததாகத் தோன்றும். தங்களுடைய கண்ணோட்டத்தில் மற்றவர்களின் உரிமைகளையும் அவர்கள் பொருள்படுத்துவதில்லை. ஒருவேளை சொத்துக்காக அல்லது புகழ்ச்சிக்காக அல்லது வல்லமைக்காக அல்லது சமுதாயத்தில் நல்ல பதவிக்காக மனிதன் போராடலாம். இதற்காக சரீரத்தின் முழு பெலமும், சிந்தையும் செலவழிக்கப்படுகிறது.
மூன்றாவதாக – “ஜீவனத்தின் பெருமை” – இது சுயநலத்தின் மலர்ச்சியாக இருக்கிறது. இது தேவனுக்கும், சகலவிதமான நல்ல ஜனங்களுக்கும் வெறுப்பூட்டும் காரியமாக இருக்கிறது. இது ஒரு மனிதனின் அவமானங்களைப் பிரகடனப்படுத்துவதாக இருக்கிறது. மாம்சத்தின் இச்சைகளும், கண்களின் இச்சைகளும் அவர்களுக்கு குறுகிய மனப்பான்மை, குருட்டுப் பிடிவாதம் போன்ற சாபங்களை வருவிக்கிறது. மேலும் இப்படிப்பட்ட குணங்களில் அவர்கள் வளர்ச்சியடையும்போது, மற்றவர்களுடைய சுதந்தரத்தையும், உரிமைகளையும் பற்றிக்கொண்டு, அர்த்தமில்லாத பெருமையிலும், வளர்ந்து, குறுகியக்காலத்தில் பாழாக்கப்படுகிற காரியங்களில் வல்லமையாகச் செயல்பட்டு, உயர்வாக வாழ்ந்து கொண்டிருப்பர்.
இந்த மூன்று காரியங்களையும் கொண்டு எதிராளி நம்மைத் தாக்காதப்படிக்கு நம்முடைய ஆண்டவர் அயராத கண்விழிப்போடு நம்மை காத்துக் கொண்டிருக்கிறார். தன்னடக்கத்தோடு, விழித்திருந்து, நம்முடைய எதிராளியானவன் எந்த வகையிலும் நம்மை மேற்கொள்ளாதப்படிக்கு நாம் மிகவும் எச்சரிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும்.
அவன் தொடர்ந்து நம்மை தாக்கிக்கொண்டிருக்கிறான் என்பது நிச்சயம், மேலும் இந்தத் தாக்குதல்கள் எந்த எச்சரிப்புமில்லாமல், திடீர் என்று பலத்த வேகத்தோடு வருகிறது. இதை அனைவரும் நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கிறோம். நாம் அசதியாக இருக்கும் நேரத்திலும், கவனியாத நேரங்களிலும், நம்முடைய எதிராளி நம்மை மேற்கொள்ள குறிவைப்பான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நம்மால் முடிந்தவரைக்கும் சர்வஜாக்கிரதையாக இருந்தாலும், எதிராளியை நாம் மேற்கொள்ளும்பொழுது, நாம் வேதனை அடைகிறோம். ஏனெனில், நாம் பெற்ற வல்லமை அனைத்தையும் செலவழிக்க வேண்டியதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் நாம் நம்முடைய பெலத்தை நம்பினால் சகலமும் தகர்த்துப் போடப்படும். ஆகவே நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும், கிறிஸ்துவுக்கேற்ற போர் வீரனாகவும் இருக்கும்பட்சத்தில் இவ்விதமான பொறி பறக்கும் சோதனைகளை ஏதோ புதுமையாக எண்ணவேண்டாம் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு நம்மை எச்சரிக்கிறார். (1பேதுரு 4:12-16) ஒரு கிறிஸ்துவ போர்வீரன் இவைகளுக்கு மிக எச்சரிப்போடு ஆயத்தமாக இருக்கவேண்டும்.
“விசுவாசத்தில் உறுதியாக நின்று பிசாசை ஜெயிக்கவேண்டும்” என்று பேதுரு இங்கு குறிப்பிடுகிறார். இதே கருத்தை யோவானும் வலியுறுத்துகிறார். (1யோவா 5:4) நாம் விசுவாசத்தில் உறுதியாக இருந்தால் அதில் நாம் நீடித்திருப்பது எப்படி? தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அதன் மகத்துவங்களையும் நாம் இறுகப்பற்றிக்கொண்டு, விசுவாசத்தோடு தேவனுடைய வல்லமையையும் பற்றிக்கொண்டு, தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் நாம் உதவிகளைப்பெற கிருபாசனத்தண்டையில் சேரவேண்டும். தேவனுடைய தனிப்பட்ட நீதியினால் நாம் விசுவாசிகளாகக் காணப்படுகிறோம். ஆகவே அவருடைய கண்கள் எப்பொழுதும் நம்மேல் நோக்கமாயிருக்கிறது. எனவே, நாம் அவருடைய பிரியமானக் குணங்களை நமக்குள் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய இறுதியான போராட்டத்திற்கு இவைகள் மிக அவசியமானது என்று பேதுருவும் கருதுகிறார் – 11பேதுரு 1:5-10
மிக சிறந்ததும், விலையேறப் பெற்றதுமான வாக்குத்தங்களின் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசம், நமக்கு புத்துணர்வோடு, புதுப்பிக்கப்பட்ட தைரியத்தையும், அந்தத் தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள் என்று அவர் நம்மை துரிதப்படுத்துகிறார். மேலும், இவைகளை செய்வீர்களானால், நிச்சயமாக நீங்கள் விழுந்துப்போக மாட்டீர்கள் என்கிறார்.
மேலே கூறப்பட்ட குணங்களில் நாம் வளர்ச்சியடைகையில், தேவனுடைய சத்தியங்களை முழுமையாக அறிந்துகொள்ள நம்முடைய ஆவிக்குரிய கண்களும் தெளிவாகக் காரியங்களைப் புரிந்துகொள்ளும். இப்படியாக, “நீதி என்னும் ஆயுதத்தை நம்முடைய வலது கரத்தில் ஏந்தி, எதிராளியின் பொறி பறக்கும் அம்புகளை நமது இடது கரத்தால் தகர்த்து எறிந்து, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை ஜெயித்து, நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 
     
கிறிஸ்துவ ஜீவியத்தில் இந்த மாபெரும் யுத்தத்தில் நமக்கு முன் எப்படிப்பட்ட வேலைகள் வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். இது நம்முடைய ஜீவியகாலம் முழுவதும் உள்ள போராட்டமாக இருக்கிறது. நம்முடைய மாம்சத்திற்குள் ஊடுருவியிருக்கும் வல்லமையுள்ள எதிராளியோடு நாம் யுத்தம் புரிய வேண்டும். இது மிகப் பயங்கரமானதும், ஆபத்தானதுமாக இருக்கிறது. இந்த உலகத்தின் ஆவியால் நாம் அதிகமதிகமாகப் பாதிக்கப்படும்போது, சுயநீதி, பொறாமை, பெருமை, வீணான மகிமை, தான் என்ற அகங்காரம் போன்ற குணங்கள் நம்மை ஆட்கொண்டு விடும்.
ஆகவே, நித்தமும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தேவனுடைய கிருபையைத்தேடி உலகம், மாம்சம் மற்றும் பிசாசை எதிர்த்து நல்ல போராட்டத்தைப் போராடுவோம். “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன், பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” (நீதி 16:32) ஆம், இந்தப் பொறுப்பு மிகப் பெரியது. ஆகவே இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் நல்ல போராட்டத்தைப் போராடுவோம். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்திலும், இந்தப் போராட்டத்தை வெற்றியுடன் நடத்தி, நம்மை நாம் பரிசுத்தப்படுத்தி, நம்முடைய குணலட்சணங்களை மெருகேற்றுவோம். முடிவு பரியந்தம் இவைகளைத் தொடர்ந்து நடப்பிப்போம்.
முழு அன்போடும், கனிவோடும், ஆண்டவரின் போர்ச்சேவகர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு – “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக” என்று ஊக்கமளிக்கிறார். இப்படிப்பட்ட பாடுகளின் மூலமே நாம் கிறிஸ்துவுக்கு ஏற்ற போர் வீரராக மாற முடியும். பூரணமான தன்னடக்கம், பொறுமை, ஞானம் மற்றும் அவருடைய வார்த்தைகளின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இயேசுவுக்குள் நாம் இளைப்பாறவேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி, தன்னுடைய அனுபவத்தையே அவர் நமக்கு எழுதியுள்ளார். ஆகவே நாம் ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், பூரணத்தை நோக்கி வளர்ச்சி அடைவோம்.
R2309 – “கிறிஸ்தவர்களின் போராட்டம்” (கேள்வி 13 மற்றும் 15 காண்க)
“…நல்ல போராட்டத்தைப் போராடினேன், நித்திய ஜீவனைப் பற்றிக்கொண்டேன்…” 1 தீமோ – 6:12
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை சமாதானம் செய்கிறவர்களாகவும், “கூடுமானவரைக்கும் அனைவரோடும் சமாதானமாக இருங்கள் என்று சொல்லியிருந்த போதிலும், தன் ஆவியை அடக்குவதினால், இந்த உலகத்தில் கேள்விப்படாத அளவிற்கு அவர்களே சிறந்த போர்வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதில் இரண்டு விதமான போராட்டங்கள் உண்டு. நன்மையானவைகளை அடைவதற்கும், உண்மையை நிலைநாட்டுவதற்கும், தூய்மையான தெய்வீகத்திற்காகப் போராடுவதும் நல்ல போராட்டம் – இதுவே நீதியின் போராட்டமாகும். மற்றொன்று தீமையானப் போராட்டங்கள், இது தேவையற்ற காரியங்களுக்கானப் போராட்டம்.
ஆனால் நம்முடைய பாடத்தில், விசேஷமாக நல்ல போராட்டத்தை நடத்துவதற்காக பவுலால் குறிப்பாகச் சொல்லப்படும் வீரர்கள் யார்? அவர் அனைவரையும் இந்தப் போராட்டதிற்கு அழைக்கிறாரா? அல்லது பாவிகளை அழைக்கிறாரா? அல்லது கிறிஸ்தவர்களை மட்டும் அழைக்கிறாரா? நிச்சயமாக இல்லை. அவர் கிறிஸ்துவின் சரீரமாக அழைக்கப்பட்டிருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட சபையை அழைக்கிறார். இதை இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசு கிறிஸ்துவின் வாய்மொழிகளாக அப்போஸ்தலர் இங்கு குறிப்பிடுகிறார். அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படையில் சேர்ந்து பணிபுரியும் அனுமதி பெறுவார்கள். இருப்பினும், இந்த அழைப்பு பொதுவாக இந்த உலக ஜனங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதாவது தேவனோடு உடன்படிக்கை செய்யாதவர்களிடம் இந்த அழைப்பு கொடுக்கப்படுவதில்லை. அவரோடுக்கூட உடன்படிக்கை செய்தவர்களை அவர் அறிவார். இந்நாள் வரைக்கும் நடக்கக்கூடிய போராட்டங்களுக்கு இவர்களுக்கு மட்டுமே சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய இரட்சிப்பின் அதிபதி தன்னுடைய போராட்டத்தைத் துவங்கியது முதல், கிட்டத்தட்ட பத்தொன்பது நூற்றாண்டுகளாக இது நடந்துவருகிறது.
நாம் யாருக்காகப் போராட வேண்டும்? தேவனுக்காகவா? – கிறிஸ்துவுக்காகவா? இல்லை. நாம் நமக்காகத்தான் போராட வேண்டும். சிலர் நல்ல போராட்டத்தைத் தேவனுக்காகப் போராடி, அவரிடத்தில் பரிசுகளையும், நன்றிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற தவறானக் கருத்தை கற்பனை செய்து கொள்கிறார்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுக்காக யாரும் போராட வேண்டிய அவசியம் இல்லை. எல்லையற்ற வல்லமை பெற்ற நம்முடைய சர்வ வல்லமையுள்ள தேவன், தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்வார். நம்முடைய விழுந்துப்போன முயற்சிகள் அவருக்கு அவசியமில்லை. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் வாழ்பவர்கள் நாங்கள் அமெரிக்காவுக்காகப் போராடுகிறோம் என்றால் பொருள் என்ன? அமெரிக்காவில் உள்ள தங்களுக்காக தான் போராடுகிறார்கள் என்று பொருளாகும். அதேபோல் நமக்காகப் போராடும் தேவன், நாம் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவதற்கு நம்மை ஊக்குவிக்கிறார். அதேபோல் இந்தப் போராட்டத்தின் அம்சங்கள் அனைத்தையும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
நாம் யாருக்கு எதிராகப் போராட வேண்டும்? நாம் நம்முடைய அயலகத்தாரோடு அல்லது போராயுதங்களோடு நாம் போராடுவதில்லை என்று நாம் பதில் அளிக்கிறோம். நம்முடைய எதிரிகளிடமும், நம்மை உபத்திரவப்படுத்துபவர்களிடமும், நமக்கு எதிராக தவறான காரியங்களை பழிச்சொல்லுபவர்களிடமும் அல்லது சாத்தானின் வஞ்சகமானத் தந்திரங்களினாலும், மூடநம்பிக்கை, தவறானப் போதனை இன்னும் பல காரியங்களால் குருட்டாட்டம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள் என்று நாம் இவர்களைக் காணும்போது தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஆகவே நாம் இவர்களுக்கு எதிராக செயல்படாமல், வாய்ப்புகள் ஏற்படும்போது அவர்களுக்கு நன்மையானவைகளைக் கற்றுக்கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம் – “எதிர்த்துப் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாக….. சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.” (2தீமோ 2:25,26) மேலும், இப்படிப்பட்டவர்களோடு நாம் தொடர்பு கொள்கையில், ஒருவேளை அவர்களின் மனக்கண்கள் திறக்கப்பட்டு, உண்மையான அன்பின் ஆவியை அவர்களும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்படி தீமைக்குப் பதிலாக நன்மையையும், இரக்கமற்றவைகளுக்குப் பதிலாக கரிசனையையும், வெறுப்புக்குப் பதிலாக அன்பையும், நம்மைப்பற்றி தவறாகப் பேசுபவர்களைப்பற்றி நன்மையாகப் பேசவும், நம்மை உபத்திரவப்படுத்துபவர்களை நேசிப்பதற்கும், நம்முடைய இரட்சிப்பின் அதிபதி நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறார்.
ஆகவே நம்முடைய போராட்டம் பாவத்திற்கு எதிராக இருக்கவேண்டும் – இதுவே நம்முடைய முற்பிதாவாகிய ஆதாமின் மூலம் முழு மனுக்குலத்தைக் கைப்பற்றின மிகப்பெரிய விசாரணைக்காரன். இந்நாள் வரைக்கும் தன்னுடைய ஆதிக்கத்தை மனுக்குலத்தின் மேல் செலுத்தி அதன் பலனாகிய மரணத்தைக் கடந்த ஆறாயிரம் வருடங்களாக வியாதி, வலி, வேதனை, மற்றும் உபத்திரவம், கொடுமைகள் மூலம் செலுத்தி வருகிறான் சாத்தான் நம்முடைய மறைமுகமான எதிரி, ஏனெனில், அவனே நம்முடைய முற்பிதாவாகிய ஆதாமை பாவத்தில் விழத்தள்ளி, முதல் அடிமையாக்கினான். இந்நாள் வரைக்கும் சாத்தான் இதே தந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறான். நம்மையும் இந்தப் பாவத்திற்கு அடிமைகளாக இருக்கும்படி வழிநடத்துகிறான். இருப்பினும் நம்முடைய யுத்தம் சாத்தானோடு அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “தேவன் உன்னை கடிந்துகொள்வார்” என்று மிகாயேல் தூதன் சாத்தானிடம் சொன்னப் பதிலை நாம் இங்கு நினைவுக்கூறலாம். தேவன் சாத்தானை அழிக்க நியமித்திருக்கும் குறித்தக் காலத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். ஆகவே நாம் சாத்தானைக் கடிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அவனுடைய வஞ்சகமான தந்திரங்களையும், பாவத்திற்கு ஏதுவாக அவனுடைய தவறான வழிநடத்துதலையும் நாம் புரிந்துகொண்டு அதிலிருந்து விலக வேண்டும், எச்சரிப்போடும் இருக்க வேண்டும்.
“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபே 6:12) என்று ஆண்டவர் நமக்குக் கட்டளையிடுகிறார். பாவத்தின் அதிபதியாகிய சாத்தானின் விதவிதமான வலைவீசுதல்களுக்கு நாம் எதிர்த்து நிற்கவேண்டியவர்களாக இருக்கிறோம். அவனுடைய தந்திரமான சூழ்ச்சிகளே நமக்கு எதிராக யுத்தத்தை வருவிக்கிறது. ஆகவே நாம் மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும், ஏனெனில், நம்முடைய சாமர்த்தியத்தை அவனோடு என்றுமே ஒப்பிடமுடியாது. அவனைப் பார்க்கும்போது நாம் மிகவும் பலவீனரும், விழுந்துப்போன நிலையில் இருக்கிறோம். இப்படியிருக்க, இந்தப் போராட்டத்தை போராடுவதற்கு நிரந்தரமாக நாம் விடப்படுவதும் இல்லை. நம்முடைய அதிபதியாகிய இயேசு, பாவத்தைவென்று மகிமைப்பட்டிருக்கிறார். இப்பொழுது நாம் அவருடைய பங்காக இருக்கிறோம். ஆகவே – “தேவன் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாக நிற்பவன் யார்?” என்று நாம் தைரியமாகச் சொல்லலாம்.
உலகம், மாம்சம், சாத்தான் ஆகிய இந்த மூன்றும் நம்மை பாவத்திற்கு அடிமையாகத் தன்வசம் சிறைபிடிப்பதற்கு ஏற்பாடு செய்யும் அனைத்து வழிமுறைகளையும் இங்கு அப்போஸ்தலர் நமக்கு மொத்தமாகக் குறிப்பிடுகிறார். பாவத்திற்கு அதிபதியான சாத்தானுடைய வல்லமையானச் செயல்களை இந்நாள் வரைக்கும் நாம் கண்டிருக்கிறோம். அடுத்ததாக, இந்த உலகத்தை நம்முடைய எதிரியாக எந்தவிதத்தில் காணலாம்? இதை நாம் எவ்வாறாக ஜெயிப்பது? நிச்சயமாக இந்த உலகத்தில் நாம் காணக்கூடியவர்களோடு போராட வேண்டியதில்லை, அல்லது துன்மார்க்கரோடு போராட வேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் அனைவரின் மனக்கண்களையும் சாத்தான் குருடாக்கிவிட்டான். ஆகவே நாம் இந்த உலகத்தின் ஆவியோடு மட்டுமே போராட வேண்டும். இந்த உலகத்தின் ஏற்பாடுகளுக்கும், அதன் சிந்தனைகளுக்கும், அதன் இலக்குகளுக்கும், ஆசைகளுக்கும், ஜீவனத்தின் பெருமைகளுக்கும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும் – இது நம்முடைய அனுதின போராட்டமாக இருக்கிறது.
இறுதியாக, நம்முடைய போராட்டம் மாம்சத்தோடு அதாவது நம்முடைய சொந்த மாம்சத்தோடு தொடர்கிறது. நம்முடைய முற்பிதாவாகிய ஆதாம் பாவத்தில் விழுந்த நாளிலிருந்து, பாவம் மனுக்குலத்தை இறுகப்பற்றிக் கொண்டு, நம்முடைய சிந்தை, செயல்பாடுகள் அனைத்தின் தரத்தையும் குறைத்துக்கொண்டே வருகிறது. இது தொடர்ந்து தீமைக்கு மட்டுமே வழிநடத்துகிறது. பாவங்களினால் ஏற்படும் நன்மைகள், பாசம், நம்பிக்கை விருப்பம், ஆசைகள் மற்றும் இன்னும் அனைத்துக் காரியங்களையும் வெறுத்தால் மட்டுமே நாம் இதிலிருந்து தப்பிக்கமுடியும். இவைகளைக் கண்டறிய மெய்யான வெளிச்சம் தேவைப்படுகிறது. இந்த வெளிச்சத்தில் நம்முடைய விழுந்துப்போன நிலைமையைத் துல்லியமாக அளவிடலாம். ஆனால் நம்முடைய இரட்சிப்பின் அதிபதியாகிய பிரதான ஆசாரியர் நம்மை இந்தப் பாவத்திலிருந்து மீட்க தன்னுடைய ஜீவனையே கொடுத்தார். நம்முடைய இயலாமையைக் கண்டு அவர் மனதுருகி, பாவத்தின் நுகத்திலிருந்து நம்மை விடுவித்தார்.
இருப்பினும், நம்முடைய சரீரங்களில் பாவங்களின் செயல்பாடுகள் இந்நாள் வரைக்கும் காணப்படுகிறது. கடந்த 6000 வருடங்களாக நாம் அடிமையாக இருந்ததினால், பாவம் செய்யக்கூடிய எண்ணங்கள் இன்னும் நம்மைவிட்டு விலகவில்லை. நாம் இப்பொழுது விடுதலைப் பெற்று கிறிஸ்துவின் புதிய கற்பனைகளை சிந்தையில் நடைமுறைப்படுத்தவும், அவருடைய சிலுவையின் ஒரு போர் வீரனாக அழைக்கப்பட்டு, நீதிக்காகவும், நன்மைக்காகவும் நாம் போராடுவதால், நம்முடைய பழைய மாம்சத்தின் தவறான விருப்பங்களைச் செயல்படுத்துவதற்கு, அந்தப் பழைய விசாரணைக்காரனுக்குக் கீழ் நம்முடைய மாம்சம் இனி ஒருபோதும் கீழ்படுத்தப்படுவதில்லை. ஆகவே கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டிகளாக வளர, நம்முடைய மாம்சத்தின் விருப்பங்களுக்கு எதிராக நாம் அதிகபட்சமானப் போராட்டங்களை அனுதினம் போராடவேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய யுத்தகளத்தில், ஒரு மிகப் பெரிய போர் வீரனாகிய பவுலைப் போல நாமும் – “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை (மாம்சத்தையும் அதன் ஆசை விருப்பங்களையும்) ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (புது சிந்தைக்கு).” (1கொரி 9:27)
நாம் நம்முடைய இரட்சிப்பின் அதிபதியின் கீழ் வந்த காலமுதல், நல்ல போராட்டத்தைப் போராடுவதற்கு நம்மை ஒப்புக்கொடுத்து, நம்முடைய ஜீவனையும் அவருடைய பணிக்காக அர்ப்பணிக்கிறோம் – அந்நேரமுதல் புது உடன்படிக்கையின் அடிப்படையில் நம்முடைய சரீரங்கள் மரித்ததாகக் கருதப்படுகிறது. அப்பொழுது நம்முடைய சிந்தை புதுப்பிக்கப்படுகிறது. தேவனோடு தொடர்புகொள்ளும் ஒரு புதிய ஜீவனைப் பெறுகிறோம். அதற்கு பின் நம்முடைய மாம்சத்திலிருக்கும் பாவக்கிரியைகள் தேவனுடைய சித்தத்தின்படி கிறிஸ்துவுக்குள் முழுமையாக செயலற்றுவிடும். அதற்கும் மேலாக சில பாவக்கிரியைகளைத் தேவன் புது சிருஷ்டியின் கிரியைகளாகக் கருதாமல், அப்படிப்பட்ட பாவங்களை எதிர்த்து நின்று போராட அவருடைய சுத்தக் கிருபையை அளிப்பதாக வாக்களித்திருக்கிறார்.
மாம்சத்திலிருக்கும் இந்த சத்துருக்களே, நமக்கு அதிகமான உபத்திரவங்களைத் தரக்கூடியதாக இருக்கிறது. சாத்தான் இதன் வழியாகப் புது சிந்தைக்கு எதிராக நம்முடைய மாம்சத்தை ஊக்குவித்து நம்மை மீண்டுமாக பாவத்திற்கு அடிமைகளாக வழிநடத்த முயற்சிக்கிறான். சொல்லப்போனால், “கிறிஸ்துவுக்குள் ஒரு புது சிருஷ்டி சுற்றிலும், எதிராளிகளால் சூழப்பட்டு, மீண்டும் அடிமைத்தனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகிறது.” ஆகவே நாம் போராட வேண்டும். நமக்காகப் போராட வேண்டும், நம்முடைய விடுதலைக்காகப் போராட வேண்டும், நம்முடைய பலவீனங்களுக்கு எதிராகப் போராடவேண்டும், இந்த உலகத்தின் ஆவிக்கு எதிராகப் போராட வேண்டும், சகலமும் நன்மையாகத் தோன்றச் செய்யும் சாத்தானின் வஞ்சனையான கண்ணிக்கு எதிராகப் போராட வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு கிறிஸ்துவப் போர்வீரன் எச்சரிப்போடு தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களை அணிந்துகொள்ள வேண்டும். விசேஷமாக தன்னுடைய சொந்த மாம்சத்தைக் குறித்து எச்சரிப்போடிருக்க வேண்டும். நம்முடைய தேவனை இரட்சிப்பின் அதிபதியாகப் பெற்றிருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நம்முடைய அறியாமையைத் தவிர்க்கவும், சாத்தானின் வஞ்சனைகளை உணர்ந்துக் கொள்ளும் ஞானத்தை அவரே நமக்கு இரட்சிப்பின் தலைச்சீராவாக தந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் ஈடுபலியினால் வந்த நன்மையை நம்முடைய அபூரணத்தை நிறைவாக்கி, நித்திய ஜீவனைப் பெற வழிநடத்தி, நமக்கு நீதி என்னும் மார்க்கவசத்தைத் தந்த தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நம்முடைய விசுவாசம் என்னும் கேடகத்திற்காகவும், நம்பிக்கைக்காகவும், அவர் நமக்குள் துவங்கின நல்ல கிரியைகளை முடிக்க வல்லவராக இருப்பதற்காகவும் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் பாவத்திற்கு அடிமைகளாக இருக்கும் போதே தேவன் நம்மை நேசித்து, கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே நம்மை மீட்டு, நம்மை இன்று நேசிப்பதைவிட அதிகமாக நேசித்து, நீதியின் ஊழியக்காரனாக நம்மை மாற்றினார். தேவன் நமக்குக் கொடுத்த பாதரட்சைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். நீடிய பொறுமையுள்ளவர்களாக நம்மை காத்துக்கொள்வதற்குக் கொடுக்கப்பட்ட சத்தியமும், பரதேசிகளாக நாம் இந்த உலகத்தில் பயணிப்பதற்குத் தந்த பாதுகாப்புக்காகவும் அவரை ஸ்தோத்தரிப்போம். சாத்தானை எதிர்க்கும் சத்திய வார்த்தையாகிய ஆவியின் பட்டயத்திற்காகவும் நாம் அவருக்கு நன்றிகளை ஏறெடுப்போம். நம்மை விலைக்கு வாங்கினவரும், நம்மை நேசித்தவராலும் நாம் வெற்றிப் பெறுவோம்.
மற்றவர்களுக்கானப் போராட்டம்
நம்முடைய போராட்டம் நம்முடைய சார்பிலும், மற்றவர்களின் சார்பிலும் இருப்பதை நாம் காண்கிறோம். மரணபரியந்தம் நம்மை காத்துக்கொள்வதற்கும், சுயாதீனத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் போராடுகிறோம். “பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.” (எபி 12:4) என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய சகோதரர்களுக்காகவும் நம்முடைய ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். மேலும், நம்முடைய இராஜாவின் சார்பில் நாம் போராட வேண்டிய அவசியமில்லாதிருந்தும் அவருக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு அவருடைய நாமத்தின் மகிமைக்காகவும், நீதியான ஆட்சிக்காகவும் நாம் போராடுகிறோம். இவைகள் அனைத்தையும் விட வேறு ஒரு காரியத்திற்காக நாம் போராடவேண்டியதாக இருக்கிறது. நாம் இதை தெளிவாகப் புரிந்துகொள்ள கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளாக இருந்த வளர்ச்சியையும், அதற்கு பின் நடந்து வரும் காரியங்களும், யுத்தங்களின் பின்விளைவுகள் என்று நம்முடைய ஆண்டவர் குறிப்பிடுவதை நாம் காணலாம்.
நாம் மட்டும் அல்ல, இந்த முழு உலகமும் ஆதாமினால் “பாவத்திற்குக் கீழ் விற்கப்பட்டது” – ஆகவே நாமும் இந்த முழு உலகமும் பாவத்திற்கு அடிமைகளாக இருக்கிறோம். அதுமாத்திரம் அல்ல நம்முடைய இரட்சகர் தன்னுடைய விலையுயர்ந்த இரத்தத்தினாலே நம்மை மீட்டு, நமக்கு மட்டும் அல்ல, இந்த முழு உலகத்திற்கும் மீட்பை ஏற்படுத்தினார். இப்படியாக நம்மை மீட்பதற்காக அல்ல, நம்மை பாவத்திலிருந்தும், பழைய விசாரணைக்காரனிடமிருந்தும், சகல அடிமைத்தனத்திலிருந்தும் மீட்க இயேசு உரிமை பெற்றிருக்கிறார். அவர் இந்த முழு உலகத்தையும் இப்பொழுது மீட்காவிட்டாலும், ஒரு சிறு கூட்டத்தாரை அவர் மீட்டுக்கொண்டிருக்கிறார். இந்நாளில் மீட்கப்பட்டவர்களே அவருடைய சேனைகளாக வருங்காலத்தில், அவரோடு நீதியுள்ள இராஜ்யத்தை ஸ்தாபித்து, இந்த முழு உலகத்தின் பாவங்களையும், தொலைத்து அவர்களை இரட்சிப்பதற்கு உதவி செய்வார்கள்.
“மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அந்தச் சிருஷ்டியானது சுயஇஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” (ரோமர் 8:19,21,22) என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார்.
இந்த முழு உலகமும் அடிமைத்தனத்தில் ஏகமாய் தவித்துக் கொண்டு, இந்த உலகத்தின் மீட்புக்காக காத்திருப்பதை நாம் காணும்போது – “இன்னும் கொஞ்சம் காலத்தில், வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார், அவர் தாமதிப்பதில்லை” என்ற பவுலின் வார்த்தைகளை நாம் நினைவு கூறலாம். அந்த நாள் தேவனுடைய பார்வையில் நேற்று கழிந்த நாள்போலவும், இராச்சாமம் போலவும் இருக்கிறது. நம்முடைய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கடந்த பத்தொன்பது நூற்றாண்டுகளாகக் காத்திருந்த நாம் இன்னும் சற்று நேரம் மாத்திரம் காத்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கு பின் இரட்சிப்பின் அதிபதியோடே இந்த உலகத்தின் மனுக்குலத்தை விடுவிக்கவும், பாவத்தின் நுகத்தை உடைக்கவும், மரணத்தின் சிறையிலிருந்து இரட்சிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படும்.
R1798 – “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” (16ம் கேள்வி காண்க)
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” – எபி 10:38,39
சிந்திக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் நிச்சயமாக இந்தக் கருத்தைத் தவறவிடமாட்டார்கள் என்று அறிந்து அப்போஸ்தலன் இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வார்த்தைகள் உலகத்தாரை நோக்கிச் சொல்லப்படாமல், இயேசு கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. விசுவாசத்தினால் அவர்கள் மரணத்திலிருந்து புதிதான ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறார்கள். பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின, அவர்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கிறார்கள். தேவனுடைய புத்திரர்களாக இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவுக்கு உடன்பங்காளிகளாக இருக்கிறார்கள், ஆகவே அவர் பட்டப்பாடுகளில் பங்கடைந்து, மரண பரியந்தம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார்கள். இவர்கள் நித்திய ஜீவனில் ஜெநிப்பிக்கப்பட்டு, பரலோகத்தில் அழியாமை என்னும் நிலையை அடைய வழிநடத்தப்படுகிறார்கள்.
இந்த வகுப்பாருக்குத் தேவன் மிகுதியாக விசேஷித்த வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். இவைகளை நாம் பெற்றுக்கொண்டோம் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தால், நிச்சயமாக இவைகள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவேளை இதை விசுவாசியாமற்ப் போனால் அதனால் நமக்கு ஒரு பயனும் இராது. தனிப்பட்ட வாழ்க்கையில் இது நடக்காவிட்டாலும், நாம் “விசுவாசத்தின் வழியாக மட்டுமே ஜீவிக்கவேண்டியவர்களாக” இருக்கிறோம். நாம் மரணத்திலிருந்து ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்று விசுவாசிக்கவேண்டும். மேலும், அந்த விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதில் வளர்ச்சியடையவும், சத்திய வார்த்தைகளினால் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படவும், தேவையான ஆவிக்குரிய ஆகாரங்களை அனுதினம் உட்கொள்ளவேண்டும்.
இவ்விதத்தில் நாம் விசுவாசத்தில் வளர்ந்தால், இக்காலத்திலும், வருங்காலத்திலும், நாம் அதிகபட்சமான சலுகைகளைப் பெறுவோம். மேலும் நம்முடைய ஆண்டவருடைய பிரசன்னத்திலும், பிதாவினுடைய சமூகத்திலும், உள்ள ஐக்கியத்திலும், நாம் அனுதினமும் மகிழ்ந்து களிக்கூறலாம். இப்படியாக, வசனங்களின் ஆறுதல்களினாலும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்திலும், பரிசுத்த ஆவியின் அச்சாரத்துடன் நாம் தேவனுடைய புத்திரர்கள் என்று சாட்சிப்பெறுவோம். இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் மகிமையான நம்பிக்கைகளோடு, பெறும் சிறப்புரிமைகள், நம்மை ஊக்குவித்து, நமக்குள் இருக்கும் புது சிருஷ்டியை ஜீவனோடு வைத்திருக்கிறது. இதுவே உலகம் அறிந்திராததும், நாம் அனுதினம் உட்கொள்ளவேண்டிய ஆகாரமாக இருக்கிறது. நாம் இந்த உலகத்தை விட்டும், அதன் ஆவியை விட்டும் தனித்து வாழ்வதற்கு இந்த உணவே நமக்கு வழி வகுக்கிறது. இதுவே விசுவாசத்தினால் நடப்பதாகும். இந்த உலகத்தின் வழக்கத்திற்கு முரண்பாடான ஒரு வாழ்க்கையை இது நமக்கு குறிப்பிடுகிறது. நாம் பொதுவாக காணக்கூடிய வாழ்க்கை மற்றும் மாம்சத்தின் விருப்பங்களே இந்த உலக வாழ்க்கையாகும். உலகத்தார் காணக்கூடியவைகளை நோக்குகிறார்கள். சிருஷ்டிகரின் கோரிக்கைகளையும், விருப்பங்களையும் முற்றிலுமாக நிராகரித்து விட்டு, தங்களுடைய விருப்பத்தின்படியும், நோக்கத்தின்படியும் அவர்கள் கண்களினால் அதை நியாயந்தீர்க்கிறார்கள். தெய்வீக வார்த்தைகளின் மேல் விசுவாசம் இல்லாததினால், வருங்காலத்தைக் குறித்த நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள். எந்தவிதத்திலும், தேவனை ஒரு பொருட்டாக எண்ணாமல், பூமிக்குரிய பரிசுகளைப் பெற்றுக்கொள்ள தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.
தேவனுடைய உண்மையான பிள்ளைகள் இப்படியிருப்பதில்லை. அவர்கள் காணப்படாதவைகள் நித்தியமானவைகள் என்று விசுவாசித்து, (2கொரி 4:18) காணக்கூடிய அனைத்தும் அந்நித்தியமானவைகள் என்று எப்போதும் மனதில் நிச்சயிக்கிறார்கள். ஆகவே அவர்கள் இந்த உலகத்திற்காக அல்ல, தேவனுடைய இராஜ்யத்தில் நித்தியமாக ஜீவிப்பதற்காக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், தேவன் அவர்களுக்காக வெளிப்படுத்தின விசேஷித்த வாக்குத்தத்தங்களை அவர்களின் விசுவாசத்தின் கண்கள் கண்டது. விசுவாசத்தின் இந்த ஜீவியத்தில், சகல விதமான எதிர்பார்ப்புகள், இலக்குகள், நம்பிக்கைகள், கொள்கைகள், மகிழ்ச்சிகள் அனைத்துமே, இந்த உலகத்தின் காரியங்களைவிட மேன்மையாகவே உள்ளது. ஆனால் இவையனைத்தும் விசுவாசத்தையே சார்ந்திருக்கிறது. கிறிஸ்துவ விசுவாசம் புறக்கணிக்கப்பட்டால், விசுவாசத்தின் வாழ்க்கை முடிவுபெறும். அதாவது அவர்களுக்குள் இருக்கும் விசுவாசத்தின் தூண்டுதல் நின்றுவிடும். மேலும் அவிசுவாசத்தினால், அவர்களின் ஆவிக்குரிய பார்வை மங்கிவிட்டால், ஆவிக்குரிய விஷயங்களைச் சரியாக சீர்த்தூக்கிப் பார்க்கமுடியாமல், சாத்தான் முன் வைத்திருக்கும் உலகத்தின் வஞ்சனையானக் காரியங்களில் இழுக்கப்பட்டு, தேவனை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவார்கள்.
 அவிசுவாசத்தின் பலன்களை விரும்புபவர்கள், விசுவாசத்தை விட்டு நழுவி, தேவனுடைய கிருபைகளையும் விட்டுவிலகி செல்கிறார்கள். விலகி செல்வது அல்லது பின்னிட்டுச் செல்ல ஓர் அபாயகரமானக் காரியமாக இருக்கிறது.” பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது… நாமோ கெட்டு போய் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” (எபி 10:38-39) என்று வசனங்கள் குறிப்பிடுகிறது.
 இடுக்கமான வாசலில் பிரவேசித்து பலி செலுத்துவதை நிறுத்துவதே, விசுவாசத்தில் பின்வாங்குவதற்கான முதல் படியாகும். மேலும் நாம் விட்டு வந்த காரியங்களை ஓயாமல் சிந்தித்துக்கொண்டிருப்பதன் காரணமாக நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பந்தயப் பொருளின் மேல் நோக்கங்கள் குறைந்து விடுகிறது. இதுவும் விசுவாசத்தில் பின்வாங்குவதற்குக் காரணமாகவும் அமைகிறது. அதற்கு பின் உலகப்பிரகாரமானக் காரியங்களுக்கு (விழுந்து போன நிலை) நாம் இசைவான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறோம். இப்படியாக நம்முடைய பலவீனங்களை அறிந்த சோதனைக்காரன், ஏற்பாடு செய்திருக்கும் வழிகளில், இடறலின்றி நடந்து மகிழ்ச்சியோடு இந்த உலகத்தில் வாழ்க்கையை அனுபவிக்கலாம். மாம்சத்தின் சிந்தனைக்கு முன் மிக நுணுக்கமான தவறுகள் கொண்டுவரப்பட்டு அதில் நியாயமாக நடந்துக்கொள்வதுப்போல ஒரு தோற்றம் அளிக்கப்பட்டு, தங்களைத்தாங்களே நீதிமான்களாக நினைப்பதற்கு சாத்தான் எல்லா சூழ்நிலைகளையும் அமைத்து தருகிறான். அப்பொழுது, தேவனுடைய முதல் அன்பையும், அவருடைய நடத்துதலையும் விட்டுவிட்டு சத்தியத்தை விட்டுவிலகி தனக்கு நியாயமானவைகளை நடப்பிப்பார்கள். தேவனுடைய ஆவி இனி ஒருபோதும் அவர்களை வழிநடத்தாது.
 தேவனுடைய சில பிள்ளைகள் சோதிக்கப்படும்போது, இப்படிப்பட்ட வழிகளை அவர்கள் தேர்வு செய்வதில்லை. ஏனெனில் நாம் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். பழைய சுபாவத்திற்கும், புது சிருஷ்டிக்கும் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படும்போது, விழிப்பாயிருந்தால் மட்டுமே நம்முடைய புது சிருஷ்டி பழைய சுபாவத்தைத் தனக்குக் கீழ்ப்படுத்தமுடியும். நீண்ட காலப்போராட்டங்களில் தேவனுடைய வழிநடத்துதல் நமக்கு மிக அவசியமாக இருக்கிறது. “தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ?” கட்டளைகளினாலும், ஒழுக்கத்தினாலும், அனுபவங்களினாலும், அவர் நம்மை நடத்துகிறார். நாம் அவருடைய ஆவியை பூரணமாகப் பெற்றிருந்தால், இவைகளை நாம் சந்தோஷத்துடனும் மனத்தாழ்மையுடனும் ஏற்றுக்கொண்டு, அதிக நன்மைகளைப் பெறுவோம். அப்போது நமக்கு கிருபைக்கு மேல் கிருபை தந்து, வெற்றிக்கு மேல் வெற்றி தந்து நம்மை வழிநடத்துவதில் தேவன் மகிழ்ச்சியடைவார். நாம் யுத்தகளத்தில் நின்று கொண்டு எதிராளிகளோடு எதிர்த்துப் போரிடுவது பெரிய காரியமல்ல. உண்மையாக வெற்றியைப் பெற நாம் தேவனுடைய சர்வாயுதத்தை மட்டும் தரித்துக்கொள்ளாமல், யுத்தத்தின் நாயகர்களாக இருந்து, கண்களின் இச்சைகளையும், ஜீவனத்தின் பெருமைகளையும், மாம்சத்தின் இச்சைகளையும், நீதி மற்றும் பரிசுத்தத்தின் சகல எதிரிகளை நம்மை விட்டு முற்றிலுமாக அழிக்கக்கூடிய போர் வீரர்களாக இருக்கவேண்டும். அன்பு – தேவனிடத்தில் அன்பு, அவருடைய சத்தியத்தின் மேலும், நீதியின் மேலும் நாம் வைக்கும் அன்பு, இந்தக் காரியங்களை முற்றிலுமாக அகற்ற…….நம்மை அனுதினம் ஊக்குவித்து, ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் பங்கைப்பெற நம்மை வழிநடத்தவேண்டும். கொழுந்து விட்டு எரியும் அன்பு, நம்மை முழுமையாக தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கும். 99% அளவு யுத்தம் வெற்றிபெறும். இருப்பினும், “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள்.” (யூதா 21) என்று நாம் எச்சரிக்கப்படுகிறோம்.
சத்தியத்திற்கு, ஏற்ற விசுவாசமும், அதன் கோட்பாடுகளுக்குக் கீழ்ப்படிதலும், இருக்கும் பட்சத்தில், நாம் அதிகமதிகமாக சத்தியத்தில் வளர்ந்து, நீதி மற்றும் சமாதானம் என்ற பாதையில் வழிநடத்தப்பட்டு, நம்மை நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கச்செய்யும்.
விசுவாச ஓட்டம் ஒரு தனிநபருக்குரிய ஓட்டமாக இருந்தாலும், அது தலைக்கு இசைவான ஓட்டமாக இருக்கிறது. வசனங்களை ஆதாரமாகக் கொண்ட உபதேசங்களை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது. நாம் சத்தியம் என்று ஏற்றுக்கொண்ட அனைத்தையும் நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுது சத்தியத்தின் கோட்பாடுகள் நம்முடைய கோட்பாடுகளாகவும், தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நம்முடைய சுவாசமாகவும் மாறும். “தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படும் அனைவரும் தேவனுடைய புத்திரர்கள்” என்று நாம் வாசிக்கிறோம். ஆனாலும் இந்த உலகத்தை ஜெயிக்க நமக்குள்ள பெலன் போதாது என்று நாம் உணருகிறோம். நம்முடைய மாம்சமும், சாத்தானும் அதிக பலமுள்ளவர்களாகத் தோன்றுகிறார்கள். நமக்குள் நற்கிரியைகளைத் துவங்கினவர் அதை முடிக்கவும் வல்லமையுள்ளவராக இருக்கிறார் என்று வாசிக்கிறோம். ஆகவே நாம் மனத்தாழ்மையோடு அவரிடம் நம்மை ஒப்புவித்தால் அவர் நம்மை வழிநடத்துவார். நம் தேவனுடைய வாக்கு என்றுமே மாறாதவைகள். நம்மால் தாங்க முடியாத சோதனைகளை அவர் அனுமதிப்பதில்லை. ஆகவே நம்முடைய விசுவாசத்தை மிக உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவருடைய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைத்தவர்களாக, நீதியிலும், விசுவாசத்திலும், சத்தியத்தை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, பூமிக்குரிய காரியங்களில் நாம் பின்னிட்டுத் திரும்பாதபடிக்கு நம்மை நாமே ஜாக்கிரதையாக தேவனிடத்தில் அர்ப்பணிப்போமாக.
R1949 – “விசுவாசத்தின் சோதனைகள்” – ஏன் அனுமதிக்கப்படுகிறது? (கேள்வி 17 காண்க)
தேவனுடைய ஜனங்களைக் குழப்பங்களுக்குள்ளாகும்படி தப்பறையானப் போதனைகள் அனுமதிக்கப்படுவதின் காரணம் என்ன என்று அநேகர் திகைப்படைகிறார்கள். உண்மையான சத்தியத்தைப் பெற்றுக்கொண்டபின், சகல முரண்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வந்ததென்று எண்ணி, மகிழ்கிறார்கள். அதாவது சமாதானத்தின் நகரத்தை அடைந்துவிட்டோம் என்றும் இனி ஒருபோதும் நாம் திசைத்திருப்பப்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் இந்த ஒரு தவறானக் கூற்று, நம்முடைய மிகப் பெரிய எதிராளியாகிய சாத்தான், வெளிச்சத்தின் பிள்ளைகளை எந்த இடறுதல்களின்றி அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை. சாத்தானுடைய வல்லமை இன்னும் பூரணமாகக் கட்டப்படாததினால், தேவனுடைய இராஜ்யத்திற்கு எதிராகவும், அதன் கோட்பாடுகளுக்கு எதிராகவும், அவன் காரியங்களை நம்பவைக்கிறான். அவன் மிக தந்திரமுள்ளவனும், நீடித்த நாட்களாகத் தேவனுக்கு எதிராகச் செயல்படுகிறவனுமாக இருக்கிறான். வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்கும் இராஜ்யத்தின் புத்திரர் அவனுடைய பொறி பறக்கும் அம்புகளால் குறிபார்க்கப்படுகிறார்கள். இருளின் இராஜ்யத்திலிருந்து தப்பித்து, வெளிச்சத்தில் நடக்கும் போது, தங்களுடைய பாதத்திற்குக் கண்ணிகள் விரித்து வைக்கப்பட்டு, அவர்களின் பாதங்கள் இடறுதலுக்கானக் காரியங்கள் வழியிலே வைக்கப்படுகிறது. இந்த வேலை மிகவும் நுட்பமாகச் செய்யப்படுகிறது. இருளிலிருந்து தப்பித்தவர்கள் மீண்டும் ஏமாந்து சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. இந்தத் தீமையான நாட்களில், இப்படிப்பட்ட சாத்தானின் பலமான சோதனைகளிலிருந்து வெகு சிலரே தப்பிக்கிறார்கள். 
இந்தத் தீமையான நாட்களிலே, அநேகருடைய விசுவாசங்கள் கரையத்தக்கதாக இப்படிப்பட்ட வல்லமையான சோதனைகளைத் தேவன் ஏன் இன்னும் அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி நியாயமானதாகதான் இருக்கிறது. இந்தக் கேள்விக்கான விடை – “கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.” (11தெச 2:10-12) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பதில் அளிக்கிறார்.
இப்படியாக, தேவன் அனுமதிப்பது மட்டும் அல்ல, அப்படிப்பட்ட சோதனைகளைத் தேவன் அனுமதிப்பதற்கு விரும்புகிறார் என்றும் தெளிவாகிறது. பொறி பறக்கும் அம்புகளினால் ஆயிரம் பேர் விழுந்து போனால், அந்த ஆயிரம் பேர்களும், சத்தியத்திற்கு ஏற்ற சாட்சிகளாக இருக்க வாய்ப்பில்லை என்பது பொருள். அவர்கள் தூய அன்பினால் சத்தியத்தைப் பெறவில்லை என்பது வெளிப்படுகிறது. ஒரு குழந்தை புதிய விளையாட்டுப் பொருளைப் பெற்றுக்கொள்வதைப் போல அநேகர் மிகுந்த சந்தோஷத்துடன் சத்தியத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். சிலர் நூதனப்பிரியத்தோடு சத்தியத்தைக் கேட்பார்கள். கேட்டப்பின் மகிழ்வார்கள். அதற்கு பின் அதை விட ஆர்வமூட்டும் காரியங்கள் கிடைக்கும்போது, அதை தள்ளிவைத்துவிட்டு மற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். அல்லது வாக்குவாதங்களில் தங்களுக்கு வெற்றி கிடைப்பதற்காகவும், தங்களுக்குக் கீர்த்தி சேர்த்துக் கொள்வதற்காகவும், சத்தியங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அல்லது வாழ்க்கையில் சில தீராத பிரச்சனைகள் மற்றும் வேதனைகள் நீங்க சத்தியத்தைத் தேடுகிறார்கள். ஆனால் சத்தியத்தின் அம்சங்களை அவர்கள் உணராமல், பிரச்சனைகள் வரும்போது அதிலிருந்து தப்பித்து, பரலோகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள்.
சத்தியத்தை இலகுவாக மதிப்பிடுபவர்கள், அதற்கு அபாத்திரராகப் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்தச் சத்தியத்தை இழந்துவிடவேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. ஆகவே, விருப்பத்தோடு, தெய்வீகமாக அனுமதிக்கப்பட்ட விசுவாசத்தின் சோதனைகள் – சத்தியத்தில் வேரூன்றி நிலைத்திராவிட்டால் – “கூடுமானால், தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் – ஆனால் ஒருவர் அன்பினால் சத்தியத்தைப் பெற்றிருந்தால், அவர்கள் ஒருபோதும், அந்தச் சத்தியத்தை துன்மார்க்கத்திற்க்காவது அல்லது விருதாவாவது அதை விட்டுவிடமாட்டார்கள். ஆகவே சிலர் அபாத்திரராக மாறிவிடுகிறார்கள், சிலர் சத்தியத்தினால் வரும் சுயாதீனத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். “நீதியைப் பிறப்பிப்பதற்காக வெளிச்சம் (சத்தியம்) விதைக்கப்படுகிறது, இருதயம் களித்திருக்க மகிழ்ச்சி (சத்தியத்தின் மகிழ்சசி) விதைக்கப்படுகிறது.” அதேபோல், கிறிஸ்துவின் இராஜ்யம் வல்லமையாக ஸ்தாபிக்கப்பட்டு, இந்த பூமியை முழுமையாக தன்னுடைய பிடியில் கொண்டுவரும் வரைக்கும், துன்மார்க்கன், தவறுகளினால் கட்டப்பட்டிருக்கவேண்டும். இதன் காரணமாக, பிதாவாகிய தேவன் கடந்த கால மூடநம்பிக்கைகளுக்கு இன்று மனிதனின் சிந்தையில் ஒரு தடுக்கலைப் போட்டிருக்கிறார். மேலும், தேவனுடைய ராஜ்யத்திற்கு மிக அருகில் உள்ளதினால், சில தவறுகளின் கட்டுப்பாட்டை தளர்த்தியிருக்கிறார். ஆனால் மகா உபத்திரவத்தின் காலத்தில், இவைகள் முற்றிலுமாகக் கட்டவிழ்க்கப்பட்டு, மிகுந்த கலவரத்தில் முடிவடையும். அப்பொழுது நடக்கும் இருப்புக்கோலாட்சி, அவைகளைச் சீர்ப்படுத்தும். அப்பொழுது அனைவரும் சத்தியத்தின் முக்கியத்துவதை உணர்ந்து, சத்தியத்தைத் தவறாகப் பயன்படுத்தினதின் விளைவுகளை அறிந்து சீர்ப்பொருந்துவார்கள். ஆகவே இப்பொழுது இந்தத் தவறான நோக்குடன் சத்தியத்தைப் பெற்றவர்கள் அதை இழந்து விடவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கிறது. ஆனால் தேவனுடைய உண்மையான பிள்ளைகள், அந்தச் சத்தியத்தைத் தங்களுடைய ஜீவனைப் போல நேசிக்கிறார்கள். அவர்கள் நீதியை விரும்புகிறார்கள், தங்களுடைய சகோதரர்களை நேசித்து அவர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவிகளைச் செய்கிறார்கள். அவர்கள் உருக்கமான அன்பையும், சாந்தத்தையும் பெற்றிருக்கிறார்கள். சம்பாஷணைகளின் போது மிகவும் சாந்தமாக, தேவனுடைய நாமம் மகிமைப்பட சத்தியத்தைத் தெரிவிக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தின் விலைமதிப்பை அறிந்தவர்கள். அவர்கள் அதை நித்தமும் தியானிப்பார்கள். அதற்குள் இருக்கும் மகா பிரம்மாண்டமான குணநலன்களை (நீதி, அன்பு, அஹிம்சை) நோக்குவார்கள். அவர்கள் கிறிஸ்துவின் பங்காளிகளாக இருப்பதற்கு மட்டுமே மகிழ்வார்கள். அவர்கள் மகிமையான நன்மைகளையும், அன்பையும், ஞானத்தையும் நீதியையும், தேவனைப்போல் பிரதிபலிப்பார்கள். ஆகவே, அவர்கள் சத்தியத்தையும், அதை கொடுத்தவரையும் அதிகமாக நேசித்து, தங்களுடைய இருதயத்தில் ஒரு பொக்கிஷமாக அதை பத்திரப்படுத்தி, அதை மீண்டும் மீண்டுமாக புரட்டிப் பார்த்து அதன் மகத்துவத்தை ருசிப்பார்த்து தங்களையும் அதன் குணலட்சணங்களுக்கு மாறுவதற்கு முயற்சித்து, மற்றவர்களும் அந்த ஆசீர்வாதத்தைப் பெற அதில் நடத்த விரும்புவார்கள். 
இதுவே சத்தியத்தை உண்மையான இருதயத்தில் உத்தமமான நோக்குடன் பெறுவதாகும். இப்படியாக சத்தியத்தைப் பெற்றவர்கள் ஒருபோதும் தப்பறையால் வஞ்சிக்கப்படமாட்டார்கள். அந்தச் சத்தியம் நன்மையானது என்று அவர்கள் உணர்ந்த பின் அதை எந்தச் சூழ்நிலையிலும், அவர்கள் கைவிடமாட்டார்கள். காந்தத்தோடு இரும்பு ஒட்டிக்கொள்வதைப்போல இவர்கள் சத்தியத்தோடு ஐக்கியப்பட்டிருப்பார்கள். ஆனால் மரத்தூள் அந்தக் காந்தத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாலும், ஊதிவிடும்போது அது பறந்துபோய்விடும். இப்படியாக தான் அநேகர் தேவனோடும் அவர் கொடுத்த சத்தியத்தோடும் உறவு வைத்துக்கொள்கிறார்கள். தப்பறையானப் போதனைகளாகிய காற்றுகள் அவர்கள்மேல் அடிக்கும்போது அவர்கள் பறந்துவிடுகிறார்கள். காற்று அடிக்கும் போது அவர்கள் ஒரே நேரத்தில் பறந்துவிடுவதில்லை, காற்று பலமாக அடிக்கஅடிக்க ஒவ்வொன்றாக பறந்துவிடும். ஆனால் உண்மையான தேவனுடைய ஜனங்களை அவர்களுடைய திராணிக்கு மேல் சோதிப்பதற்குத் தேவன் அனுமதிப்பதில்லை. அவருடைய பாதங்கள் கல்லில் இடறாதபடிக்கு தேவன் அவர்களை காத்துக்கொள்ள அவரவருக்குரிய தூதர்களை நியமித்திருக்கிறார்.
ஆகவே தேவனால் நியமிக்கப்பட்டவர்கள், சத்தியத்தைத் தெளிவாகப் பகுத்து அறிந்து, தாமே தேவனுடைய கிரியையாக இருப்பதைக் கற்றரிந்து, மற்றவர்களைக் கவனத்தோடு வழிநடத்துவார்கள். அவர்கள் தங்களுடைய மந்தையைப் போஷிக்க ஆர்வமுள்ள ஒரு தாயைப்போல் இருப்பார்கள். இப்படியாக, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைச் சகலத்திலும் போஷித்து, வழிநடத்துவார், அவர்கள் ஒருகாலத்திலும் இடறுவதில்லை. 
நாம் பெற்ற சத்தியத்தை அன்பினால் இந்நாள் வரைக்கும் பற்றிக் கொண்டிருக்கிறோமா? என்பது அழைக்கப்பட்ட அனைவரும் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. “ஒருவன் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராவிட்டால், அவன் கிறிஸ்துவினுடையவனாக இருக்கமுடியாது.” என்று சொல்லியிருப்பதினால், ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியை நமக்குள் தாராளமாகச் செயல்பட அனுமதிக்கவேண்டும். “ஆவிக்குரிய சுத்திகரிப்பினாலும், சத்தியத்தின் நம்பிக்கையினாலும், நீங்கள் பெரிதான இரட்சிப்புக்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று வெகுசீக்கிரத்தில் வெளிப்படும். (11தெச 2:13) சத்தியத்தின் நம்பிக்கையானது உத்தமமான இருதயத்தில் நல்ல கனிகளைக் கொடுக்காவிட்டால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதாவது, ஆவியை சுத்திகரிப்பது, முழுமையாக தெய்வீக சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதாகும். இந்தப் பாடத்தை நம்முடைய இருதயங்களில் ஏற்றுக்கொண்டு, பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுவோம். எவ்வளவு விலைக்கொடுத்தாவது (சுயபலி) “சத்தியத்தை வாங்கு” எந்த சூழ்நிலையிலும், உலகப் பிரகாரமானக் காரியங்களுக்கு “சத்தியத்தை விற்காதே”.
R1822 – “உங்கள் விலையேறப்பெற்ற விசுவாசம்” (17ம் கேள்வி காண்க)
“அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும், அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” – 1 பேது 1:7
விசுவாசம் இரண்டு அடிப்படையானப் பகுதிகளைக் கொண்டது – அறிவாற்றலுள்ள உறுதி மற்றும் இருதயத்தின் நம்பிக்கை. முதலில் சொல்லப்பட்ட பகுதி பொதுவாகவும், இரண்டாவதாகச் சொல்லப்பட்டப் பகுதி மிக உறுதியானதுமாக இருக்கிறது. இரண்டாவது பகுதியைப்பற்றி நாம் வாசிக்கும்போது – “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப்பண்ணப்படும்” (ரோம 10:10) தலை மற்றும் இருதயமும் – அறிவு மற்றும் உணர்வுகள் – விசுவாசத்திற்குத் தேவையானது. இந்த விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதக் காரியம். (எபி 11:6) இதில் அநேகர் விசுவாசத்தின் ஒரு பகுதியை மட்டும் கொண்டிருக்கிறார்கள். சிலர் உணர்ச்சிப்பூர்வமாகவும், சிலர் அறிவுப்பூர்வமாகவும் பெற்றிருக்கிறார்கள். பொறி பறக்கும் அம்புகளாகிய சோதனை வரும்போது இவர்கள் அதை எதிர்த்து நிற்க திராணியற்றவர்களாகிறார்கள். ஆகவே விசுவாசத்தின் இந்த இரண்டு பகுதிகளையும் நாம் கொண்டிருப்பவர்களாக இருந்து, முடிவு பரியந்தம் நிலைத்து, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, அவருடைய மகிமையும், கனமும் உண்டாகும்படி நாம் காணப்படவேண்டும்.
தெய்வீக சத்தியத்தின் அடிப்படைக் கோட்பாட்டை இந்த அறிவாற்றலோடு புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, தனிப்பட்டவகையில் ஞானமுள்ள, சர்வ வல்லமையுள்ள தேவனே சர்வத்தையும் சிருஷ்டித்து, அவைகளைப் பராமரித்து, தன்னுடைய ஒரே பேறான குமாரன் இயேசுவின் வழியாக இரட்சிப்பின் திட்டத்தை வகுத்தார் என்பதே விசுவாசத்தின் அஸ்திபாரமாக இருக்கிறது. அந்த அஸ்திபாரத்திற்கு மேல் மிக அற்புதமாகக் கட்டப்படும் கட்டிடமே நம்பிக்கை மற்றும் தேவன் அவருடைய பிள்ளைகளை அன்பாக கொடுத்த வாக்குறுதிகளாகும்.
ஆகவே நாம் பெற்றிருக்கும் அறிவுப்பூர்வமான தெய்வீக சத்தியத்திற்கு மட்டும் விசுவாசத்தின் சோதனை அனுமதிக்கப்படாமல், நாம் தேவன் மேல் வைத்திருக்கும் அன்பும் சோதிக்கப்படுகிறது. ஆகவே இந்த இரண்டு காரியங்களிலும் ஒவ்வொரு உண்மையான தேவ பிள்ளைகளும் கடுமையாகச் சோதிக்கப்படுவார்கள். கிறிஸ்துவின் போர்வீரனாக இருக்கும் ஒவ்வொருவரும் சோதனையில் விழுந்துவிடாதபடிக்குத் தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களை அணிந்துகொள்ளவேண்டும். நம்முடைய விசுவாசத்தின் அறிவுப்பூர்வமாகச் சோதிக்கப்பட்டால் – நம்முடைய நம்பிக்கையின் சகலக் காரியங்களுக்கும், தேவனுடைய வார்த்தைகளே பதில் அளிக்கப்பட்டும், எவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும், மனிதனுடைய சிந்தைகளும், நோக்கங்களும் நம்மைத் தப்பறையானச் சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ள விடாதபடிக்கு எச்சரிப்போடு இருக்கவேண்டும். ஏனெனில், விசுவாசத்தின் அஸ்திபாரம் உறுதியாக இராவிட்டால், மேலுள்ள கட்டிடம் நிலைத்திருக்க முடியாது. சாத்தானின் பலவிதமானக் காற்றுகளும், அதற்கு எதிரான சோதனைகளும் அதை கீழேவிழத் தள்ளிவிடும். சந்தேகங்களும், பயமும் அந்தக் கட்டிடத்தை அசையச் செய்யும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் சாத்தான் மிகக் கொடிய சோதனைகளை முன்வைக்கும்போது முழுமையாக அந்த ஆத்துமா நஷ்டமடையும்.
ஆகவே, நாம் முதலில் நம்முடைய விசுவாசத்தில் அஸ்திபாரத்தை கவனிக்கவேண்டும் – அடிப்படை சத்தியத்தைப் பற்றிய அறிவை நாம் தெளிவாகக் கற்றரிய வேண்டும். தேவனுடைய ஜனங்களை ஊக்குவிக்கும் தெய்வீக சத்தியத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் அறிவுப்பூர்வமாக தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும், அதில் நாம் ஆழமாக வேர் கொண்டவர்களாக விசுவாசத்தை ஸ்தாபித்து, தேவனுடைய போதனைகளை உறுதியாக பற்றிக் கொள்ளவேண்டும். நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய் கவனிக்கவேண்டும். (எபி 2:1)
விசுவாசத்தின் அடிப்படைப் போதனைகளில் நாம் தெளிவுள்ளவர்களாக இருந்தாலும், அதற்கு மேல் கட்டப்பட்டிருக்கும் நம்முடைய இருதயத்திற்குள்ளான நம்பிக்கையைப் பற்றியும் கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக வெள்ளமும், புயலும் காணக்கூடிய கட்டிடத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சோதிக்கப்பட்டபின்பு, சகலவிதமான அம்புகளையும் எதிர்த்து நின்று வெற்றிப் பெறுவோர்கள் தேவனுடையப் பார்வையில் மிக விலையேறப்பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று பேதுரு கூறுகிறார். இருளிலாவது, வெளிச்சத்திலாவது, சத்தியத்தின் போதனைகளில் மட்டும் அல்ல, நாம் தேவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மேல் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தில், நம்முடைய முழு இருதயமும், அதன் நோக்கங்களும், நாம் சத்தியத்திலும், நீதியின் மேலும் வைத்திருக்கும் வைராக்கியத்தையும் நாளுக்கு நாள் அதிகரித்து, உறுதிபட்டு, கிறிஸ்துவின் குணலட்சனங்களில் வளரும்போது, நமக்குள் இப்படிப்பட்டக் காரியங்களை எதிர்பார்க்கும் தேவனை பிரியப்படுத்தமுடியும்.
ஆகவே – “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” – 1பேது 4:12,13 இந்த வசனத்தின் அடிப்படை போதனைகளைப்பற்றி குறிப்பிடாமல், போதனைகளில் நிலைத்திருப்பதற்காவது, நீதியை நிலைநாட்டுவதற்காவது, கிறிஸ்துவின் நிமித்தம் வரும் உபத்திரவங்களினால் வரும் சோதனையைப்பற்றி சொல்லப்படுகிறது. ஆகவே அப்போஸ்தலன் குறிப்பிடும்போது – “கிறிஸ்துவின் நிமித்தம் துன்பப்படுத்தப்படுவீர்களானால், சந்தோஷப்பட்டுக் களிக்கூறுங்கள், ஏனெனில், தேவனுடைய மகிமையான ஆவி உங்கள் மேல் தங்கியிருக்கிறதே”. நாம் தவறுகளைச் செய்து பாடுகளை அனுபவியாமல், சத்தியத்தின் நிமித்தமாகப் பாடுகளைச் சகிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே நாம் கிறிஸ்தவ போதனைகளுக்காகவும், கிறிஸ்துவுக்காகவும், பாடுகளை அனுபவித்தால் நாம் வெட்கப்படாமல், இதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவோம்.
தானியேல் தீர்க்கதரிசி விசேஷவிதமாக இந்தகடைசி காலத்தைப்பற்றிக் கூறும்போது, “அநேகர் சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையும் தூய்மையுமாக்கப்படுவார்கள்”. மல்கியா கூறும்போது – “புடமிடகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும், தேவனுடைய ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள்”. “முடிவு பரியந்தம் நாம் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடவேண்டும்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். (1தீமோ 6:12, 2தீமோ 2:3) மேலும் சோதனையில் அகப்பட்டு உபத்திரவப்படும் அனைத்து தேவனுடைய ஜனங்களுக்கும் சங்கீதக்காரன் அநேக ஆறுதலான வசனங்களைக் கொடுத்திருக்கிறார். (சங் 77:1-14, 116:1-14, 34:19, 31-24, 2தெச 3:3) 
அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் எப்பக்கத்திலும், நெருக்கப்படுவதினால், தேவனுடைய பாதுகாப்பையும், அன்பையும், அரவணைப்பையும், அவர் உங்களுக்குக்கொடுத்த வாக்குத்தத்தங்களையும் சந்தேகிக்கிறீர்களா? சோர்ந்துப் போய் தளர்ந்து விட்டீர்களா? உங்கள் எதிராளி உங்களைவிட மிகவும் பலசாலி என்று நினைக்கிறீர்களா? உங்களை நசுக்கக்கூடிய பாரத்தோடு உபத்திரவங்கள் உங்களை எதிர்நோக்குகிறதா? உங்கள் தலை எதிர்க்கமுடியாத அளவிற்கு அதைச்சுற்றி பாரமான மேகங்கள் தொங்குகிறதா? மிகவும் எளிது – உங்கள் விசுவாசம் தன்னுடைய வெற்றியைக் கோரவேண்டும். இந்நேரத்தில் நீங்கள் உங்கள் விசுவாசத்தினால் சகலத்தையும் ஜெயிக்கலாம். இப்போது உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுகிறது. வருங்காலத்தில் நீதியின் சூரியன் உங்கள் மேல் பிரகாசிக்கும். இப்பொழுது நாம் அமைதியாக விசுவாசத்திற்கான அஸ்திபாரத்தைப் (அடிப்படை சத்தியங்கள்) போட்டு, அதில் கிறிஸ்துவின் குணலட்சணங்களைக் கட்டிடமாகக் கட்டவேண்டும். இப்பொழுது உங்கள் விசுவாசத்தை நிரூபிப்பதற்காக உலைக்களத்தில் போடப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே உங்கள் விசுவாசம் ஒழிந்துப்போகாமலிருக்க முழு தைரியத்தோடு, நீடிய பொறுமையுடன், சிந்தையில் சகல வாக்குத்தத்தங்களையும் பற்றிக்கொண்டு, பந்தயப் பொருளைப் பெற்றுக்கொள்ள அமைதியாக இருக்கக்கடவோம். “நீங்கள் பொறுமையோடு, விசுவாசத்தோடிருப்பதே உங்கள் பெலன்”. “கர்த்தருக்குள் இளைப்பாறி, அவருக்காகக் காத்திருங்கள்”. அப்போது விசுவாசத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அதற்கு பின் கர்த்தர் குறித்தக் காலத்தில் தேவனுடைய கரம் சகல கிரியைகளையும் உங்களுக்கு நன்மைக்கு ஏதுவாக அங்கீகரித்து உங்களுக்கு நன்மைகளைக் கட்டளையிடுவார். இப்படியாக மெய்ப்பிக்கப்பட்ட உங்கள் விசுவாசம் அக்கினியினால் சோதிக்கப்படும் அழியக்கூடிய பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்றது என்று பேதுரு கூறுகிறார்.
F721 – F729 – (19ம் கேள்வி காண்க) The End 2.3.10
மற்றவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து சபையின் வேலைகளை இதுவரைக்கும் நாம் கவனித்துவந்தோம். இப்பொழுது முதலாம் உயிர்த்தெழுதலைக் குறித்து வேத வசனங்கள் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம். புது சிருஷ்டிகள் எப்படிப்பட்ட சரீரத்தோடு எழும்புவார்கள்? அவர்கள் எப்படிப்பட்ட வல்லமையையும், குணலட்சணங்களையும் பெற்றிருப்பார்கள்?
“மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே, வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே” (1கொரி 15:48) என்று அப்போஸ்தலர் கூறுகிறார். பொதுவாக உலக ஜனங்கள் ஆதாம் பரிபூரணமாகப் படைக்கப்பட்ட நிலைக்கு அதாவது இந்த உலகத்தில் வந்த “மனிதனாகிய இயேசு கிறிஸ்துவைப்” போல் சீர்பொருந்தப்படுவார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. அப்பொழுது இந்த முழு உலகமும் தெய்வீகமான சிருஷ்டிகருடைய பூமிக்குரிய சாயலை முழுமையாகப் பெறுவதை எண்ணி நாம் களிக்கூறலாம். ஆனால் சுவிசேஷ யுகத்தின் சபை ஜனங்களாக அழைக்கப்பட்டவர்களுக்கு சில விசேஷித்த நோக்கங்களுக்காகத் தேவன் கொடுத்திருக்கும் விசேஷித்த வாக்குத்தத்தங்களுக்காக மேலும் நாம் களிக்கூறலாம். இவர்கள் தேவனுடைய சாயலைப் பெறக்கூடியவர்கள். அதாவது பூமிக்குரிய தேவனுடைய சாயலை அல்ல, பரலோகத்திற்குரிய ஆவிக்குரிய தேவனுடைய சாயலைப் பெறப்போகிறார்கள். “அவர் வெளிப்படும்போது, நாம் அவருக்கு (மகிமையடைந்த இயேசு) ஒப்பாக இருப்போம்…” என்று நாம் வாசிக்கிறோம். அவர் பரிபூரணமான மனிதன் நிலையைக் காட்டிலும், ஓராவிக்குரிய ஜீவியாகிய அவரை போல் மாறி, அவருடைய மகிமையிலும், வல்லமையிலும் பங்கடைந்தால் நாமும் பிதாவின் சாயலை பெறுவோம். நாம் தேவனுடைய சாயலைப் பெறுவதினால், “மனிதரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரிடம் நாம் சென்று, அவரை தரிசிக்கப் போகிறோம்” – 1யோவ 3:2, 1தீமோ 1:17, 6:16, யாத் 33:20
“மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே, வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே” என்ற வசனத்தை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது, அனைவரும் வானத்துக்குரிய சாயலைப் பெறுவோம் என்று பவுல் இங்கு குறிப்பிடவில்லை. இது தேவனுடைய திட்டமும் இல்லை. அவர் மனிதனை சிருஷ்டிக்கையில், பூமிக்குரிய ஜீவியாகவும், மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அவருடைய சாயலில் அவரை சிருஷ்டித்து, இந்தப் பூமியை ஆண்டுகொள்ளவும், பரலோக சிருஷ்டிகளைப் பிரதிநிதிகளாகவும் வைத்தார். (ஆதி 1:26, சங் 8:4-7) புது சிருஷ்டியின் தேர்வு பொறுத்தவரையில் இந்தப் பூமிக்குரிய படைப்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இவர்கள் உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்கள். இவர்கள் ஆயிர வருட ஆட்சியில் இந்த முழு உலகத்தையும் ஆசீர்வதிப்பதற்காக “சிறு மந்தையாக” தெரிந்துகொள்ளப்பட்டு, ஆண்டவரின் இராஜ்யத்தின் வகுப்பார் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆகவே இது மேலும், தெய்வீக திட்டங்களைச் செயல்படுத்த மிகப் பொறுப்பான ஒரு வேலையாக இருக்கிறது. 
ஆனால் அப்போஸ்தலன் மேலும், இதன் பொருளைக் குறித்த 50வது வசனத்தில் விளக்குகிறார் – “சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது, அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.” இப்படியாக நாம் இந்த மாம்சத்திலிருக்கும் நிலையையும், வருங்காலத்தில் ஆவிக்குரிய நிலையையும் பிரித்துக் காட்டுகிறார். ஆகவே நாம் இந்த மாம்சத்திலிருக்கும்வரை தேவனுடைய இராஜ்யமாக முடியாது என்று தெளிவாகக் கூறுகிறார். ஏனெனில், அது ஓர் ஆவிக்குரிய இராஜ்யம். அதில் ஆவிக்குரிய ஜீவிகள் மட்டுமே இருக்கமுடியும். நம்முடைய தலையும், வழிக்காட்டியுமான நம்முடைய ஆண்டவர் தாமே சபைக்கு மாதிரியாக இருப்பவர் இப்பொழுது ஆவிக்குரிய நிலையில் இருக்கிறார். “நாமும் அவரைப்போலிருப்போம்” – நியாயத்தீர்ப்பினால் இனி உலக ஜனங்கள் சீர்ப்பொருத்தப்படும், முந்தய ஏதேன் தோட்டத்தில் மனிதன் பெற்ற பூரண மாம்சத்தைப்போல் இது இல்லை.
சபை மாம்சத்திலிருந்து ஆவிக்குரிய நிலைக்கு மாற்றப்படுவதைப் பற்றிய கருத்தைப் புரிந்துகொள்வது மிகக் கடினமாக இருக்கும் என்ற உண்மையை பவுல் அறிந்திருந்தார். மரணத்தின் நித்திரையில் இருப்பவர்களைக் காட்டிலும், உயிரோடு மாம்சத்திலிருப்பவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் புரிந்துகொள்வது கடினாக இருக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். ஆண்டவருடைய பிரசன்னத்தில் உயிரோடிருக்கும் சபை வகுப்பார் ஆவிக்குரிய சரீரத்தைப் பெறுவதைக் காட்டிலும் மரித்தோர் புதிய ஆவிக்குரிய சரீரத்தில் எழுந்திருப்பார்கள் என்று புரிந்துகொள்வது எளிதாயிருக்கிறது. நம்முடைய ஆண்டவர் அப்போஸ்தலனாகிய பவுலின் மூலம் இதை நமக்கு தெளிவுபடுத்துகிறார் – “இதோ, ஓர் இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன், நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை, ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஓர் இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள், நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.” (1கொரி 15:51,52)
இதை ஒரு இரகசியம் என்று ஆண்டவர் அறிவித்தாலும், இதில் உள்ள மறைப்பொருளை சற்று புரியும்படி தெளிவுப்படுத்தினாலும், ஆண்டவரின் ஜனங்கள் “நித்திரை” அடைந்தார்கள் என்பதற்குப் பதிலாக “மரித்தார்கள்” என்று எழுதப்பட்டதன் பொருளைப்பற்றிய விளக்கம் சரியாக இங்கு கொடுக்கப்படவில்லை. ஆண்டவரின் பிரசன்னம் வரைக்கும் காத்திருக்கும் பரிசுத்தவான்கள் மரியாமல் எடுத்துக்கொள்வார்கள் என்ற கருத்து இங்கு விவரிக்கப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட காரியங்கள் எங்கும் சொல்லப்படவில்லை. அப்போஸ்தலர்களின் விஷயத்தில், அவர்கள் மரித்தார்கள், ஆனால் மரித்த நேரத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழுப்பப்படும் நொடிவரை நித்திரையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. “மரிப்பது” என்பது ஒரு நொடிப்பொழுதில் நடக்கக்கூடியது ஆனால், “நித்திரை” என்பது உணர்வற்ற நிலையில் பல நூற்றாண்டுகளாக இருப்பது.
ஆகவே, புரிந்துகொள்வதற்காக இங்கு ‘நித்திரை” என்ற வார்த்தை பவுலின் வசனத்தோடு இணைக்கப்படவேண்டும். அதாவது இயேசுவின் பிரசன்னம் வரைக்கும் மாம்சத்திலிருக்கும் தேவனுடைய ஜனங்கள் மரணத்தில் நித்திரையடைவதற்கு அவசியமில்லை. தேவன் அறிவித்தபடி சபை வகுப்பாரும் மரிப்பார்கள் – “நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்”. -(சங் 82:6,7) பொதுவாக உலகத்தார் பிரபுவாகிய ஆதாமைப் போல் மரிக்கிறார்கள். ஆனால் இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்கள் இயேசுவாகிய பிரபுவோடு மரிக்கிறார்கள். (ஏசாயா 9:6, அப்போஸ்தலர் 3:15, 5:31) அவருடைய பலியின் மூலம் நீதிமானாக்கப்பட்டு, அவரோடு பலியின் மரணத்தில் மரிக்கிறார்கள். இரண்டாம் பிரபுவைப்போல அவர்கள் மரணத்தில் “விழுகிறார்கள்”. “நாம் அவரோடுக்கூட மரித்தால், அவரோடுக்கூட உயிர்த்தெழுப்பப்படுவோம்.” இங்கு அப்போஸ்தலனாகிய பவுல், மரணத்தை உணர்வற்ற நிலையாகக் குறிப்பிடுவதில்லை. மாறாக, மரிக்கும் அந்தக்ஷணமே அவர்களுக்குப் பரலோகவீட்டின் ஆவிக்குரிய மேனி கொடுக்கப்படும்.
இயேசுவின் பிரசன்னம் வரைக்கும் காத்திருக்கும், சபை வகுப்பார், மரித்த அந்த நொடிப்பொழுதில் மாற்றமடைவார்கள் (மறுரூபம்) என்பதை முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, சபை வகுப்பார் அனைவருக்கும் மரணத்தின் அனுபவம் பொதுவானது. அதில் எந்த வித்தயாசமும் இல்லை. இயேசுவின் பிரசன்னத்திற்கு முன் மரித்தவர்களுக்கும், அதற்கு பின் மரிப்பவர்களுக்கும் ஒரேவிதமான அனுபவங்கள் நேரிடும். ஆனால் இயேசுவின் பிரசன்னத்திற்குப் பின் மரிப்பவர்கள் மரித்த நிலையில் விடப்படுவதில்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, “அவர்கள் நித்திரையடைவதில்லை” என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார். இதற்கு மற்றொரு கருத்தை நாம் சிந்திக்கையில், இயேசுவின் பிரசன்னத்திற்குப் பின் மரிப்பவர்கள் இராஜ்யம் வருவதற்கும் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அது முன்னதாகவே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. இப்படியிருக்க, இயேசுவின் பிரசன்னத்திற்குப் பின் மாம்சத்தில் தேவனுக்குரிய வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள், மரித்தவுடன் அதே காரியங்களைப் பூரணமடைந்த புது சிருஷடிகளாக, கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக ஆவிக்குரிய நிலையில் தொடர்ந்து செய்வார்கள்.
“…இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை…”
புது சிருஷ்டிகளின் வல்லமை மற்றும் அம்சங்களைப் பொறுத்தவரையில், அதே மகிமை பெறுவார்களே தவிர அந்த மகிமையிலுள்ள நிலைகள் வேறுபடும் என்று அப்போஸ்தலர் இங்கு கூறுகிறார். ஆனாலும் அனைவரும் ஆவிக்குரிய மகிமையில் இருப்பார்கள். அதாவது, ஆவிக்குரிய நிலையை அடைபவர்களுக்குப் பொதுவான ஒரு மகிமை இருக்கும், அதேபோல் பூமிக்குரிய மேனியைப் பெறுபவர்களுக்கும் ஒரு பொதுவான மகிமை இருக்கும். அவரவர் தங்களுடைய பூரண நிலையில் மகிமையுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் பரலோகத்திற்குரியவர்களின் மகிமை எல்லாவற்றிற்கும் மேலானதாக இருக்கும். சபையைக் குறித்துச் சொல்லும்போது, அவர்கள் சூரியனைப் போலிருப்பார்கள் என்று வசனம் குறிப்பிடுகிறது. (மத் 13:43) கோதுமை வகுப்பாராக இருக்கும் அனைவரையும் நம்முடைய ஆண்டவர் வருங்காலத்தில் மகிமையடைவார்கள் என்று சொல்லியிருந்தாலும், அப்போஸ்தலனாகிய பவுல் சபை வகுப்பார் ஒவ்வொருவரும் பெறப்போகிற மகிமைகளில் உள்ள வித்தியாசங்களைப்பற்றி தெளிவாகக் கூறுகிறார். ஆகவே சபை வகுப்பார் ஒவ்வொருவரின் நிலையும், மகிமையும் வேறுபடும். அனைவரும் பூரணமாக இருப்பார்கள். அனைவரும் திருப்தியடைவார்கள் ஆனால் சகலத்திற்கும் மேலான பிதாவாகிய தேவன், தனக்கு அடுத்தவராக சகலத்திற்கும் மேலானவராக குமாரனை உயர்த்தியிருக்கிறார். இவர்களின் மகிமை, கனம், மற்றும் அதிகாரத்தில் உள்ள வித்தியாசத்தை நாம் காணலாம். இதேபோல் ஆண்டவரைப் பின்பற்றுபவர்கள் மத்தியிலும் இத்தகைய வித்தியாசங்கள் இருக்கும். “சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.” (1கொரி 15:41)
நம்முடைய ஆண்டவர் சொன்ன இரண்டு உவமைகளில், இந்த வித்தியாசத்தை அவர் உணர்த்துகிறார். பத்து ராத்தல் திரவியம் பெற்றவர்களில் ஒருவன் வந்து பத்து ராத்தல் ஆதாயம் கண்டேன் என்று சொன்னவுடன் அவனை பத்து பட்டணங்களுக்கு அதிகாரியாக்கினார். ஐந்து ராத்தல் ஆதாயம் தேடினவருக்கும் ஐந்து பட்டணங்களைக் கொடுத்தார். (லூக் 19:11-27) இப்படியாக அவனவன் கிரியைக்குத் தக்கதாக அதிகாரத்தையும், கனத்தையும் சேர்த்துக் கொடுப்பார்.
இதை குறித்து நாம் ஆச்சரியப்படவேண்டாம். ஆண்டவர் தேர்ந்தெடுத்த பன்னிரெண்டு அப்போஸ்தலர்களை அவர் நேசித்தாலும், அவர்களில் மூன்று பேரை அதிகமாக நேசித்தார். இந்த மூவரிடமும் அவர் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். அநேக முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்கள் அவரோடே இருந்தார்கள். “ஜீவ புத்தகம்” திறக்கப்பட்டப்பின் நம்முடைய ஆண்டவர் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய வலது பக்கத்தில் அப்போஸ்தலனாகிய பவுலையும், இடது பக்கத்தில் யோவானையும் கண்டு நாம் ஆச்சரியப்படவேண்டாம். இது சிங்காசனத்தைக் குறித்தக் காரியம் அல்ல, தேவனால் கையளிக்கப்படும் அதிகாரம் மற்றும் மகிமைக்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் சிறு மந்தை வகுப்பார் தேவ ஆவியைப் பூரணமாகப் பெற்றதினால், ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். நிச்சயமாக, அவர்களுக்குள் பொறாமை இராது. ஒவ்வொருவரும் பெறக்கூடிய மகிமைக்கு ஏதுவான தெய்வீக நியாயத்தீர்ப்பைப் புது சிருஷ்டிகள் முழுமையாக அங்கீகரிப்பார்கள். இக்காலத்திலும் இந்த காரியங்களை நாம் காணலாம். தேவன் அவர் விரும்பியபடி கிறிஸ்துவின் சரீரத்தில் ஒவ்வொருவரையும் அங்கமாக நியமித்திருக்கிறார். தேவனைத் தொடர்ந்து தேடும் அனைவரும் அவருடைய திட்டங்களை என்றுமே மாற்றுவதில்லை, மாறாக அதை புரிந்துகொண்டு, அதற்கு இசைவாக செயல்படுவார்கள். அதேபோல் வருங்காலத்திலும் நடக்கும்.
இக்கால நிலையையும், வருங்கால நிலையையும் குறித்த வித்தியாசங்களைப்பற்றி விவரிக்கும்போது, – “அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.” வசனத்தில் “இது” என்ற வார்த்தை புது சிருஷ்டியை குறிப்பிடுகிறது. ஞானஸ்நானத்தின்போது இந்தப் புது சிருஷ்டி கருத்தரிக்கப்பட்டது. அது வளர்ச்சியடையும்போது மாம்சத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தெய்வீக சித்தத்தின் ஊழியக்காரனாக மாற்றியது. அதற்கு பின் அழிவுள்ள சரீரத்திலிருக்கும் புது சிருஷ்டி ஒரு புதிய சரீரத்திற்காகக் காத்திருக்கிறது. ஆகவே அழிவுள்ள சரீரத்தில் இருக்கும் புது சிருஷ்டி மரித்ததாகச் சொல்லப்பட்டாலும், சரீரம் மரித்தவுடன் அது மறுரூபமடைந்து, பரலோக வீட்டின் ஆவிக்குரிய மேனியை முதலாம் உயிர்த்தெழுதலில் பெற்றுக் கொள்கிறது.
உயிர்த்தெழுதலில் புது சிருஷ்டி பெறும் ஆவிக்குரிய மேனி அழியாதது என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார். அது மரிக்காது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை – “அப்த்தாரிசியா”. இதற்கு இனி மரணம் இல்லை என்பது பொருளாகும். (அழியாமை, சாகாமை) 1 கொரி 50,53,54 ம் வசனங்களில் இதே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ரோமர் 2:7 மற்றும் 2தீமோ 1:10ல் அதே கிரேக்க வார்த்தை (“அழியாமை”) பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
நம்முடைய ஆவிக்குரிய சரீரங்கள் அழிவைக் காண்பதில்லை என்ற காரியம் பெரும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், இந்தக் குணாதிசயம் பிதாவாகிய யேகோவா தேவனுக்கு மட்டுமே உள்ளது என்று நாம் அறிந்ததே. மேலும் நம்முடைய ஆண்டவராம் இயேசு முடிவு பரியந்தம் தன்னுடைய விசுவாசத்தைக் காத்துக் கொண்டு, தேவனுக்குக் கீழப்படிந்ததால் பிதாவாகிய தேவன் தம்மில்தாம் ஜீவனுடையவராக இருப்பதுபோல, இயேசுவும் தம்மில்தாம் ஜீவனுடையவரானார். சபைக்கு தலையானவர் திவ்விய சுபாவத்தில் பங்கடைவதற்கு, மகிமையால் முடிச்சூட்டப்பட்டு அழியாமையை சுதந்தரித்துக் கொண்டார். தேவன் நம்முடைய இரட்சகருக்கு இப்படிப்பட்டவைகளைத் தந்தது மிகவும் நியாயமானவைகள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இவ்வனைத்தையும் பெற நம்முடைய இரட்சகர் மட்டுமே தகுதி பெற்றிருக்க, அவருடைய சரீர அங்கத்தினர்களுக்கும் தேவன் வாக்களித்திருக்கிறார் என்பதை நாம் நினைக்கும்போது மிகவும் திகைப்பாக இருக்கிறது. “சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.” (ரோம 2:7, 2பேது 1:4)
“கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும் இங்கு மீண்டுமாக புது சிருஷ்டி “இது” என்று குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் இந்த உலகம் நம்மை அறியாது. நாம் பிதாவால் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும், அவருடைய பிள்ளைகளாக இந்த மாம்ச சரீரத்தில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பலியின் உடன்படிக்கையை நாம் விசுவாசத்தோடு நிறைவேற்றுவதற்காகவே, தற்காலிகமாக தரித்திருக்கிறோம் என்பதையும் உலகம் அறியாது. “இப்பொழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம்…” ஆனால் இதை உலகம் உணரவில்லை. நாம் தேவனோடு உடன்படிக்கை செய்திருப்பதால் நாம் இந்த உலக ஜனங்கள் மத்தியில் மேன்மையான பதவிகளை அடையமுடியாது. நாம் இவர்கள் மத்தியில் சராசரி மனிதர்களாக இருக்கிறோம். எந்தச் சூழ்நிலைகளிலும், தனிப்பட்ட நபர்களாகவும், பொதுவான சபையாக இருந்தாலும், நாம் துச்சமாக மதிக்கப்படுகிறோம் (உலகம் நம்மை ஏற்றுகொள்ளாது) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கருதுகிறார். ஆகவே நம்மை “அற்பமான சரீரம்” (பிலி 3:21) என்று குறிப்பிடுகிறார். ஆனால் வரக்கூடிய காலத்தில் நிலைமை என்னவாக மாறும்? இந்தச் சபை (தலை மற்றும் சரீரம்) தூதர்கள் மற்றும் மனிதர்களுக்கு முன்பாக கனம்பெறுவார்கள். புது சிருஷ்டிகள் மகிமையடைவார்கள். இதுவே நமக்களிக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தம்.
“பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.” அழியக்கூடிய மாம்ச சரீரத்தில் இருக்கும் புது சிருஷ்டியை இங்கு “பலவீனமுள்ளதாய்” என்று குறிப்பிடப்படுகிறது. எல்லா புது சிருஷ்டிகளும், இந்த அபூரணமான, விழுந்துபோன மாம்சத்தில் வருத்தப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனிடத்தில் புதுசிருஷ்டிகளின் நோக்கங்கள், நேர்மையாகவும், பூரணமாகவும், உண்மையாகவும், உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில், இவைகளை புது சிருஷ்டிகளின் பலவீனங்களாகத் தேவன் கருதாமல், தம்முடைய மிகுந்த கிருபையினால், அவைகளை மன்னிக்கிறார். இவர்கள் பெறப்போகும் புதிதான சரீரங்களுக்கு இப்படிப்பட்ட பலவீனங்கள் ஒட்டிக்கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே – “பலமுள்ளதாய் எழுந்திருக்கும்” என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய வல்லமையாகிய, புது சுபாவத்தின் வல்லமை அதாவது பூரணமான வல்லமை கொடுக்கப்படும்.
“ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும் இப்பொழுது புது சிருஷ்டி ஜென்மசரீரமாக இருக்கிறது. மாம்சத்திலிருந்து கொண்டுப் போராடுகிறது. தேவனுடைய சுத்தக் கிருபையினால் மட்டுமே, புது சிந்தையை அவர் புது சிருஷ்டியாகக் கருதுகிறார். குறித்தக்காலம் நிறைவேறும்போது, இந்தப் புது சிந்தைக்கு ஏற்ற ஒரு புது சரீரத்தை தேவன் கொடுப்பார். ஆகவே இப்பொழுது பெற்றிருக்கும் மாம்ச சரீரத்தைப் போலவே, புதிதான ஆவிக்குரிய சரீரத்தையும் புது சிருஷ்டி பெற்றுக்கொள்ளும். எப்படிப்பட்ட மகிமையான ஒரு திட்டம். உண்மையில், சராசரி மனிதனால் உணர்ந்துக் கொள்ளமுடியாத இந்த அனுபவத்தை, நாம் வசனத்தின் மூலம் நம்முடைய சிந்தையையும், வாக்குத்தத்தங்களையும், தேவனுடைய வெளிப்பாட்டையும் “இதுவரைக்கும் காணக்கூடாதவைகளையும்” உறுதியாக விசுவாசிக்கிறது.
ஒருவேளை, இனி வரக்கூடிய மகிமையின் சிந்தனைகள், நம்மை இந்த உலகத்தையும், அதின் காரியங்களையும், சோதனைகளையும், மூடத்தனங்களையும், சந்தோஷங்களையும் விட்டுப்பிரித்து, நம்முடைய ஆண்டவரின் பரிபூரணத்திலும், மகிமையிலும் பங்கெடுப்போம் என்ற காரியங்கள் எவ்வளவு உண்மையானது என்று நமக்கு விளங்கும். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை – ஏனெனில் நம்முடைய ஆண்டவர் நிக்கொதேமைப் பார்த்து – “பூமிக்கடுத்தக் காரியங்களை நான் உங்களுக்கு சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்”? என்று கேட்டார். ஆகவே பரலோகக் காரியங்களைப்பற்றி புரிந்துகொள்வதற்கு நாம் முதலில் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட வேண்டும். அதற்கு பின் கேள்விக்கு இடமில்லாமல், இந்த சுவிசேஷ யுகத்தில் ஆவிக்குரிய ஓட்டத்திற்கான வாய்ப்பு நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. நாம் பெறும் தெய்வீக ஆலோசனைகள் மற்றும் உலகத்தை எந்த அளவிற்கு வெறுக்கிறோமோ, எந்த அளவிற்கு பாவமான பாரமான சகலத்தையும் தள்ளிவிடுகிறோமோ, எந்த அளவிற்கு சபைக்கூடுதலை அசட்டை செய்யாமல் இருக்கிறோமோ, எந்த அளவிற்கு அனுதினமும் வசனங்களைத் தேடி ஆராய்ந்துகொண்டிருக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் இந்த உலகத்தின் ஆவியை மேற்கொண்டு, சாத்தானுடைய தந்திரங்களுக்கு நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆகவே நாம் அனுதினமும் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், கிருபைகளையும், ஆசீர்வாதங்களையும் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டக் காரியங்களை நாம் செய்வோமேயானால், நாம் நிச்சயமாக தோல்வியடைவதில்லை, மாறாக, நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமான இயேசுவின் நித்திய இராஜ்யத்தில் சந்தோஷமாக அனுமதிக்கப்படுவோம். (1யோவ 3:2,3, ரோமர் 8:17, யோவ 3:12, 1கொரி 2:14, 1யோவான் 2:15, எபே 6:10-18, எபி 12:1-2,10:25, யோவ 5:29, அப் 17:11, 2பேது 1:4-11)
R2642 – “விசுவாசத்தின் முழு உறுதி” (23ம் கேள்வி காண்க)
“என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.” – சங் 23:6
சரியான நிலையில் இருக்கும் தேவ ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முழு நம்பிக்கையின் காப்புறுதியையும், விசுவாசத்தின் முழு காப்புறுதியையும் பற்றி பரிசுத்தவானாகிய பவுல் பேசுகிறார். (எபி 6:11,10:22) இதே கருத்தை தாவீது பக்தனும் வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் – “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி…” (பிலி 1:5) இப்படிப்பட்ட வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும், வெகு சில கிறிஸ்தவர்கள் மட்டுமே, விசுவாசத்தை முழுமையாக நம்புகிறார்கள். “நாங்கள் தேவனை நேசிப்பதினால், தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களின்படி நாங்கள் பரலோக இராஜ்யத்தில் மகிமையான நிலையை அடைவதற்கு தேவனுடைய சகலவிதமான நன்மைகளும், கிருபைகளும் எங்களைத் தொடரும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தைரியமாக சிலர் மட்டுமே இப்படி சொல்லமுடிகிறது. இந்தச் சிலர் மட்டுமே மிகுந்த சந்தோஷத்துடன், ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட இருதயத்தை மற்றவர்களிடம் காணமுடிகிறதில்லை. இப்படிப்பட்ட இருதயத்தைப்பெற அவர்களைத் தடுப்பது எது? ஆகவே விசுவாசத்திற்குள் இளைப்பாறுகிறவர்களின் எண்ணிக்கை இவ்வளவு சிறிதாக இருப்பதன் காரணத்தை நாம் காணலாம். இவர்களின் தடுக்கல் அதாவது தடைகள் என்ன? இந்தத் தடைகள் எப்படி அகற்றப்படுவது?
இரண்டு விதமான தடைகள் உள்ளது –
(1) தேவனுடைய பக்கத்தில் இருக்கும் அநேகர், அவரால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சத்தியத்தின் அறிவை அதிகம் பெற்றவர்கள், இயேசுவின் ஈடுபலியின் மேல் விசுவாசம் வைத்தவர்கள், வருங்கால ஜீவியத்திற்கு பலியின் ஜீவியமே முக்கியம் என்று உணர்ந்தவர்கள், இப்படியாக நீதிமானாக்கப்பட்டவர்கள், அடுத்து தேவனுடைய குடும்பத்தில் அவருடைய பிள்ளையாகவும், கிறிஸ்துவின் உடன் சுதந்தரராகவும், அவருடைய வாக்குத்தத்தங்களுக்குப் பங்காளிகளாவதற்கான அடுத்த நிலையை அவர்கள் இன்னும் கடக்காமலிருக்கிறார்கள். நம்முடைய அர்ப்பணிப்புக்கான முழு நோக்கம் இதுவே. நம்முடைய விருப்பங்களையும், நோக்கங்களையும், எதிர்காலத்தைக் குறித்தக் கவலைகளையும், இலக்குகளையும், நம்முடைய நேரங்களையும், செல்வாக்குகளையும், நாம் பெற்ற யாவையும் முழுமையாக தேவனுக்கென்று கொடுத்துவிட்டு, அவரிடம் சரணடைய வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்காவிட்டால், நாம் இன்னும் கிறிஸ்துவின் சிலுவையை எடுத்து அவர்பின் செல்லவில்லை என்று பொருளாகும். இப்பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்களை இக்காலத்துக்குரியதா? அல்லது வருங்காலத்திற்குரியதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு கோணத்தில் பார்க்கும்போது சரியாகவும் தோன்றுகிறது. ஏனெனில், அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, தங்களுடைய சரீரங்களை தேவனுக்கு ஏற்ற பலிகளாக நம்முடைய ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் மூலம் செலுத்தாவிட்டால், இந்தக் கேள்விக்கானப் பதிலை நிச்சயமாக அவர்களால் உணரமுடியாது.
இவர்கள் இனி ஒருபோதும் காலம் தாமதிக்கக்கூடாது என்று நாம் அவர்களுக்கு புத்திசொல்லுகிறோம். சர்வவல்லமையுள்ள தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் நழுவ விடக்கூடாது. இனி மேலும் அவர்கள் அதே நிலையில் நின்றுவிட்டு, தேவனுடைய கிருபைகளைப் பயன்படுத்த தவறிவிட்டால் இதுவரைக்கும் நாம் பெற்ற தேவனுடைய சகல காரியமும் வீணாய்போய்விடும். (2கொரி 6:1) இயேசு கிறிஸ்துவின் மீட்பின் அறிவைப் பெற்ற யாவரும், பாவ மன்னிப்பைப் பெறவும், விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்படவும், தேவனுடைய கிருபை இலவசமாகப் பொழியப்படுகிறது. நாம் செலுத்தக்கூடிய ஜீவ பலிகள், கிறஸ்துவின் பலியின் மூலம் தேவனுடைய பார்வையில், அவருடைய பலிபீடத்தின் மேல் அங்கீகரிக்கப்படுவதற்காகவே இப்படிப்பட்ட இலவசமான கிருபை கொடுக்கப்படுகிறது. தேவன் கொடுக்கும் கிருபைக்கு ஒரே நோக்கம் இதுவே.
ஆகவே யாதொருவர் இவைகளை உணர்ந்து, வாய்ப்புகளை அறிந்தும், தான் பெற்றிருக்கும் மிகச்சிறிய பங்கை அர்ப்பணிக்க மறுக்கிறார்களோ! அவர்கள் கிறிஸ்துவின் அன்பைப் பெறாதபடிக்கு தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, தங்கள் மேல் பொழியப்படும் கிருபையையும், இரக்கத்தையும் உணர மறுக்கிறார்கள். தாங்கள் பெற்ற வாய்ப்புகளைப் புறக்கணிக்கும் இவர்கள், தங்களுடைய அபூரணமானப் பலிகளைச் செலுத்தத்தவறிய இவர்கள், இயேசுவின் இராஜ்யத்தில் அதற்கு அதிகமான நஷ்டத்தை அடைவார்கள். இவர்கள் தேவனுடைய கிருபையை வீணிலே வழங்கி, எந்த நன்மையையும் பெறாமல், எல்லாவற்றிற்கும் மேல் இருளில் இருக்கும் உலகக் காரியங்களில் மூழ்கிவிடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்? உடனடியாக, தங்களை தேவனுடைய பணியில் அர்ப்பணிக்கவேண்டும். காரியம் சிறிதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி. ஆனால் இக்காலத்தில் எந்தவிதமான நன்மைகளும் பெறாவிட்டாலும், அவர்கள் பெற்றக் கிருபையை அவர்களின் கிரியைகளினால் எப்படியாவது வெளிப்படுத்தவேண்டும். நாம் பெறும் சிறுசிறு தெய்வீகக் கிருபைகளையும் நாம் புரிந்துகொண்டு போராடவேண்டும். ஆனால் பலவீனமான சிந்தை, நியாயத்தீர்ப்புகள் நம்மை மீண்டும் இந்த உலகக் காரியங்களில் இழுத்து விடாதபடிக்கு எச்சரிப்போடிருக்கவேண்டும். ஏனெனில், விழுந்துபோன சிந்தையானது சகலத்தையும் சீர்தூக்கிப்பார்க்க மறுக்கும். நாம் உபத்திரவப்படவேண்டியது இன்னும் கொஞ்சம் காலம் தான், ஆனால் நம்முடைய ஆண்டவரோடு, அனுபவிக்கப் போகிற நித்திய சந்தோஷத்திற்கும், ஆசீர்வாதங்களுக்கும், மகிமைக்கும் அளவே இல்லை.
அடுத்து, உண்மையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள், முழுமையாக இக்காலத்தில் பெற்றிருக்கும் ஆவிக்குரிய ஜுவியத்தில் முழுமையாக மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் இந்த உலகம் கொடுக்க முடியாததும், எடுக்கமுடியாததுமான தெய்வீக சமாதானத்தை அவர்களின் உள்ளம் பெற்றிருக்கும். இந்த முழு உலகம் தேடியும், தவித்தும் பெறமுடியாததை, தேவனிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அவருடைய ஜனங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே நிர்விசாரமானவர்களைத் தேவனோடு அவர்களின் உடன்படிக்கையை புதுப்பித்துக்கொள்ள நாங்கள் வேண்டுகிறோம். இதுவே தேவனுடைய சுதந்தரத்திற்கு அவர்களைப் பங்காளிகளாக ஆக்கமுடியும். ஆகவே அவர்கள் “விசுவாசத்தின் முழு காப்புறுதியின்” மற்றும் “தேவனுடைய கிருபை, நன்மை இந்தக் காலத்திலும், வருங்காலத்திலும் அவர்களை பின் தொடர்ந்து, பரலோக வீட்டில் நித்தியமாக பிரவேசிப்போம் என்ற முழு நம்பிக்கையின்” அஸ்திபாரத்தை அடித்தளமிட்டு, அதற்குள் பிரவேசிக்க வேண்டும்.
(2) உண்மையான கிறிஸ்தவர்கள் மத்தியில், தங்களை முழுமையாக ஜீவபலியாக தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்தவர்களில் அநேகர் – “தேவனுடைய நன்மைகளையும் கிருபைகளையும் இப்போதே நாங்கள் உணருகிறோம். இவைகள் எங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து எங்களை நடத்தும். நாம் நித்தியமான தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம். ஆகவே எங்களிடம் முழுமையான நம்பிக்கையும், விசுவாசத்தின் உறுதியும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டோம், ஆவருடைய கிருபையினால் நாங்கள் அனைத்தையும் மேற்கொள்ளுவோம்” என்று தைரியமாக கூறுகிறார்கள். ஆனால் இந்த வகுப்பாரின் குறை என்ன? இவர்கள் தேவன் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தில் சற்று குறைவு படுகிறார்கள். “விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதக் காரியம், “நம்முடைய விசுவாசம் உலகத்தை ஜெயிக்கும் ஜெயமாக இருக்கவேண்டும்” விசுவாசத்தின் கேடயத்தைப் பிடித்திராதவர்கள் சாத்தானை எதிர்க்கமுடியாது. (எபி 11:6, 1யோவ 5:6)
 நம்முடைய விசுவாசத்தின் குறைச்சலை மேற்கொள்வதற்கும், விசுவாசத்தை அதிகரிப்பதற்கும் நாம் என்னசெய்யவேண்டும்? “ஆண்டவரே எங்கள் விசுவாசத்தை அதிகரித்தருளும்” என்று நாம் அப்போஸ்தலரைப்போல் ஜெபித்து விட்டு, அதற்கு இசைவான கிரியைகளை நடப்பித்து, நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை வளர்க்கவேண்டும்.
(a) தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்முடைய நினைவில் ஓயாமல் சிந்தித்து, தேவனுடைய வார்த்தைகளில் பரிட்சயமாக இருக்கவேண்டும்.
(b) நாம் தேவனோடு செய்த உடன்படிக்கையைத் தொடர்ந்து நினைவில் கொள்வதற்கு நம்முடைய இருதயத்திலும், உதடுகளிலும், அறிக்கையிட்டு அவருக்கு நன்றிகளை ஏறெடுக்க வேண்டும். நம்முடைய சிந்தையிலும், சகோதரர்களோடு சம்பாஷிக்கும் போதும் பரிசுத்தமான சிந்தைகளோடு அவைகளைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.
R2005 col. 2 – R2006 col.1 (24ம் கேள்வியை காண்க)
நாம் எதிர்பார்க்காத காரியங்களுக்காக “வீணான காரியங்களைத் திரும்பத்திரும்ப” நம்முடைய ஜெபங்களில் ஏறெடுப்பதற்கு அவசியமில்லை. ஆகவே நாம் “எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கவேண்டும்” (யாக் 1:6) மேலும், எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், ஏனெனில் “விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” -(மாற் 11:24, ரோம 14:23)
ஆகவே தேவனுடைய பிள்ளைகள் தந்தையின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் மாணவர்களாக இருக்கவேண்டும். நாம் பெற்றுக்கொள்ள வேண்டியதை அவரிடம் கேட்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதனால் அவரின் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. ஆனாலும் அவர் நமக்கு மனப்பூர்வமாகக் கொடுக்கும் காரியங்களை மட்டுமே நாம் கேட்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இவைகளை நாம் முழு விசுவாசத்தோடே கேட்கவேண்டும்.
நிச்சயமாக, இத்தகைய ஜெபங்களில் தேவன் நம்முடைய இருதயத்தின் விசுவாசத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு எந்த சந்தேகமும் இல்லை. “விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதக் காரியம்” என்று வாசிக்கிறோம். “நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசமே இந்த உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்” என்றும் வாசிக்கிறோம். ஆகவே விசுவாசத்தை வளர்த்துக் கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை ஜெபத்தில் வேண்டுபவர்கள் நிச்சயமாக தேவனுடைய நியாயத்தீர்ப்பில் அவைகளைப் பெற்றுக் கொள்வார்கள். அப்போஸ்தலர்கள் மத்தியில் இருந்ததுப்போல் இந்நாளிலும், நம்மத்தியில் – “ஆண்டவரே, எங்களுடைய விசுவாசத்தை அதிகரித்தருளும்” என்ற ஜெபம் காணப்படவேண்டும். அவிசுவாசமானக் காரியங்களில் நாம் விழுந்துவிடாதபடிக்கு, முடிவு பரியந்தம் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க மேலும் நாம் ஜெபிக்க வேண்டும்.
உண்மையான விசுவாசம் எதையும் எளிதில் நம்பாது. நன்மையான, தக்க ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நம்பும். தேவனுடைய வார்த்தைகளுக்கும், மனுஷனுடைய ஞானத்திற்கும் உள்ள விசுவாசத்தை மிகத் தெளிவாக சீர்தூக்கிப் பார்க்கும். ஆனால் தேவனுடைய வார்த்தைகளைக் கண்டுபிடித்தால், அவர் என்றுமே பொய்யுரையாதவர் என்றும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் நோக்கங்களையும் நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்றும் அறிந்ததினால், நிச்சயமாக அதில் நம்பிக்கை வைக்கும்.
அதற்கு பின் உண்மையான விசுவாசம், ஆண்டவரின் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்தி, அவனுடைய அஸ்திபாரத்தைப் பெலப்படுத்தும். அதற்கு அவருடைய வார்த்தைகளுக்குத் தகுந்தபடி நம்பிக்கையான பதில்வர, பொறுமையோடு, ஜெபத்தில் காத்திருக்க வேண்டும். “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், மேலும் “நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்” என்று விசுவாசியுங்கள். இவைகளைச் சொல்லி முடித்தப்பின் நம்முடைய ஆண்டவர் ஓர் அநீதியான நியாயாதிபதியினிடத்தில் ஓயாமல் தொந்தரவு செய்த ஒரு விதவைக்கு பதில் அளிக்கப்பட்ட ஓர் உவமையைச் சொன்னார். இப்படியிருக்க நீதியுள்ள நியாயாதிபதியான தேவன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விண்ணப்பத்தைக் கேட்காமல் இருப்பாரோ. நீண்ட காலமாக தேவன் பழிவாங்குவதற்காகக் காத்திருந்தாலும் அவர் “குறித்த காலம்” வரைக்கும் காத்திருக்கவேண்டும். ஆகவே “சோர்ந்துப் போகாமல் தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற காரியத்தை உறுதிபடுத்த அந்த உவமையைச் சொன்னார். (லூக் 18:1)
நம்முடைய சராசரி விருப்பங்களுக்காக நாம் விசுவாசத்தோடு, விடாமுயற்சியோடு ஜெபிக்கையில், வசனங்களிலிருந்து, நமக்கு தேவையானக் கட்டளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் சிறுபிள்ளைகள் போல, மேலிருந்து வரும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாகக் காணப்பட வேண்டும். ஆகவே – “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீகள்.” – (யோவ 16:24) என்ற வசனத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தாங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவும், விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்பவர்களுக்கு மிகுதியான ஆசீர்வாதங்களையும், கிருபைகளையும் தேவன் தன் வசத்தில் வைத்திருக்கிறார்.
உண்மையில், சில நேர்மையானதும், ஏற்றதுமான காரியங்களுக்காக ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கான பதில் நீண்ட காலம் தாமதிக்கலாம். எடுத்துக்காட்டாக – “உம்முடைய இராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல இப்பூமியிலும் செய்யப்படுவதாக” என்று பதினெட்டு நூற்றாண்டுகளாக சபை ஜெபித்துக் கொண்டிருந்தாலும், அதற்கான பதில் இன்னும் வழங்கப்படவில்லை. இத்தனை காலங்களாக ஜெபித்தும் அதை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்தும், அந்த இராஜ்யத்தை கண்ணினால் காணாமல் அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் சபை ஜனங்களின் விசுவாசத்திற்கு ஏற்றவாறு இக்காலத்தில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எப்படியாயினும், நம்முடைய அன்றாட உணவு, தற்காலிகமான தேவைகள், தீமையிலிருந்து விடுதலை இன்னும் பலகாரியங்களுக்காகச் செய்யப்படும் ஜெபங்களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படுகிறது.
இந்த காரியங்களை பார்க்கும்போது, ஜெபத்தின் உரிமையையும் மற்றும் தேவனுடைய மற்ற கிருபைகளையும், சுயநலமான நோக்கங்களுக்காக தேவன் என்றுமே பதில் அளிப்பதில்லை என்று தெளிவாக தெரிகிறது. நேர்மையாக ஒருவரால் கேட்கப்படும் காரியம் மற்றவருக்கும் வேறொரு கோணத்தில் அதே காரியம் தவறாகத் தோன்றலாம். நாம் சதோதரர்கள் மத்தியில் மகிமை அல்லது மேன்மை அடைவதற்காக தன்னில்தான் நன்மையானக் காரியங்களைத் தவறான நோக்குடன் விரும்பி கேட்பதும் ஒரு தவறான விண்ணப்பமாகும்.
இயல்பாக, நன்மையானக் காரியங்களுக்காகவும், நம்முடைய சௌகரியத்திற்காகவும் நம்முடைய விருப்பங்கள் அதிகரிப்பது ஒரு சுயநலமான நோக்கமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைக் குறித்து – “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.” (யாக் 4:3) என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். நாம் சோதிப்பதற்காக சில நன்மையானக் காரியங்களை ஜெபத்தில் கேட்பதும், அதன் மூலமாக நாம் விசுவாசத்தை ஸ்தாபிப்பதும், ஒரு தவறான செயலாகும். ஆனால் முழுமையான விசுவாசமுள்ளவர்கள் கேட்கும் அனைத்துக் காரியங்களும் கொடுக்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க வேண்டும் என்று தேவன் திட்டமிட்டிருக்கிறார். ஆகவே தேவனால் அங்கீகரிக்கப்படாதவைகளுக்காக நாம் விண்ணப்பிக்கக்கூடாது. ஆனால் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரும்போது, நாம் ஆவிக்குரிய நன்மைகளுக்காக மட்டுமே பிதாவின் சித்தத்தின்படி விண்ணப்பிக்கவேண்டும். அதற்கு பின் தேவன் நமக்கு இயற்கையாகவே கொடுக்கக்கூடிய பதில்களுக்காகக் காத்திருக்க வேண்டும். மாறாக எவ்விதமான அற்புதங்களினால் அவர் நமக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில், இயற்கையான வழிகள் நம்முடைய தேவைகளுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் தேவன் இயற்கைக்கு மேற்பட்ட வழிகளைத் தேர்வு செய்வார்.
மேலும், விசேஷமாகப் பரிசுத்த ஆவியின் கிருபைகளுக்காக நீங்கள் தேவனிடத்தில் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என்று வெளிப்படையாக நமக்கு சொல்லப்படுகிறது. “பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா”. -(லூக் 11:13) என்றார். “நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.” – யாக் 4:2
கிறிஸ்துவுக்குள்ளும், அவருடைய வார்த்தைகளிலும், நடந்து, அவைகளைத் தேடி, வாஞ்சிப்பவர்களுக்குக் கொடுக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தெய்வீகக் கிருபைகளை அநேகர் பயன்படுத்தாமல் விட்டுவிடுவதே அவர்களுக்குப் பாதகமாகிவிடுகிறது. ஜெபங்கள் என்றுமே சுயநலம் அற்றதாக இருக்கவேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்டாலும், தேவனுடைய வார்த்தைகள் மற்றும் அவருடைய சித்தத்தின்படி ஜெபிப்பதற்கு முழு சுதந்தரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெற்றி வாக்களிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வரும் விசுவாசம் மற்றும் நீடிய பொறுமைக்கானச் சோதனைகளும், நம்முடைய ஜெபங்களுக்கான ஏற்றச் சூழ்நிலைகளாக இருக்கிறது. வெற்றிபெறுவதற்கு அடையும் ஒவ்வொரு தோல்வியும் பாவமன்னிப்புக்காகவும், நம்முடைய பலவீனங்களைப் பலப்படுத்தும் தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கான வாய்ப்பாக இருக்கிறது. ஏனெனில், அதற்கு பின் வரும் அதேபோன்ற சோதனைகளை எதிர்நோக்குவதற்கு நாம் உடனடியாக வாக்குத்தத்தம் செய்யப்பட்ட “கிருபாசனத்தண்டையில்” சேருவோம். நாம் மேட்டிமையான சிந்தையில் உயர்வாக நம்மை எண்ணாதபடிக்கும் தன்னிச்சையாகப் பெறப்பட்ட ஒவ்வொரு வெற்றிக்கும் நம்முடைய ஜெபமே காரணமாக இருக்கிறது. ஆகவே நாம் மனத்தாழ்மையோடு எதிராளியான பிசாசானவனிடமிருந்துவரும் அடுத்த தாக்குதலைக் கவனத்தோட சந்திக்க வேண்டும். சத்தியத்திற்காக நடப்பிக்கப்படும் ஒவ்வொரு ஊழியமும் தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்கும் ஜெபங்களுக்காகவும், மகா இராஜாவை சேவிப்பதற்கான வாய்ப்பாகவும், மேலும் இனி ஊழியம் செய்வதற்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கானத் தேவைகளையும், கிருபைகளையும் ஞானமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையாகவும் இருக்கிறது.
நீங்கள் மேற்கொள்ளத்தக்கதான சோதனைகளைச் சந்திக்கும் போது, அவைகள் உங்களுக்குள் இருக்கும் பொறுமை, அனுபவங்கள், சகோதர சிநேகம், இரக்கம், அன்பு, சந்தோஷம் என்ற நல்லகுணங்கள் வளர்ச்சியடையும்போது நீங்கள் நன்றியுள்ள ஜெபங்களை ஏறெடுத்து, தெய்வீகக் கிருபைக்காகவும் உதவிகளுக்காகவும் காத்திருக்கலாம். ஒரு வேளை உங்களை நசுக்கிப் போடும் அளவிற்கு நீங்கள் சந்திக்கும் சோதனையைத் தாங்க முடியாததாக இருக்கும் பட்சத்தில், உங்கள் சுமைகளைச் சுமக்கிறவரிடம் கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு, இந்தச் சுமையை நன்மைக்கு ஏதுவாக சுமப்பதற்கும் உதவியைக் கேளுங்கள், உங்களுக்குத் தீமையை விளைவிக்கும் எல்லாக்காரியத்திலிருந்தும் விடுதலைப்பெறுங்கள். நம்முடைய இருதயம் தேவனுடைய வார்த்தைகளைக் கீழ்ப்படிவதற்கு முழு விருப்பமுள்ளதாக இருந்து, சபைக்கூடுதலை விட்டுவிடாமல் இருக்கும் பட்சத்தில், காரணமில்லாமல் உங்கள் வழிகளில் தடைகள் ஏற்பட்டு, அதற்காக நீங்கள் முயற்சிகள் எடுத்து தோல்வியடைந்தால், நிச்சயமாக அந்தக் காரியத்தை நாம் ஜெபத்தின் மூலம் தேவனிடத்தில் எடுத்து செல்லலாம். அதற்கு பின் அவருக்காகப் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அப்போது வெகு சீக்கிரத்தில், உங்கள் சார்பில் தெய்வீக வல்லமை வெளிப்படுதை நீங்கள் காணலாம். உண்மையான ஒரு சகோதரனை அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சிறப்பான போர்வீரனை சோதனைக்கு உட்பட்டவராக நீங்கள் காணும்போது, கிறிஸ்துவுக்குள்ளாக உங்கள் சகோதரருக்கான அன்பு உங்கள் இருதயம் முழுவதையும் நிரப்பி, அவரை அந்த சோதனையிலிருந்து காப்பாற்றுவதற்கு விரைந்தோடவேண்டும். அதற்கு மேலாக, அவர் முழுமையாக மீட்பை பெறும்வரைக்கும் கிருபாசனத்தண்டையில் சேர்ந்து இடைவிடாமல் அவருக்காக ஜெபிக்க வேண்டும். நீங்கள் நன்மையடையும்படியாக அவருக்காக நீங்கள் செய்யும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்கள் முயற்சிகள் ஆசீர்வதிக்கப்படும். வரக்கூடிய காலத்தின் மிகுந்த சந்தோஷமான நற்செய்தியை அறிவிப்பதற்கானப் பக்திவைராக்கியம் உங்களுக்குள் கொழுந்து விட்டு எரியாமற்போனால், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை அஸ்தமித்துவிடும். ஆனால் நீங்கள் சுவிசேஷத்தை நேசித்து, வைராக்கியத்தை வெளிப்படுத்துவதில் சற்று குறைவுள்ளவர்களாக இருந்தால், அதற்காக தேவனிடத்தில் ஜெபியுங்கள், தேவன் உங்கள் தாலந்துகளைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ள அவர் உங்களுக்கு உதவிசெய்வார். உங்களுக்கு வாய்ப்புகள் குறைவாகக் கிடைத்தாலும், அவரிடத்தில் ஜெபியுங்கள் அதற்கு பின் உங்களுக்குக் கிடைத்திருக்கும் சின்னச்சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு பின் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆண்டவரிடம் கூறலாம். அதற்கு பின் அவர் உங்களுக்காக ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளுக்காக காத்திருங்கள். அதுவரைக்கும் உங்கள் கைகளுக்கு நேரிட்டதை முழு பெலத்தோடு செய்து கொண்டிருங்கள்.
வாக்குவாதங்களுக்குரிய பிரச்சனைகளில் நீங்கள் அகப்படும்போது, அல்லது உங்களுக்கு இருக்கக்கூடிய தவறான பழக்கவழக்கங்களால் உங்கள் குடும்பத்திலும், விசுவாச வீட்டார் மத்தியில் குழப்பங்கள் ஏற்படும்போது, இவைகளை மேற்கொள்வதற்காக, தேவனிடத்தில் கெஞ்சி மன்றாடுங்கள். இதற்கு இடைப்பட்ட காலத்தில் உங்கள் ஜெபங்களுக்கு இசைவாக, முழு பலத்தோடே அந்த பலவீனங்களை விட்டு விலக முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாக இருப்பதினால், தேவனுக்கு ஊழியம் செய்ய முயற்சிக்கும்போது தோல்வியடைகிறீர்களா? தேவனிடத்தில் ஜெபத்தில் ஏறெடுங்கள். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக் 1:5) என்ற வாக்குத்தத்தத்தை நினைவுக்கூர்ந்து ஜெபியுங்கள்.
உங்கள் இரக்ககுணத்தினால் அல்லது மற்றவர்களுடைய வஞ்சகத்தினால் உங்கள் வணிகத்தி
ல் பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டதா? இவைகள் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சியைத் தடுக்கிறதா? தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சென்று நம்முடைய ஜெபத்தில் ஏறெடுப்பதே இதற்குத் தீர்வைக் கொண்டுவரும். இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட உங்களுக்கு அனுபவங்கள் இருந்தாலும், நீங்கள் தேவனிடத்தில் இதற்கான வழிமுறைகளைப்பற்றி விசாரிப்பது மிகவும் ஏற்றதாக இருக்கும். உங்களுடைய ஞானம், திறமை மற்றும் சாமர்த்தியத்தைக் காட்டிலும் தேவனுடைய ஞானம் உங்களை வழிநடத்தும்போது, தேவனுடைய அற்புதமான செயல்கள் உங்கள் பிரச்சனைகளுக்கு சிறப்பாக பதில் தரும்.