CD-PRAYER-Q-29
யாக்கோபு 1:6 – ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்”.
மாற்கு 11:24 – ஜெபம் பண்ணும் ஆதலால், நீங்கள் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
R2005 [col. 2 P1-4]: –
நம்முடைய ஜெபங்கள் “விண் வார்த்தைகளாகவும்” நாம் எதிர்பார்க்காதவற்றிற்கான முறையான கோரிக்கைகளாகவும் இருக்கக்கூடாது. நாம் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கவேண்டும். (யாக்கோபு 1:6) மேலும் நீங்கள் எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ. அவைகளை பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். ஏனெனில் விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே. மாற்கு 11:11,24, ரோமர் 14:23. தேவனுடைய பிள்ளை தனது தந்தையின் வார்த்தைக்கு நெருங்கிய மாணவனாக இருக்கவேண்டும். ஏனெனில், அவருடைய சந்தோஷம் நிறைவாகும்படி, அவர் பெற்றுக்கொள்ளக்கூடியதை கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனது தந்தை வழங்க விருப்பமுள்ள காரியங்களை மட்டுமே கேட்க வேண்டும் அவர் எச்சரிக்கப்படுகிறார். அவைகளையும் விசுவாசத்தோடே மட்டுமே கேட்கவேண்டும், இல்லாவிட்டால் பெற்றுகொள்ள முடியாது. மற்ற காரியங்களைப்போலவே, இந்த ஜெபத்தின் விஷயத்திலும், நம்முடைய பரலோக தகப்பன் அவருடைய ஜனங்களுக்குள் விசுவாசத்தை வளர்க்கும்படியாக, வடிவமைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. “விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாக இருப்பது கூடாத காரியம்” என்றும், “உங்கள் விசுவாசமே இந்த உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்” என்றும் அவர் கூறுகிறார். ஆகவே, விசுவாசத்தை நடைமுறைப்படுத்துபவர்களும், வாக்குறுதியளிக்கப்பட்ட இரக்கங்களை ஜெபத்தில் கேட்பவர்களும் மட்டுமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் ஏற்பாட்டின் படி அவற்றைப் பெற ஆயத்தமாக இருப்பார்கள். இப்படி இருக்கும்போது. “ஆண்டவரே. எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” என்று அப்போஸ்தலர்கள் போலவே, இன்றும் தேவனுடைய ஜனங்களின் ஜெபமாக இருக்கவேண்டும். இவ்வாறு ஜெபிப்பதும். இந்த நோக்கத்திற்கு முடிவு பரியந்தம் உழைத்தால். ஒருவருக்கொருவர் இந்த உலகத்தையும் அதன் நம்பிக்கையற்ற தாக்கங்களையும் மேற்கொள்வதற்கும் மேலும் மேலும் உறுதியாக இருக்கும். உண்மையான விசுவாசம் எளிதில் நம்பக தன்மையுடைது அல்ல. இது நெருக்கடியானது (critical). நல்ல ஆதரங்களை மட்டுமே நம்புகிறது. இது மனிதர்களின் போதனைகளுக்கும் தேவனுடைய ஆதாரமான வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாகவும் நெருக்கமாகவும் வேறுபடுத்திகாட்டுகிறது. ஆனால் தேவனுடைய வார்த்தையை கண்டறிந்த பின்னர், அதன் பொய் சொல்ல இயலாதவர் என்பதை அறிந்து அவருடைய நோக்கங்கள் மற்றும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதை மறைமுகமாக நம்புகிறது.
F691 [2]: –
“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும். ஒருவரையயும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன் அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்…” என்று யாக்கோபு கூறி, முன்னறிவிக் கப்பட்ட வரவிருக்கும் ஆசீர்வாதங்களையும், நம்முடைய நிகழ்கால சுதந்திரங்களையும் அடைவதற்கும். அவைகளை தக்கவைத்துக்கொள்வதற்கும் விசுவாசம் எவ்வளவு அவசியமானது என்பதை அப்போஸ்தலன் யாக்கோபு தெளிவாகக் காட்டுகிறார். ஏனெனில் சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக, இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” (யாக்கோபு 1:5-8) எனவே விசுவாசத்தில் வலுவற்று இருந்தால், ஒருவரும் வெற்றி அடைய முடியாது என்பதை அப்போஸ்தலர் காட்டுகிறார். ஆகவே, வேத வசனங்கள் எல்லா இடங்களிலும் விசுவாசத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் அப்போஸ்தலர்களை போல, தேவ ஜனங்கள் எல்லாரும், “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கவேண்டும்” என்றே ஜெபிக்கவேண்டும். இவ்வாறு ஜெபித்து, இந்த ஜெபங்கள் நிறைவேற்றப்படுவதற்கு தேவன் வடிவமைத்துள்ள வழிகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும். அவர்களின் ஜெபம் நேர்மையாக இருந்தால் அவர்கள் அந்த வழிகளை ஆர்வத்துடன் அல்லது உண்மையுடன் பயன்படுத்துவார்கள் – அவர்கள் ஜெபத்தில் கர்த்தரைத் தேடுவார்கள், அவருடைய வார்த்தையை அறிந்துகொள்ள முற்படுவார்கள், அதைக் கீழ்படிந்து, அவருடைய தேவையை நாடி மகிழ்வார்கள், ஆவியின் கனிகளை தரித்துகொள்ள முற்படுவார்கள், இதுவே அவர்களின் அணுகுமுறையாக இருப்பதால். அவர்களுக்கு வலுவான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் முழு உறுதி பெறுவார்கள். ஆனால் குறித்த காலத்தில் நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் அவர்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும் – 2 பேதுரு 1:10,11
R3664 [col. 1:4,5]:
அர்த்தசஷ்டாவின் பார்வையில் நெகேமியாவுக்கு இரக்கம் கிடைக்கும்படி, அவர் தேவனிடம் ஜெபித்தது, தெய்வீக வல்லமையின் மேல் அவர் கொண்டிருக்கும் விசுவாசத்தைக் காட்டுகிறது. இதற்கொத்த விசுவாசத்தின் குறைபாடே கர்த்தருடைய உண்மையாக அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களின் – இன்றைய ஆவிக்குரிய இஸ்ரயேலினுடைய உபத்திரவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறதோ இல்லையோ என நாம் அடிக்கடி யோசிக்கிறோம். சில சமயங்களில் அவர்களை வெறுப்பவர்களிடமிருந்தும், பகைப்பவர்களிடமிருந்தும், அநியாயமாக நடந்துகொள்பவர்களிடமிருந்தும் கடுமையான சோதனைகள் வருவதை நாம் அறிவோம். மேலும் நெகேமியாவை போல நாம் அவருடைய பணியில் ஈடுபட்டுக்கொண்டு, அந்த பணியை அவர் ஏற்றுகொள்வதற்கு அவர் விரும்புகையில், நாம் அவருடைய பார்வையில் இரக்கம் பெற்றால், நம்முடைய உதடுகள் மற்றும் இருதயத்தின் ஜெபங்கள் ஒரு நினைவுச்சின்னமாக, கிறிஸ்துவின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நமக்கு முன் வழிகளையும், வாய்ப்புகளையும் திறப்பதற்கு தேவன் முழு வல்லமை பெற்றவர் என்று அவர்கள் எந்த அளவிற்கு நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று நாம் எண்ணுகிறோம்.
இது தொடர்பான ஒரு கதையை மாநாட்டில் ஒரு சகோதரி எங்களிடம் கூறினார். அவள்: “என் கணவர் மிக பெரிய செல்வந்தர். ஒரு பெரிய பண்ணை மற்றும் அதிகமான இருப்பு வைத்திருக்கிறார். நான் பல ஆண்டுகளாக விசுவாசத்தை முழுமையாகச் சேவித்திருந்தும். அவர் சத்தியத்தை மிகவும் எதிர்க்கிறார். எனவே மிக சிறிய விஷயங்களில் கூட அதாவது எனக்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கோ அல்லது சந்தா செலுத்துவதற்கான சிறிய தொகையைக்கூட அவர் மறுத்துவிட்டார். இந்த மாநாட்டைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது, கர்த்தருடைய அன்பான ஜனங்களை சந்திக்க வேண்டும் என்று என் இருதயத்தில் ஒரு ஏக்கத்தை உணர்ந்தேன். ஆகையால், இது அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்தால், நான் மாநாட்டில் கலந்துகொள்ளும் அந்த பாக்கியத்தை பெரிதும் அனுபவிக்க வேண்டும் என்று தேவனிடம் ஜெபித்தேன். ஆனால் இந்த விஷயத்தை முழுமையாக அவரிடம் விட்டுவிட நான் தயாராக இருந்தேன். நான் செல்வதற்கான வழியை தேவன் எப்படியாவது சாத்தியமாக்குவார் என்று நான் உணர்ந்தேன், மாநாட்டில் கலந்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன் என்று சரியான நேரத்தில் என் கனவரிடம் கூறினேன். அவர் மிகவும் கடுமையாக எதிர்த்தார். மேலும் ரயில் நிலையத்திற்கு செல்லும் தூரத்தை என்னால் நடக்க முடியாது என்றும், அதற்கு குதிரையைப் பயன்படுத்த அவர் என்னை அனுமதிக்கமாட்டார் என்றும் கூறினார். எனக்கு தெரியாது என்று நான் மிகவும் அமைதியாக பதிலளித்தேன். ஆனால் நான் செல்வதை தேவன் விரும்பி, எப்படியாவது எனக்கு வழியை ஆயத்தப்படுத்துவார் என்று நான் உணர்ந்தேன். நான் இந்த விஷயத்தை முழுவதுமாக தேவனிடம் ஒப்புக்கொடுத்தபடியால், அவருடைய எந்த ஆதரவையும் பெற்றுகொள்ள நான் விருப்பமுள்ளவளாக இருந்தபடியால் நான் அமைதியாக பதிலளித்தேன். நான் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆகையால் என் கணவரின் வார்த்தைகளை நான் எதிர்க்கவில்லை. அவர் எனது உறுதியான எதிர்பார்ப்பைப் அறிந்ததாகதோன்றியதால், பலமுறை இந்த விஷயத்தைக் குறித்து, நான் போகக்கூடாது என்றும், குதிரையை எடுத்துச் செல்ல கூடாது என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எனக்குத் தெரியாது என்று நான் வெறுமனே பதிலளித்தேன். ஆனால் நான் போக வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம் என்றால், அவர் வழியைத் திறக்க முடியும் என்றேன். மாநாட்டிற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்பு எனது கணவரின் சிறந்த குதிரைகளில் ஒன்று நோய்வாய்ப்பட்டது. அவர் ஒரு கால்நடை மருத்துவரை அழைத்து வந்து சிறந்த மருத்துவத்தை மிகவும் வெற்றிகரமாக செய்த போதிலும், அந்த குதிரை இறந்துவிட்டது. அடுத்து ஒரு குதிரை நோய்வாய்ப்பட்டு, இறந்தது, அதற்கு பின் மூன்றாவது குதிரை நோய்வாய்ப்பட்டது. தனது விவகாரங்களில் இது தேவனுடைய கரமாக இருக்கலாம் என்பதை உணரத் தொடங்கினார். மேலும் மாநாட்டிற்குச் செல்ல நான் ஒரு குதிரையையும் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுப்புடன் அவரது இழப்புகளை தொடர்புபடுத்தினார். மாநாட்டின் விஜயத்தைப் பற்றி தானே பேசினார். தனது முந்தைய முடிவைத் மாற்றுவதற்கான வாய்ப்பை மிக லேசான முறையில் தெரிவித்தார். ஒரு வேளை கர்த்தர் வழியைத் திறப்பார் என்பதே என்னுடைய அமைதியான ஒரே பதிலாக இருந்தது. மூன்றாவது குதிரையும் இறந்துவிட்டது. “நீங்கள் மாநாட்டிற்குச் செல்லலாம்” என்று என் கணவர் என்னிடம் கூறினார்.”