CD-PRAYER-Q-50
D640 [2] through D641: –
அநேகமாக, மனுஷர் சிந்திக்க நேரம் கிடைத்ததும், அவர்கள் மகா உபத்திரவ காலத்தின் அழிவுகளிலிருந்து மீட்கப்படும்போது, விசுவாசத்தின் ஜெபத்திற்கு விடைகிடைக்கும் வகையில், பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களின் உயிர்த்தெழுதலோடு, நோயுற்றவர்களை ஆரோக்கியமாக சீரமைக்கும் காரியம் அடிக்கடி நடக்கும். மேலும் மற்றவர்களின் உயிர்த்தெழுதலும் சாத்தியமாகும்படிக்கு அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்” என்று நம்முடைய ஆண்டவரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக – அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் மரணத்திலிருந்தும் கல்லறையிலிருந்தும் வருவார்கள். மேலும் இந்த வேலை ஆரம்பித்து முன்னேறுவதற்காக, பிரிந்துபோன நண்பர்கள் மறுசீரமைப்பதற்கான விசுவாசமுள்ள ஜெபத்திற்கு விடையாக இருக்கலாம் என்பது நியாமான பரிந்துரையாகும். நாம் சிந்திக்கிறபடி, மற்றவர்களுக்கு மேலாக பரிந்துரைக்கும். அத்தகைய முறையில் நாம் ஒரு நியாயத்தை காண்கிறோம்.
உதாரணமாக, இது மரித்தவர்களை படிப்படியாக திரும்ப கொண்டுவரும், மேலும் அவர்கள் மரணத்திலிருந்து, தலை கீழான வரிசையில் உயிர்த்தெழுந்து வருவார்கள். இதனால் வீடுகளில் மனமார்ந்த வரவேற்புகளும், உயிர்த்தெழுந்து ஜீவனோடு வருபவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையாக ஆறுதல்கள் கிடைக்கும். இப்படியாக உயிர்த்தெழுந்தவர்கள் மொழி, பழக்கவழக்கம் பாரம்பரியம் ஆகியவற்றை தெரிந்திருக்கவேண்டும். அதேசமயம், ஒழுங்கு தலைகீழாக மாற்றப்பட்டால், புதிய நிபந்தனைகளுக்கு உயிர்த்தெழுபவர்கள் இவைகளுக்கு ஆயத்தமாக இருக்கமாட்டார்கள். மேலும் அவர்கள் முழுமையான அந்நியர்களும், தலைமுறைக்கு ஒத்துப்போகாதவர்களுமாக இருப்பார்கள். எவ்வாறாயினும் இக்காரியம் தீர்க்கதரிசிகள் மற்றும் பிற முற்பிதாக்களுக்கு பொருந்தாது. இவர்கள் தங்கள் தகுதியை நிருப்பிக்கும் பணியை செய்ததினால், பூரண மனுஷராக உயிர்த்தெழுவார்கள். மேலும் இவர்கள் அறிவுசார்ந்த, தார்மீக மற்றும் அனைத்து மனுஷரை காட்டிலும் உடல் ரீதியாகவும் பூரணர்களாக இருப்பார்கள்.
அவர்களின் மறுசீரமைப்புக்காக தேவன் சில திட்டங்களை வைத்திருப்பதினாலும், சில விண்ணப்பங்கள் அதற்கு இணக்கமாக இராததினாலும், பிரிந்து போன நண்பர்கள் மீட்கப்படுவதற்கான அனைத்து ஜெபங்களும் உடனடியாக பதிலளிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை. அவருடைய ஒழுங்கு அநேகமாக சபை மற்றும் முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள வரிசையின் ஒழுங்கின்படி இருக்கலாம். திருச்சபை மற்றும் முற்பிதாக்கள் உயிர்த்தெழுதலில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளபடி அவரது வரிசையானது அநேகமாகத் தகுதி அடிப்படையிலான வரிசையாக இருக்கும் உயிர்த்தெழும் நபர்கள் மற்றும் நண்பர்கள், மற்றும் அவர்களின் புதிய ஜீவனைத் துவங்கும் நிலைமைகள் போன்ற இரண்டு தகுதி அடிப்படையிலான வரிசையாக இருக்கும். இது போன்ற கோரிக்கைளை முன்வைப்பவர்களின் தரப்பில் இது ஒரு அளவிலான தயாரிப்பு, அவசியமாகும் இருதயம் மற்றும் வாழ்க்கைக்கான ஆயத்தம் மற்றும் பரிசுத்தமான பெரும் பாதையில் முன்னேறுவதற்கான நிலைமையை சாதகமாக்கும். இவ்வாறாக இப்படிப்பட்ட மறுசீரமைப்புகள் உயிருள்ளவர்களுக்கு. விசுவாசத்தின் முழுமையான வெகுமதிகளாக மாறும். மேலும் விழித்திருப்பவர்களுக்கு சாதகமான நிலைமைகளையும் பாதுகாக்கும்.
F701 [2]: –
கல்லறையாகிய சிறைச்சாலைக்குள் சென்றவர்கள் மனுஷகுமாரனின் குரலைக் கேட்கும் படியாக எவ்வாறு வெளியே கொண்டுவரப்படுவார்கள் என்றும் கீழ்ப்படிதலின் மூலம் அவர்கள் எவ்வாறு ஜீவிப்பார்கள் என்ற விவரங்களை கர்த்தர் சொல்லவில்லை. (யோவான் 5:25) நடைமுறையின் தன்மை என்னவாக இருக்கும் என்பதை நாம் தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது. இந்த விஷயத்தின் குறிப்புகளை நாம் புரிந்துகொள்வது அவசியமும் இல்லை. ஆயினும்கூட, அதைப் பற்றி சிந்திப்பது நமக்கு சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் இந்த நடைமுறையை பொருத்தவரை நாம் கற்பனை செய்து பார்ப்பது தேவனை புண்படுத்தாது என்று நாம் அனுமானிக்கலாம். நம்முடைய கருத்து ஏற்கனவே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இரக்கம் பெற்ற ஒவ்வொருவரும் அறிவிலும். அன்பிலும் வளர்ச்சி அடையும் போது, மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கு குறிப்பாக அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் ஆசீர்வதிக்கப்படும்படிக்கு முடிந்த வரை ஒத்துழைக்க விரும்புவார்கள். மற்றும் இந்த விஷயத்தில் தேவனை அணுகுவதற்கான பொதுவான வழி ஜெபம் மட்டும் ஆயத்தமாக இருக்கும். அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றவர்கள் உயிர்த்தெழுதல் நடக்கும். நிழலில், யூதர்கள் மோசேயின் ஆசாரியத்துவத்தை அணுகியது போல, இந்த உலகம் நோயிலிருந்த உதவிப் பெற “இராஜரிகமாக ஆசாரியத்துவத்தை” அணுகும். எனவே ஜெபமே ஆசீர்வாதங்களுக்கான வழக்கமான வழியாக இருக்கும். சில கேள்விகளுக்கான நீண்ட ஆவணங்கள் பின்வருமாறு.