CD-LOVE-Q-18
கொலோசேயர் 3:14 “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்”
R2481[col.2 P4]: –
ஆனால், பரிசுத்த ஆவியின் வாயின் வார்த்தையைப் போல, அப்போஸ்தலர், ஒரு முழுமையான பயிற்றுவிப்பாளராக இருக்கிறார். எதைத்தூக்கி எறிய வேண்டும் என்பதை மட்டும் அல்ல, எதை அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நமக்குக் கூறுகிறார். ஆனால் இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், பொறுமை, நீடிய பொறுமை, சகிப்புத்தன்மை, பாவமன்னிப்பு போன்ற இந்த மகிமையான குணநலன்களில் அணிவகுப்பை நாம் காண்கையில், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பரிபூரண பிணைப்பாகிய அன்பை தரித்துக் கொள்ளுங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார். “எனவே, அன்பின் பல்வேறு அருமையான கனிகளை, கிறிஸ்துவின் நீதியின் அங்கியிலுள்ள பல மடிப்புகளின் ஒருமித்தப் பிணைப்பே, “கச்சை” என்று சித்தரிக்கப்படுகிறது. மற்றொரு வார்த்தைகளில் சொல்லபோனால், தாழ்மை, பொறுமை, சாந்தம் ஆகியவற்றைப் பொறுத்தவரை. மரியாதைக்குரிய விஷயங்கள் அல்லது கொள்கைகள் மட்டும் இருக்கக்கூடாது. ஆரம்பத்திலிருந்தே இந்த குணங்களை அவர்கள் பெற்றிருந்தாலும், அவர்களின் சொந்தமான பல்வேறு சித்தங்களின் அல்லது நோக்கங்கள் தேவனுடைய அன்பின் கயிறுகளாலும், கட்டுப்படுத்தி, தேவன் மேலும், நீதியின் மேலும், சகோதரர்கள் மேலும் அன்பு செலுத்தி, ஏங்கி தவிக்கும் இந்த முழு சிருஷ்டிகள் மேல் அனுதாபமுள்ள அன்பை பெறும் அளவு, இருதயத்தில் பூரணப்படாததினால், இராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். உண்மையில், அன்பு ஒரு பூரண பந்தம். அது ஆண்டவருடைய ஆவி.