Q-6
E255 [93]
அதிகமான தன்னம்பிக்கை, சுயசிந்தை, மன உறுதி, ஆணவம் கொண்டவர்களை சீர்ப்படுத்துவதற்கு தேவனுடைய சத்தியத்தின் ஆவி பயன்படுத்தப்படுகிறது. வாழ்க்கையில், எந்தக்காரியங்களையும் செய்ய முடியாத அளவுக்கு தன்னம்பிக்கையற்றவர்களை, ஊக்குவிப்பதற்கும், அதே சத்தியத்தின் ஆவி பயன்படுத்தப்படுகிறது. மனத்தாழ்மையுள்ளவர்களை தேவனுடைய வாக்குறுதிகள் உற்சாகப்படுத்துகிறது. அதிகமான தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு கீழ்ப்படிதலையும், தன்னடக்கத்தையும், தேவனை பிரியப்படுத்தும் காரியங்களையும் கற்றுக்கொண்டு, ஏற்றகாலத்தில் பயனளிக்கும் படியாகவும் இருக்கிறது. ஆகவே, “ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.” (1கொரி 8:2) என்று அப்போஸ்தலர் கூறுகிறார். ஆகவே, நாம் வேதாகமத்தை வைத்திருப்பதினாலோ, சபைகள் என்று அழைக்கப்படும் உலக அமைப்புகளில் அங்கத்தினர்களாக இருப்பதினாலோ, மறுரூபமாக்கப்படாமல் கிறிஸ்துவோடு இணைந்து, அவருடைய வார்த்தைகளினால் வரும் தேவனுடைய பரிசுத்த ஆவியாகிய, சத்தியத்தின் ஆவியையும், பரிசுத்தத்தின் ஆவியையும், நல்ல சிந்தையையுடைய ஆவியையும், பெற்றால் மட்டுமே நாம் மறுரூபமாக்கப்படுவோம்.