CD-KNOWLEDGE-Q-11
F263 through F264 (P1)
“மேலும் திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்” (கலா 6:6) தேவன் அவருடைய ஜனங்களை ஒருவருக்கொருவர் போதித்து கட்டளைக் கொடுப்பதற்க்காக வடிவமைத்திருக்கிறார் என்பதை மேல் கூறப்பட்ட வசனம் காட்டுகிறது. இப்படியாக, அவர் மந்தையில் இருக்கக்கூடிய எளியோரும் தங்களுடைய தனிப்பட்ட விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்ப்படுத்தினார். ஆனால் இவ்வளவு முக்கியமான காரியம் பொதுவாக அனைவராலும் நிராகரிக்கப்படுகிறது. சபையில் உள்ளவர்களை ஆசிரியர்கள் – மாணவர்கள் என்று இந்த வசனம் அடையாளம்காட்டுகிறது. மாணவர்கள் தயக்கமின்றி தொடர்புக் கொள்ளவேண்டும். மேலும் அவர்கள் அறிந்துக்கொண்ட ஒவ்வொரு காரியத்தையும், அவர்கள் தங்களுடைய ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். ஆசிரியராக செயல்படாமல், அறிவுள்ள ஒரு மூத்த சகோதரனாக செயல்படவேண்டும். போதகர்களைக் குறித்து அஞ்சவேண்டாம். அவர்களை ஒரு இயந்திரமாக நினைக்கவும் வேண்டாம்.
ஆயினும், குற்றம் கண்டுபிடிக்கும் ஆவி அல்லது பகையைத் தூண்டும் மற்றும் மற்றவர்களுடைய பலவீனங்களைப் பிரஸ்தாபப்படுத்தும் காரியங்களை தேவன் என்றுமே விரும்புவதில்லை. இப்படிப்பட்ட காரியங்கள், பரிசுத்த ஆவிக்கு நேர் விரோதமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இது மிகவும் அபாயகரமானது. ஏனெனில் இப்படிப்பட்ட ஆவியைப் பெற்றவர்கள், அவர்களை எதிர்த்துப் பேசுபவர்களை சீக்கிரத்தில் குழப்பிவிடுவதற்காக விவாதங்களை எழுப்பக்கூடிய மனநிலையில் இருப்பதால் சத்தியத்தை எளிதில் நம்பமாட்டார்கள். ஆனால், இதினிமித்தமாக அவர்களும் காயப்பட்டு, மற்றவர்களையும் காயப்படுத்தி விடுவார்கள். சத்தியத்தில் வளர்வதற்கு அடிப்படையாக நேர்மையும், உண்மையும் தேவைப்படுகிறது. ஒருவர் சத்தியமாக விசுவாசிக்கக் கூடியதை எதிர்க்கும் பட்சத்தில், அதாவது விளையாடுவதற்காக இப்படிச் செய்தாலும் இது தேவனுக்கு எதிராக செய்யக்கூடிய குற்றமாக இருக்கும். இதினிமித்தம் சில நியாயமான தண்டனைகளை பெற வேண்டியதாக இருக்கும், ஐயோ, எத்தனைப் பேர் இந்த விஷப்பரிட்சையில் இறங்கி, சத்தியத்திற்கு எதிராக பேசி, அதனால் தாங்களே சிக்கிக்கொண்டு, இனி அவர்கள் செல்லவேண்டிய பாதையை அறியாத குருடராகிவிடுகிறார்கள். தேவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகத்தில் சத்தியமே விலையேறப்பெற்றது. இது விளையாட்டுக்குரியதல்ல. அதை அற்பமாக எண்ணிவிடக்ககூடாது. இப்படிப்பட்டவர்கள் தாங்களே பாதிப்புகளை (கேடு) வருவித்து கொள்வார்கள். (2 தெச 2:10,11)
“தொடர்புக்கொள்ள” என்ற வார்த்தையில் சரியான பொருள் மிக விஸ்தாரமாக குறிப்பிடப்படுகிறது. இது ஒருவருடைய சிந்தையை மட்டும் அல்ல, ஆனால் கற்றுக்கொள்பவர்கள் மற்றும் ஆவிக்குரிய நன்மைகளைப் பெறக்கூடியவர்களும், ஏதோ ஒரு வழியில் கற்றுக்கொடுப்பவர்களோடு தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடையவேண்டும் – தேவனுக்கு செலுத்துவதிலும், சகோதரர்களுக்கும், சத்தியத்திற்கும் அவர்களுடைய நற்கனிகளாகிய உழைப்பையும் தாலந்துகளையும் கொடுக்க வேண்டும் என்பதும் பொருள்படும். புது சிருஷ்டியின் பரிசுத்தமான ஏற்பாட்டின் முக்கிய காரியம் இதுவே. “பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் கொடுப்பதே நலம்” என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளின் பொருளை, துவக்கத்தில் பெற்ற கிறிஸ்துவ அனுபவங்களில் நாம் அறிந்திருக்கலாம். ஆகவே இப்படிப்பட்ட ஆவியைப் பெற்றவர்கள் சத்தியத்திற்காக உலகப்பொருட்களையும் கொடுத்து, அதற்கு பதிலாக தங்களுடைய உண்மையும் நேர்மையுமான இருதயத்தில் ஆவிக்குரிய ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் எப்படி கொடுப்பது? பெற்ற ஞானத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்ற கேள்விக்கு மற்றொரு தலைப்பில் விடையைக் காணலாம்.
R3219(col.2 P2): –
சபைகளில் சத்தியத்தின் அறிவைப் பெறுவதற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுவே வளர்ச்சிக்குரிய ஆதாரமாக இருக்கவேண்டும். சத்தியத்தின் அடிப்படையிலான அறிவின் வளர்ச்சியின்றி ஒருவர் தேவனுடைய வல்லமையிலும், அந்த வல்லமையின் சத்துவங்களிலும் பலப்பட முடியாது. தேவனுடைய வார்த்தைகளை பக்தி வைராக்கியத்தோடு படிப்பவர்கள் நிச்சயமாக அவருடைய சத்தியதையும் அதிகமாக நேசிப்பார்கள். அதேபோல் தேவனுடைய ஆழமான காரியங்களைக் குறித்து வழி நடத்தப்படுபவர்கள் – அதிகதிகமாக தேவனுடைய கிருபையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் அடையாளம் கண்டுக்கொள்ளலாம். நாம் பூமிக்குரிய குடும்பங்களில் சிறு குழந்தைகளை நேசித்து பராமரிப்பது போல, விசுவாச வீட்டில் வளர்ச்சி குன்றினவர்களையும், விசுவாசத்தில் குறையுள்ளவர்களையும் நேசித்து ஆண்டவருக்குள் உறுதியான வளர்ச்சி அடைய அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.