CD-PRAYER-Q-49
ரோமர் 8:26,27 – அதேபோல் ஆவியும் நம்முடைய பலவீனங்களில் உதவுகிறது. நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்கக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுல் செய்கிறார். மேலும் தேவனுடைய ஆவி தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்தவான்களுக்காக பரிந்து பேசுகிறதினால். இருதயங்களை ஆராய்கிறவருக்கு, மனதின் ஆவி என்னவென்று அறிவார்.
“அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் வினங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால். ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.” 8:26,27
தேவனுடைய ஜனங்கள் பரலோக தகப்பனின் அன்பையும் அக்கறையையும் பற்றிய புரிதலை உணர்த்தும் நோக்கில் இது வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் பரிசுத்த ஆவி தந்தையிடம் கூக்கூரலிடுவதாக சொல்கிறார்கள். மேலும் சிலர் இந்த கூக்குரல்களுக்கு கேட்கக்கூடிய சொற்களைக் கொடுக்க தாங்களே முயற்சிக்கின்றனர். மேலும் சிலர் இப்போது அவர்களால் காண முடியவில்லை என்றாலும், இந்த விஷயத்தில் எப்படியாவது பரிசுத்த ஆவிக்கு உதவும்படியாக, அது சொல்ல முடியாத கூக்குரல்களுக்கு ஈடு செய்யும்படியாக, அந்த அளவுக்கு குரல் கொடுக்கிறார்கள். பரிசுத்த ஆவி ஒரு நபராக இருந்தால். அது உண்மையிலேயே விசித்திரமாக இருக்கும். மேலும் பரிசுத்த ஆவி. பிதாவுடனும் குமாரனுடனும் “அதிகாரத்தில் சமமானவர்” என்று பெயர் சபை கற்பிக்கப்பட்டு வலியுறுத்தினால், தேவனுடைய ஜனங்களின் சார்பாக சொல்ல முடியாத வார்த்தைகளினால், பிதாவிடமும், குமாரனிடமும் உரையாற்றுவது அவசியமில்லை என்பதை கண்டுகொள்ள வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு நாம் அவரிடம் நேரடியாக வரலாம் என்றும் மேலும் “பிதா தாமே உங்களை நேசிக்கிறார்” என்று உறுதியளித்தவராக, நாம் பிதாவிடமும் நேரடியாக செல்ல முடியும் என்று கூறினார். ஆயினும், நாம் மிதாவினாலும், குமாரனாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக பரிந்து பேசக்கூடியவரும், வாக்குக்கடங்காத பெரும் மூச்சோடு நமக்காக வேண்டுதல் செய்யும், மத்தியஸ்தராகிய பரிசுத்த ஆவியின் மூலமாக நாம் பிதாவினிடமும் குமாரனிடமும் செல்ல வேண்டும் என்று சிலர் இந்த வேத வசனத்தின்படி பரிசீலிக்கிறார்கள். பரிசுத்த ஆவியைப் பற்றியும் அதன் அலுவலைப் பற்றியும் இருக்கும் குழப்பான சிந்தனைக்கு இது இசைவாக காணப்படுகிறது.
வாக்குக்கடங்காத பெரும் மூச்சு உச்சரிக்க முடியாவிட்டால் அவை முனகலாக இருக்க முடியாது அதாவது உச்சரிக்கப்படாத எதுவும் முனகல் ஆகாது என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது. இந்த விளக்கத்தின் பிழை மேலும் கவனிக்கப்படத்தக்கதாக உள்ளது. பரிசுத்த ஆவி, சர்வல்லமையுள்ள யேகோவா தேவனின் செல்வாக்கு அல்லது வல்லமை. ஞானமாக தன்னை வெளிப்படுத்த முடியாது என்று அர்த்தம் என்றால், இந்த வாக்கியம் விசித்தரமாகவும். முரண்பாடாகவும் தோன்றும். கடந்த காலங்களில் தேவனுடைய சிந்தை, சித்தம், ஆவி அனைத்தும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் ஏராளமாக வெளிப்பட்டதை நாம் அறிவோம். இன்று அவருடைய வல்லமையோ, திறனோ குறைந்து விட்டதாக நாம் கருத முடியாது. “ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.” என்ற இந்த வசனத்தின் பொருள் என்ன?
தேவனுடைய ஆவி வேண்டுவதாக நாம் நினைப்பதில் தவறு உள்ளது. மாறாக, நமக்காக பரிந்து பேசும் ஆவி, நம்முடைய சொந்த ஆவி, பரிசுத்தவான்களின் ஆவி. இதுவே தேவனிடம் வேண்டுதல் செய்கிறது. பெரும்பாலும் தன்னை சரியாக வெளிப்படுத்தத் தவறிவிடுகிறது. இந்த வேத பகுதியை இதோடு தொடர்புடையதாக பார்வையிட்டால். இதன் விளக்கம் வெளிப்படும். பாவச் சுமை நிறைந்த மனுக்குலம் அதன் பிடிகளில் சிக்கி தவிப்பதாக அப்போஸ்தலர் எழுதுகிறார். மேலும் தேவனுடைய புத்திரர் தங்களுடைய இரட்சிப்பின் அதிபதியோடே மகிமைப்படுத்தப்படும் போது. சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்படும் என்று அவர் உறுதியளிக்கிறார். (வசனங்கள் 19-20) பின்னர் அவர் உலகின் தவிப்பிலிருந்து சபை தவித்துக்கொண்டிருக்கும் தற்போதைய நிலைக்கு செல்கிறார். “அதுவுமல்லாமல், ஆவியின் முதற் பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்”(23)
ஒரு காலத்தில் உலகத்திற்குரியதாக இருந்தது சிந்தை. இப்போது சபையாக புதுப்பிக்கப்பட்டு அல்லது மறுரூபமாக்கப்பட்டு. பரிசுத்தமானதும் ஆவிக்குரியதாகவும் இருக்கிறது. ஆனால் நம்முடைய சரீரங்கள் மாம்சத்தில், ஆதாமின் அபூரணத்தில் உள்ளது. ஆகவே புது சிருஷ்டிகளாகிய நமக்கு மாம்சம் சுமையாக உள்ளது. எனவே முதலாம் உயிர்த்தெழுதலில் வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் சாயலுக்கு விடுவிக்கப்பட நாம் ஏங்கி தவிக்கிறோம். விசுவாசத்தினால், பூமிக்குரிய சரீரம் மரித்துவிட்டதாக நாம் எண்ணிக்கொண்டு. பூரணமான புது சிருஷ்டிகள் என்று நம்மை குறித்து நாம் நினைத்துக் கொள்ளலாம். அந்த நம்பிக்கையனாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று அப்போஸ்தலர் விளக்குகிறார். (24) பின்னர். நாம் எவ்வாறு நம்மை எண்ணலாம் என்பதைக் காட்டிய அவர், தெய்வீக நிலைப்பாட்டில் இருந்து நாம் நம்மை “புதிய” மற்றும் “பரிசுத்தம்” மற்றும் “ஆவிக்குரிய” ஜீவிகளாக எண்ணப்படுகிறோம் என்பதை அவர் நமக்கு விளக்கம் அளிக்கிறார். தேவன் இந்த நிலைப்பாட்டில் இருந்து நம்மைப் பார்க்கும்போது. மாம்சத்தையும் அதன் பலவீனங்களையும் குறைபாடுகளையும் காணமாட்டார் என்பதைக் காட்டுகிறார். ஆனால் ஆவி, சிந்தை, நோக்கங்கள். சித்தம் “புது சிருஷ்டி” அனைத்தும் தேவனுடைய ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நம்முடைய பரிசுத்த ஆவி (புது சிந்தை) எப்போது ஆயத்தமாக இருக்கும் என்றும், நம்முடைய மாம்சம் எவ்வளவு பலவீனமாக இருக்கும் என்பதையும் தேவன் நன்கு அறிவார். அவர் நம்மை மாம்சத்தின்படி அல்ல. ஆவியின்படியே நம்மை நியாயந்தீர்க்கிறார்.
நம்முடைய ஜெநிப்பிக்கப்படுதல். புது சித்தத்தை ஏற்றுக்கொள்ளுதல், முழுமையாக தேவனிடத்தில் அர்ப்பணிக்கப்படுதல் ஆகியவை நம்மை தேவனோடு ஒரு புது உறவுக்குள் நம்மை கொண்டு வந்தது. இந்த புதிய நம்பிக்கைகளுக்குள் நாம் சந்தோஷப்படுகிறோம். ஆகவே.” அந்தப்படியே ஆவியானவரும் (நம்முடைய புதிய, பரிசுத்த சிந்தை) நமது பலவீனங்களில் (சரீர)நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், (நாம் விரும்பியபடி எப்போதும் செய்ய முடியாதவர்களாக இருப்பதால்) ஆவியானவர் தாமே (நம்முடைய பரிசுத்த சிந்தை வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக- சேர்க்கப்பட்ட வார்த்தை. பழைய பிரதிகளில் காணப்படவில்லை) வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தம்முடைய ஜனங்களின் மாம்சத்தின் அபூரணத்தை பொருள்படுத்தாமல். அவர்களுடைய இருதயத்தின் விருப்பங்களை. ஜெபத்தின் வழியாகவும். ஊழியத்தின் வழியாகவும் ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார். இப்படிப்பட்டவர்களின் இருதயத்தின் விருப்பத்தையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். தேவனுடைய பிள்ளைகள் அடிக்கடி தகாதவிதமாக அவரிடம் விண்ணப்பித்திருந்தும். நம்முடைய அறியாமை மற்றும் பலவீனத்திலும். நம்முடைய பரலோகத் தகப்பன் நம்முடைய வார்த்தைகளுக்கு பதிலாக நம் இருதயங்களின் நோக்கங்களை ஏற்றுக்கொள்வது நமக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! பரிசுத்த ஆவியினாலும் நெருப்பினாலும் அபிஷேகம் பெறும்படி தேவனுடைய ஜனங்கள் ஜெபிப்பதைக் கேட்கும் போதெல்லாம் இதைப் பற்றி நாம் நினைக்கிறோம். அவர் மேற்க்கோள் காட்டிய வேத பகுதியை சரியாக புரிந்து கொள்ளாமல். நல்ல மனதோடும் ஆசீர்வாதத்தைப் பெறும் விருப்பத்துடனும் ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது. உண்மையில் அவர் ஒரு ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஒரு சாபத்தை கேட்கிறார். கிறிஸ்து பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் ஸ்நானகனால் முன் உரைக்கப்பட்டது. இந்த பகுதியான ஆசீர்வாதம், பெந்தெகொஸ்தே நாளில் காத்திருந்த சபையின் மீதும்.”மீதமுள்ள “உண்மையான இஸ்ரயேலின் மீதும் வந்தது. ஆனால் அதன் பிந்தின காரியம் அதாவது அக்கினியின் ஞானஸ்நானம். அழிவு, உபத்திரவம் ஆகியவை மேசியாவை புறக்கணித்த யூத தேசத்தின் மேல் வந்தது. இது கி.பி 70 ஆம் ஆண்டில் அவர்களை முற்றிலும் அழித்தது. ஆனால் மிகவும் அன்பான தேவன் தம் ஜனங்களின் ஜெபங்களுக்கு அவர்கள் கேட்பதற்கு ஏற்ப பதில் அளிக்காமல், அவர்களின் மனதின் நோக்கங்களின்படி அவர்களுக்கு ஆசீர்வாதங்களை மட்டுமே அளிக்கிறார்.
சிலர் தவறுகளில் அகப்பட்டு, விழுந்து போன மனித சுபாவத்தினாலும், பலவீனத்தினாலும் சாத்தானால் அவர்கள் சிக்கியிருக்கலாம். அவர்கள் மிகவும் சோகமாக கிருபாசனத்திற்கு செல்லும் போது. ஜெபிப்பதற்கு வார்த்தைகள் இல்லாமல், அவர்களின் பாரத்தை குறித்து ஆவியில், அதாவது சிந்தையில் தவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் சரியான மொழியில் அவர்களின் விண்ணப்பங்கள் கேட்கப்படுவதற்கு சரியாக வகுக்கப்படவேண்டும் என்று தேவன் வற்புறுத்தவில்லை. அதற்கு பதிலாக அவர் அவர்களுடைய சொல்ல முடியாத இருதயத்தின் தவிப்புக்கும் விருப்பத்திற்கும் தேவையான மன்னிப்பையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் ஆறுதலையும் பதிலாக அளிக்கிறார். ஆகவே சொல்ல முடியாத ஜெபங்களுக்கு. அவர் பதிலளித்து, மன்னிப்பின் உணர்வோடு பலத்தையும் ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார்.
“இவைகளை குறித்து நாம் என்ன சொல்லுவோம்” என்று கூறி அப்போஸ்தலர் இது தொடர்பான தன்னுடைய முழு வாதத்தின் தொகுப்பையும் வழங்குகிறார். (தேவன் நம்முடைய சார்பாக எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருக்கிறார் என்ற உண்மையை நாம் காணும் போது. நம்முடைய விருப்பத்திற்கு முரணான நமது பலவீனங்களையும் குறைபாடுகளையும் புறக்கணித்து. அவைகளை நம்முடைய கிரியைகளாக கருதாமல். நம்முடைய முடமான விண்ணப்பங்களை புறக்கணித்து. நம்முடைய விருப்பங்களை வெளிப்படுத்த நாம் அறியாத போதும். அபூரணமான ஜெபங்களில் நாம் தவிக்கும் போதும். நம்முடைய மனதின் ஆவிக்கு ஏற்ப நம்மை ஆசீர்வதிக்கும்படி அவர் ஏற்பாடுகளை செய்திருக்கிறார் என்று நாம் முடிக்கிறோம்.) “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ” – வசனம் 31.