CD-KNOWLEDGE-Q-27
ஏசா 11:9 “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்”
1 தீமோ 2:4 “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்”
A74(B3): –
ஒரு யுகத்திற்குரிய வார்த்தைகள் அல்லது வாக்கியம் மற்றொரு யுகத்திற்கு பொருத்தக்கூடாது. ஏனெனில் ஒரு யுகத்திற்காக சொல்லப்பட்ட காரியங்கள் மற்றொரு யுகத்திற்கு உண்மையாகாது. எடுத்துக்காட்டாக, இப்போது, பூமி கர்த்தரை அறிந்திருக்கும் அறிவினால் நிறைந்திருக்கிறது என்றும், இனி ஒருவரும் தன் அயலானுக்கு கர்த்தரை பற்றி அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்லுவது அசத்தியமாகிவிடும் (ஏசா 11:9, எரே 31:34). ஏனெனில், இந்த யுகத்தில் இது சாத்தியம் இல்லையே. வந்திருக்கும் நம் ஆண்டவர் பகிரங்கமாக அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் வரையில் இவைகள் சம்பவிக்க வாய்ப்பில்லை. இதுபோல இந்த யுகம் முழுவதிலும் இன்னும் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் கடைசி காலத்திலும் அநேக வஞ்சகமான காரியங்கள் போதிக்கப்பட்டு வருகிறது. “மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம் போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” (2தீமோ 3:1,13). ஆகவே மேசியாவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பதுபோல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
E19(P4): –
இந்தக் கருத்துக்கு இசைவாக தேவ வசனங்களும் கூறுகிறது. அதாவது 1000 வருட ஆட்சியை பொருத்தவரையில், இனி ஜாதிகளை மோசம் போக்காதபடிக்கு சாத்தானை கட்டப்பட வேண்டும் (வெளி 20:3) மேலும் தேவனுடைய இராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும்போது, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஏபி 8:11). மேலும் – “உம்முடைய இராஜ்யம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக” என்று கர்த்தர் கற்பித்த ஜெபம் நிறைவேறும். அப்போது தேவனுடைய விருப்பமும் நிறைவடையும். (1தீமோ 2:4)
A105(P2): –
தற்காலிகமான சோதனைக் காலமும் மரணத்தோடு நிறைவேறும் என்று அநேகர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படியாக எந்த வசனமும் போதிப்பதில்லை. ஒரு வேளை மரணமே இந்த அறியாமையில் உள்ள உலக மனுக்குலத்தின் முடிவாக இருந்தால், வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் அநேக வசனங்கள் அர்த்தமற்றதாக போய்விடும். “மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின் மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்” (பிரச 11:3) என்ற வசனம் மட்டுமே இதை நிரூபிப்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறது. ஒரு வேளை இந்த வசனத்தோடு, மனிதனுடைய வருங்காலத்திற்கு ஏதாகிலும் தொடர்பு இருந்திருந்தால், ஒருவர் கல்லறைக்குள் நுழையும்போது உள்ள நிலை, அவர் உயிர்தெழும் வரைக்கும் மாறக்கூடாது. இதுவே வசனங்கள் அனைத்தும் கற்பிக்கும் சீரான உபதேசமாகும். ஆனால் தேவன் அறியாமையில் இருக்கும் மனுஷனை இரட்சிக்க விரும்பாமல், “சத்தியத்தை அறிகிற அறிவினால்” அனைவரையும் இரட்சிக்க விரும்புகிறார். (1 தீமோ 2:4) ஏனெனில் முழு மனுக்குலமும் அறியாமையில் மாண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் சென்ற நிலையில் செய்கையும் வித்தையும் அறிவும், ஞானமும் இல்லை (பிரச 9:10). ஆகவே மரித்தோரை உயிர்ப்பித்து அவர்களுக்கு சத்தியத்தை அறிவித்து, அதன் வழியாக அவர்கள் பெறும் விசுவாசத்தினால் அவர்கள் இரட்சிக்கப்பதற்கு தேவன் சகலத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். ஏனெனில் “ஆதாமுக்குள் மரித்த அனைவரும் கிறிஸ்துவுக்குள் உயிர்தெழ வேண்டும்” என்பதே தேவனுடைய திட்டமாக இருக்கிறது. சுவிசேஷ யுகத்தின் சபை, கிறிஸ்துவின் சரீரமானோர், முதலாவதாகவும் அதற்குப்பின் அவருடைய பகிரங்கமான ஆட்சியில் மற்றவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் உள்ள அனைத்து ஜனங்களும் தேவனை அறிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் குறித்த அந்த காலத்தில் அனைவரும் அவரை அறிந்து கொள்வார்கள். 1 கொரி 15:22