CD-FAITH-Q-14
மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகளாகிய சகலவிதமான கோபம், மூர்க்கம், பகை, பொறாமை, வைராக்கியம், கசப்புகளையும் நம்முடைய இருதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட்ட பின் பூரண பரிசுத்தத்திலும், தேவனுக்கு மகிமையாகவும், நாம் இந்த நல்ல போராட்டத்தைப் போராடவேண்டும். மேலும், நம்முடைய சகல போர் வீரர்களை இந்தப் பாதையில் நடக்க உதவி செய்யவேண்டியவர்களாகவும் இருக்கிறோம். நம்முடையவைகளை அல்ல, தேவனுடைய நாமமும், அவருடைய கற்பனைகள் பொருத்தப்பட்டிருக்கும் அவருடைய இராஜரீகமான கொடியை உயர்த்தவேண்டும். அவருடையவர்களாக இருக்க விருப்பமுள்ளவர்களையும், அறியாமல், தவறான போர் குழுக்களோடு சேர்ந்தவர்களையும் தேவனுடைய அளவின்படி உயர்த்த உதவிசெய்யவேண்டும். கிறிஸ்துவுக்குள் சுயாதீனம் பெற்றவர்களை மீண்டும் வஞ்சித்து, பாவம் மற்றும் மூடநம்பிக்கைளின் நுகத்தின் கீழ் சிறை பிடிக்க தேடித்திரியும் எதிராளியின் கரங்களிலிருந்து இப்படிப்பட்டவர்களை, துணிகரமாக மீட்கவேண்டும். இப்படிப்பட்டவர்கள் காற்றில் சிலம்பம் பண்ணுவதில்லை. நாம் மேடைகளில் வெறித்தனமாகக் கத்துவதில்லை, அல்லது தெரு ஓரங்களில் நாம் கூச்சலிடுவதும் இல்லை. ஆனால் அப்போஸ்தலர்களைப்போல திறமையுள்ளவர்களாக, சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டவர்களிடம், சத்தியத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். இந்தத் தந்திரமும், திறமையும் அவர்களின் விடுதலைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சாத்தான் அவர்களை தனக்குள் அடிமைப்படுத்தும்படி சூழ்ச்சி செய்கிறான். ஆகவே நம்முடைய ஆண்டவரும் போதகருமானவர் – “பாம்பைப்போல் வினாவுள்ளவர்களாகவும், புறாவைப்போல் கபடற்றவர்களாகவும் இருங்கள்” என்று நமக்கு எச்சரித்திருக்கிறார்.
நம்முடைய இரட்சிப்பின் அதிபதி, அநேக வாக்குறுதிகளைக் கொடுத்து, ஆறு இக்கட்டுகளிலும் நம்மோடிருந்து, ஏழாவது இக்கட்டில் நம்மை விடுவிப்பார் என்றும் அதாவது, நம்மை எந்தச் சூழ்நிலைகளிலும் அவர் கைவிடுவதில்லை என்றும் உறுதியளித்து, அவருக்குள் விசுவாசமாயிருப்பதற்கும் நம்மை ஊக்குவிக்கிறார். மேலும், தேவனுடைய திட்டத்தின்படி அழைக்கப்பட்டவர்கள், அவர் பேரில் உண்மையாக அன்பு கூறுவதினால், சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார். “விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்” என்று அறிக்கையிடுகிறார். ஆகவே கீழ்க் காணும் காரியங்களை நாம் நமக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளுவோம்.
(1) நம்முடைய இரட்சிப்பின் அதிபதிக்கு முழுமையாக கீழ்ப்படிய நாம் நம்மை ஒப்புக்கொடுத்து அவரோடு இணைந்து செயல்பட நம்மை ஒப்புக்கொடுத்திருக்கிறோம்.
(2) அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளவும், அவர் நமக்கு கொடுத்திருக்கும் சர்வாயுதங்களை அணிவதற்கும் நாம் முயற்சிக்கிறோம்.
(3) மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் எதிர்த்து நின்று பாவங்களின் வெவ்வேறு ரூபங்களை தகர்க்க நாம் போராடுகிறோம்.
(4) நாம் கர்த்தர் மேலும், அவருடையவர்கள் மேலும், உண்மையான விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ – அவர்களை ஊக்குவிக்கவும், ஆலோசனைகளை சொல்லவும், மற்ற ஊழியங்களை செய்யவும் (சிறியதோ, பெரியதோ), தங்களுடைய ஜீவனைக் கொடுக்கும் அளவுக்கு மனப்பூர்வமாக ஆயத்தமாக இருக்கிறோம்.
(5) விசுவாசம் இல்லாமல் நிச்சயமாக நாம் எதையும் ஜெயிக்க முடியாது என்று நாம் நினைவில் கொள்ளவேண்டும் – நம்முடைய கர்த்தராகிய இயேசுவை இரட்சகர் என்றும், அவர் நம்மை பராமரித்து, மனப்பூர்வமாக உதவிகள் செய்து, நம்மை வழிநடத்துகிறார் என்றும் விசுவாசிக்கிறோம். இப்படிப்பட்ட விசுவாசத்தின் மூலம் மட்டுமே – நம்மை நேசித்து, தன்னுடைய சொந்த இரத்தத்தினாலே நம்மை மீட்டு, சகலத்தையும் மேற்கொண்டு ஜெயிக்கமுடியும். நம்மை வெற்றிசிறக்க செய்த நம்முடைய பிதாவாகிய தேவனுக்கே அனந்தகோடி ஸ்தோத்திரம் என்றென்றும் உண்டாவதாக.
“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” – 1கொரி15:57
R2770 (col. 2 P5)
தேவனுடைய ஜனங்கள் சாத்தானை நிச்சயமாக சந்திக்கவேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பிட்ட காரியம், ஏதோ ஒரு விதத்தில் சாத்தானை அடையாளம் கண்டு கொள்ளமுடியும் என்பதை பொருள்படுத்துகிறது. “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்று அவர் குறிப்பிடுகிறார். அதாவது சாத்தானை எதிர்க்க நம்மில் விசுவாசம் மிக அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் – இது தேவன் மேல் வைக்கும் விசுவாசமாகும். இந்த விசுவாசம், எந்தச் சூழ்நிலையிலும், நம்மை பின்வாங்கச் செய்யாமல், மரண பரியந்தம், கர்த்தரின் பலிபீடத்தில் நம்முடைய முழு அர்ப்பணிப்பையும் ஒப்புக்கொடுக்க நம்மை வழிநடத்தி, தொடர்ந்து வர இருக்கும் மகிமையில் பங்கடைய நம்மை மகிழ்ச்சியினால் நிரப்பும். -யூதா 3, ரோமர் 8:17,18