CD-FAITH-Q-16
2கொரி 5:7 “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.”
F631(P2,3)
உண்மையில், புது சிருஷ்டிகளின் நிலைமையும், ஆர்வங்களும், நோக்கங்களும், மாம்சமான அனைத்து காரியங்களுக்கும் எதிரிடையாகவே உள்ளது. இதை குறித்து தீர்க்கதரிசியான தாவீது அறிக்கையிடுகையில் – “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன்.” மரிக்கக்கூடிய சரீரம் அல்ல, புது சிருஷ்டிகள் உண்மையில் தேவனுடைய புத்திரர், ஏனெனில், மாம்ச சரீரம் பலிசெலுத்தப்படவேண்டும். (நீதிமானாக்கப்பட்ட பின்பு) இது நம்மை ஏற்றுக்கொள்வதற்காகவும், ஜெநிப்பிப்பதற்காகவும் தேவன் வைத்திருக்கும் கட்டளையாகும். மாம்சத்திற்கு தேவைப்பட்ட கிருபைகளும், தற்காலிகமான ஆசீர்வாதங்களையும் பெற்ற மாம்ச இஸ்ரயேலர்களுக்கு இப்படிப்பட்ட கட்டளைகள் ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கற்பனைகளும், பிரமாணங்களும் வரவிருக்கும் உண்மையான இராஜா, உண்மையான அவருடைய இராஜ்யத்தின் மேல் அதிகாரம் செலுத்தும் நாட்களில் சம்பவிக்கப் போகிற காரியங்களுக்கு, நிழலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. யாத் 15:26, லேவி 26:3-15, உபா 28:1-14
இதற்கு எதிரிடையாக, பூமிக்குரிய காரியங்களைப் பொறுத்தவரையில் புது சிருஷ்டிகளுக்குண்டான சோதனைகளில் ஒரு முக்கியமான பங்கு என்னவெனில் – அவர்கள் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கவேண்டும். இதற்கு மேலாக – உபத்திரவங்களைச் சகிக்கவும், சுய கட்டுப்பாட்டை பழக்கப்படுத்திகொள்ளவும் வேண்டும். மேலும் உண்மையில், நமக்கு ஒன்றுமில்லாமல் இருந்தாலும், விசுவாசத்தினால் நாம் அனைத்தையும் பெற்றிருக்கிறோம். ஞானமற்றவர்களாக இருந்தோம், இப்பொழுது தேவனுக்குள் ஞானத்தைப் பெற்றிருக்கிறோம். அவருடைய அடிச்சுவடுகளை நெருங்கி பின்பற்றும் ஒவ்வொருவரும் இந்தக் காரிங்களை அதிக அளவில் உணரமுடியும். “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.” நம்முடைய காயங்கள் குணமாக்கப்பட்டதையும், நீதிமானாக்கப்பட்டதையும், கிறிஸ்துவின் சரீர அங்கமாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், நாம் மறந்துவிடக்கூடாது – நாம் புது சிருஷ்டிகளாக, அவருடைய பிள்ளைகளாகும் தகுதி பெற்று, விசேஷமாக, கிறிஸ்துவின் பாடுகளில் பங்கெடுப்பதினால் அவருக்கு உடன்பங்காளிகளாகும் வாய்ப்புகளைப் பெற்று “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, நம்முடைய மாம்சத்திலே நிறைவேற்ற” வாய்ப்புகளைப் பெற்றதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். – ஏசா 53:4,5, ரோமர் 8:17, கொலோ 1:24
R2581 (col. P3 – col 2P3)
எப்படியிருந்தாலும், பொதுவான மனுக்குலத்திற்கு வரவிருக்கும் சகல ஆசீர்வாதங்களும் “சுவிசேஷத்திற்குள்” அடங்கியிருக்கிறது. ஆனால், இந்த ஆசீர்வாதங்களை உலகம் பெறுவதற்குமுன், “சிறு மந்தை” வகுப்பினர் அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட கேட்கிற காதுகளும், காண்கிற கண்களும் உடையவர்கள் இன்னும் மேன்மையான ஆசீர்வாதங்களோடு, வெகு சீக்கிரத்தில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். வரக்கூடிய அனைத்து ஆசீர்வாதங்களும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக அல்ல, நாம் இவைகளை விசுவாசத்தின் மூலம் அறியவேண்டியவர்களாக இருக்கிறோம், ஏனெனில் – நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். முன்னதாகவே உண்மை சபையானது, (பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டிருப்போர் – எபிரே 12:23) விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படாமல், நீதிமானாகக் கருதப்பட்டு, பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலைப் பெற்றவர்களாகக் கருதப்பட்டு, கிறிஸ்துவோடு கூட எழுப்பப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கிறார்கள் என்று கருதப்பட்டு, புதிய உடன்படிக்கைக்குக் கீழ் இருப்பதினால், இனி ஒருபோதும் மாம்சத்தில் இல்லாமல், ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, புது சிருஷ்டிகளாக இருப்போர் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியாமல், ஆவிக்கேற்றபடி அறிந்துகொள்கிறோம்.
இயற்கையான கண்கள் காணமுடியாத காரியங்களை விசுவாச கண்களின் மூலமாக காணக்கூடிய புதிய பார்வையைப் பெறுகிறோம். சகல சத்தியங்களுக்குள்ளும் வழிநடத்தப்படுகிறோம். தேவன் அவருடைய ஆழமான காரியங்களை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். (1கொரி 2:9,10) இயற்கையான கண்கள் காணாத காரியங்களை விசுவாச கண்களின் மூலமாகக் காணவும், இயற்கையான காதுகள் கேட்டிராத செய்திகளை விசுவாச காதுகள் கேட்கவும், அல்லது சராசரி மனிதர்களுடைய சிந்தையில் ஒருபோதும் தோன்றாததுமான காரியங்களை தேவனிடத்தில் அன்பு செலுத்தி, அதை கிரியைகளில் வெளிப்படுத்துபவர்களுக்கு தேவன் முன்னதாகவே சேமித்து வைத்திருக்கிறார். இவர்களின் விசுவாசத்தின் கண்கள் திறக்கப்பட்டு சராசரி மனிதர்களுக்கு அப்பாற்பட்டு, மற்ற பரிசுத்தவான்களோடு, கிறிஸ்துவின் அன்பின் அகலத்தையும், நீளத்தையும், ஆழத்தையும் உயரத்தையும் இன்னதென்று உணர்ந்து கொள்கிறார்கள் – எபே 3:18.
ஆயினும், இக்காலத்தில், இந்த விசேஷித்த வகுப்பார் அழியக்கூடிய இந்த சரீரத்தின் அபூரணத்திலிருந்தும், அதன் பலவீனங்களிலிருந்தும் முழுமையாக விடுதலைப் பெறவில்லை. ஆனால், இவர்கள் காணாமல் விசுவாசிக்கவேண்டிய நிலையில் பெற்றிருக்கிறார்கள். இந்த புதிய உடன்படிக்கையின் கீழ் அவர்களின் மாம்சீக பலவீனங்கள் தேவனால் பொருள் படுத்தப்படுவதில்லை ஏனெனில் அவர்கள் புதுசிருஷ்டிகளாகக் கருதப்படுகிறார்கள். ஆகவே அவர்களின் மாம்சத்தை மரித்ததாகக் கருதி, அதனுடைய பலவீனங்களையும் அவர் பொருள்படுத்தாமல், அவர்களுடைய உள்ளான நோக்கத்தின்படியே நியாயத்தீர்ப்படைகிறார்கள். ஆகவே “பலியினால் உடன்படிக்கை” செய்து, மீட்கப்பட்ட அனைவரும், தாங்கள் ஞானஸ்நானம் பெற்று, அபிஷேகம் பண்ணப்பட்டவரின் சரீரத்தின் அங்கமாகக் கருதப்பட்டிருக்கும் காரணம் என்ன என்பதை நாம் நிச்சயமாக நினைவில் கொண்டவர்களாக இருக்கவேண்டும். தெளிவாக நாம் அனைவரும் ஒரே தலையின் கீழ் அவருடைய சுவிசேஷத்தை அறிவிக்கக்கூடிய போதகர்களாக இருக்கிறோம். அவருடைய மகிமையான ராஜ்யத்தில் “ராஜரீகமான ஆசாரியர்களாக” நம்முடைய பிரதான ஆசாரியர் நம்மை தகுதிபடுத்தும் வரைக்கும் நாம் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு விசுவாசமுள்ளவர்களாகக் காத்திருக்க வேண்டும். அதற்குபின் சுவிசேஷத்தில் முன் அறிவிக்கப்பட்டபடி, இந்த முழு உலகத்தையும், அற்புதமான ஆசீர்வாதங்களுக்குள் நடத்த சிறப்புரிமைப் பெற்றவர்களாக, சத்தியத்தின் வெளிச்சத்தை முழுமையாக பிரகாசிக்கவும், தேவனுடைய புத்திரர்களாக சுதந்திரத்தையும் பெறுவோம்.
F142 (P2)
“நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் என்ற அப்போஸ்தலனுடைய குறிப்பை சுவிசேஷ யுகத்தில் உள்ள முழு சபைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. நம்முடைய விசுவாசத்தை வளரச்செய்வதே நம்முடைய ஆண்டவரின் நோக்கமாக இருக்கிறது – அவரை காணமுடியாத பட்சத்திலும், அவரை விசுவாசிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அநேகக் காரியங்களை மறைவாக விட்டுச் சென்றார். மனித பார்வை அல்லது நியாயத்தீர்ப்பைப் பொறுத்த வரையில் அவருடைய விசுவாசம் வளர்ச்சியடையும் விதத்தில் சிலவற்றை விட்டுச் சென்றார். ஏனெனில், பூமிக்குரிய காரியங்களில் அற்புதங்களும் அடையாளங்களும் அனுமதிக்கப்பட்டால், இந்த விசுவாசம் வளருவதற்கு நிச்சயமாக ஒரு தடையாக அமைந்துவிடும். ஆகவே நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கான கண்கள் தேவனுடைய வார்த்தைகளின் மூலமாகப் பெற்ற வாக்குறுதிகளுக்கு எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும். இந்தச் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவதின் மூலமாக – காணமுடியாதக் காரியங்களை (இயற்கையாக அறிந்துகொள்ள முடியாத) விசுவாசிப்பதின் மூலம் வரும் மகிழ்ச்சியை நாம் பெறுகிறோம்.