CD-KNOWLEDGE-Q-4
யோவா.17:17- உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
நீதி 2:6- கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
யோவா. 6:45- எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
E50[P 2-4]:
சர்வத்திற்கும் அதிபதியாகிய நம்முடைய யேகோவா தேவன், கற்பனைகளை கொடுப்பவர் மட்டும் அல்ல, அவர் கொடுத்த கற்பனைகளை கற்றுக்கொடுப்பதிலும் சிறந்தவர். மனுகுலத்திற்காக ஏற்படுத்தின மிகப் பெரிய திட்டத்தில், அவருடைய மிகச் சிறந்த குணங்களாகிய நீதி, அன்பு, வல்லமை, மற்றும் ஞானத்திற்கு இசைவாக பரிபூரண சமாதானத்தோடும் செயலாற்றுவதை, வரும் காலத்தில் அவருடைய ஞானமுள்ள புத்திரர்கள் காண்பார்கள். நம்முடைய ஆண்டவராம் இயேசு தம்முடைய பரலோகப் பிதாவால் மனிதர்களுக்கு அனைத்து போதகங்களுக்கு மேலாக மிகச் சிறந்த ஓர் ஆசிரியராகவும், கருவியாகவும் நியமிக்கப்பட்டவராக இருக்கிறார். நம்முடைய அருமை இரட்சகர் இவைகளை சரியான முறையில் போதித்து கற்பித்தார். “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை”, “நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன்”, “என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது”, “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்”, “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது” “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 7:16-18, 8:38, 14:24, 17:6,14,17) என்று இயேசு பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் அறிக்கையிட்டார்.
அதே போல் நம்முடைய ஆண்டவர் விசேஷித்த போதகர்களாகிய அப்போஸ்தலர்களை சபையில் நியமித்தார். “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சகரிக்கையாயிருங்கள்” (அப். 20:28). ஆனால், “இந்த உலகத்தின் ஞானமாக” இருக்கக்கூடிய தங்களுடைய சொந்த போதகத்தைப் போதிக்க இந்தப் போதகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேவனுடைய ஜனங்கள் யேகோவா தேவனால் போதிக்கப்பட வேண்டும். மேலும் தேவனுடைய வார்த்தைகளையும், திட்டத்தையும் அவருடைய குணலட்சனங்களையும் மிகச் சிறந்த முறையிலும் சத்தியத்தின் சரியான அளவுகோல்களோடு போதிக்காத எவரும் போதகர்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இதை செய்யும் பட்சத்தில் “கிறிஸ்துவின் உபதேசத்திற்கும்”, “அப்போஸ்தலரின் உபதேசத்திற்கும்” அதிகமான கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது அனைத்துமே தேவனுடைய மகிமையாகவும், நித்திய பிரமாணங்களாகவும் இருக்கிறது.