CD-KNOWLEDGE-Q-10
லூக் 12:47,48 “தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்”.
F719 (P1): –
சந்தேகத்திற்கு இடமின்றி “காலத்திற்கு முன் எதைக் குறித்தும் நியாயந்தீர்க்காதிருங்கள்” என்று ஆண்டவர் கொடுத்த கட்டளை ஒரு காரணமாக அமைகிறது. பிரதான நியாயாதிபதியாகிய இயேசுவின் தலைமையில் – “நாம் தூதர்களையும் நியாயம் விசாரிப்போம்….” என்று எழுதிய பிரகாரம் வருங்காலத்தில் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் நம்முடைய கரங்களில் கொடுக்கப்படும். “தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான்.” (லூக் 12:47,48) என்று ஆண்டவர் அறிவிக்கிறார். துணிகரமான பாவத்தினால் ஏற்படும் குற்ற உணர்வுகளை, நம்முடைய ஆண்டவரின் அறிவிலும், அவருடைய சித்தத்தின் அடிப்படையில் அதிகமாக சீர்த்தூக்கிப் பார்க்கப்படும் என்பதை வசனம் குறிப்பிடுகிறது. ஆகவே இந்தச் சுவிசேஷ யுகத்தில், ஒளியின் கீழ்வந்தவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிக பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். சபையில் இல்லாதோர், ஆவியை பெறாதோர் சபையைக் காட்டிலும் குறைவான பொறுப்புகளை பெறுவார்கள் என்று பொருள் அல்ல, மாறாக அவர்களின் பாவத்திற்கு அதிகமாக கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
A349(P1): –
மேலும் வேதாகமம் திறக்கப்படும் போது அநேக அற்புதமான காரியங்கள் வெளிப்படுகிறது. (சங் 119:18) இன்று வெளிப்படுகிற சத்தியத்தின் வெளிச்சத்தினால், அநேக விசுவாச அறிக்கைகள், மனிதர்களின் பாரம்பரியம் அனைத்தும் தவறு என்று தெளிவாக காட்டுகிறது. ஆராதனைச் செய்யும் அபூர்ணரும் இதை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடுவதால், அநேகர் இந்த பொய்யான காரியங்களை புறக்கணிக்கிறார்கள். இறுதியில் இவைகள் (பொய்கள்) ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தபடுகிறது. மேலும் இவைகளை எல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டக்கூடிய தெய்வீக துவக்கத்தைக் கொண்டிருக்கும் வேதாகமத்தை, மனித விசுவாச அறிக்கைகளையும், பாரம்பரியத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் அவமானங்கள் இப்போது வேதாகமத்திலும் பரவக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, அநேக முற்போக்குவாதிகள், வேதாகமத்தில் உள்ள அநேக பகுதிகள் தங்களுக்கு இசைவாக இராததினால் அவைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். உண்மையில், விசுவாச வீட்டாரின் வளர்ச்சிக்கு தக்கதாக ஏற்ற காலத்தில் சத்தியங்கள் கொடுக்கப்பட்டு அவர்களை ஊக்குவிக்கிறது (மத் 24:45) சத்தியத்தின் தொடர்பு உடையோர், அதின் குணலட்சணத்தையும் அதில் குறிப்பிடப்படும் பொறுப்புகளையும் உண்மையில் உணர்ந்து கொள்வார்கள். இவைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் – செயல்படுத்த வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும். இதை புறக்கணித்தால் பொறுப்புகளை நாம் தட்டிக்கழிக்க முடியாது. அதை நாம் ஏற்றுக்கொண்டால் அதற்கான பொறுப்புகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது விசுவாச வீட்டார் அனைவருக்காகவும், அதில் உள்ள ஒவ்வொருவரும் இதை பெற்றுக் கொள்ள கடனாளிகளாக இருக்கிறோம். மேலும் நாம் விசுவாசமுள்ள உக்கிராணக்காரனாக இருந்தால், தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இப்போது உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது, ஒரு வேளை இது மறுபடியும் இருளாக மாறினால், எவ்வளவு அதிகமாக இருளாக இருக்கும். ஆகவே எழும்பி பரகாசியுங்கள். ஜனங்களுக்கு ஒரு கொடியை ஏற்றுங்கள்.