CD-KNOWLEDGE-Q-2
A121[P3]: –
இந்த கேள்வி மற்றொரு கோணத்திலும் கேட்கப்படுகிறது – இந்தத் தீமையை அனுபவித்து புரிந்துகொள்வதை தவிர, வேறு எந்த வழியும் இல்லையா? நிச்சயமாக நான்கு வழிகள் மூலம் காரியங்களை அறிந்துகொள்ளலாம். சுயமாக அந்த காரியத்தை அறிந்துக்கொள்ளுதல், கூர்ந்து கவனித்தல், அனுபவம் மற்றும் தக்க ஆதாரத்தை வைத்து முழுமையாக உண்மை என்று ஏற்றுக்கொள்ளக்கூடியவைகள். சுயமாக அறிந்துகொள்ளக்கூடிய அறிவு, நேரடியான காரணங்களை செயலாற்றாமல் அல்லது நிரூபிப்பதற்கு தேவைப்படுவதில்லை. இந்த அறிவு சர்வ வல்லமையுள்ள யேகோவா தேவனுக்கு மட்டுமே உரியது. அவரே ஞானத்திற்கும், சத்தியத்திற்கும் நித்திய ஊற்றும் காரணரானவர். மேலும் அவருடைய சிருஷ்டிப்புகள் அனைத்திற்கும் மேலானவராக இருக்கிறார். ஆகவே இப்படிப்பட்ட அறிவோடு நம்மை மற்றும் தீமையை அறிந்துக்கொள்வதற்கு மனிதனுடைய ஞானம் போதாது. கண்டு உணர்ந்து கொள்வதினால் மனிதன் அறிவைப் பெறலாம். ஆனால் இம்முறையில், அறிவைப் பெறுவதற்கு சில தீமைகளும் அதன் விளைவுகளும் கண்ணுக்கு முன் காட்சி அளிக்க வேண்டும். ஆகையால், ஏதோ சில இடங்களில் சில உயிரினங்கள் மத்தியிலும், மனிதர்களுக்கு மத்தியிலும், உலகத்தின் மற்ற இடங்களிலும் இந்தத் தீமை அனுமதிக்கப்படவேண்டும்.