CD-PRAYER-Q-27
F531 [1] through F532 [2]
நீதிமானக்கப்பட்ட நிலையில் பிறந்த பிள்ளைகள் இந்த எல்லா விஷயங்களிலும் புதிய சிருஷ்டிகள் தங்களது குழந்தைகளைப் பொறுத்தவரை மற்ற அனைவருக்கும் மேலாக, தீர்மானிக்கப்பட்ட ஒரு நன்மையைப் பெற்றுள்ளார்கள். ஆரம்பத்தில் அவர்கள் சிறப்பாக பிறக்க வேண்டும். அதாவது பிறக்கும்போதே அவர்கள் சிறந்தவர்களாக இருக்கவேண்டும். மேலும் இந்த பெற்றோர் வழியாக வரும் ஆஸ்தி, குழந்தை பருவத்தின் ஆரம்ப தருணங்களிலிருந்தே அவர்களை உருவாக்கவேண்டும். பிறந்து சில நாட்களான குழந்தையின் தாய் பதட்டமாகவும், எரிச்சலுடனும் துயரத்துடனும் இருந்தால் அந்த குழந்தையும் அப்படியே இருக்கும் என்பது நிச்சயம். தாயின் பாலின் மூலமாக மட்டுமல்ல, தொலைபேசியின் வழியாகவும், மின்சார ரீதியாகவும், அந்த தாயின் மூலமாகவும் ஒரு தாக்கம் அந்த குழந்தையிடம் செல்கிறது. அப்படியானால், கர்த்தருடைய ஆவியில், அதனுடைய சமாதானத்தோடும் அன்போடும் மகிழ்ச்சியோடும் புதிய சிருஷ்டிக்குள் வாசமாக இருப்பதற்கு என்ன ஒரு பொதுவான நன்மை காணப்படுகிறது! மேலும் அத்தகைய பராமரிப்பில் இருக்கும் குழந்தை எவ்வளவு சாதகமான சூழ்நிலையில் காணப்படுகிறது! மனித ரீதியாகப் பார்த்தால், உன்னதமான ஆண்மை மற்றும் பெண்மைக்கு தொடர்பாக மற்றவர்களின் சாத்தியக்கூறுகளுடன் ஆவிக்குரிய காரியங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, அதன் சாத்தியங்கள் எவ்வளவு பெரியவைகள், மேலும், கர்த்தருடைய வார்த்தையின் நிலைப்பாட்டில் இருந்து பேசும்போது, ஆண்டவருடைய பரிசுத்தவான்களின் பிள்ளைகள், தங்களைப் போலவே, அவர்களின் எல்லா காரியங்களிலும் தெய்வீக முன்னேற்பாட்டின் மேற்பார்வையில் உள்ளனர் என்பதையும் விசுவாசிகளின் பிள்ளைகளும் கூட “சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” என்ற வாக்குறுதியின் நிபந்தனையின் கீழ் வருகிறார்கள் என்பதையும் நினைக்கும்போதும். அதன் நன்மை எவ்வளவு பெரியதாக உள்ளது!
நல்லொழுக்கத்தினால் புதிய சிருஷ்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் தேவனோடு தற்காலிகமான நீதாமானாக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்பதை காண்பது கடினமல்ல. ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமையினால், பரலோக தந்தையிடமிருந்து அவர்கள் பிள்ளைகளும் ஒதுக்கிவைக்கப்பட்டது போல, தேவனுடைய ஜனங்களின் ஒப்புரவாக்குதலின் புண்ணியங்களின் வழியாக, அவர்களை மீண்டும் தேவனோடு இசைந்திருப்பதோடு, அவர்களின் பிள்ளைகளும் நீதிமான்களாக என்னப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் புத்தி அடைந்து, தங்களுடைய சொந்த சித்தம் செய்யும் வரையில் இவர்கள் இந்நிலையைப் பெறுவார்கள். எவ்வாறாயினும், பெற்றோரில் ஒருவர் தேவனுடையவரும் மற்றவர் அந்நியராகவும் இருந்தால் இந்த கேள்வி சிக்கலானது. அத்தகைய சந்தர்ப்பத்தில், பெற்றோரில் யார் ஒருவர் தேவனுடைய பிள்ளையாக இருந்தாலும் சரி, அவருடைய குழந்தைகளை தேவன் தன்னுடையவைகளாக எண்ணிக்கொள்கிறார் என்று பவுல் உறதியளிக்கிறார். குழந்தையைப் பொருத்தவரை, விசுவாசமுள்ள பெற்றோர், அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் தாக்கம் அர்ப்பணிக்கப்படாத பெற்றோரின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் என்று கணக்கிடப்படுகிறது. இந்த விஷயத்தைப் பொருத்தவரை அப்போஸ்தலர் கூறுவது: “என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான், அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டாலி உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.” (1 கொரிந்தியர் 7:14)
F684 [2]: –
நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, விசுவாசிகளின் பிள்ளைகள் நீதிமான்களாக்கப்படும் தெய்வீக கிருபையின் பங்காளிகளாக எண்ணப்படுவதாக அப்போஸ்தலர் அறிவிக்கிறார். இனி அவர்கள் தூய்மையற்றவர்கள் அல்ல என்றாலும், ஒரு தற்காலிகமான நிலையில் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். இந்த நீதிமானாக்கப்பட்ட நிலை மற்றும் தெய்விக கவனிப்பும் மற்றும் முன்னேற்பாடுகளுக்கான அதன் தொடர்பும் குழந்தைகளின் பிறப்பு முதல் விவேகமுள்ளவர்களாக வளரும் வரை அவர்களை பாதுகாக்கும். மேலும் அத்தகைய குழந்தைகள் ஜெபத்தின் விஷயத்திலும் நீதிமானாக்கப்பட்ட அதே சிலாக்கியத்தை பெறுகிறார்கள். அதற்கேற்ற விகிதத்தில் சந்தோஷங்கள் மற்றும் ஆசீர்வாதங்களையும் அதன் பலனாக பெறுகிறார்கள். தங்களுடைய பெற்றோரின் சர்வவல்லமையுள்ள தேவனை, தங்களுடைய தேவனாக ஏற்றுகொள்வதற்கு ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். மேலும் பெற்றோர் கிறிஸ்துவின் வழியாக தேவனோடு தொடர்புகொள்கிறார்கள் என்பதைப் சிறு வயதிலிருந்தே அவர்கள் புரிந்துக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு கற்பிக்கவேண்டும். இப்படியாக மறைமுகமாக அந்த குழந்தைகளும் கிறிஸ்துவுடனான அதன் நிலைப்பாட்டையும் தொடர்பையும். பெற்றோர் மூலம் பெற்றுக்கொள்வார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவ வீட்டிலும் அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோர் அல்லது பெற்றோர்கள், ஒரு விதத்தில் விசுவாச வீட்டின் ஆசாரியர்களாக கருதப்படுகிறார்கள். தேவனிடம் ஜெபிக்க, குழந்தைகள் சரியாக ஊக்கவிக்கப்படும் போது, அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோர் அல்லது புது சிருஷ்டியின் அங்கத்தினர்கள், குடும்பம் மற்றும் அதன் அனைத்து காரியங்களும், அதன் நலன்களும் ஒரு தெய்வீக மேற்பார்வையில் உள்ளன என்ற பாடத்தை, தங்களுடைய பிள்ளைகளுக்கு, கற்பிக்கவேண்டும், அந்த பிள்ளைகளின் மனது, நியாயத்தீர்ப்பின் அறிவை சரியாக புரிந்துக்கொண்டு தேவனிடம் தன்னை முழுமையான ஒப்புக்கொடுப்பதற்கு, சரியாக அனுமதிக்கப்படும் நேரத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதற்கு கற்ப்பிக்கப்படவேண்டும். இதனால் அத்தகைய பிள்ளை வாக்களிக்கப்பட்ட சிறப்புரிமைகள் மற்றும் சந்தோஷங்களுக்குள் பிரவேசிப்பார்கள்.