CD-EVILSPEAK-Q-10
R2248 (col.2p5): –
ஒரே சிந்தை வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்தப்படுவதை காண்கிறோம். அசுத்தமான அல்லது பணிவற்ற அல்லது அவிசுவாசமுள்ள மனதில் ஏற்படும் முடிவுகள் நிமித்தம் முதலில் சோதனை வருவதைக் காணலாம். ஆனால் அதில் எந்த பாவமும் இல்லை. தவறும் இல்லை. ஆயினும், இந்த தீமையான முடிவுகளை நாம் அசை போடும் பொழுது பாவம் கருத்தரிக்கப்படுகிறது. அந்த சிந்தையை நாம் தவிர்க்காமல் வளர்ச்சிக்குள்ளாகும் போது இரகசியமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது. நாம் அதை ஊக்குவித்தால் அந்த பாவம் வளர்ச்சியடைந்து சாதகமான சூழ் நிலைகளில் வெளிப்படையான கிரியைகளை நடப்பிக்கும். எடுத்துக்காட்டாக அயலானுக்கு விரோதமாக சொல்லப்படும் தவறான காரியங்கள் அல்லது வதந்திகள் அல்லது தீய காரியங்கள் – இந்த தீமையான முடிவுகள் மிக ஜாக்கிரதையாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் முடிவில் மனப்பூர்வமாக துணிந்து முன் திட்டமிட்டு செய்யக்கூடிய பாவங்களுக்கு நம்மை வழி வகுத்து அதன் கூலியாக இரண்டாம் மரணத்தை பெறச் செய்யும்.
“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”
(யாக் 1:14,15) என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். இங்கு ஒரே சிந்தைவேறுவிதமாக சொல்லப்படுகிறது.