CD-PRAYER-Q-9
R2501 [col. 2 P5]: –
இந்த சுவிசேஷ யுகததில், மிக சிறந்த சிலாக்கியங்கள், வாய்ப்புகள் மற்றும் மகா பெரிய வாக்குத்தத்தங்களின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் அநேகர் ஓய்வெடுத்த பிறகு வெறும் கண்களை மூடிக்கொண்டு ஜெபிப்பது போலொத்த ஜெபங்களில் தானியேல் திருப்தி அடையவில்லை. பயபக்திக்கும், ஆராதனைக்கும் பாத்திரமான ஒரு மிக பெரிய தேவனை அவர் தேவனாக கொண்டிருந்தார். அவர் தன்னுடைய சிருஷ்டிகரோடு நெருங்கின தொடர்பையும், ஐக்கியத்தையும் பெற்றிருந்த மிகப்பெரிய சிலாக்கியத்தை உணர்ந்து பாராட்டும் அளவுக்கு ஒரு மனிதனாக இருந்தார். அவர் சர்வவல்லவருக்கும் முழங்காலில் நிற்க வெட்கப்படவில்லை. ஆனால் பூமிக்குரிய இராஜாக்களுக்கு, அவரும் மற்றவர்களும் தேவனிடம் வெளிப்படுத்தும் தாழ்மையை அவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை.
எந்த ஒரு கிறிஸ்தவரும் வாழ்க்கையில் சீரான நடத்தையை சரியாக பராமரிப்பது இயலாத காரியம் என்பதே எங்களது தீர்ப்பு மேலும் அப்போஸ்தலராகிய பவுலினால் இப்படிப்பட்ட நற்பண்புகள் மற்றும் விசுவாசத்தின் கட்டமைப்பை, “பொன், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கல்லினால்” செய்யப்பட்டதற்கு அடையாளமாக காட்டுகிறார். ஜெபம் இல்லாமல் இன்னும், ஜெபத்தில் ஒரு ஒழுங்கில்லாமல் – ஜெபத்தில் முழங்கால் படியிடாமல் – என்று சொல்லும் அளவுக்கு நாம் இதற்கு இசைந்திருக்கவேண்டும். இது வரையில் வாழ்ந்த உண்மையானவர்கள் மற்றும் தேவ ஜனங்களில் சிறந்தவர்களின் சாட்சி இக்கருத்தை நிச்சயமாக ஆதரிக்கும் என்று நாம் நம்புகிறோம்.
R3640 [col. 1 P4]: –
இது தொடர்பான மற்றொரு சிந்தனை. ஜெபத்திற்கான முக்கியத்துவம் மற்றும் அதற்கான தேவை, சில சந்தர்ப்பங்களில் பெயர் கிறிஸ்தவர்கள், ஜெபத்தின் பொருத்தமற்ற தன்மையை வலியுறுத்துவதை கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். அதாவது வாழ்க்கையே ஜெபமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்கு நன்றிகளை ஏறெடுப்பதற்கும், அவரை ஆராதிப்பதற்கும் முறையான முழங்காலில் நிற்கவேண்டாம். இதுபோன்ற கருத்துக்கள் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது – இதனுடைய தர்க்கம் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. உண்மையில் நாம் இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும். நம்முடைய முழு வாழ்க்கையும் தேவனுக்காகவும், அவருடைய சித்தத்திற்காகவும் அர்ப்பணிக்கப்படவேண்டும். மேலும் நம்முடைய சிந்தை அவருடைய நன்மைகளினால் நிரம்பியிருக்கவேண்டும். மேலும் ஒவ்வொரு காரியங்களிலும் அவருடைய சித்தம் நம்முடைய சிந்தையில் எப்போதும் இருக்கும்படியாக, நாம் அவருக்குள் வைத்திருக்கும் விசுவாசம் நிலையாகவவும், மிகுந்த பிரகாசமாகவும் இருக்கவேண்டும். ஆனால் எந்த கிறிஸ்தவருமே முழங்காலில் நின்று, கூடுமானால் தனிமையில் இப்படியாக ஜெபிக்காவிட்டால், தன்னுடைய இருதயத்தின் நோக்கங்களை சரியாக வைத்துக்கொள்ள முடியாது என்று நாம் நம்புகிறோம் – “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து… அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6)