Q-7
1 கொரிந்தியர் 10:31 “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”
R2355 [col. 1 P5]
கிறிஸ்தவர் தனது உணவில் அதாவது அவர் சாப்பிடுவதிலும், குடிப்பதிலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவர் தன்னையும், தன்னிடமுள்ள அனைத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்துள்ளதால், கர்த்தருடைய மகிமைக்காக மாபெறும் பலனை வாழ்விலிருந்து பெறுவது அவரது பிணைக்கப்பட்ட கடமையின் ஒரு பகுதியாய் இருக்கின்றதல்லவா? ஆகையால், எதை எவ்வளவு சாப்பிட்டால், தேவனுக்காக மிக பெரிதும், சிறந்ததுமான ஊழியம் செய்யமுடியும் என்று சிந்திக்கவேண்டாமா? இது புசிக்கும் உணவிலும், குடிக்கும் பானத்திலும், சுயமறுப்பு,, சுய கட்டுப்பாடு, ஆகியவற்றை பொருள்படுத்துகிறது. இவைகள் அனைத்தும் கணிசமாக சீர்குலைந்துள்ளது. உண்மையில், ஆன்மீக மது அவரை பைத்தியமாக்குவது போல, பெருந்தீனி அவரது உணர்வை கொள்ளையடிக்காது, ஆயினும் கூட அடிக்கடி சாப்பிடுவது, கணிசமான அளவிற்கு, மனதின் ஆற்றலைக் அழித்துவிடும் அல்லது அதிகப்படியான தூண்டுதலால் அவரை பலவீனப்படுத்தும். இவ்வாறு பலர் உணவு மற்றும் பானம் விஷயத்தில் சுப திருப்தி மூலம் பலவீனமாகவும் நோயுற்றவர்களாகவும் உள்ளனர். இப்படிப்பட்ட அனைத்திற்கும் நிதானம் மற்றும் சுய கட்டுப்பாடு – தேவனுடைய பிரமாணமாக உள்ளது. இது தேவனுக்கு நன்மை பயக்குவதற்காக அல்ல, இதனால் நாம் சரியான, நன்மையான, நியாயமான, பாத்திரங்களாக உருவாக முடியும்.