CD-EVILSPEAK-Q-34
“நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” 1 கொரி 11:31
மற்றவர்களை குறித்தான பிரச்சனைகளையும், வெட்டிப் பேச்சுக்களையும் பேசுபவர்களின் பலவீனத்தையும் தெய்வீக பிரமாணம் நிச்சயமாக மேற்கொள்ளும். இப்படிப்பட்ட வெட்டிப்பேச்சுகள், வதந்திகள், மற்றவர்களின் பிரச்சனைக்கான விபரம் – இவைகளை தவிர பேசுவதற்கு இந்த உலகத்திற்கு ஒன்றுமில்லையே. ஆனால் தேவனுடைய திட்டங்களும், “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று தூதர்கள் பாடின பாட்டின்” முழுமையாக நிறைவேறும் காலம் வரைக்கும், புது சிருஷ்டிகள் இவைகளை சிந்தித்து கொண்டும், வாயினால் பேசிக்கொண்டும், மற்ற உலக காரியங்களுக்கு மெளனமாய் இருப்பதே நலமாக இருக்கும். இவைகளே, தேவன் அங்கீகரிக்கக்கூடியதும், ஆசீர்வதிக்கக் கூடியதாய் இருக்கிறது.
அப்போஸ்தலர் நாவை குறித்துப் பேசுகையில் நம்முடைய சரீரத்தில் உள்ள அவயவங்களில் இது மிகவும் வல்லமயுள்ளது என்று காட்டுகிறார். அவைகள் பேசக்கூடிய அன்பான வார்த்தைகள் என்றும் அழிவதில்லை. ஜீவனுள்ளோருக்கும், இன்னும் பிறவாதவர்களுக்கும், ஆசீர் வழங்கக் கூடியதாய் இருக்கிறது. அல்லது விஷம் நிறைந்த வார்த்தைகள் மற்றொருவரின் வாழ்க்கையை கசப்பாக்கி அவருடைய ஜீவனை கொடூரமாய் நசுக்கி விடுகிறது. ஆகவே “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதேரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.” (யாக் 3:8-11) என்று அப்போஸ்தலர் இயல்பான மனுஷ சுபாவத்தை தெய்வீக சட்டத்திற்கு உட்பட்ட உண்மையான ஆவிக்கேற்ற சுபாவமாக மாற்றுவதற்கு நியாயப்பிரமாணம் முயற்சித்தது என்று அப்போஸ்தலர் விவரிக்கிறார். ஆயினும் அந்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட சில தடைகள் “இதை செய்யாதிருப்பீர்களாக” என்று சொல்லக்கூடிய காரியங்கள் தெய்வீக சித்தத்திற்கு எதிராக மற்றவர்களை துன்பப்படுத்த கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்டது. தேவனுடைய வீட்டில் ஊழியக்காரர்களுக்கு இந்தப் பிரமாணங்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் தேவனுடைய வீட்டில் புத்திரர்கள் குடியேறின போதோ, (எபி 3:5,6) அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதினால், அன்பின் பிரமாணத்தை முழுமையாக உணர்ந்து நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் அதிகமாகவும் இன்னும் ஆழமாகவும் தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படுகிறார்கள். “கொலைச் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” – என்ற பிரமாணங்கள் “புது சிருஷ்டி” மட்டுமே கொண்டிருக்கும் அடிப்படையான அன்பின் பிரமாணத்திற்கு முரண்படாக இருக்கும்.
ஆனால் புதிய உடன்படிக்கையில் உள்ள புதிய பிரமாணமாகிய அன்பு – யூத உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டுள்ள நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் மிக ஆழமாக புரிந்து கொள்ளக்கூடிய இருக்கிறது. “செய்ய வேண்டாம்” என்று சொல்லப்படும் பிரமாணங்கள் ஏதாகிலும் இருப்பினும் அது தேவனுடைய சட்டத்திற்கு முரண்பாடாய் இருக்குமே. ஆகவே “உங்களை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக” என்று சுருக்கமாய் சொல்லப்பட்டிருக்கிறது. அன்பின் பிரமாணம் அநேக அத்துமீறிய காரியங்களை தடுத்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்க “உண்மையான குற்றச்சாட்டையும்” பேசக்கூடாது என்று அன்பின் பிரமாணம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளைகளுக்கு கூறுகிறது. அதாவது உண்மையாக இருந்தாலும் அவைகளை பேசக்கூடாது என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. ஒருவேளை இப்படிப்பட்ட காரியங்களை பேசுவது நம்மேல் விழுந்த கடமையாக இருக்கும் பட்சத்தில் எந்த விதமான பகை, விரோதம், கசப்பு போன்ற காரியங்களை அடிப்படையாக கொள்ளாமல், அன்பின் அடிப்படையில் நாம் பேச வேண்டும். தேவனுடைய புத்திரர் இப்படிப்பட்ட பிரமாணத்தை அவர்களுக்குள் மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்கள் உற்றார் உறவினர் இன்னும் தங்களின் பகைவர்களுக்கும் அன்பை செயலாற்றினால் வேறெந்த குற்றங்களையும் செய்வதற்கும் வாய்ப்பில்லாமல் தங்களைத்தாங்களே எல்லா விதத்திலும் மகிழ்ச்சியுடன் பலி செலுத்துபவர்களாய் இருப்பார்களே. “கூடுமானால் விசுவாச வீட்டாருக்கும் நன்மை செய்யுங்கள்” இதுவே நம்மைப் போல் பிறரையும் நேசிப்பதாகும்.
இந்த அன்பு மற்றவர்கள் ஆசீர் பெறுவதற்கு கிரியை செய்கிறது. “அன்பு மற்றவர்களுக்கு தீங்கு நினையாது” என்பதை நிறைவேற்றுகிறது. ஆண்டவரிடத்தில் உடன்படிக்கை செய்த ஜனங்களாய் இருக்கும் நாம் அன்றாட வாழ்க்கையில் இதை பழக்கப்படுத்த முயற்சிக்காமல், நம்முடைய கரங்களினால் ஏற்படும் காயங்களை காட்டிலும் நாவினால் ஏற்படும் காயங்கள் மிக ஆழமானது என்பதை அறிந்து வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்த பழகி, நம்முடைய வார்த்தைகளினால் ஒரு சகோதரையாவது ஒரு அயலானையாவது காயப்படுத்தாமல் இருப்போமா? ஒரு சகோதரனையோ, அயலானையோ குறித்து பேசும் கனவீனமான வார்த்தைகள் நிச்சயமாக அவர்களை காயப்படுத்துவதினால் தேவனுடைய அன்பின் பிரமாணத்தை (பொன்னான பிரமாணத்தை) நாம் மீறுகிறவர்களாய் இருப்போமே, ஒருவர் மற்றவரினால் பாதிக்கப்பட்டு நஷ்டமடையும் பட்சத்தில் மட்டுமே நாம் இப்படிப்பட்ட உண்மைகளை தேவையான அளவுக்கு அறிவிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்?
இப்படிப்பட்ட எச்சரிப்பை கொடுப்பதற்கு முன் நாம் பல முறை யோசித்து சீர்தூக்கிப் பார்த்து அதற்குப் பின் தேவைப்பட்டால் உண்மைகளைச் சொல்ல வேண்டும். மேலும் அவர்களை குறை சொல்லுவது நம்முடைய நோக்கமாயிராமல் அவரை அழிவிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக நாம் சில காரியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். குற்றம் புரிந்த நபர் (மத் 18:15) வசனத்தின்படி தன்னை திருத்திக் கொள்ளாத பட்சத்தில் அவரிடம் தனியே சென்று இதை குறித்துப் பேசலாம். காரியங்கள் முக்கியமாக இருக்கும் பட்சத்தில் வேரிரண்டு பேரை அழைத்துச் சென்று பேசலாம். அப்போதும் திருந்தாவிட்டால் நாம் இந்தக் காரியத்தை மற்றவர்களிடம் பேச அனுமதிக்கப்படுவதில்லை, மாறாக சபையில் உள்ளே அழைத்து அவர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டியதாயிருக்கும்.
அன்பு பிறருக்கு தீங்கு செய்யாது மற்றும் “தீமையானதையும் எண்ணாது” என்ற வாக்கியங்களின் அர்த்தங்களை நாம் ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நம்முடைய நாவு அல்லது கிரியை எந்த விதமான தவறான நோக்கங்களின் அடிப்படையைக் கொண்டிராமல் தீமை செய்யும் பட்சத்தில் இப்படிப்பட்ட அன்பை செயல்படுத்துவதின் மூலம் பிரமாணத்தை நிறைவேற்றக் கூடியவர்களாய் இருப்போம். குறிக்கப்பட்டுள்ள பரிசுப் பொருளை நாம் அடைந்ததாக எண்ணிவிட முடியாது. நாம் பொறுமையோடு நம்மை நாம் இந்தத் தெய்வீக பிரமாணத்திற்குட்படுத்தி வாழ்க்கையில் செயலாற்றினால் தேவனுடைய இராஜ்யத்தின் பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட்டு இன்னும் பெரிதான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
R2688 [col.2 p2,3]: –
ஆனால் இந்த அன்பின் பிரமாணம் தெய்வீக நீதியை நமக்குள் புகுத்தி அதற்கும் மேலாக தயையையும் தாராள குணத்தையும் நமக்குள் வளர்ச்சியடையச் செய்கிறது. இப்படிப்பட்ட மன நிலைகள் இருக்கும் பட்சத்தில் ஒருவருடைய இக்கட்டான காலங்களில் மனப்பூர்வமாய் உதவலாம். ஆண்டவரின் உண்மையான பரிசுத்தவான்கள் எப்படிப்பட்ட ஆவிக்குரிய குணலட்சணங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொன்னான பிரமாணத்தின் மூலமாகவே இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவரமுடியும். இது வாழ்க்கையின் கிரியைகளை மட்டும் பாதிக்காமல் தாங்கள் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் முதலில் நீதி நடப்பிக்கப்படும். அதற்குப் பின் எந்தவிதமான எதிர்ப்பார்ப்புமின்றி அவர்களை காயப்படுத்தாமல் அவர்களின் தேவைக்குத் தகுந்த உதவிகள் செய்யப்படும். கூடுதலாக இந்த அன்பின் பிரமாணம் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காணப்படுகிறது. இந்தப் பிரமாணத்தின் கீழ் கசப்பும், கோபமும், அவதூறான வார்த்தைகளும் காணப்படுவதில்லை. இப்படிப்பட்ட வார்த்தைககளை பிறர் பயன்படுத்தக் கூடாது என்று நாம் எந்த அளவுக்கு நாம் எதிர்பார்க்கிறோம். ஆச்சரியமல்ல. கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்கள் – கோபம், பகை, விரோதம், பொறாமை, அவதூறு பேசும் அனைத்து வார்த்தைகளையும் களைந்து போடவேண்டுமென்று அப்போஸ்தலர் கூறுகிறார். கூடுதலாக இப்படிப்பட்ட வார்த்தைகளை களைந்து போடுவது மட்டுமல்ல, கனிவான வார்த்தைகளையும் அன்பான கிரியைகளையும் நடப்பிப்பதற்கு இந்தப் பிரமாணம் நம்மை வழி நடத்தும். அப்போஸ்தலர் மீண்டும் கூறுவது போல “இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டு விடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டீர்களே.” “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள். தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களுமாயிருங்கள்.” (கொலோ 3:8-10, 12-15)
இந்தப் பொன்னான பிரமாணம் வெளிப்புறமான கிரியைகளில் துவங்கி நம்முடைய வார்த்தைகளில் காணப்பட்டு வெகு சீக்கிரத்தில் நம் சிந்தையை வந்தடையும். நம் கிரியைகளையும் வார்த்தைகளையும் கொண்டு பிறர் நம்முடைய தேவனுடைய பிள்ளைகளென்று புரிந்து கொள்ளும்படியாக மற்றவர்களை குறித்து நம்முடைய சிந்தைகளும் கிரியைகளும் மிகவும் தாராளமாக தயவுள்ளதாகவும் இருக்க வேண்டும்.