CD-EVILSPEAK-Q-5
R2443 [col.2 p3] through R2444 [col.2 p2]
வெகு காலத்திற்கு முன்பு தீய பழக்கங்களை விரட்டிய பின்பும், பாவமென்று தெளிவாக அனைவரால் புரிந்துக் கொள்ளப்பட்ட பின்னும், சகோதரர் மத்தியில் இது பிரபலம் இல்லாத போதிலும் விழுந்து போன மனித நிலை அநேக உபாயதந்திரங்களை குறிப்பாக பயன்படுத்தி, மனசாட்சியின் குரலை அடக்க முயற்சித்து, தீமையான வழிகளை பயன்படுத்துவதை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது.
1. “நான் ஒருவருக்கும் தீங்கு செய்வதில்லை, ஆனால் என் நண்பர்களோடும், அயலகத்தாரோடும் அமர்ந்து சிறிது நேரம் பேசுவது போல சுவாரஸ்யமான காரியம் ஒன்றும் இல்லை. இதை தவிர வேறு பொழுது போக்கு எனக்கொன்றுமில்லை.” என்று நம்முடைய மனசாட்சி கூறலாம். ஆயினும் வெளிச்சத்தின் பிள்ளைகள் இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு நிச்சயமாக கணக்கு ஒப்பிக்க வேண்டும் அல்லவா? “உங்கள் சம்பாஷனை பரிசுத்தவான்களுக்கு ஏற்றவிதமாக இருக்கக்கடவது” என்று வசனங்கள் நமக்கு கற்பிக்கிறதே”
“அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (பிலிப் 1:27, கொலோ 4:6, எபே 4:29) என்ற கட்டளைகளை வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட அவதூறு பேசும் நபர்கள் தங்களுடைய வார்த்தைகளையும், செயல்களையும் சுத்திகரித்த போதிலும், வெகு தூரத்தில் இப்படிப்பட்ட பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கையில், மீதியுள்ள அந்தக் காரியங்களை சொல்லுவதற்கு மிகத் துரிதமாய்ச் சென்று விடுவார்கள். சரியோ தவறோ அல்லது அவர்களுக்கு தேவையான செய்தியோ தேவையில்லாத செய்தியோ, அவர்கள் இருதயத்தில் உள்ள எண்ணங்கள் அதிகதிகமாக தூண்டப்பட்டும் காட்டை கொளுத்திவிடும் நெருப்பாக அவர்களின் நாவு துரிதமாக செயல்படுகிறது. இது போல் மற்ற பலவீனங்களிலும் தேவனுடைய ஜனங்கள் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். விழுந்து போன நிலை இப்படிப்பட்ட காரியங்களில் மிகவும் மகிழ்ந்து, விருந்துண்கிறது. தாங்கள் செய்வது மிகச் சரியான காரியம் என்றும் பாவத்திற்கு எளிதாக போதித்து விட்டார்கள் என்று எண்ணியும் தங்களை நீதிமான்களாககாட்டிக் கொண்டோம் என்ற மகிழ்ச்சியிலும், அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். ஐயோ பாவம், விழுந்து போன மனிதனின் கிரியைகள் தேவனுடைய நீதிக்கு முன்பாக நிற்க முடியாமல் போய்விடுகிறது.
இதைக் குறிப்பாக கடைப் பிடிப்பதற்கு கிறிஸ்தவ சம்பாஷனைகளில், வெட்டிப் பேச்சுகளையும், குறை பேசுதலையும், முற்றிலும் அகற்றி விடுவது நலமாயிருக்கும். “அவதூறான பேச்சுக்களையும், தூஷணங்களும் உங்கள் வாயிலிருந்து புறப்படலாகாது.” என்ற நம்முடைய அப்போஸ்தலரின் கட்டளைகளை கண்டிப்பாக நாம் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கிறிஸ்தவர்களின் மத்தியில் எல்லாக் காரியங்களையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்கப்படுவதில்லை. கிறிஸ்து இயேசுவுக்குள் உண்டான தேவனுடைய கிருபையின் ஐசுவரியங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைகளில் உள்ள விலையேறப்பெற்ற வாக்குறுதிகளை மட்டுமே பேசுவதற்கு அனுமதி பெற்றிருக்கிறோம். மேலும், இவைகளை பேசும் போது கேட்போருக்கு மட்டும் அல்ல பேசக்கூடியவர்களும் உண்மையாக கிருபை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பாஷனைகள் அங்கு கூடியுள்ள அனைவர் மேலும் ஆசீர்வாதங்களைப் பொழியும். அழிந்துக் கொண்டிருக்கும் பழைய மனுஷனின் கிரியைகளை புறம்பாக்கும். மேல் சொல்லப்பட்ட காரியங்களை அப்போஸ்தலர் மனதில் வைத்து – “அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளிக்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார். மேலும் அன்பின் ஆவி தேவனுடைய ஆவி, சத்தியத்தின் ஆவி நிரம்பி வழியக்கூடிய இருதயங்களின் வாயிலாக எந்தத் தீமையான காரியங்களும், மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளும் வெளிவராது. ஒரு வேளை தீமையான காரியங்கள் வந்தால் இருதயம் பரிசுத்தமாக காத்துக் கொள்ளவில்லையென்பது உறுதிப்படுகிறது. “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” மத் 5:8, 1 பேது 2:9, மத் 12:14)
2. 27வது கேள்வியின் பதிலை காண்க
3. இப்படிப்பட்ட கேள்விகளை நல்ல கிறிஸ்துவ ஜனங்கள் வேறுவிதங்களில் தவிர்த்து விட்டு, தாங்கள் சத்தியத்தின்படி நடப்பதாக எண்ணி, மனிதனின் பொதுவான தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால் வழக்கமாக பேசும் அவதூறான காரியங்களையும், உண்மையில்லாத காரியங்களும் தங்களை நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தும் என்று அறியாமல் பேசக்கூடிய காரியங்கள் மெய்யா, பொய்யா என்பதையும் அறியாமல் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட தவறான பேச்சை பேசி முடித்தபின், அவைகள் தவறாய் இருக்கும் பட்சத்தில் தேவனுக்கு முன்பாக அவர்களை பொய் சாட்சிகளாக நிறுத்திவிடும். அந்தத் தவறை கட்டாயமாக சரிசெய்ய வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் வந்தாலும், மாம்ச சிந்தைக்குள் வளர்ந்திருக்கும் பெருமை, சத்தியத்தை விசுவாசிப்பதற்கு மறுத்து, தங்களை திருத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை தவிர்க்கும். இப்படியாக ஒரு பாவம் மற்றொன்றுக்கு வழி வகுக்கும். இப்படிப்பட்டவர்கள், “உண்மையை தவிர நான் எதையும் பேசுவதில்லை. என் கண்களினால் கண்டு, தனிப்பட்ட முறையில் அது உண்மை என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் மட்டுமே நான் பேசுவேன். உண்மை என்று நிரூபிக்கப்படாத காரியம் எதுவானாலும் சரி – நான் மிக ஜாக்கிரதையுடன் இவைகள் எனக்கு சொல்லப்பட்டது என்று சொல்லி முடித்துவிடுவேன். இப்படிப்பட்ட பேச்சுக்களுக்கு நான் உறுதியளிக்க மாட்டேன். இப்படியாக நாம் யாரைக் குறித்தும் தீமையான காரியங்களை பேசுவதில்லை” என்று சிலர் கூறலாம். இப்படிப்பட்ட துன்மார்க்கமான காரியங்கள் மனசாட்சிக்குபின் ஒழிந்துக் கொண்டு உண்மையைப் பேசுவது மட்டுமே மிகச் சரியானது என்று கூறிக்கொண்டு இருக்கிறது. ஏனெனில், உண்மை பேசுவது மட்டுமே, மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகளான தீய பேச்சுக்கள் என்று சொல்லப்படுகிறதே.
இது மிகப் பெரிய தவறாகும். தீமையான பேச்சுக்கள் உண்மையானாலும் சரி, பொய்யானாலும் சரி அது தீமையான பேச்சு தான். தேவனுடைய சட்டத்தில் மட்டுமல்ல நாகரீகமுள்ள எந்த மனுஷனின் சட்டத்திலும் இது நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையில் மனித சட்டத்தில் ஒருவருடைய தீமையான காரியங்களை பேசினதற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டால், உண்மையாக நடந்த சம்பவமாக இருந்தாலும், அதைக் குறித்து பேசினதற்காக அவர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள். ஏனெனில் அவரின் வார்த்தையினால் காயப்பட்டு அல்லது பாதிக்கப்பட்டவருக்கு இந்த உலக பிரகாரமான நீதிமன்றங்கள் நியாயம் செய்ய விரும்புகிறதே, ஆகவே உண்மையானாலும் சரி பொய்யானாலும் சரி, ஒருவரை காயப்படுத்தக் கூடிய நோக்கத்துடன் எந்தக் காரியங்களையும் நிச்சயமாக பேசக்கூடாது. மற்றவர்களை துன்புறுத்தக்கூடாது என்ற விஷயத்தில் தேவனுடைய சட்டமும் மனுஷருடைய சட்டமும் ஒன்றுக்கொன்று இசைவாக காணப்படுகிறது.
மற்றொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் முதல் தவறை இரண்டாவது தவறு நியாயப்படுத்தாது என்ற பிரமாணத்தை, மனித நேயமும் தெய்வீக கற்பனையும் ஒத்துக்கொள்ளுகிறது. ஒரு தவறு நடந்துவிட்டால், தவறு செய்பவர்களை தண்டிக்க நீதி மன்றங்கள் உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீமைக்கான தண்டனையை – ஆயுதங்களை பயன்படுத்தியோ, தங்கள் நாவினால் தீமையான முறையில் புறங்கூறியோ, அவரின் குணலட்சணங்களை கசப்பான வார்த்தைகளை பேசுவதினாலோ தங்களது சொந்த கரங்களினாலோ, கெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று மனித சட்டம் கூறுகிறது. உண்மையில் இப்படிப்பட்ட அநேகர் குற்றம் சாட்டப்படுவதில்லை, ஆயினும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட மானநஷ்ட வழக்குகள் நீதி மன்றங்களில் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
R2445 (col.1 P3:6)
உண்மைகளை கண்டடைவதில் என்னுடைய நேரங்களை நான் விரயம் செய்யமாட்டேன். வாழ்க்கை மிக குறுகியதாக இருப்பதால், நான் மற்றவர்களின் சொல்கேட்டு பேசாமல், எப்போதும், என்னுடைய அறிவிலிருந்து பேசத்தக்கதாக மிக கவனத்தோடு உண்மைகளை தேடிப்பிடிப்பதில் என்னுடைய சொந்த வேலைகளை செய்வதற்கு எனக்கு நேரமில்லாமல் போய்விடுமே – என்று ஒருவர் மறுத்து பேசலாம்.
இப்படியாக, வசனங்களின் அடிப்படையிலாக நீங்கள் பின்பற்றக்கூடிய பிரமாணம் என்னவெனில் – “ஒருவனையும் தூஷிக்கவேண்டாம்”
1. ஏனெனில், உங்களுக்கு உண்மைகளை அறிந்துகொள்ள நேரமில்லாததாலும், உங்களுக்கு முன் எல்லா உண்மைகளையும் வைக்கப்பட்டாலும், அவைகளை நடு நிலைமையோடு பார்க்கக்கூடிய பக்குவம் குறைவாக இருக்கக்கூடும்.
2. ஏனெனில், உங்களுக்குள் கிறிஸ்துவின் ஆவியும், அன்பும் அதிகதிகமாக தங்கியிருந்தால், உண்மைகளைக் கூறுவதற்கு சகலவிதமான ஆதாரங்கள் இருப்பினும், நீங்கள் அவைகளை எடுத்துரைக்க விரும்பமாட்டீர்கள். நீங்கள் அறிந்த உண்மைகள் தீங்கானதாக இருப்பதால் அவைகளை அறிவிக்க உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். அப்படியானால் அவதூறான புரளிகளை கட்டாயமாக கேட்க வேண்டும் என்று ஆவலோடிருக்கும் காதுகளையும், இந்தத் தீயக் காரியத்தை பற்றிய எந்த விதமான முன் அறிவும் இல்லாமல், தவறான செய்திகளை ருசிகரமாக பேசி, அந்த தீய செய்திகளை வேகமாக பரப்பும் நாவுகளின் நிலை என்னவாகும்? இவர்களுக்குள் கிறிஸ்துவின் ஆவி சிறிதளவும் இருக்க வாய்ப்பில்லை. சகோதர அன்பில் இல்லாதவர்களும், “பொன்னான கோட்பாடுகளை” இந்நாள் வரைக்கும் இவர்கள் கற்றதுமில்லை என்று பொதுவாக காணப்படுகிறது.