Q-16
R1962 [col. 11]
“என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், நான் சாந்தமும், மனத்தாழ்மையும் உள்ளவன்…” சாந்தமும் அமைதலுமான ஆவிக்குள் இவைகள் அடங்கியிருக்கிறது. சாந்தமாக இருக்கவேண்டும் என்றால், பொறுமையையும், தேவனுடைய சித்தத்தை அன்போடு நிறைவேற்ற தேவையான அர்ப்பணிப்பும் நமக்குள் வளர்த்துக் கொள்ளவேண்டும். சாதகமான சூழ்நிலைகளிலும், பாதகமான சூழ்நிலைகளிலும், தேவனுடைய அன்பில் நம்பிக்கையாக இருந்தால், அவருடைய ஞானத்தினால் வழிநடத்தப்படுவோம்.
(A) ஜெபத்தினாலும்
சங்கீதம் 19:12-14 “தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும், துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.”
(B) தேவனுடைய வார்த்தைகளில் உள்ள தெய்வீக ஞானத்தையும், அறிவையும், வல்லமையையும் கற்றுகொள்வதினாலும்
சங்கீதம் 8:3.4 – “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.”
1 கொரி 4:7 – “அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக் கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?”
(C) பரிப்பூரண மாதிரியாக இருக்கும் நம்முடைய ஆண்டவராம் இயேசுவோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதினாலும்..
ரோமர் 8:29 – “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;”
2 கொரி 3:18 – “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”