CD-LOVE-Q-26
R2289[col.1 P4]: –
நாம் எஜமானருக்கு மிக நெருக்கமாக இருந்து, அவருடன் ஐக்கியம் கொள்ள அடிக்கடி சலுகைப் பெற்றால், அதன் விளைவாக நமக்கொருபடிப்பினை உண்டு. அதேபோல நாமும் உற்சாகமான. ஆர்வமுள்ள ஆவியில் உண்மையாக வளரவேண்டும். குளிர்ச்சியை கணக்கிடும் ஜனங்களுக்கு மற்ற நல்ல குணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்டவருடைய கிருபையை ஒரு முறை ருசித்தவர்களுக்கு, குளிர்ச்சிக்கும். வெது வெதுப்பான நிலைக்கு இடமில்லை. அப்படிப்பட்ட கொழுந்து விட்டெரியும் அன்பு, பட்சிக்கும் வைராக்கியத்திற்கு நம்மை வழிநடத்தவேண்டும். இவ்வாறாக நம்முடைய ஆண்டவராம் இயேசு. தம்முடைய தந்தையால் நேசிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருந்தது. “என் பிதாவின் வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னை பட்சித்தது” என்று அவரைக் குறித்து தீர்க்கதரிசி கூறினார். கர்த்தருடைய பார்வையில் பிரியமான இருக்க விரும்பும் யாவரும், நீதி மற்றும் சத்தியத்தின் அதே வைராக்கியமுள்ள ஆவியினால் நிறைந்து, அவைகள் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலிகளாக அவருடைய பலிபீடத்தின்மேல் வைக்கப்படும். இவ்வாறு அவைகள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவினால், அவருக்கு மிகவும் பிரியமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் உள்ளது. சட்டப்பூர்வமாக, அனலும், வைராக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே, பாபிலோனிலிருந்து விடுதலைப் பெறமுடியும். அவர்கள் ஒளிக்குள்ளாகி, கணிசமானவற்றைப் பார்த்தபோதும், இந்த உலகம். மாம்சம் மற்றும் சாத்தானின் ஆவி, புதிய கண்மூடித்தனமான கட்டுகளினால், அவர்களை குருடாக்கி வைத்திருக்கும் வரையில் இவர்கள் ஆர்வமற்றவர்களாக காரியங்களை கணக்கிட்டு, எடைப்போட்டுக்கொண்டிருப்பார்கள்.
R3199[col.2 P4,5]: –
இந்த வழி எவ்வளவு குறுகியது. என்று சிலர் இறுமாப்பாக கூறுவதுண்டு, பவுலைப் போல சிலர், தங்களுடைய ஆற்றலை சத்திய சேவை என்ற ஒரே ஒரு காரியத்திற்காக ஒப்புக்கொடுப்பார்கள். ஆம். உங்களைப் போல் வெகு சிலர், இந்த “இடுக்கமான பாதையில்” செல்ல முற்பட்டு, எவ்வளவு இகழ்ச்சிகள் வந்தாலும், அதில் நடக்கத் தீர்மானிப்பவர்களை தவிர. இது உங்களுக்கு எதிரான தீர்மானமாக இருக்கும். நம்முடைய பரம அழைப்பின் பரிசுக்கான அடையாளத்தை குறிக்கும் வழி, வீணான தத்துவங்கள் மற்றும் மதியீனமாக கேள்விகள் மற்றும் பிதற்றுதல், அறிவியல் பற்றிய தவறான ஊகங்கள் ஏற்றுக்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. தேவனுடைய திட்டத்தை ஒப்புக்கொள்வது மட்டுமே போதுமானது. மற்ற எல்லா திட்டங்களையும் செயல்முறை ஏற்பாடுகளையும், கேள்விகளையும் நிராகரித்து. எவ்வளவு நிந்தைகள் வந்தாலும் அதை மனப்பூர்வமாக தாங்கிக் கொண்டு, தங்களை முழுமையாக அவருடைய பணியில் ஒப்புக் கொடுப்பார்கள். உங்கள் அழைப்பை எண்ணிப்பாருங்கள். உங்களை அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வர வழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு. நீங்கள் தெரிந்துக் கொள்ளப்பட்ட சந்ததியாயும், தேவனுக்கு ஏற்ற பலிகளை செலுத்தும் இராஜரீகமான ஆசாரியரும், பரிசுத்த ஜாதியும், விசேஷித்த ஜனங்களுமாக இருக்கிறீர்கள். இந்த ஒளிக்குள் நாம் அழைக்கப்பட்டிருக்கும் ஒரு நோக்கம், அதை நாம் பிரகாசிக்க வேண்டும் என்பதே. நாம் அதை பிரகாசிக்கவில்லை என்றால், அதற்கு நாம் அபாத்திரராகிவிடுவோம். நம்மிடம் இருந்து இந்த பொக்கிஷம் எடுக்கப்பட்டு, மீண்டும் நாம் இருளுக்குள் விடப்படுவோம். நாம் உண்மையில் வெளிச்சத்தைப் பெற்றிருந்தால், முழுமையாக தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருந்தால், “இருளிலிருந்த என்னை வெளியே கொண்டு வந்தவரைப் பற்றிய புகழை வெளிப்படுத்துவதற்கு நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்?” என்ற கேள்வியை நம்மிடம் கேட்கலாம். என் அருகில் மற்றும் தொலைவில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு இந்த நற்செய்தியை அறிவிக்க நான் செல்லுகிறேனா? தெய்வீக குணத்தை மெய்ப்பித்து காட்டவும், தேவனுடைய நீதியான பாதைகளை அறிவிக்க, நாளுக்கு நாள் நான் சுறுசுறுப்பாக முயற்சிக்கிறேனா? என்னுடைய நேரத்தையும். பொருளாதாரத்தையும் சிக்கனம் செய்து, என்னுடைய தற்காலிகமான வேலைகளை ஒழுங்கு செய்து, போதுமான நேரத்தை தேவனுடைய வேலைகளை செய்வதற்கு ஒதுக்குகிறேனா? அதன்பின், சத்தியத்தை நன்கு அறிந்திருக்க நான் விடாமுயற்சியுடன் படித்து வருகிறேனா ? இப்படியாக, என்னை சுற்றியுள்ளவர்கள் என்னை வாசிக்கும் படியாக, உண்மையில் நான் ஒரு வாழும் நிரூபமாக இருக்கிறேனா? ஒரு ஊழியக்காரர், உண்மையில் வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை
“என் அனைத்து பரிகரிக்கும் வல்லமைகள், என் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் எல்லாம். என் நாட்கள், என் மணிநேரங்கள் எல்லாம். இயேசுவுக்கே, எல்லாம் இயேசுவுக்கே”- என்று உறுதியாக என்னால் உண்மையில் சொல்ல முடியுமா ?
யோவானைப் பொருத்த வரையில் நம்முடைய ஆண்டவருடைய இந்த வார்த்தைகள், அப்போஸ்தலனாகிய யோவான் மரிப்பதில்லை என்ற யோசனையை சீஷர்களின் சிந்தையில் எழுப்பியதைப் போல் தோன்றுகிறது – அதாவது மற்றவர்கள் மரித்தாலும், இயேசுவின் இரண்டாம் வருகை வரைக்கும் யோவான் உயிரோடிருப்பார். ஆனால் இயேசு அப்படிப்பட்ட காரியத்தை சொல்லவில்லை என்று யோவான் தாமே கூறுகிறார். அது முற்றிலுமாக சீஷர்களின் ஒரு அனுமானமாக இருந்தது. சுவிசேஷ யுகத்தின் முடிவில், நம்முடைய ஆண்டவரின் இரண்டாம் பிரசன்னம் வரை, சபையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் சிலரை யோவான் அடையாளப்படுத்துவதை நாம் காணலாம். யோவான் உயிரோடில்லை, ஆனால் அவர் அடையாளப்படுத்தும் வகுப்பார், தொடர்ந்து, இந்நாள் வரையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் மறுரூபமாக்கப்படுவார்கள். தேவனை மகிமைப் படுத்தும் ஞானமும், இந்த கிருபையும், இந்த ஆசீர்வாதத்தின், காலம் வரை உயிரோடிருப்பதற்கு நாம் சலுகைப் பெற்றுள்ளோம். மற்றும் யோவானின் அன்பான மனப்பான்மை, அவருடைய ஆற்றலும். பக்தியும். நமக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், அவர் அன்பான சீஷர் என்று அழைக்கப்பட்டாலும் அவருடைய சகோதரனுடைய பாணியில் கட்டுக்கடாங்காத வைராக்கியம் கொண்டிருந்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் – இடி முழக்கத்தின் சகோதரர்கள். அவர் நமக்கு தந்த நம்முடைய சரீரத்தினாலும், ஆவியினாலும், முழு ஆற்றலுடன், அன்பினால் ஏவப்பட்டு முழு பலிகளைச் செலுத்தி, நம்முடைய ஆண்டவரை மகிமைப்படுத்துவோம். இந்த முடிவு காலம் வரை, ஏழு சபைகளுக்கும் முழுமையாக பொருந்தக்கூடிய நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை, நாம் நினைவில் கொள்ளலாம். “இவைகளைவிட என்னை அதிகம் நேசிக்கிறாயா?” என்று முழு சபையின் சார்பாக பேசக்கூடிய பேதுருவுக்கும் இது பொருந்தும். இதே கேள்வி, இன்றைய ஆண்டவரின் அனைத்து ஜனங்களிடமும் கேட்கப்படுகிறது. இந்த உலகம், வியாபாரம், வீட்டு கடமைகள், சமுதாய வசதிகள் முதலியவற்றிற்கு நாம் உலகோடு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடர்பு கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், “புது சிருஷ்டிகளாக”, அவருடைய “இராஜரீகமான ஆசாரியர்களாக” இருக்கும் நாம். தேவனுடைய கடமைகளுக்காக, நம்முடைய சொந்த கடமைகளை சமநிலைப்படுத்தி, தேவனுடைய கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது? அவரை காட்டிலும், பூமியின் காரியங்களை அதிகமாக நாம் நேசிப்பதை ஆண்டவர் காண்கிறாரா? அப்படியானால், நாம் அவருக்கு தகுதியற்றவர்கள் என்று அவர் அறிவிக்கிறார். மற்றும் அவருடைய மணவாட்டியாக நம்மை அவர் கண்டுணரமாட்டார். வீடுகளையும், நிலங்களையும், கணவர்கள் அல்லது மனைவிகள் அல்லது பிள்ளைகள் அல்லது மற்ற எந்த பூமிக்குரிய காரியங்களை விட அவரை அதிகமாக நேசிப்பவர்களை மட்டுமே அவருடைய சிறு மந்தையாக தெரிந்துகொள்கிறார். – மத்தேயு 10:37
யோசேப்பினிடம் வந்த செழிப்பு அவருடைய சிந்தையை மாற்றவில்லை. அதற்கு தன்னை தகுதியுள்ளவராக காண்பித்தார். அதாவது அந்த செழுமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள, அவருடைய முந்தைய அனுபவங்கள் ஆதாயமாக இருந்தது. வியாபாரத்தில் அவர் சுருசுப்புள்ளவராக இருந்தார். சிந்தையில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இதை கண்ட தேவன் அவருக்கு வழியைத் திறந்தார். அவர் உடனடியாக அவருடைய திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். களஞ்சியங்களை அல்லது பண்டக சாலைகளைக் கட்டியமைப்பதற்கு நேர்த்தியான தளங்களை தீர்மானிப்பதற்காக எகிப்தின் எத்திசையிலும் பயனித்ததே, அவருடைய முதல் நடவடிக்கையாக இருந்தது. ஆண்டவருடைய ஆசீர்வாதம் தொடர்ந்து அவரோடிருந்து, அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த வேலைகளில் முன்னேற்றம் அடைந்தார். இவ்வாறாக இது நம்முடனும் இருக்க வேண்டும். தேவனுடைய சேவையின் எந்த ஒரு துறையிலும், நமக்கு வாய்ப்பின் கதவை திறக்க அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதில் நாம் உடனடியாக ஆற்றலுடனும் வைராக்கியத்துடனும், அவர் நம்மை அழைத்ததற்கான நோக்கத்திற்காக அதில் பிரவேசிக்க வேண்டும். அவர் நம்மை ஏற்றுகொள்ளுவதற்கு இது ஒரு நிபந்தனையாகும். வாய்ப்புகளை பயன்படுத்துவதில் நாம் சோம்பலாக இருந்தால், சந்தேகத்திற்கிடமின்றி அவைகள் நம்மை விட்டு அகற்றப்பட்டு, மற்றவர்களுக்கு கொடுக்கப்படும். ஏனென்றால், ஆண்டவர் ஒருவரின் சுயாதீனத்தில் தலையிடாமல், ஒருவரை அல்லது மற்றொருவரை அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உயர்த்த, ஏராளமாக ஆற்றலுடையவராக இருக்கிறார். தேவனோடும் குறிப்பாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் கூட உடன் வேலையாட்களாக ஒருமித்து, இந்த மகத்தான சேவையைச் செய்வதற்கு நாம் பெற்ற சலுகையை எண்ணி அதிகதிகமாக பாராட்ட வேண்டும். மேலும், அவர் நம்மை அவருடைய மணவாட்டி மற்றும் பங்காளிகள் என்று அழைப்பதனால் நாம் பெற்ற ஐக்கியத்தை எண்ணி, சந்தோஷப்படவேண்டும்.
R2006 [col.1 P4, Last third]:
மகிழ்ச்சியோடு நற்செய்தியைப் பிரசங்கிக்க உங்களுக்கு பட்சிக்கும் பக்தி வைராக்கியம் இல்லை என்றால், அதற்காக உண்மையுடனும், விசுவாசத்துடனும், இடைவிடாமலும் ஜெபியுங்கள். அதற்காக முயற்சி செய்யுங்கள். நீங்கள் விரைவில் அதைப் பெறுவீர்கள். உங்களுக்கு நற்செய்தியின் மேல் அன்பும் வைராக்கியமும் இருந்தாலும், அதை வழங்குவதற்கு திறமை இல்லாவிட்டால், நீங்கள் பெற்ற திறமையை முழுமையாக பயன்படுத்திக்கொண்டே, அதிகமான திறமைக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு வைராக்கியமும், திறமையும் இருந்து, வாய்ப்புகள் இராவிட்டால், அதை நீங்கள் உடனடியாக ஜெபத்தில் தேவனிடம் கொண்டு செல்லுங்கள், உங்களிடம் உள்ள எல்லா வாய்ப்புகளையும் நீங்கள் உண்மையாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று அவரிடம் கூறுங்கள். பிறகு. உங்கள் அருகில் இருக்கும் மிகக் குறைவானதும், மிக எளியதுமான வாய்ப்புகளை சோர்வின்றி பயன்படுத்திக்கொண்டு விழித்திருங்கள்.