CD-PRAYER-Q-1
“ஜெபம் என்பது உச்சரிக்கப்படும் அல்லது வெளிப்படுத்தப்படாத இருதயத்தின் உண்மையான ஆசையாகும்.”
R2251 [col. 1:3]: –
“ஜெபம் என்பது உச்சரிக்கப்படும் அல்லது வெளிப்படுத்தப்படாத இருதயத்தின் உண்மையான ஆசை” என்று கவிஞர் கூறுகிறார். மற்றும் உண்மையை சொல்வோமானால். “தேவன் இருதயத்தில் உள்ள எண்ணங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவர்” என்று வேத வசனங்கள் நமக்கு தெரிவிக்கிறது. மீண்டும் பரிசுத்தவான்களின் விஷயத்தில் துன்பகரமான நேரங்களில் நாம் அவரை அணுகும்போது, நம்முடைய உணர்வுகளையும், விருப்பங்களையும் வெளிப்படுத்துவதற்கு எந்த வார்த்தைகளும் இல்லாதபோது, நம்முடைய வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாமல் ஆவியில் கலங்கி அவரிடத்தில் வரும்போது. நம்முடைய சிந்தை அல்லது நோக்கம் ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. (ரோமர் 8:26) இருப்பினும், நம்முடைய ஜெபங்கள் சொல்லப்பட்டு, வடிவமைக்கப்பட வேண்டும் என்று வார்த்தைகளினாலும் உதாரணங்களினாலும் நம்முடைய ஆண்டவர் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். கூடுமானால் புரிந்துகொள்ளப்படாத உணர்வுகளையும் பெருமூச்சுகளையும் விட்டுவிட வேண்டும். இதனுடைய முடிவில், “ஆண்டவரே. எங்களுக்கு ஜெபிக்க கற்று தாரும்” (லூக்கா 11:1) என்ற அப்போஸ்தலர்களின் வேண்டுகோலுக்கு இணங்க தறிபோதைய படிப்பினைக் குரிய கட்டளைகளை அவர் கொடுத்தார்.
F680 [P2, (முதல் வாக்கியம்)]: –
வசனங்கள் விவரிக்கிறபடி, ஜெபம் என்பது தேவனுடைய பிரசன்னத்தை அணுகுவதற்கான முயற்சி மற்றும் அவரோடு தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிடிமானமாகும்.