CD-FAITH-Q-29
எபே 6:16 “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.”
F657 [P5]
சாத்தானின் பொறி பறக்கும் அம்புகளிலிருந்து காப்பதற்கு விசுவாசத்தின் கேடயம் கட்டாயமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்”, “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் ஜெயம், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” – எபி 11:6, 1யோவான் 5:4
எபி 6:19 – அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
R3109 [col.1P4,5]
தேவன் ஒருபோதும் அவர் செய்த உடன்படிக்கைகளை முறிக்கமாட்டார் என்றும், எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அவர் அதை மாற்றவோ, திருத்தவோ, மாட்டார் என்றும் சொல்லப்பட்டிருக்கிற உடன்படிக்கையின் – வாக்குத்தத்தங்கள் நமக்கு உறுதியளிக்கிறது. ஆகவே நாம் நம்பிக்கையில் இளைப்பாறிக்கொண்டு, இந்த உலகத்தின் சார்பாக நமக்குள் நல்ல கிரியைகளைத் துவங்கினவர், அதை முடிக்கவும் வல்லவராக இருக்கிறார் என்று அதிக உறுதியோடு அவருடைய சித்தத்திற்கு இசைவாகச் செயல்படுவோம். என்றும் மாறாத நாம் பெற்றிருக்கும் இந்தத் தெய்வீக உடன்படிக்கைகளின் அறிவு, தேவன் மேல், நாம் வைத்திருக்கும் நம்பிக்கையையும், விசுவாசத்தையும், அதிகரித்து ஒவ்வொரு சோதனைகளிலும், துன்பங்களிலும், இன்றையக் காலங்களில் வரும் ஏமாற்றங்களிலும் – சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்ற உறுதியான ஆறுதலைக் கொடுக்கிறது அல்லவா, நாம் பெறும் மகிமை, கனம், அழியாமைக்கு மட்டும் அல்ல இந்தத் தெய்வீகத் திட்டத்தில் முழு மனுக்குலமும் பெறப் போகிற ஆசீர்வாதங்களுக்காகவும் இவைகள் சம்பவிக்கிறது என்று நமக்கு உறுதியளிக்கிறது அல்லவா? நிச்சயமாக, அல்லேலூயா, எப்படிப்பட்ட இரட்சகரை நாம் பெற்றுள்ளோம்.
அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டில், இந்த வாக்குத்தத்தங்களைக் குறித்து விரிவாக விவரித்தக் காரியங்களின் சாராம்சத்தை இப்பொழுது நம்முடைய சிந்தையில் கூட்டிச்சேர்த்துப் பார்த்தால், இனிவரும் ஜீவனைக் குறித்து மட்டும் அல்ல, இப்பொழுது உள்ள ஜீவனைக் குறித்தும் உறுதியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இவைகள் நமக்கு புதிய சந்தோஷத்தையும், புதிய தைரியத்தையும், புதிய வைராக்கியத்தையும், இந்த உலகத்தில் – நம்முடைய குடும்பம், நண்பர்கள், வேலைகளைச் செய்வதற்கு புத்துணர்ச்சியும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தேவனோடு நல்லுறவையும் இந்தக் காலத்தில் பெறுவதற்கு வாய்ப்பளிக்கிறது. மேலும், சுவிசேஷத்தில் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிதான, கிருபையுள்ள நம்பிக்கையின் மேல் நமக்கு உறுதியான விசுவாசத்தை ஏற்படுத்துகிறது மற்றும் தேவன் நமக்குக் கொடுக்க விரும்பும் அனைத்தையும், அதாவது அவருடைய வல்லமையை நாம் சிந்திப்பதற்கும், கேட்பதற்கும் அதிகமாக அவர் கொடுக்ககூடியவராக இருக்கிறார்.