CD-KNOWLEDGE-Q-13
எபே.1:7,18 “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்….”
R2762(col.2 P1-4): –
தேவனுடைய ராஜ்யம் பகிரங்கமாக ஸ்தாபிக்கப்பட்டபின், முதலாம் உயித்தெழுதலில் பங்குள்ளவர்கள் தங்களுடைய பரலோக ஐசுவரியத்தை சுதந்திரத்துக் கொள்வார்கள். இக்காலத்தில் அவர்களின் பலிகளின் மூலமாகவும், பயபக்தியினாலும், தேவனை முழுமையாக நேசிப்பவர்கள் என்று நிரூபிக்கப்படும் அனைவருக்கும், தேவன் அவர்களுக்காக வைத்திருக்கும் சகல பரலோக ஆசீர்வாதங்களையும் கையளிப்பார். ஆனால் இந்த விசுவாசமுள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் பரலோக ஆசீர்வாதங்களின் ஒரு சில காரியங்களை நாம் இப்பொழுதே, ருசிபார்க்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். இன்றைக்கும் நாம் பெறும் பரலோக ஐசுவரியங்களை “கிருபையின் ஐசுவரியங்கள்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார் (எபே 1:7,18). பரிசுத்த ஆவிக்குள்ளான விசுவாசம், நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் காணக்கூடாத காரியங்களை விசுவாசத்தின் கண்களால் கண்டு புரிந்துக்கொள்ளுவதே இந்த ஐசுவரியம், ஞானம் மற்றும் கிருபைகளின் பொக்கிஷங்கள், தெய்வீக நன்மைகளின் அறிவு என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார். மேலும் தேவனுடைய ஐக்கியமானது கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கும் அந்த ஆசீர்வாதங்களை குறிப்பிட்ட அளவில் பெற்று மகிழ்வதற்கு இப்போது நம்மை அனுமதிக்கிறது. “அவருக்குள் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது (கொலோ 2:3). இந்தப் பொக்கிஷங்களை தேடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்குமுன் நாம் கிறிஸ்துவுக்குள் பலியின் மூலமாக அவருடைய சரீர அங்கங்களாகவும், உண்மையான சபையாகவும் வளரவேண்டும். அதற்குப்பின் ஆசாரியர்களாக மகாபிரதான அசாரியரின் அடிசுவடுகளில் நடந்து, நம்முடைய பலியின் ஜீவியத்தில் வளர்ச்சி அடையும்போது, “கிருபையின் ஐசுவரியங்களை” நாளுக்கு நாள் அதிக அளவில் பெற்றுக்கொண்டே போகலாம்.
மேலும், நம்மை நாம் விசுவாத்தோடு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும் போது, மற்ற ஆசீர்வாதங்களும் இராஜரீகமான ஆசாரியத்துவத்தை வந்து சேருகிறது. இவைகள் பரிசுத்த ஆவியின் ஐசுவரியங்களாக இருக்கிறது. அவர்களின் சொந்த விருப்பம், பூமிக்குரிய இலக்குகள், வேலைகள் அனைத்தையும் பலிசெலுத்தும் போது, தேவனுடைய ஊழியத்திலும், சத்தியத்திற்கு பணி செய்வதிலும் இவர்கள் வளர்ச்சி அடைகிறார்கள். இதை தொடர்ந்து செய்யும்போது, பரிசுத்த ஆவியின் கனிகளாகிய சாந்தம், பொறுமை, கனிவு, சகோதர சிநேகம் மற்றும் அன்பின் பூரண வளர்ச்சி அடைந்து பிதாவின் சாயலையும், குமாரனுடைய சாயலையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
மேலும் இதுவரைக்கும் காணாததும், உலகம் தரக்கூடாததும், எடுத்துக்கொள்ள முடியாததுமான சமாதானத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். தங்களுக்குரியதெல்லாம் ஆண்டவரிடம் கொடுத்து விட்டார்கள் என்பதையும் அவர் கொடுத்த விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும் சொந்தமாக்கிக் கொண்டோம், என்பதையும் முழுமையாக உணரும்போது, இந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும் பெறுகிறார்கள். உலகப்பிரகாரமான காரியங்களை தேவனிடத்தில் அர்ப்பணித்த பின், இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் சுதந்தரித்துக்கொண்டோம் என்று முழுமையாக பற்றிக்கொள்ளலாம். தேவனாலே அவர்கள் நீதிமானாக்கப்பட்ட நிலையைப் பெற்றார்கள் என்பதையும் உணரலாம். இந்த அழைப்பு தங்களால் உண்டாகாமல் தேவனால் உண்டானதென்றும், அவர்கள் செலுத்தக்கூடிய சகல பலிகளும் அந்த அழைப்போடு இசைந்ததாக ஆசீர்வாதங்களைப் பெறும் அளவுக்கு தெய்வீக பராமரிப்பின் கீழ் வழிநடத்தப்படும் என்பதில் உறுதியளிக்கலாம். மேலும் இந்தப் பூமியில் அவர்கள் படக்கூடிய பாடுகள், உபத்திரவங்கள் மற்றும் சோதனைகளுக்கு ஒப்பிடமுடியாத அளவுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மகிமையையும், கனத்தையும் தேவன் கொடுக்கக்கூடியவராக இருக்கிறார். (2கொரி 4:17)
“நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்” (சங் 37:23) என்ற தீர்க்கதரிசன வசனத்தை – தேவனுடைய இந்தச் சமாதானத்தோடும், அவருடைய பராமரிப்பு மற்றும் வழிநடத்துதலின் நம்பிக்கையோடும் இருப்பவர்கள் தங்களுக்கு பொருத்திப்பார்க்கலாம். இந்த வழி எவ்வளவு முள்ளுகளும், குறுக்கலுமாக இருந்தபோதிலும், தேவனுடைய அன்பிலும், ஞானத்திலும் உள்ள நம்பிக்கையினால் அதில் மகிழ்ச்சியாக செல்லமுடியும். ஏனெனில் உங்களுக்குள் நற்கிரியைகளைத் துவக்கினவர் அதை முடிக்கவும் வல்லவராக இருக்கிறார். தெய்வீக ஞானத்தினால் சில ஆசீர்வாதமான அனுபவங்களைக் கொடுத்து, வருங்காலத்தில் அதிக நன்மைகளை அடைய வழிநடத்தும். இப்படியாகவே தேவன் இவ்வகுப்பாரை ஆசீர்வதிக்கிறார். “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியம்” என்பதை இவர்களும் உணர்ந்துக் கொள்வார்கள். இக்காலத்தில் அநேக ஐசுவரியங்களால் இருதயம் நிரப்பப்படுகிறது. மேலான உணர்வுகள், விசுவாசத்திலும், அன்பிலும் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்கிறோம். வாய்ப்புகள் கிடைக்கும்போது அனைவருக்கும், விசேஷமாக விசுவாசவீட்டாருக்கும் நன்மை செய்கிறோம். இவையனைத்தும் தேவனால் அங்கீகரிக்கப்படும்போது, இவர்கள் இராஜரீகமான ஆசாரியர்களாகவும், தேவனுடைய சுதந்தரவாளிகளாகவும், இயேசுவின் உடன் சுதந்தரராகவும், அழியாததும், வாடாததுமாகிய பரலோக மகிமையைப் பெறுவார்கள் (1பேதுரு 1:4).