CD-PRAYER-Q-15
1 யோவான் 5:14,15 – நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
R2005 [Col. 2 P7-9]: –
உண்மையில், சரியானதும். அங்கீகரிக்கப்பட்டதுமான, சில விரும்பக்கூடிய விண்ணப்பங்களுக்கான பதில்கள் நீண்ட காலம் தாமதிக்கலாம் – எடுத்துக்காட்டாக, பதினெட்டு நூற்றாண்டுகளாக, “உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக” என்று சபை விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறது. தேவன் அதை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை. ஆனாலும், அந்த இராஜ்யத்தை விரும்பி அதற்காக ஜெபித்த அனைவரும், இன்னும் அந்த இராஜ்யம் வராதபோதிலும், அவர்களது விசுவாசத்திற்காக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஆனால் இப்போது அந்த இராஜ்யம் மிக அருகில் உள்ளது. ஆயினும், மற்ற வேண்டுதல்கள் – நம்முடைய அன்றாட உணவு மற்றும் சோதனையில் ஜெயம் பெறுதல் மற்றும் தீமையினின்று இரட்சிப்பு உடனடியாக பதில் அளிக்கப்படுகிறது.
இதன் தொடர்பில் ஜெபத்தின் சிலாக்கியத்தை குறிப்பாக கவனிக்கவேண்டும் அல்லது தேவனுடைய மற்ற எந்த கிருபைகள், சுயநலமான நோக்கத்திற்கு வழங்கப்படுவதில்லை. சரியான விருப்பத்தோடு கேட்கப்படக்கூடிய ஒரு காரியம், மற்றொரு நோக்கத்தில் தவறாக இருக்கலாம். நம்முடைய தோழர்களுக்கு முன்பாக மகிமைப்பட வேண்டும் என்று நாம் விரும்பி, கேட்கக்கூடிய சில நன்மையான காரியங்கள், அது தவறான நோக்கமுடையதாக இருப்பதால், இது ஒரு தவறான விண்ணப்பமாகும்.
வெறுமனே, நம்முடைய வசதிக்காகவும், எளிதாக நடப்பிக்கவேண்டும் என்பதற்காகவும். ஒரு நல்ல காரியத்திற்காக விரும்பப்படுவது, ஒரு தவறான, சுயநலமான நோக்கமாகும். இப்படிப்பட்ட விஷயங்களை குறித்து, “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளா மலிருக்கிறீர்கள்.” (யாக்கோபு 4:3) என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். வெறுமனே சோதிப்பதற்காக, சில நல்ல காரியங்களுக்கு விண்ணப்பித்து, அதன் வழியாக நம்முடைய விசுவாசத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பது ஒரு தவறான வேண்டுதலாக தோன்றுகிறது. ஆனால் மற்ற எவருக்கும் இல்லை. விசுவாசமுள்ளவர்களுக்கு எதுவும் வாக்களிக்கப்பட்டுள்ளது.
R3217 [Col. 2:2, 3]: –
நாம் ஒரு பெரிய தேசிய அளவிலான முன்மாதிரியை பார்த்தோம். இப்போது நமக்கு நெருக்கமான ஒரு சிறிய வழியில் முன்மாதிரியை காணலாம். நம்மில் எத்தனை பேர், நம்முடைய அறியாமையிலும், குருட்டாட்டத்திலும் சில நேரங்களில் நம்முடைய ஜெபங்களில் பல்வேறு கட்டுகளுக்காகவும், கிறிஸ்தவ மண்டலத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்காகவும் ஜெபித்திருப்போம். மேலும் அவைகளை மேம்ப்படுத்துவதற்காக எவ்வளவு உழைத்திருப்போம். ஆனால் இவ்வாறு நாம் ஜெபித்ததற்காகவும், உழைத்ததற்காகவும் நம்முடைய ஆவிக்குரிய விதத்தில் காயம் அடைந்தவர்களாக காணப்பட்டோம். இஸ்ரயேலின் மூப்பர்களை போல நாம் தகாதவிதமாக விண்ணப்பித்தோம். அதேநேரத்தில் அதற்கு பதிலாக, நம்முடைய மற்றும் அவர்களின் இருதயங்கள் தொடர்ந்து தேவனுடைய வழிகளையும், அவருடைய வழிநடத்தல்களையும் விசாரித்து அறிந்திருக்கவேண்டும். அவருடைய மகிமைக்காகவும், நம்முடைய சொந்த நலனுக்காகவும் நாம் அறியாமலும் தவறாகவும் நினைத்ததை அவருக்கு சாதகமாகவும் ஆசீர்வதிக்கவும் கேட்கக்கூடாது. சரியாக ஜெபிக்க அதுபோல சரியாக உழைப்பதற்கும் நம்புவதற்கும் நாம் கற்றுக்கொள்ளுவோம். இவ்வாறாக நாம் செய்வதற்காக கேட்பதற்கு தீவிரமாகவும். பேசுவதற்கு தாமதமாகவும், தேவனுடைய வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்து, அவர் நமக்கு முன்னதாக கொடுத்த பாடங்களையும். அவர் நமக்கு கற்பிக்கக்கூடியதும், வழிநடத்தக்கூடியதும் மற்றும் ஆசீர்வதிக்கக்கூடியதுமான அவருடைய வழி முறைகளையும் பெற்றுக்கொள்ள தீவிரிக்கவேண்டும். நம்முடைய விருப்பத்தேர்வுகள் என்ன என்பதை அவருக்கு தெரிவிப்போம். உண்மையில் கிறிஸ்துவின் குணலட்சணங்களில் வளர்ச்சி அடைவதற்கு முயலுவோம். இது நம்முடைய சித்தத்தை தேடுவதை அனுமதிக்காமல், பரலோகத்தின் பிதாவின் சித்தத்தையும் வழியையும் தேட வழிநடத்தும்.
அதே கொள்கையை நம் அன்றாட வாழ்க்கையின் தனிப்பட்ட விவகாரங்களில் பொருத்துவோம், ஜெபங்கள் பதில் அளிக்கப்பட்ட பின்னர், பல பெற்றோர்கள், வேதனை உள்ள இருதயத்தோடு, அந்த ஜெபங்கள் பதில் அளிக்கப்படாமல் இருந்திருக்கலாம் என்று விரும்புவதை கூறுகிறார்கள். அதாவது உம்முடைய சித்தமே ஆகக்கடவது என்ற வார்த்தைகளையோ, அல்லது உணர்வுகளையோ பயன்படுத்தாமல், நண்பர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது, அவர்களின் ஜீவனுக்காக முக்கியத்துவத்தோடு ஜெபித்தபோது, தேவன் எவ்வாறு அந்த ஜெபங்களுக்கு பதில் அளித்தார். மேலும் அந்த பதில்களினால் அவர்களுக்கு எப்படிப்பட்ட பயங்கரமான தீமைகள் வந்தது என்று கூறுகிறார்கள். எல்லா சந்தர்ப்பங்களும் ஒரே மாதிரி இருக்காது. ஆனால், ஒழுங்காக செயல்படும் தேவனுடைய வளர்ச்சி அடைந்த பிள்ளைகளின் இருதயம், அவர்களின் அனைத்து ஜெபங்களும் பதில் அளிக்கப்படும் இடத்தை அடைவதற்கு எதிர்பார்க்கவேண்டும். மேலும் தேவனுடைய வார்த்தைகள் அவர்களுக்குள் அபரிமிதமாக நிலைத்திருப்பதினால், சிறந்த முறையில் திருப்தியாக பதில் அளிக்கப்படுவதற்கு சாத்தியமான வழிகளை காணவேண்டும். தகாதவிதமாக ஜெபிக்கக் கூடாது – தெய்வீக சித்தத்திற்கும் முன்னேற்பாடுகளுக்கும் விரோதமான எந்த காரியத்தையும் கேட்கக்கூடாது. ஆனால் அதற்கு மாறாக, தெய்வீக ஞானத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக, “ஆண்டவரே என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது” என்று ஜெபிக்கவேண்டும்.
R3338 [Col. 2:5]: –
புறஜாதியார் செய்யும் காரியங்களுக்கும், அவருடைய சீஷர்களாகிய நாம் செய்யவேண்டிய காரியங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை நம்முடைய ஆண்டவர் தாமே குறிப்பிடுகிறார். அதாவது நம்முடைய வேண்டுதல்களும் தேடல்களும் புறஜாதியாரை போல வெறுமனே அழிந்து போகும் போஜனத்திற்காக இருக்கக்கூடாது ஏனெனில் அவர்கள் பூமிக்குரிய காரியங்களை திரும்ப திரும்ப தேடுபவர்களாக இருக்கிறார்கள். நாமோ, முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடவேண்டும். மற்ற எல்லா பூமிக்குரிய காரியங்களையும் நம்முடைய தேவைக்கு ஏற்றபடி கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார். ஆகவே நம்முடைய விண்ணப்பங்கள், நம்முடைய வேண்டுதல்கள், நம்முடைய மன்றாட்டுகள் அனைத்துமே, நம்முடைய இருதயத்தின் பரிசுத்தத்திற்காகவும், அவருடைய ஆவியினால் நாம் நிரப்பப்படுவதற்காகவும், ஆவிக்குரிய ஆகாரத்திற்காகவும், புத்துணர்வுக் காகவும், பலத்திற்காகவும் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் இயற்கையான காரியங்களை பொறுத்த வரையில், புது சிருஷ்டிகளாகிய நமக்கு சிறந்த நன்மைக்கானவைகளை அவர் அறிந்திருக்கிறார். ஆகவே அவைகளை நாம் அவரிடம் விட்டுவிட வேண்டும். அவர் நமக்குக் கொடுக்காத காரியங்களுக்காக நாம் அவரிடத்தில் மறுபடியும் மறுபடியும் விண்ணப்பிப்பது அவருக்கு பிரியமில்லாத காரியமாகும். நாம் இவ்வாறு செய்தால், அவர் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசத்திற்கு முன்மாதிரியாக இராமல், அதற்கு எதிராக இருக்கும் – சந்தேகத்திற்கான மாதிரியும், பயத்தின் வெளிப்பாடும், மேலும் அவர் நமக்கு தேவையான விஷயங்களை கொடுக்க தனது வாக்குறுதியை புறக்கணிக்கிறார் என்ற காரியங்கள் நமக்குள் காணப்படும்.
R3354 [col. 1:1]: –
(இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்) என்ற பாடத்தின் முடிவாக நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள், விசுவாசிகளுக்கு முழு ஆத்தும் திருப்தியாக இருக்கிறது. “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” இதற்காக ஆண்டவருடைய வார்த்தைகள் நமக்குண்டு. ஆனால் ஜெபத்தில் நமக்கு முன்னதாகவே சொல்லப்பட்ட ஒழுங்கை நினைவில் வைக்கவேண்டும். நம்முடைய பரலோக தந்தையின் நாமத்தை பரிசுத்தப்படுத்தாத மற்றும் கனப்படுத்தாத எந்த காரியத்தையும் நாம் கேட்கக்கூடாது. அவருடைய வரக்கூடிய இராஜ்யத்திற்கோ அல்லது பரலோகத்தில் அவருடைய சித்தம் செய்யப்படுவதை போல பூமியில் செய்யப்படுவதிலோ, தெய்வீக திட்டத்தில் இசைவான எந்த அளவிலும் தடைச் செய்யக்கூடிய காரியங்களை நாம் கேட்கக்கூடாது. மேலும், அந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட, தெய்வீக திட்டத்திற்காக நாம் செய்திட்ட ஜெபங்கள், இறுதியாக முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். மேலும் நாம் அதை பெற்றுக்கொள்ளும்போது, நம்முடைய இருதயத்திற்கு மிகுந்த திருப்தி அளிக்கும் பகுதியாக அது இருக்கும்.
R2865 [col. 2:4]: –
யாக்கோபு “கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக” இராமல், ஒரு இயல்பான புருஷனாக இருப்பினும், குறிப்பாக அவருக்கு வாக்களிக்கப்பட்ட பூமிக்குரிய எந்த காரியங்களையும் அவர் விண்ணபிக்கவில்லை என்பதில் அவருடைய ஜெபம் நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. அவர் கேட்ட ஒரே காரியம் தேவனுடைய ஆசீர்வாதம், அதுவும் தேவன் அவருக்கு கொடுக்க பிரியமுள்ள எந்த ஒரு முறையிலும் அவர் பெற விரும்பினார். அந்தோ, எத்தனை ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் யாக்கோபை போல இப்படிப்பட்ட காரியங்களை புரிந்துக்கொள்கிறார்கள். பலர் தங்களது பூமிக்குரிய ஆசைகள், செல்வம், புகழ் அல்லது காலத்திற்குரிய நற்காரியங்கள் ஆகியவற்றிற்காக தகாதவிதமாக ஜெபிப்பதினால், அவர்கள் விண்ணப்பித்தவைகளை பெற்றுக்கொள்வதில்லை. (யாக்கோபு 4:3) ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட பிள்ளைகளின் தற்காலிக தேவைகளை கவனித்துக்கொள்வதாக ஆண்டவர் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதையும், அவர்கள் எப்படி கேட்பது அல்லது சிந்திப்பது என்பதை காட்டிலும் அதிகமாகவே அவர் செய்வார் என்பதையும் எத்தனைபேர் மறந்துவிட்டார்கள். புது சிருஷ்டிகளை பொறுத்தவரை, நம்முடைய நிலைமைகள் மற்றும் விருப்பங்கள், விசேஷமாக புது சிருஷ்டியை சார்ந்திருக்கக் கூடிய காரியங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வெகு சிலரே நினைவில் கொள்கிறார்கள். மேலும், இந்த ஒரு வகுப்பாருக்கான ஆசிர்வாதத்திற்காக தேவன் நம்மை அழைத்திருக்கிறார். அதை பெற்றுக்கொள்ள போராட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பூமிக்குரிய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதா தம்மிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்று நமக்கு தேவையான வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். (லூக்கா 11:13) தேவனுடைய ஆவி, பரிசுத்தமான ஆவி, சத்தியத்தின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, நல்ல சிந்தையின் ஆவியை அளவில்லாமல் பெறுவதே ஆண்டவருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் அனைவருக்கும், வாழ்க்கையில் பிரதான நோக்கமும், ஜெபத்தின் சுமைகளுமாக இருந்தால், இது எப்படிப்பட்ட ஆசீர்வாதமாக இருக்கும்! அப்படியானால், விரும்பத்தக்க ஆசீர்வாதங்களை பெறுவதற்கு, அவர்கள் பொழுது விடியும் வரை ஆண்டவரோடு போராடவேண்டும். தேவனுடைய ஆசீர்வாதங்களை புரிந்து பாராட்டி, ஆர்வத்தோடு விரும்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, அவைகளை அவரிடம் வைத்திருக்கிறார் என்று தேவன் தாமே அவருடைய ஜனங்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்.