Q-19
“வெளி 3:10 – “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.”
R2792 (col.1 P6-col.2 P4)
நம்முடைய தேவன் லவோதிக்கேயா சபையோரை துன்பங்களுக்கு அனுமதிக்காமல் காப்பாற்றவில்லை என்றாலும், “பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனங்களை காத்துக்கொள்வோரை” தேவன் காத்துக்கொள்வார். எனெனில் – “ஒருவன் என் சத்தத்தை கேட்டு கதவை திறப்பானானால், நான் அவனோடு வந்து போஜனம் பண்ணுவேன்” என்று நமக்கு வாக்களித்திருக்கிறார். இக்காலத்தில், இந்த ஓட்டத்தை பொறுமையோடு ஓடுபவர்களுக்கு தேவன் கொடுக்கும் பரிசாகும். அதே சமயத்தில் இப்படிப்பட்ட சோதனையின் காலத்தில் நாம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்காமல், இயேசுவின் பிரசன்னத்தில், அதற்கேற்ற ஆசீர்வாதங்களைப் பெறும் சிறப்புரிமைகளைப் பெற்றிருக்கிறோம் என்பதை உணரவேண்டும். ஆகவே நாம் அவருடைய கட்டளைகளைப் பெற்று, அவருடைய ஐக்கியத்தில் இதுவரை எந்த விசுவாசியும் அனுபவித்திராத காலத்திற்கேற்றப் போதனைகளை உட்கொள்ளுவோம். ஆனால் நாம் எதிர்பார்த்தபடி நாம் பெறும் அதிகமான தேவனுடைய இரக்கங்களின் மத்தியில் இதற்குச் சரியான பாடுகளும் கடுமையானச் சோதனைகளும், இந்த முழு பூமியின் மேல் வரப்போகிறது.
நாம் இதுவரையில் நீடிய பொறுமையாக இல்லாவிட்டாலும் இப்பொழுது அதை கடைபிடிப்பது மிக அவசியம். “உங்கள் ஆத்துமாக்களில், பொறுமையை தக்க வைத்துக்கொள்ளுங்கள்” இதுவே இப்போது மிகப் பொருத்தமானது. இந்தப் பந்தயத்தை மிகப்பொறுமையோடும், முழு விருப்பத்தோடும், வாஞ்சையோடும் ஓடுபவர்கள் வரக்கூடிய “தீமையான காலத்தில்” விசுவாசத்திற்குள் நிலை நிற்க முடியும். மற்ற யாரும் நிற்க முடியாது. ஏனெனில் அப்போஸ்தலனாகிய பவுல் – “அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும், அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.” (1 கொரி 3:13) என்று குறிப்பிடுகிறார்.
கடைசி காலத்தில் அனுமதிக்கப்படுகிற சோதனை விசேஷமாக நம்முடைய நீடிய பொறுமை காணப்படுவது மிகவும் அரிதாக இருக்கிறது. மேலும், நாகரீகம் நிறைந்த இந்த உலகத்தில் நீடிய பொறுமை காணப்படுவது மிகவும் அரிதாக இருக்கிறது. ஐம்பது வருடங்கள், அல்லது நாற்பது வருடங்கள், அல்லது முப்பது வருடங்கள் அல்லது இருபது வருடங்கள் அல்லது பத்து வருடங்களுக்கு முன்னிருந்த பொறுமையோடு இந்நாளில் இருக்கக்கூடிய பொறுமையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டு வருகிறதை நாம் பார்க்கலாம். நீதியின் நிமித்தமாகவோ, கிறிஸ்துவுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ ஒருவரும் பொறுமையாக இருப்பதற்கு விரும்புவதில்லை. ஒருவேளை கொஞ்சநேரம் பொறுமையாக இருந்துவிட்டால் அதில் அநேக முறுமுறுப்புகளோடு, பொறுமை இழந்த நிலையில் காணப்படுகிறார்கள். மேலும், இந்த நாகரீகம் நிறைந்த உலகத்தில், பொறுமையற்ற நிலை மற்றும் பொறுத்துக் கொள்ளாத ஒரு குணங்கள் பொதுவாக அனைவரிடமும் காணப்படுவதினால், இடுக்கமான வழியில் பிரவேசிப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் தெய்வீகக் கிருபையைப் பெற்றிருந்தால் மட்டுமே வளர்ச்சியடைய முடியும்.
நமக்குத் தேவைப்படும் தெய்வீகக் கிருபை, தெய்வீகத் திட்டத்தின் ஞானத்தின் வழியாக நமக்கு கொடுக்கப்படுகிறது. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாமல், தேவனை அணுகாமல் இருப்பவர்களுக்கு இந்தக் கிருபை அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, கிறிஸ்துவின் சீஷராக இருக்கக்கூடிய அநேகர் நீடிய பொறுமையை காலப்போக்கில் இழந்துவிடுகிறார்கள். ஐரோப்பாவில் ஜனக்கூட்டத்தினால் ஏற்பட்ட கலவரத்தை இராணுவ படை அடக்கியது. ஆனால் விசாரணை இல்லாத தீர்ப்புகள் அத்தேசத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் பொறுமையற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. சாத்தான் முழுமையாகக் கட்டப்பட்டு, தீமைகளைக் கட்டுப்படுத்தி, தேவனுடைய இராஜ்யம் பகிரங்கமாக ஸ்தாபிக்கப்படும் வரையில் தேவன் இந்தத தீமையின் மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருப்பார்.
உண்மையில், இப்படிப்பட்ட ஆவி கிறிஸ்துவ மண்டலத்தில் வளரவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம். கடந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் ஓரளவுக்கு நற்குணங்களோடு இருந்ததினால், சீர்பொருந்துதலின் காரியங்களை அவர்களே தங்களுடைய சொந்த முயற்சியினால் செய்திருந்தால் இந்த உலகம் சீர்திருந்தியிருக்கலாமே! என்று எண்ணலாம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளை நீடிய பொறுமையோடு காத்துக் கொள்பவர்கள், சர்வவல்லவரிடமிருந்து ஞானத்தைப் பெற்றவர்கள் குறித்தக் காலத்தில் தேவனுடைய திட்டங்கள் இந்தப் பொறுமையில் வளர்ச்சியடைந்தால், நம்முடைய ஆண்டவர் தீமையையும், அதின் பாதிப்புகளையும், தவறுகளையும் அதன் உபத்திரவங்களை சந்தோஷமாகவும், நீடிய பொறுமையோடும் சகித்தது போல, நாம் இருக்கவேண்டும். ஏனெனில், தேவன் இவையனைத்தையும் அனுமதித்ததோடு மட்டும் அல்ல, அவர் சகலத்தையும், தேவனுடைய இராஜ்யத்தில் கிறிஸ்துவோடுகூட ஆயிரவருஷம் ஆட்சிசெய்யும் “சிறு மந்தையை” அவர் அழைத்து ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் மிகப்பெரிய நன்மையான நோக்கத்திற்காகவே செயலாற்றுகிறார் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.