CD-LOVE-Q-16
F187 [P2] through F189[P1]
நாம் ஓட்டப்பந்தயத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது பகுதியில், அன்பு ஒரு திவ்விய தேவை என்பதை அறிந்து கொள்ளுகிறோம். அதை கடமை என்ற கருத்தின்படி மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியுமென்றாலும், அதைப் பெறும்படியாக நாடுகிறோம். நம்முடைய தேவனிடத்தில் அன்பு செலுத்தக் கடமை உள்ளவர்கள் என்று உணர்கிறோம். ஏனெனில், அவர் நம்முடைய சிருஷ்டிகராக, நம்முடைய கீழ்ப்படிதலை, அன்பை, பக்தியை வற்புறுத்த உரிமையுள்ளவராக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவினிடத்திலும் கடமை, அன்பு உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அவர் நம்மேல் அன்பு கூர்ந்தார். ஆகவே நியாயப்படி பதிலுக்கு நாம் அவரில் அன்பு கூறவேண்டும். நம்முடைய சகல ஜனங்களோடும் அன்பு செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் அதுவே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தின் இரண்டாவது பகுதி, நம்மை இன்னும் சற்று முன்னோக்கி அழைத்துச் செல்கிறது. குறிக்கோளுக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. ஆகவே முதலாவதாக கடமைப் பிரகாரமான அன்பினால் செய்ய முயன்றவைகளை நாம் படிப்படியாக நன்மையான விதத்தில் நோக்கினோம். ஏதோ என்று அல்ல. அதன் பிறகு சரியானது. செய்யவேண்டியது என்று தேவன் கட்டளையிடுகிறவைகள் எல்லாம் நல்லவைகள் என்றும், நமக்கு அதைக் குறித்ததான மேலான எண்ணங்கள் எல்லாம். நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் நீதி, அன்பு ஞானம் என்பவைகளோடு சம்பந்தப்பட்டவைகள் என்றும், அப்படி அந்த நேரத்திலிருந்து அவைகளை உயர்வாக எண்ணினோம் என்றும் பார்த்தோம். தேவன் நம்முடைய சிருஷ்டிகராக இருக்கிறார் என்பதற்காக கடமைக்காக அவரை நேசிக்கத் தொடங்கவில்லை, ஆனால் அதற்கு மேலாக, விசேஷமாக நம்மேல் சுமத்தப்பட்டதான குணாதிசயத்தின் உன்னதமான பகுதிகள் அவரிடத்தில் இருப்பதைப் பார்த்தோம், எல்லா கிருபைக்கும் நன்மைக்கும் அவரே அசலாக இருந்தார். இந்த இரண்டாவது பகுதியின் குறிக்கோளை அடைபவர்கள் எல்லாம், ஆண்டவர் முதலாவதாக நம்மை நேசித்தார் என்பதற்காக மாத்திரம் அல்ல. அதற்கு பதிலாக நாம் அவரை நேசிக்க வேண்டும் என்பது கமை என்பதற்காகவும் அல்ல, ஆனால் இப்போது கம்பீரமான மகிமையான அவருடைய குணாதிசயத்தில் சிலவற்றை அதாவது நம்முடைய சிருஷ்டிகளின் நீதி, அன்பு, ஞானம், வல்லமை ஆகியவற்றின் ஆழம், அகலம், உயரம், நீளம் ஆகியவைகளைப் பார்க்கும் அளவிற்கு விரிவாக நம்முடைய மனக்கண்கள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறபடியால் அவரை நேசிக்க முடியும்.
ஓட்டப்பந்தயத்தின் மூன்றாவது குறிக்கோளை சகோரருக்கான அன்பு என்று அழைக்கிறோம். ஆரம்பத்திலிருந்து பிதாவுக்கு காட்டின கடமை அன்பை விட சகோதரருக்குக் காட்டின கடமை – அன்பு குறைவானது என்று உணருகிறோம், ஏனெனில் சகோதரர் நமக்கு குறைவாக செய்திருக்கிறார்கள், நாம் அவர்களை அறிந்து கொண்டதின் முக்கியமான காரணம் பிதாவின் சித்தம் அப்படியாக இருந்தது. ஆனால் நாம் நீதியின் ஒழுங்குகளைப் பார்த்து அதன் மூலம் பிதாவை உயர்வாக எண்ணியபோது, நம்முடைய வேண்டுமென்று செய்யப்படாத கறைகளிருந்தாலும், அப்பொழுதும் பிதா தாமே நம்மை நேசிக்கிறார் என்பதைப் பார்த்தபோது நம்முடைய இருதயங்கள் சகோதரர்கள் பக்கம் அதிகமாக விசாலமடையவும் ஆழமாகவும் தொடங்கின. மேலும் இயேசுவின் பாதபடியிலும், அவருடைய திவ்விய சுபாவத்திற்கு, ஏற்றபடி நடக்க இருதய வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்களில் ஆதாரங்களை கண்ட பின்னர், அவர்களுடைய பூரணமற்ற தன்மையையும், கறைகளையும், தவறுகளையும் அதிகதிகமாக நாம் பாராமுகமாக இருக்க முடிந்தது. சகோதருக்கான அன்பு நம்முடைய அனுபவங்களில் அதிகமாக காணப்பட்டது அந்தோ பரிதாபம், நம்முடைய உன்னத அழைப்பை நோக்கி, ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது குறிக்கோளினிடத்தில் ஆண்டவருடைய அருமையான ஜனங்களில் நிறைய பேர் வராமலிருக்கிறது தெரிகிறது. வேதம் அறிவுறுத்துகின்ற, சகோதர அன்பை, பொறுமையை நீடிய பொறுமையை வளர்த்துக்கொள்ள அதிக அவசியம் இருக்கிறது. இவைகள், நம்முடைய பிதாவோடு, ஆண்டவரோடு அதிகமாக பரீட்சிக்கப்படுவதைக் காட்டிலும் சகோதரர்களோடு சம்பந்தப்பட்டவைகளில் அதிகமாக பரீட்சிக்கப்படுகின்றன. பிதாவையும், குமாரனையும் பூரணராக நாம் காண்கிறோம். அவர்களிடத்தில் பூரணமற்றவைகிடையாது. அவர்கள் நமக்குக் காட்டும் பெருந்தன்மையையும், அவர்களுக்கு நேராக உள்ள நம்முடைய குறைபாடுகளையும் நாம் அறியலாம். நம்முடைய சகோதரரிடத்தில் ஒருவரிடத்தில் இந்த பெலவீனத்தையும் மற்றவரிடத்தில் அந்த பெலவீனத்தையும் காணலாம். இப்பொழுது வருகிற பொதுவான சோதனை, நாம் சகோரரிடத்தில் இப்படிச் சொல்லுவதாகும். “உன்னுடைய கண்ணிலிருந்து நான் ஒரு துரும்பை எடுக்கட்டும்” இப்படி துரும்பு எடுப்பது, சகோதரர்களுக்கு எதிராக குற்றம் கண்டுபிடிப்பது, தொந்தவு கொடுப்பது போன்றவைகள், நாம் சரி செய்ய வேண்டிய பொறுமையின்மை, அன்பில்லாமை என்ற பெரிய உத்திரம் நம்மிடத்தில் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த மூன்றாவது குறிக்கோளை நெருங்கி வரும்போது, நம்முடைய சொந்த கண்களிலிருந்து உத்திரத்தை படிப்படியாக அகற்றுகிறோம். அப்பொழுது நம்முடைய கறைகளைப் பார்க்கிறோம். நமக்கு ஆண்டவர் காட்டுகின்ற கிருபையின் ஐசுவரியத்தை அதிக உயர்வாக மெச்சுகிறோம். இப்படியான ஒரு நிலை வரும்போது நம்முடைய இருதயத்தில் எல்லாாரிடத்திலும் காண்பிக்கும் அதிகமான சாந்தத்தின், பொறுமையின், சாதுவான தன்மையின் ஆவியைப் பிறப்பிக்கும். இது மறுபடியும், சகோதரரில் பெருந்திரளான பாவங்களையும், பூரணமற்றவைகளையும் மூட அல்லது பாராதிருக்க உதவி செய்யும், அவர்கள் விலையேறப்பெற்ற இரத்தத்தில் நம்பிக்கை வைத்து, இதே பந்தயப் பொருளுக்காக இதே ஓட்டத்தை ஓடும் காலம்வரை இப்படி நமது உள்ளம் இருக்கும்.
நான்காவது, அதாவது ஓட்டப்பந்தயத்தின் நமது கடைசி குறிக்கோள் என்னவெனில், நாம் எல்லாரும் சீக்கிரமாக அடையும்படி நாட வேண்டிய பூரண அன்பு தேவனிடத்தில், சகோதரரிடத்தில், எல்லாரிடத்திலும் காட்டும் பூரண அன்பு ஆகும். நம்முடைய குறிக்கோள் ஒன்றிலும் அப்படியே நில்லாது. நாம் பொறுமையாக விடா முயற்சியோடு, ஊக்கத்தோடு ஓட வேண்டும். ஒரு வகையில் “நாம் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருக்க வேண்டும்” இன்னொரு வகையில் “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் விசேஷாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்ய வேண்டும்.” (கலாத்தியர் 6:10) இது நம்முடைய சத்துருக்களையும் நேசிக்கிற அன்பாகும். இந்த அன்பு நம்முடைய பிதாவின் மேலும், அவருடைய குணாதிசயத்தின் மேலும் நம்முடைய சகோதரர் மேலும் வைத்திருக்கிற அன்பைக் குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்யாது. ஆனால் இவைகளை அதிகரிக்கும். இது அதிகரிக்கும் போது இந்த அன்பில் இரக்கத்தையும், நன்மையையும், தேவ புத்திரர் வெளிப்படும்படி பிரசவ வேதனைப்படுகிற சிருஷ்டிக்கு நாம் காட்ட உதவி செய்யும். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, என்பது ஆண்டவரின் கட்டளை நம்முடைய சத்துருக்களையும் நேசிக்கும் இப்படிப்பட்ட ஒரு அன்பின் நிலையை அடையும் வரை, ஆண்டவர் அவரைப் பின்பற்றுகிற நமக்குக் குறித்திருக்கிற நிலையை அடைந்துவிட்டோம் என்று ஒரு வினாடிகூட நினைத்துவிடக் கூடாது. நாம் இந்த நிலையை அடையும் வரை நாம் தேவனுடைய பிரியமுள்ள குமாரனின் பிரதிகள் அல்ல.
அப்போஸ்தலர் இன்னொரு விளக்கத்தில், நம்முடைய தற்போதைய அனுபவங்களை ஒரு ஓட்டப்பந்தய மைதானத்திற்கு ஒப்பிடுகிறார். மேலும் நாம் பாரமானயாவற்றையும், நம்மைச் சூழ்ந்திருக்கின்ற எல்லா பாவத்தையும், எல்லா மாம்சீக பெலவீனத்தையும் உலகப் பிரகாரமான எல்லா ஆசைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, சுவிசேஷத்தில் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஓட்டத்தைப் பொறுமையுடன் ஓடக்கடவோம். பந்தயப் பொருளை அடையும்படி இலக்கை நோக்கி ஓடக்கடவோம், அவைகள் எல்லாவற்றையும் செய்து முடித்து உண்மையோடு, முழுமையாக கிறிஸ்துவுக்குள் நிலைநிற்க வேண்டும். (பிலி 3:13,14, எபி 12:1, எபே 6:13) இது நமக்கு முதலாவது, இரண்டவாது, மூன்றாவது, நான்காவது கால் – பங்குகளைக் கொண்ட ஒரு ஓட்டப்பந்தய மைதானத்தை நினைவுபடுத்துகிறது. ஓடுகின்ற வழியில் உள்ள சோதனைகள், துன்பங்கள், எதிர்ப்புகளையும், மேலும் நாம் இந்த ஓட்டத்தில் ஓடத் தொடங்குவதையும், பரிபூரண அன்பு என்னும் இலக்கை அடையும்படி ஓடத் தொடங்குவதையும், அந்த இலக்கை நாம் அடையாவிட்டால் தேவனுடைய பிரியமான குமாரனின் பிரதியாக நாம் இருக்கமாட்டோம் என்ற சிந்தனையையும் இது தருகிறது. மேலும் அப்படியானால், பரவலாக நோக்கும் போது தேவனைப் பிரியப்படுத்த இயலாது என்று ஒரு சிந்தனையை இது தருகின்றது. தேவனைப் பிரியப்படுத்த இயலாது என்றால், இராஜ்யத்தில் இயேசுவோடு உடன் சுதந்திரராக இருக்க முடியாது. ஆரம்ப வாசலிலிருந்து முடிவு வரை முழு ஓட்டப்பந்தய மைதானமும் அன்பைக் குறிக்கிறது. நாம் வாசலுக்குள் நுழையும் போது நம்முடைய பாவங்களை மன்னித்த கிறிஸ்துவுக்குள் நமக்கு கிடைத்த அவருடைய புண்ணியத்திற்காக தேவனுக்கு நன்றியுடன் கூடிய அன்போடு நுழைகிறோம். இந்தக் கடமை அன்புதான். ஆரம்பத்தில் நம்முடைய சரீரங்களை ஜீவ பலிகளாக ஒப்புக்கொடுக்க நம்மை வழிநடத்துகிறது. தேவன் நமக்கு இவ்வளவு செய்து இருப்பாரென்றால், நம்முடைய மதிப்பு மரியாதையை அவருக்குக் காண்பிக்க வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளுகிறோம். கிறிஸ்து நமக்காகத் தன்னுடைய ஜீவனையே கொடுத்தார். நாமும் நம்முடைய வாழ்க்கையை சகோதரருக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
இப்படியாக இருக்கவேண்டிய கடமை அன்பானது முற்றிலும் சரியானது, நியாயமானது, உண்மையானது, ஆனால் அது போதாது அடுத்து, இன்னும் உன்னதமான அன்பிற்கு வழிநடத்த வேண்டும், மேலும் ஓட்டத்தில் முதலாவது கால் பங்கு ஓடியிருக்கும் வேளையில், இன்னமும் கடமை அன்பு நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் மேன்மை பாராட்டக் கூடிய அன்பை அடைந்திருக்கின்றோம். திவ்விய அன்பை நாம் மேன்மை பாராட்டக் கற்றுக்கொள்வது நல்லது. தேவனுடைய அன்பு ஒருவிதத்திலும் சுயநலம் என்ற வார்த்தையின்படி இருந்ததில்லை. ஆனால் அவருடைய கம்பீரமான உயர்ந்த குணாதிசயத்தின் கிரியை ஆகும். திவ்விய நீதி, திவ்விய ஞானம், திவ்விய வல்லமை, திவ்விய அன்பு ஆகியவற்றைக் குறித்துச் சில காரியங்களை உணருகின்றோம். மேலும் நம்முடைய சிருஷ்டிகரின் இந்தக் குணாதிசயங்களை நோக்கிப் பார்க்கும் போது, நாம் அவைகளை நேசிக்கிறோம். அதன் பின்னர் நாம் நீதியைக் கடைப்பிடிக்கின்றோம். நம்முடைய கடமையாக இருப்பதினால் மாத்திரமல்ல, நாம் நீதியை நேசிப்பதால் அப்படிச் செய்கிறோம்.
ஓட்டப்பந்தய மைதானத்துக்குள் தொடர்ந்து முன்னேறும் போது இரண்டாவது கால் – பங்கு இலக்கை வந்தடைகிறோம். இதற்குள் நாம் நீதியை நேசிக்கக் கற்றுக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல், அதே விகித்ததில் பாவத்தை வெறுக்க கற்றுக் கொள்கிறோம். மேலும் உலகத்தை மூழ்கடித்திருக்கின்ற பெரிய அலை போன்றதும், (அதன் சம்பளமாகிய) மரணத்தைக் கொண்டு வந்ததுமான பாவத்தைத் திருப்பிவிடுகிற திவ்விய திட்டத்தைக் குறித்த ஒரு இரக்கம் நம்முடைய இருதயங்களில் வருவதையும் காண்கிறோம். இந்த இரண்டாவது கால் – பங்கு இலக்கானது நமக்குள் ஒரு ஆர்வத்தைப் பிறப்பிக்கின்றது, ஒரு “எழுப்புதலையும்”, நீதிக்கான ஒரு செயலையும், பாவத்திற்கெதிரான செயலையும் பிறப்பிக்கின்றது.
நம்முடைய அன்பு வளர்ந்து கொண்டு வருகிறது. நாம் மூன்றாவது கால்- பங்கு இலக்கை நோக்கி முன்னேறுகின்றோம். நாம் அந்த இலக்கை அடையும்போது, நம்முடைய கடமை அன்பு, அதோடு கூட நீதியின் நியமங்களின் மேல் அன்பு. திவ்விய குணாதிசயத்திற்கு நேராக மாத்திரம் விரிவடையவில்லை, அதோடு கூட மனுக்குலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்ற எல்லாப் பொல்லாத காரியங்களின் மேல் வெறுப்பும். திவ்விய குணாதிசயத்தையும், திட்டத்தையும் மீறுகிற காரியங்களின் மேல் வெறுப்பும் விரிவடைந்தது. ஆனால் இந்த குறி அளவில் இருக்கும்போது நாம் மற்றவர்களுக்கு விசாலமான முறையில் இரக்கம் காட்டும் ஒரு நிலையை அடைந்துள்ளோம். தேவனுடைய உணர்வில் பங்கு பெறுவதற்கு ஆரம்பிக்கிறோம். பாவத்திற்கு எதிராக மாத்திரமல்ல, நீதியின், பரிசுத்தத்தின் வழியில் நடக்க விரும்புகிறவர்களுக்காக அன்பையும் இரக்கத்தையும் உணரத் தொடங்குகிறோம். இந்த வேளையில் சகோதரர்களை இதற்கு முன்பு இல்லாத எப்படியோ ஒரு வித்தியாசமான வெளிச்சத்தில் அறிந்து கொள்ள நம்மால் முடிகிறது. இப்பொழுது நம்மால் சகோரரைப் புது சிருஷ்டிகளாய்ப் பார்க்க முடியும், மேலும் அவர்களுக்கும் (புது சிருஷ்டி) அவர்களுடைய பரிபூரணமற்ற தன்மைகள் நமக்குத் தெளிவாக தெரிகின்ற அவர்களது அழிவுள்ள சரீரத்திற்கும் இடையில் வித்தியாசப்படுத்த முடியும். நாம் சகோதரர்களைப் புது சிருஷ்டிகளாக நேசிக்கக் கற்றுக்கொள்ளுகிறோம். மாத்திரமல்ல, அவர்களுடைய மாம்சத்தினால் ஏற்படும் பல்வேறு பெலகீனங்கள், தவறாகப் புரிந்துகொள்ளுதல் போன்றவைகளில் அவர்களுக்காகப் பரிதாபம் காட்டவும் கற்றுக்கொள்ளுகிறோம். நம்முடைய அன்பு அவர்களுக்காக அவ்வளவு அதிகமாய் கூடுகிறபடியால் நம்முடைய ஜீவனையே அவர்களுக்கென்று, தினமும், ஒவ்வொரு மணி நேரத்தையும் கொடுப்பதில் மகிழ்ச்சிடையகிறோம். அவர்களுக்கு உதவி செய்வதில் சேவை செய்வதில் நம்முடைய உலக நலன்கனை அல்லது சந்தோஷத்தை அல்லது வசதிகளைத் தியாகம் செய்வதிலும், நம்முடைய நேரம், நம்முடைய செல்வாக்கு, அல்லது எதுவென்றாலும் அவர்களுக்கென தியாகமாகத் செலுத்துவதில் சந்தோஷமடைகிறோம்.
ஆனாலும் இன்னும் நாம் இந்த வழியில் “இலக்கை”, நோக்கி முன்னேறுகிறோம். ஏனெனில் இதைக்காட்டிலும், நாம் அடையவேண்டிய ஓர் உன்னதமான அன்பு உண்டு, அதாவது நான்காவதும், கடைசி கால் – பங்கு இலக்காகிய “பந்தயப் பொருளுக்கான இலக்கை” அடைய வேண்டும். இந்த அன்பு எப்படிப்பட்டது? சகோதரருக்காக தன்னையே தியாகம் செய்கின்ற அன்பைக்காட்டிலும் அது எப்படிப் பெரிதாக இருக்க முடியும்? அது தேவனிடத்தில் முழு பயபக்தியுடனும் நீதியின் வழிகளிலும், அன்பிலும் பயபக்தியுடனும் கூடிய அன்பைக் காட்டிலும் அது எப்படி பெரிதாக இருக்க முடியுமா? நாம் பதில் சொல்லுகிறோம். ஆண்டவர் நியமித்திருக்கிற அன்புதான் பெரியதென்று, அவர் நம்முடைய சத்துருக்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் சொல்லும்போது, அதுதான் பெரிய அன்பாயிருக்கிறது. நாம் கெட்ட கிரியைகளினால் சத்துருக்களாய், அந்நியராய், பரதேசிகளாய் இருந்த போதுதான், “தேவன் இவ்வளவாய் இவ்வுலகத்தில் அன்பு கூர்ந்தார். “நாம் பாவிகளாய் இருக்கும்போதுதான், நமக்காகத் தன்னுடைய ஒரே பேறான குமாரனைத் தந்தருளினார். பரிபூரண அன்பின் நிலை இதுதான். இதைக் காட்டிலும் குறைந்த அளவில் நாம் நின்று விடக்கூடாது. யாரெல்லாம் மகிமையில், புது சிருஷ்டியின் அங்கமாக ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்களோ, அவர்களெல்லாரும் சத்துருவையும் நேசிக்கக்கூடிய அன்பின் நிலையை எட்ட வேண்டும்.
புது சிருஷ்டி தன்னுடைய சகோதரரை நேசிப்பது போலத் தன்னுடைய சத்துருக்களை நேசிக்க வேண்டும் என்றல்ல, ஏனெனில் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள முறை இதுவல்ல. தேவன் தன்னுடைய புத்திரரை, நண்பர்களை நேசிப்பது போன்று தன்னுடைய சத்துருக்களை நேசிப்பதில்லை. மேலும் தன்னுடைய சீஷர்களை நேசிப்பது போன்று இயேசு தன்னுடைய சத்துருக்களை நேசிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கென ஆயத்தத்துடன் இருந்து, நீதியின்படி அவர்களுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யும்படியாக தேவன் சத்துருக்களை நேசித்தார், இயேசு தன்னுடைய சத்துருக்களை நேசித்தார், அதனிமித்தம் அவர் இதய பூர்வமாக அவர்களுக்கு நன்மை செய்யும்படியாக இருந்தார். அவர்களுடைய எதிர்ப்புக்குப் பதிலாக அவரிடத்தில் அவர்களுக்கெதிராக விரோதமோ குரோதமோ இருந்ததில்லை. ஆனால் ஏற்ற சமயத்தில் அவர்கள் மேல் தன்னுடைய ஆயிரம் வருட யுகத்தின் ஆசீவாதங்களை ஊற்ற ஆயத்தமாக இருக்கிறார். அதன் மூலம் சத்தியத்தை அறிகிற அறிவிற்குள்ளாய் அவர்கள் எல்லோரும் வரும்படியாக அப்படிச் செய்வார், மேலும் அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள், அப்பொழுது அவர்கள் மேல் கிருபையின் ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் ஏற்ற காலத்தில் ஊற்றுவார். (சகரியா 12:10) “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்காக நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிற வர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5:44) என்று நம்முடைய ஆண்டவர் கூறுவதுபோல், நாம் சத்துருவினிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். எவ்விதமான கசப்பு உணர்வோ, பகையோ, அல்லது வெறுப்பு உணர்ச்சியோ நம்முடைய இருதயங்களில் வாசம் பண்ண அனுமதிக்கக் கூடாது. இருதயம் அன்பினால் அவ்வளவாய் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சத்துரு கூட நம்முடைய இருதங்களில் ஒரு பொல்லாங்கான அல்லது குரோதமான எண்ணங்களைக் கிளராத அளவுக்கு அன்பினால் நிறைந்திருக்க வேண்டும்.
ஆ, குரோதத்தை, அல்லது வெறுப்பை, அல்லது சண்டையை உண்டாக்கக்கூடிய காரியம் ஒன்றையும் சத்துருவினிடத்தில் பார்க்கமுடியாத அளவுக்கு, இப்படி ஒரு குணாதிசயத்தை அடைவதற்கு எப்படியான நீடிய பொறுமையும் சகோதர அன்பும் குறித்து சொல்லப்படுகிறது. இந்த இலக்கை நோக்கித்தான் புது சிருஷ்டிகளாக நாம் கூட செல்ல வேண்டும். இந்த அன்பின் ஆவியைக் குறித்து நாம் வெளிப்படையாக மெச்சியுள்ளோம். நாம் அதற்கான அறிக்கை செய்துள்ளோம், அதன் கொள்கைகளுக்கு ஏற்ப நாம் நம்முடைய ஜீவியங்களை அர்ப்பணம் செய்துள்ளோம். இப்பொழுது நாம் அறிக்கை செய்தவைகள் எந்த அளவுக்கு உண்மையுள்ளவைகளாக இருந்தன என்பதைக் கண்டறியும்படியாக சோதிக்கப்படுகின்றோம். கர்த்தர், இந்த ஓட்டத்தை நாம் ஓடும்படிக்கும். நம்முடைய குணாதிசயத்தை அபிவிருத்திச் செய்யவும் அதிக கிருபையுடன் நேரத்தை தருகின்றார். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார், நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்.” இருந்தபோதிலும் புது சிருஷ்டியின் அங்கங்களாக தேவனுடைய பிரியமான குமாரனோடு உடன் சுதந்திரராக இருப்போமென்றால், நாம் இந்த ஒழுங்கு முறைகளோடு ஒத்து நடப்பது மிக முக்கியம்.
நம்முடைய இரட்சிப்பின் தளபதியாகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இந்த ஓட்டத்தை ஓட அவசியமில்லாதிருந்தது. இந்த அன்பின் பல்வேறு அம்சங்களை அபிவிருத்தி செய்ய அவருக்கு அவசியமில்லாதிருந்தது. ஏனெனில் பூரணமாயிருப்பதற்கான தகுதிகளை அவர் ஆரம்பத்திலேயே பரிபூரணமாகப் பெற்றிருந்தார். அவருடைய பரீட்சை என்னவெனில் இந்த கொள்கைகளுக்கும். குணாதிசங்களுக்கும் ஏற்ப அவர் உறுதியாக நிற்பாரா, எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையும், நீதியையும் தொடர்ந்து நேசிப்பாரா, தன்னுடைய ஜீவனையே அவர்களுக்காகக் கொடுக்கும் அளவுக்குத் தொடர்ந்து சகோதரரை நேசிப்பாரா? தன்னுடைய சத்துருக்களுக்கு நன்மை செய்வதில் களிகூறும் அளவுக்கு அவர்களைத் தொடர்ந்து உறுதியாக நிற்பாரா என்பதாகும். அவர் தன்னுடைய ஜீவனை தன்னுடைய நண்பர்களுக்காக மாத்திரமல்ல. தன்னை சிலுவையிலறைந்த சத்துருக்களுக்காகவும் ஈந்தார் என்பதில், அன்பிற்கான தகுதியில் அவர் தொடர்ந்து உறுதியாக நிற்பாரா என்பதாகும். அவர் தன்னுடைய ஜீவனை தன்னுடைய நண்பர்களுக்காக மாத்திரமல்ல. தன்னை சிலுவையிலறைந்த சத்துருக்களுக்காகவும் ஈந்தார் என்பதில், அன்பின் எல்லா அம்சங்களிலும் அதன் மேல் உள்ள தனது வாஞ்சையை எப்படி அவர் வெளிப்படுத்தினார் அறிந்திருக்கிறோம். என்பதை நாம் இதே அனுபவம் நம்முடையதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய மாம்சத்தில் நம்முடைய இருதங்களின் உணர்வை எப்பொழுதுமே முழுமையாக வெளிப்படுத்த முடியாவிட்டாலும், நம்முடைய இருதயங்களில் பரிபூரண அன்பின் நிலையை நாம் எட்டியாக வேண்டும்.
சிலர் ஓட்டத்தை வெகு வேகமாக ஓடலாம். அவர்கள் இந்த மூன்று கால் பங்கு இலக்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து, பரிபூரண அன்பு என்கிற நிலையைத் துரிதமாக அடையலாம். மற்றவர்கள் மனதில் சிறிதளவு வைராக்கியத்தோடு, அல்லது நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரை சாதாரணமாக உற்றுப்பார்த்து, ஓட்டத்தில் மெதுவாக முன்னேறுகிறார்கள். அவர்கள் பல வருடங்களாக கடமைக்கான அன்புடன் தங்களைத் திருப்திப் பண்ணிக்கொள்கிறார்கள். அல்லது ஒரு வேளை திவ்விய குணாதிசயத்தின் அன்புக்கும், நீதியின் முறைகளுக்கும் சற்று முன்னேறுகிறார்கள். குறிப்பிடத்தக்க விதத்தில் சிலர்தான். சகோதரருக்கான அன்பை அடையும்படி இதைவிட சற்று மேலாகச் சென்றிருக்கிறார்கள், அது அவர்களைத் தங்களுடைய சுயத்தை வெறுப்பதில் களிகூறச்செய்யும், இதன்மூலம் அவர்கள் விசுவாச வீட்டாருக்கு ஊழியம் செய்ய முடியும். இதை விட இன்னும் சிலரே தங்களுடைய சத்துருக்களுக்காக அன்பு, என்ற பரிபூரண அன்பின் நிலைக்குச் சென்றிருப்பார்கள். இந்த நிலை அவர்களை வார்த்தையினாலாவது அல்லது செயலினாலாவது தீமை விளைவிக்காது தடுப்பது மாத்திரமல்ல, அதற்கும் மேலாக அவர்களுடைய ஆசீர்வாதத்தில் களிகூரும். இலக்கை நாம் அடையும்படி நம்மோடு ஆண்டவர் அபரிமிதமாகப் பொறுமையுடன் இருந்திருப்பாரென்றால், நாம் அவருடைய இரக்கத்தில் களிகூர வேண்டும். மேலும் “பந்தயப்பெருளின் இலக்கை” அடைவதற்கு இன்னும் அதிக வைராக்கியம் உள்ளவர்களாய் இருக்கவேண்டும், அப்படிச் செய்யும்போது காலம் குறுகியதாய் உள்ளது என்பதையும், மேலும் இந்தப் பரிபூரண அன்பு என்ற குணாதிசயத்துக்குக் குறைவாக எதுவும் பிதாவினால் புது சிருஷ்டியில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
நம்முடைய ஆண்டவர் பரிபூரண அன்பு என்ற “இலக்கில்” சோதிக்கப்பட்டது போல, நாம் எல்லோரும் அதை அடைந்த பின்னர் சோதிக்கப்படுவோம். ஆகவே வாழ்வின் கடைசி மூச்சின்போது அந்த இலக்கை அடையலாம் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் கூடுமானவரை துரிதமாகச் செயல்பட வேண்டும். நாம் இந்த இலக்கை அடையும் வேகத்தை வைத்து நம்முடைய வைராக்கியத்தின் அளவும், அன்பின் அளவும் தேவனுக்கும் சகோதரர்களுக்கும் சுட்டிக்காட்டப்படும்.
அப்போஸ்தலருடைய வார்த்தையான “சகலத்தையும் செய்த முடித்தவர்களாய் நிற்கவும்” (எபேசியர் 6:13) என்பது பரிபூரண அன்பு என்ற இலக்கை அடைந்த பின்னர் நமக்கு அதிகமாக சோதனைகள் உண்டு. அவையாவன, விசுவாசத்தை சோதிக்கின்றவைகள், பொறுமையை சோதிக்கின்றவைகள், மேலும் அன்பின் பல்வேறு அம்சங்களில் வரக்கூடிய சோதனைகளாகும். நம்மைச் சரியான வழியில் முன்னேறும்படி உதவி செய்வதற்கு உலகமானது கிருபைக்கு ஒரு நல்ல நண்பனல்ல, சாத்தான் இன்னமும் நம்முடைய சத்துருவாயிருக்கிறான். நாம் அடைந்துள்ள நிலைமையிலிருந்து நம்மை பின்னடையும்படியாகப் பலவந்தப்படுத்த அதிகமான எதிர்ப்புகளைக் கிளறிவிட முடிந்தவனாயிருப்பான். இதுவே நம்முடைய சோதனையாகும். நாம் அடைகின்ற நிலையில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய உலக வாழ்க்கையைத் துச்சமாக உதறிவிடும் வரை, நமக்குச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லா மனிதருக்கும் நன்மை செய்யவும், தேவனுடைய ஊழியத்தில் சகோதரருக்கென நம்முடைய ஜீவனையே கொடுக்கும் வரை நாம் “இலக்கை நோக்கித் தொடர வேண்டும்,” “நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர்,” இந்த வழியில் நாம் செல்லும்போது தேவையான ஒவ்வொரு உதவியையும், ஆபத்தில் பாதுகாப்பையும் அவர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார். அவருடைய கிருபை நமக்குப் போதுமானது. (1 தெசலோனக்கியர் 5:24, 2 கொரிந்தியர் 12:9)