CD-LOVE-Q-29
தேவனுடைய சபை சமாதானமாகவும், வளமாகவும் இருப்பதற்கு சபையின் அங்கத்தினர்கள். தெளிவான புரிந்து கொள்ளுதலை பெற்று ஒழுங்கின் கொள்கைகளை சரியாக மதிப்பிட்டு, அவைகளினால் கட்டுப்படுத்தப்படுவதற்கு முழுமையாக தீர்மானிப்பதை தவிர வேறு ஏதும் தேவையில்லை. வளமான ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் அதிகமாக குறுக்கீடு, கிரியைகளின் கொள்கைகளை பொருத்தவரையில், கிறிஸ்தவர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அன்பு மற்றும் நீதியின் இசைவான கோரிக்கைகளுக்கு இடையில் உள்ள சரியான வேறுபாட்டை அறிந்து கொள்வதில் ஏற்படும் தோல்வியின் வழியாக, இப்படிப்பட்ட கஷ்டங்கள் அடிக்கடி எழும்புகிறது. ஆகவே, தேவனுடைய பிள்ளைகள் இடையில், இந்த கோட்பாடுகளையும் அவைகளின் செயல் பாடுகளையும் சுருக்கமாக ஆராய்வது லாபகரமாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.
சிலநேரங்களில், நீதி, ஒரு சமமாக நிறுத்தப்படும் தராசையும், சில நேரங்களில் சதுரத்தையும், வட்டத்தையும் அடையாளப்படுத்தும். இந்த இரண்டுமே அதன் குணத்திற்கு பொருத்தமான அடையாளங்களாகும். நீதி தன்னுடைய நிலையான ஒழுங்கிலிருந்து திசைமாற தெரியாது. இது ஒரு சரி நுட்பமான காரியம். அதற்குள் எந்த விதமான கிருபையும், இருதயமும், அன்பும், பரிவும், இரக்கமும் இல்லை சத்தியம் மற்றும் நீதியின் துல்லியமான அளவை இது கணக்கிடுகிறது. இது உணர்ச்சியற்றது. நீதியை நிறைவேற்றுபவர். ஒரு கடமையை செய்வதினால், நீதி நிறைவேற்றப்படும் போது, அங்கு எந்த விதமான நன்றியறிதலும் இருக்காது. ஒரு வேளை இந்த கடமை தவிர்க்கப்பட்டால், அவர் குற்றமுடையவராக இருப்பார். ஆகவே நீதியை செய்வதினால், எந்த கருணை அல்லது புகழ்ச்சிக்குரிய பரிசுகள் பெறப்படுவதில்லை. ஆயினும், இந்த கோட்பாடு உணர்ச்சியற்றதும், கண்டிப்பானதும், உறுதியானதுமாக இருப்பினும். இதுவே தேவனுடைய சிங்காசனத்திற்கு அஸ்திபாரம் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான், தேவன் அவருடைய சகல சிருஷ்டிகளோடு நடைமுறை தொடர்பு கொண்டிருக்கிறார். இது மாற்ற முடியாத அலுவல் கொள்கையாகும். இரட்சிப்பின் திட்டத்தை அனைவரும் அடிப்படையாக கொண்டிராத எந்த கிரியையும், அன்பின் வெளிப்பாடாக நாம் ஏற்றுகொள்ள முடியாது என்று காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஒருவர், உங்களிடம் கடன்ப்பட்டவராக, அந்த கடனை மறந்து உங்களிடம் ஒரு வெகுமதியோடு வந்தால், அன்பின் வெளிப்பாடாக கொடுக்கப்படும் அந்த வெகுமதியின் மதிப்பு மிகவும் குறைவாக என்னப்படும். தாராளமாக இருப்பதற்கு முயற்சிப்பதற்கு முன் நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம்.
இது சரியானது – தேவனுடைய நடைமுறை தொடர்புகள் அனைத்திலும் நீதியே அஸ்திபாரமான கோட்பாடாக இருந்தால், நம்முடைய கோட்பாடுகளிலும் இப்படியாகவே இருக்க வேண்டும். இந்த உலகத்தில் உள்ளவர்களை காட்டிலும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதரர்கள் மத்தியிலும், இதில் ஒன்றும் குறைவுப்படக்கூடாது. கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதரர்கள். ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் கிருபைகளை உரிமையின்றிச் செயலாற்றுவதற்கு நமக்கு ஏற்புடையதில்லை. நாம் அனைவருக்கும் உள்ள ஒரே உரிமை ஒருவருக்கொருவர் எளிமையான நீதியை உரிமை கோரலாம். அதாவது நாம் ஒருவருக்கொருவர், நம்முடைய நேர்மையாக கடன்களை செலுத்துவதில் நீதியை காட்ட வேண்டும். நேர்மையான ஒருவரை ஒருவர் நியாயந்தீர்க்கும் போது நீதியை வெளிப்படுத்த வேண்டும். (உறுதியற்ற கடன் தொகைகளுக்கு நாம் சலுகை அளிக்கவேண்டும், ஏனெனில், நாமும் அதேபோல அபூரண நிலையில் இருப்பதை உணர்ந்திருக்கிறோம்.) அதே போல ஒருவருக்கொருவர் மாசற்ற நட்பின் நடத்து முறையிலும், நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவைகளை மட்டுமே நாம் உரிமையோடு எதிர்பார்க்க முடியும். இப்படியாக நாம் மற்றவர்களிடம் இவைகளை பெறுவதற்கு உரிமை பெற்றிருப்பதை போல சட்டபடி மற்றவர்களுக்கு நாமும் இவைகளை முழுமையாக வழங்க வேண்டும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
ஆனால், நமக்கென்று உரிமையுடன் கேட்பதற்கு, எந்த கடமையும் இல்லாத போதிலும், நாம் நீதியை கோருவோமேயானால், மேலும், குறைக்கூராமல், அநீதியை அனுபவிப்பதற்கு நாம் விரும்பினாலும் – கட்டாயமாக நாம் இவ்வாறு செய்ய வேண்டும். நாம் கிறிஸ்தவர்களானால், அதை திரும்ப கொடுக்க வேண்டும். மற்றொரு வார்த்தைகளில் சொல்லுவோமேயானால், இந்த காரியத்தை பொருத்த வரையில் மற்றவர்களின் கிரியைகளுக்கு நாம் தான் பொறுப்பு. ஆகவே, அன்பை வெளிப்படுத்தும் எந்த ஒரு கிரியையும் நாம் செய்வதற்கு முன், நம்முடைய எல்லா கிரியைகளும் நீதியின் துல்லியமான கோட்பாட்டினால், எல்லா கோணங்களிலும் பொருந்துகிறதா என்று நாம் பார்க்கவேண்டும்.
அன்பின் கொள்கை, நீதியின் கொள்கையை போல துல்லியமாக அளவிட்டு, நிறுத்து பார்க்க முடியாது. அது மையப்படுத்தும். அந்த பொருளுக்கு ஏற்றவாறு இரக்கம், பரிவு, பயபக்தி போன்ற இதன் நற்குணம் மூன்று படிப்புகளாக காணப்படுகிறது. இரக்கத்தினால் வரும் அன்பே மிகவும் குறைந்த நிலையான அன்பாகும். இது பயனற்ற மற்றும் தரம் குறைந்த காரியங்களையும் கவனிக்கும். மற்றும் இன்னலை தவிர்க்கும் உதவிகளை சுறுசுறுப்பாக படியளக்கும். பரிவினால் ஏற்படும் அன்பு அதை காட்டிலும் சற்று உயர்வானது, நமக்கு ஐக்கியத்தை கொடுக்கும். ஆனால் பய பக்திக்கேற்ற அன்பு இவை அனைத்தை காட்டிலும் அதிகமாக உயரக்கூடியது. ஆழமான நன்மையிலும் பரிசுத்தத்திலும், அழகிலும் மகிழ்கிறது. இந்த பிந்தைய பொருளில், தேவன் மீது நாம் பிரதானமாக அன்புகூருவோம். ஏனெனில், அவை உருவகப்படுத்தும் அனைத்தும், மெய்யாகவே போற்றுதலுக்கும் மரியாதைக்கும் பாத்திரமாய் உள்ளது மற்றும் சக மனிதர்கள் தேவனின் சாயலில் இருப்பதால், அதே விகிதத்தில் அவர்கள் மீதும் அன்புகூருவோம்.
இந்த உணர்வுகளில், ஏதோ ஒன்றில் நாம் ஒவ்வொருவருக்கும் கடன்பட்டிருந்தாலும், நாம் மற்றவர்களிடம் இந்த நீதியின் கோட்பாட்டை எதிர்ப்பார்க்க மாட்டோம். ஏனெனில், அன்பு நீதியின் பெருக்கமாக உள்ளது. நீதி சரியான அளவினால் அளக்கப்படுகிறது. ஆனால் அன்பு அதை அமுக்கி, குலுக்கி அதன்மேல் தன்னையே குவித்து பொங்கி வழிய விடுகிறது. ஆகவே இது கட்டாயமாக கேட்டு பெறக்கூடிய காரியம் அல்லது அதன் குறைவை பற்றி முறையிடாமல் ஒரு இரக்கத்தை போல அதை அதிகமாக மெச்சிக்கொள்ள வேண்டும். அதற்கு சரியாக நாம் பரந்த மனதோடு திரும்ப கொடுக்க வேண்டும். இதை வாஞ்சையோடும் விரும்பும் ஒவ்வொருவரும் – ஆர்வத்தோடு பாராட்டும் உணர்வோடும், பயபக்தியில் உண்மையான உணர்வுகளோடு வாஞ்சிக்க வேண்டும். ஆனால் இந்த விதமான அன்பு மிகவும் விலையேற பெற்றது. ஆனால் வெறுமனே, அது ஒரு எதிர்ப்பார்ப்பினால் வரக்கூடிய அன்பாக இருந்தால் அதில் பிரயோஜனம் இல்லை. ஆகவே இதை என்றுமே உரிமை கோர வேண்டாம். மாறாக, அந்த அன்பை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி, அதற்கு பதிலாக அதே அன்பை நாம் பெற்றுகொள்ளலாம்.
உண்மையில் இந்த உயர்வான குணத்தை பிரதிபலிப்பதன் வழியாகவே நாம் இக்குணத்தை பாதுகாக்க முடியும். இரக்கத்தினால் ஏற்படும் அன்பு ஒருவருடைய பெருந்தன்மையினாலே அல்ல, கொடுப்பவரின் பெருந்தன்மையினாலே வெளிப்படும். அதாவது இவர் அன்பின் கொள்கையில் முழுமையாக நிறைந்து, அபாத்திரவான்களின் மேலும் பொங்கி வழியும் அளவுக்கு அதன் நிறைவான உணர்வுகள் வெளிப்படும். எனினும், உன்னத அர்த்தத்தில், பரிதாபத்திற்குரிய அனைவரும் அன்புக்கு பாத்திரமானவர்கள் தான். மற்றும் அவற்றில் சிலரும் கூட அடிக்கடி நமது அன்பினால், அனைத்து வகையிலும் பலன் அடைவதுண்டு.
நீதியின் கோரிக்கைகளுக்கு அப்பாற்பட்ட பொங்கி வழியும் ஆசீர்வாதத்தின் அன்பின் கோரிக்கை – தகாத விருப்பத்தின் வெளிப்பாடாகும். இந்த அன்பின் கொள்கையை நாமே நம்மேல் செயல்படுத்தலாம். ஆனால், மற்றவர்களிடமிருந்து நாம் உரிமை கோர மாட்டோம். இதற்கு எதிர் மறையான செயல், அன்பின் குறைவையும், போதுமான அளவு சுயநலத்தையும் வெளிக்காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக இரண்டு தேவ பிள்ளைகள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஒரு தோல்வி ஏற்பட்டதினால், அதற்கு தொடர்பான அன்பு மற்றும் நீதியின் கொள்கைகள் சரியாக கருத்தில் கொள்ளப்பட்டது. நஷ்டம் அடைந்த ஒருவர் அன்பின் கொள்கையின் அடிப்படையில், மற்றவர் அந்த வீட்டின் வாடகையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இவரோ நீதியின் அடிப்படையில் சகோதர அன்பின் கோரிக்கையை தள்ளி, அந்த கோரிக்கையை மறுத்து விடுவதற்கு வகை அறியாமல், அரைகுறை மனதுடன் வாடகையை கொடுத்தார். எப்படியாயினும், சில கிறிஸ்தவர்கள் பல உலக ஜனங்களை காட்டிலும் குறைவான கொள்கைகளை உடையவர்களாக இருப்பதை உணரலாம். எந்த தேவ பிள்ளையும், ஒரு பக்கமான குறுகிய கண்ணோட்டத்தில் இருப்பது எவ்வளவு விநோதமாக உள்ளது. அன்பும், நீதியும் இரண்டு வழிகளில் வேலை செய்ய வேண்டும் என்பதை காண வேண்டாமோ? ஒவ்வொருவரும். இந்த கோணங்களில் மற்றவர்களை மேற்பார்வையிடுவது அவர்களின் வேலை இல்லை மாறாக ஒவ்வொருவரும் தங்களுக்குண்டானவைகளை மட்டுமே கவனி தங்களது ஒருவேளை மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றால், கட்டளைகளினால் அல்ல, நல்ல மாதிரியினால் போதிப்பது ஏற்றதாயிருக்கும்.
நாம் தகாத விருப்பமுள்ள மனநிலைக்கு எச்சரிக்கையாக இருக்கலாம். அயலானுடைய உடமைகளுக்கு அல்ல, நம்முடைய உடமைகளுக்கே நாம் உக்கிராணக்காரர் என்றும் ஆண்டவர் அவர் அவர் மேல் வைத்த நம்பிக்கையை சரியாக பயன்படுத்துவதற்கு அவர் அவர் சகோதரனுக்கு அல்ல ஆண்டவருக்கே கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர்களின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடுவதை காட்டிலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு அன்பற்ற மற்றும் ஒவ்வாத காரியம் ஒன்றுமில்லை. பரிசுத்தவான்களுக்கு இது மிக அற்பமானதும், விசேஷமாக பரந்துவிரிந்த அளவில் தாராளமாக வெளிப்பட்டு, சிறிய பாவங்களை பெரிதாக்காமல், திரளான பாவங்களை மூடக்கூடிய அளவுக்கு சகோதர சிநேகம் வெளிப்பட வேண்டிய சூழ்நிலையில், இது சகோதரர் அன்பின் குறைபாட்டின் பரிதாபமாக வெளிப்படுத்துகிறது.
எதிராளி மகிமை அடையாதபடிக்கு, தேவ ஜனங்கள் அனைவரின் இருதயங்களில், அன்பும், நீதியும் சரியான உறவில் சரியான இடத்தை கண்டுபிடிக்கட்டும்.. “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.” (சங்கீதம் 119:97) என்ற சங்கீதக்காரர் கூறுகிறார். இதுவே, அனைவரின் நிலையான தியானமாக இருந்தால், நிச்சயமாக வெளிப்படையான தவறுகள் குறையை துவங்கும். நம்முடைய எதிராளி நம் மேல் ஆதாயம் கொள்ளாதபடிக்கு விழித்திருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
R3323[col.1 P1,2]
புது சிருஷ்டிக்கு இன்னும் முழுமையான நிறுத்தம் இன்னும் வரவில்லை. அவர் ஒரு பரிபூரண நிலையை அடையவதற்கு முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் இராஜ்யத்தின் வகுப்பாராக எண்ணப்படமாட்டார். உண்மையில், இந்தப் புது சிருஷ்டிகளை முதலில், கிறிஸ்துவுக்குள் பிறந்தக் குழந்தைகள் என்று அப்போஸ்தலர் பேசுகிறார். ஆனால் இராஜ்யம் ஜெயம் பெற்றவர்களாலே கட்டப்படும், கிறிஸ்துவுக்குள்ளான குழந்தைகளைக் கொண்டல்ல. நாம் அறிந்திருக்கிறபடி, ஜெயம் கொள்ளுதல், என்பது உடல் நிலைப்பாடு அல்லது வயதைப் பற்றிய காரியமல்ல, அது கருணை, அறிவு மற்றும் அன்பில் காணப்படும் ஆவிக்குரிய வளர்ச்சி. நாம் அன்பில் வளர வேண்டும். அன்பே அடிப்படையான கூர். ஆனால் இந்த அன்பை நாம் பேணி வளர்ப்பதற்கு முன், நாம் நீதியாகவும், நியாயமாகவும் இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். இந்த விஷயத்தின் சரியான விளக்கம் என்னவெனில், பழமொழியில் சொல்லப்பட்டதுபோல, ஒரு மனுஷன் பெருந்தன்மை அல்லது தாராளமாக இருப்பதற்கு முன் நீதியாக நடந்துக் கொள்ள வேண்டும். எனவே, புதிய சிருஷ்டிகள், தொடர்ந்து நீதியின் பாடத்தை படிப்பதோடு, தினமும் தெய்வீக வார்த்தையில் கற்பிக்கப்பட்டு, படிப்பினைகளை நடைமுறைப்படுத்தி வருவதினால் கர்த்தருடைய ஜனங்கள் பலனடைகிறார்கள். பரிசுத்தவான்கள் அனைவரும் பாவத்திற்கு எதிரிகளாக இருக்க வேண்டும். பாவம் எங்கு இருந்தாலும் அதற்கு எதிராக அவர்கள் போராடவேண்டும். மற்றும் தங்களுடைய இருதயங்களில் பாவத்திற்கு தயவு செய்யாமல் அதை எதிர்த்து நின்று, தங்களுடைய இருதயங்களில், பலவீனங்கள் தங்கும் இடமாகவும், தயைக்காட்டவோ இடம் கொடுக்காதபடிக்கு. தங்களுடைய இருதயம் பாவத்திலிருந்து முழமையாக விடுப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். இது அவர்களுடைய வாயின் வார்த்தைகள், வாழ்வின் நடத்தைகள் மற்றும் அவர்களின் இருதயங்களின் தியானமும், தெய்வீக வார்த்தையோடும், நீதி, பரிசுத்தம் மற்றம் சத்திய ஆவியோடும் முழுமையாக இசைந்திருக்கச் செய்யும். இத்தகைய நற்குணங்களின் அடித்தளத்தை அவர்கள் உருவாக்கும் முன் அவர்கள் அன்பை உருவாக்கி, அதில் ஒழுங்கான முன்னேற்றம் அடைகிறார்களா என்பதை கவனிப்பார்கள். அநீதி அல்லது நீதியான கருத்துகள் தவறு என்ற சிந்தைனைகளின் மீது நிறுவப்பட்ட எல்லா விதமான அன்பும், ஆண்டவரின் சீஷர்கள் என சோதிக்கப்படுவதற்கு, தேவனுக்கு தேவைப்படும் அன்பு அல்ல.
R3020[col.2 P2]: –
அன்பு அவசியமாக நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஏனெனில், தேவனுடைய பிரமாணம். அல்லது அவருடைய தேவைகள் நீதியை அடிப்படையாகக் கொண்டவைகள், “அவருடைய சிங்காசனத்திற்கு நீதியே அஸ்திபாரம்.” நாம் இந்த நிலைப்பாட்டிலிருந்து, ஆண்டவரின் கட்டளைகளைக் காண வேண்டும். எனவே, நாம் தேவன் மேல் வைத்திருக்கும் அன்பு நீதியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவாது, அன்பு, பக்தி, அவர் செய்தவற்றிற்கான பாராட்டு மற்றும் அவர் நமக்காக இனி செய்வதாக வாக்களித்த காரியங்களுக்காக கடமைப் படிருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆண்டவருக்கு நம்முடைய அன்பான, பக்தியுள்ள கீழ்படிதலை அவருடைய நீதி கோருகிறது. அன்பை பொருத்தவரையில், நம் சக ஊழியர்களுக்கும் இப்படியாகவே இருக்க வேண்டும். நீதி, நம்முடைய பரலோக தந்தையின் ஒழுங்கைப் பொருத்தவரையில, நம்முடைய அண்டை வீட்டாருக்கும் சரியானதைச் செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. நமக்கு எதைச் செய்துக்கொள்கிறோமோ, அதையே அவர்களுக்கும் செய்ய வேண்டும். இது முழுமையான நீதியிலும் அதிகமானதல்ல. எனினும் இதுவே, அன்பின் தெய்வீக பிரமாணத்தின் ஆவியும், சாராம்சமாகவும் உள்ளது. ஆயினும், அன்பின் கற்பனையின் முதல் அம்சம் நீதியாக இருந்தாலும், அதுவே தேவைகளில் முடிவல்ல. கண்டிப்பான நீதிக்கும் அப்பாற்பட்டது, நம்முடைய அன்பு நம்மை இரக்கத்தையும், மன்னிப்பையும் பயிற்றுவிக்க நம்மை உந்துகிறது. இப்படியாக நாம் இவைகளை பயிற்றுவிக்கையில், மீண்டுமாக நாம் தெய்வீக அன்பின் மாதிரிகளாவோம். ஏனெனில், நம்முடைய பரலோக தந்தை. தம்முடைய சகல சிருஷ்டிகளோடு நீதியாக மட்டும் அல்ல, நீதியின் வரம்புக்கு மிஞ்சி, இரக்கத்தினாலும், மிகுந்த கிருபையினாலும் கிறிஸ்து இயேசுவுக்குள் பாவிகளுக்கு மீட்பளித்தார். உண்மை, அவருடைய நீதியை மீறி இதை அவர் வழங்கவில்லை. எனினும், அன்பினாலும், இரக்கத்தினாலும், நமக்கு உதவிச் செய்யும்படிக்கு, நீதியை புறக்கணித்ததுப் போல நம்மைப் பொருத்தவரையில் தோன்றலாம். எனவே, நம்மை போலவே விழுந்துபோன, அபூரணமான, இன்னும் நன்றியற்றவர்களிடம் கூட நாம் நடைமுறை தொடர்புக்கொள்ளும் போது, இந்த அம்சத்தை நினைவில் கொள்ளுவதோடு, அவர்களிடம் நீதியாக நடப்பதோடு. கூடுதலாக அவர்களிடம் இரக்கத்தோடும், தாராளமாகவும், கனிவோடும் பெருந்தன்மையாக நடந்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு, நாம் நம்முடைய பரலோக பிதாவின் பிள்ளைகளாக இருக்கலாம்.
R3635[col.2 P2,3]: –
கேள்வி – “சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறை கல்லெல்லாம் அவருடைய செயல்” என்று நீதிமொழிகள் 16:11ம் வசனத்தில் வாசிக்கிறோம்.
எனவே, நாம் பூரணப்பட்டு, தேவனுடைய சிங்காசனத்தின் நீதியின் அஸ்பாரத்தின் மேல் நிறுவப்பட்ட அரியணையில் அமர்ந்து, நீதியின் கொள்கைகளின்படி செயல்படும் வரையில், நாம் நியாயத்தைக் காட்டிலும், அன்பின் குணநலத்தை வளர்க்க நாம் முயலக்கூடாதா?
பதில்: நாம் பூரணப்படும் வரையில் காத்திருக்காமல், இப்போதே நீதியின் கொள்கைகளை கைக்கொள்ளவேண்டும். தெய்வீக நீதியின் செயல்பாட்டையும், மனுக்குலத்தின் மேல் நீதி மற்றும் அநீதியான செயல்பாடுகளையும். நம்மை பற்றிய சிறப்பான திறனாய்வோடு கவனிப்பதற்கு முயற்சிக்கவேண்டும். நியாயத்தை மதிக்க தவறிவிட்டால், அதற்கு சரிசமமாக இரக்கம் காட்டவும் தவறிவிடுவார்கள். ஏனென்றால், அன்புக்கும் நீதிக்கும் உள்ள வித்தியாசம் வெறும் கருணையே. மற்றவர்களிடம் நாம் நியாயமாக நடந்து கொள்கிறோமா என்று கவனிக்க முயற்சிக்க வேண்டும். மற்றும் ஆண்டவரின் வழிநடத்துதலின் படியே, “நியாயமாக நடந்து,நியாயத்தீர்ப்பைக் கடைபிடிக்கவேண்டும்.” ஆனால் நம்முடைய சொந்த அபூரணத்தை நாம் சரியீடு செய்வதற்கு, மற்றவர்களின் அபூரணத்தையும் அவர்களின் பலவிதமான குற்றங்களையும், அன்பினால் மூடவேண்டும். ஆயினும், நீதியின் ஒளியில் நாம் நம் நடத்தையைக் காண நாம் நாட வேண்டும், மேலும் முடிந்தளவுக்கு நாம் நமது குறைப்பாடுகளுக்கு சிறிதளவே சலுகைகளை கொடுக்கவேண்டும்.