Q-11
F148 [P2] through F149 [P1]
அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், ஆவிக்குரிய நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு வகுப்பாரையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் வெளிப்படையாக விசுவாசத்தால் நீதிமான்களாக ஆக்கப்பட்டு, அம்ப்பணிப்பதில் நேர்மையாக இருந்தாலும், அவர்களின் மாம்சத்தை கட்டுப்படுத்துவில் சிறிதளவும் முன்னேற்றம் இல்லாதிருக்கிறார்கள். உண்மையில் சில சமயங்களில், தேவனுடைய நன்மை மற்றும் கிருபையின் மீதான அவர்களின் நம்பிக்கை, பயம் என்ற தடைகளை நீக்கி, முதலில் இருந்ததை விட மாம்சத்தின் பலவீனமான சோதனைகருக்கு ஆலாகியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதாவது அவர்களுக்கு ஆண்டவரைப் பற்றி குறைந்த அறிவு இருந்தபோது இருந்த நிலை. இந்த கடுமையான அனுபவங்கள் தங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் தொடர்பு கொள்ளும் முழு விசுவாச குடும்பத்திற்கும் சோதனையாகிறது. இவர்கள் வாழ்க்கை தோல்விகள், மனந்திரும்பல்களின் தொடர்ச்சியாகத் தெரிகிறது. சில நிதிமுரண்பாடுகளின் வழிகளிலும் மற்றவை தார்மீக மற்றும் சமூகக குறைபாடுகளின் வழியிலும்,
இந்த விஷயங்களுக்கான தீர்வு என்ன? புது சிருஷ்டி, வெறுமனே பூமிக்குரிய விஷயங்களில் சுயத்தை வெறுத்து, சுய தியாகங்களின் உடன்படிக்கை செய்து, மாம்சத்தின் படி நடவாமல், ஆவியின்படி நடந்து கொள்வது மட்டும் அல்ல, இந்த உடன்படிக்கையை கடைப்பிப்பதற்கு, மனப்பூர்வமான முயற்சிகளின் மேல் விசுவாசம் வைப்பவர்கள் தேவனால், ஜெயம் கொண்டவர்களாக எண்ணப்படுகிறார்கள் என்பதை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று நாம் பதிலளிக்கிறோம். குமாரனால் விடுதலையாக்கப்பட்டவர்களுக்கு, முறையான நடைமுறையின் அறிவுறுத்தல் என்னவெனில், தெய்வீக தயவையின் எல்லா ஆசீர்வதங்களையும் அடைய மிகவும் ஆர்வமாக இருக்கவேண்டும். அவர்கள் தானாக முன் வந்து அவர்களின் வார்த்தைகள், நடத்தைகள், எண்ணங்களை பொருத்தவரையில், சில கட்டுப்பாடுகள், வரம்புகள், அடிமைத்தனத்திற்கு கீழ்ப்படுத்துவதில், “என் கிருபை உனக்கு போதும் பலவீனத்தில் என் பலன் பூரணமாய் விளங்கும்” என்று தேவனி அப்போஸ்தலருக்கும் வெளிப்படுத்திய வார்த்தைகளில் உறுதியளித்தபடி மனதார விரும்பி, அதற்காக ஜெபிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் அவர்கள் மீறுவதைக் காணும்போது, அவர்கள் காயமடைந்தவர்களுக்கு பரிகாரம் செய்வதோடு, தேவனிடம் அதை அறிக்கைச் செய்து, மேலும் விசுவாசத்தால் அவருடைய மன்னிப்பைப் பெற வேண்டும். மேலும் அவர்களின் சமீபத்திய தோல்வியால் கண்டறியப்பட்ட பலலினங்களின் அடிப்படையில் தங்கள் சொந்த சுதந்திரத்தின் வரம்புகளை அதிகரிக்க, எதிர்காலத்தில் அதிகமான விடாமுயற்சிகளை வாக்குறுதியளிக்க வேண்டும்.
F150 [P1]
எவ்வாறாயினும், தங்கள் தவறான போக்கிலிருந்து மனந்திரும்புவதற்கும், சரியான வழியில் செல்ல இருதயத்தின் விருப்பம் மற்றும் தேவன் மீது விசுவாசமும் நம்பிக்கையும் இருப்பதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்கும் வரை, அவர்கள் சகோதரர்களாக மதிக்கப்படவேண்டும். எனினும் அவசியமாக, அவர்கள் தங்கள் மாம்ச பலவீனங்களை கட்டுப்படுத்துவதில், தங்கள் இருதயங்களில், கிருபையான வல்லமையின் உறுதியான வெளிப்பாடு காணப்படும் வரை அவர்களுடனான ஐக்கியத்தை கட்டுப்படுத்தலாம் என்பதை இங்கு நாம் குறிப்பிடுகிறோம். ஆயினும்கூட, தேவன் தன்னை நம்புபவர்களிடமும் அவருடைய வழிகளை விரும்பியவர்களிடமும் மிகவும் இரக்கமுள்ளவர் என்று நம்ப, வதறகு அவர்கள் இன்னும் ஊக்குவிக்கப்படவேண்டும். இருப்பினும், நீதிக்கான வைராக்கியத்தில் அவர்கள் தீவிரமாக இருப்பதற்கு, அவர்களின் மாம்சம் பதிய சிந்தைக்கு அடிபணிவதற்குரிய சில கணிசமான ஆதாரங்களைக் காட்டும் வரையில், ஜெயம்கொள்ளும் வகுப்பாராக அவர்கள் எண்ணப்படுவதற்கு தகுதியானவர்கள் என்ற எதிர்பார்ப்பை நாம் அவர்களிடம் ஊக்குவிக்க முடியாது.
F289 through F292-
“சபையில் ஒழுங்கு” பாடத்தின் இறுதியில் இந்த பகுதியை காணலாம்.