CD-PRAYER-Q-19
1 யோவான் 5:16: மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன். அப்பொழுது மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல் செய்ய நான் சொல்லேன்.
R2612 [col.1:5]: –
இரண்டாம் மரணத்திற்கான பாவத்திற்காக மன்னிப்பை கேட்பது பயனற்றது என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (1 யோவான் 5:16) இது மனப்பூர்வமான செய்த பாவம் மட்டுமல்ல, தெளிவான அறிவுக்கு எதிரான பாவமாகும். இந்த பாவத்தை மன்னிப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. ஏனெனில், இந்த பாவம் தெளிவான அறிவுக்கு அல்லது பரிசுத்தத்தின் அறிவொளிக்கு எதிரான பாவமாக இருக்கிறபடியால், இது “பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம்” என்று அழைக்கப்படுகிறது. (மத்தேயு 12:31,32) இதற்கு மன்னிபே இல்லை.
R2006 [col. 2:1]: –
இங்கு பரந்த அளவிலான பாடங்கள் உள்ளது (அது பரவலாக விரிவாக்கப்படலாம்). அதன் அடிப்படையில் நாம் இயேசுவின் நாமத்தினால் தைரியமாக கிருபாசனத்தண்டைக்கு சென்று தேவனுடைய போதுமான கிருபையை கேட்டு பெற்றுக்கொள்ளலாம், தேடி கண்டுபிடிக்கலாம். ஆனால் ஜெபத்தில் நாம் தேவனானவரை அணுக முடியாமல் போகக்கூடிய பாடங்களின் அளவும் பெரியளவில் உள்ளது. பெருமை அல்லது சுயநலம் அல்லது லட்சியத்திற்கு ஊழியம் செய்யும்படியாக நாம் எதையும் கேட்கக்கூடாது. அல்லது மற்றவரை காயப்படுத்தும் எதையும் நாங்கள் கேட்கக்கூடாது அல்லது அவருடைய வார்த்தையின் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய திட்டத்திற்கு முரண்படும் எதையும் நாம் கேட்கக்கூடாது. ஆஹா! எத்தனை பேர். தங்களுடைய பூமிக்குரிய விருப்பங்களின் மேலுள்ள பற்றினால், “விண்ணப்பம் பண்ணியும்… தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறார்கள்.”
R3665 [col. 1:1]: –
எந்த ஒரு “புது சிருஷ்டிக்கும்” தற்காலிகமான ஆசீர்வாதங்களுக்காக விண்ணப்பிப்பது பாதுகாப்பற்றதாக இருக்கும். “இவைகளை எல்லாம் அஞ்ஞானிகள் நாடி தேடுகிறார்கள்” (மத்தேயு 6:32) ஏனெனில் அவர்கள் உயர்ந்த மற்றும் சிறந்த ஆவிக்குரிய விஷயங்களை அறியாததினால் இப்படிப்பட்ட காரியங்களை தேடுகிறார்கள். ஆவிக்குரிய உடைகள், ஆவிக்குரிய உணவு, பரலோக ஐசுவரியங்கள் ஆகியவற்றைப் பாராட்டும்படிக்கு தேவன் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களை அறிவுறுத்துகிறார். அவைகளை பூச்சும், துருவும் அழிக்க முடியாததினால், அவைகளை தேடும்படி வலியுத்துகிறார்.